பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் பொருளாதார பிரச்சனைகளால் அரசாங்கத்திடம் கேள்வி கேட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மின்சார கட்டணம் மற்றும் உணவு பொருட்களுக்கான விலை கடுமையாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், விலைவாசி அதிகரிப்பதால் தான் படும் கஷ்டங்களை பேசி ஒரு பெண் வெளியிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. கராச்சியில் வசிக்கும் அந்த பெண் பணவீக்கம் அதிகரித்ததால் தான் சந்திக்கும் பொருளாதார பிரச்சினைகள் […]
Tag: நிதிநெருக்கடி
இலங்கையில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் 2 நாளாக காத்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்படைந்து இருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் அந்நாட்டிலிருந்து அதிகப்படியான இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு வேலை தேடி சென்று கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்போர்ட் பெற கொழும்பு நகரில் இருக்கும் அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் மிக நீளமான வரிசையில் மக்கள் காத்திருக்கிறார்கள். அவர்களை கட்டுப்படுத்த ராணுவம் […]
இலங்கையில் ஒவ்வொரு நாளும் நிதி நெருக்கடி அதிகரிப்பதால் நாட்டிலிருந்து இளைஞர்கள் அதிக அளவில் வெளியேறிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி பல இன்னல்களை சந்தித்து கொண்டிருக்கிறது. அங்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள்களுக்கு கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வொரு நாளும் அந்நாட்டிலிருந்து அதிகமாக இளைஞர்கள் வெளியேறிக் கொண்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான இளம் பெண்களும் இளைஞர்களும் நாட்டில் இருந்து வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் பாராளுமன்றத்தில் பேசிய தயாசிறி ஜெயசேகர் தெரிவித்ததாவது, […]
இலங்கை நாட்டின் மந்திரிகள் இருவர் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரஷ்ய நாட்டிற்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனவே, இதனை சமாளிப்பதற்காக கத்தார், ரஷ்யா போன்ற நாடுகளிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை முயன்று கொண்டிருக்கிறது. அதன்படி ரஷ்ய நாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி கச்சா எண்ணெய்யை வாங்குவதற்காக இலங்கை நாட்டின் இரண்டு மந்திரிகள் இன்று அங்கு செல்கிறார்கள். இது குறித்து […]
பாகிஸ்தான் நாட்டின் உயர்கல்வி ஆணையமானது நிதி நெருக்கடியால் தேயிலை செலவை குறைக்க மக்கள் லஸ்சி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அங்கு அந்நிய செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டிருப்பதால் அரசாங்கம் திணறிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டினுடைய உயர்கல்வி ஆணையமானது பணி வாய்ப்பை அதிகரிக்க மற்றும் தேயிலை இறக்குமதிக்கு ஆகும் செலவை குறைக்க புதிய ஆலோசனையை கூறியிருக்கிறது. அதாவது, நாட்டு மக்கள் டீ குடிப்பதற்கு பதிலாக சட்டு சர்பத்து, லஸ்ஸி போன்ற உள்ளூர் […]
பாகிஸ்தானில் காகிதப் பற்றாக்குறை காரணமாக பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, அந்நாட்டில் திரும்ப செலுத்த கூடிய கடன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இன்னிலையில் நிதி நெருக்கடி மற்றும் பணவீக்கத்தினால் அங்கு காகிதப் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வரும் கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக புத்தகங்களுக்கான விலையையும் நிர்ணயிக்க முடியாத நிலை நீடிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை அதிகரிப்பால் நாளையிலிருந்து பள்ளிகளும் அரசு அலுவலகங்களும் அடைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் சமையல் எரிவாயு, பெட்ரோல் டீசல் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதோடு, போக்குவரத்தும் முடக்கப்பட்டதால் மக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், தினசரி 13 மணி நேரங்கள் மின் தடை ஏற்படுகிறது. எனவே, நாளை முதல் […]
பாகிஸ்தானில் அரசாங்க பணியாளர்கள் தங்களின் ஊதியத்தை அதிகரிக்க வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பணவீக்கமும் அதிகரித்திருப்பதால், எரிபொருட்களின் விலையும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மின்சார கட்டணமும், பெட்ரோல், டீசல் விலையும் அரசாங்கத்தால் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால், அரசாங்க பணியாளர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். அதன்படி நாளையிலிருந்து நிதியமைச்சகத்தின் முன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், என் உடைகளை விற்று, தன் மக்களுக்கு குறைந்த விலையில் கோதுமை மாவு அளிப்பேன் என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அங்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் பணவீக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. எனவே, உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கிறது. அதன்படி பாகிஸ்தான் நாட்டில் கோதுமை மாவு அதிக விலைக்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர், ஒரே நாளில் கோதுமை மாவின் விலை […]
இலங்கையில் புதிய பிரதமராகப் பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நாடு நிதி நெருக்கடியில் சிக்கியபோது உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி கூறியிருக்கிறார். இலங்கை, இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. மேலும், அரசியல் குழப்பங்களும் போராட்டங்களும் நிலையை மேலும் மோசமடைய செய்தது. எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகினார். இதனைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரான ரணில் விக்கிரமசிங்கேவுடன் கடந்த புதன்கிழமை அன்று பேசிய அதிபர் […]
இலங்கையில் விசா வழங்கப்படுவது நிறுத்தப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்று இந்திய தூதரகம் விளக்கமளித்திருக்கிறது. இலங்கை அரசு, தவறான கொள்கை முடிவுகளை கையாண்டதால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. எனவே, மக்கள் ஒரு மாதத்தைத் தாண்டி தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தியா மற்றும் சீனா போன்ற பல நாடுகள் இலங்கைக்கு உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன. இதனிடையே அதிபர் கோட்டபாய ராஜபக்சே முன்னிலையில், அந்நாட்டின் 26-ஆம் பிரதமராக நேற்று ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றிருக்கிறார். […]
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. எனவே, மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், நாடு முழுக்க அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அங்கு அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கும் கடுமையாக பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. எனவே, சுகாதார கட்டமைப்பு மொத்தமாக சீர்குலைந்து விட்டது. இதனால், யாழ்ப்பாணம் நகரில் இருக்கும் […]
இலங்கையில் அதிபர் மற்றும் பிரதமர் ராஜினாமா செய்யக்கோரி இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு வரை இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியை சந்தித்திருக்கிறது. எனவே, கடந்த ஏப்ரல் மாதம் 9-ஆம் தேதி முதல் அதிபர் கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அரசாங்கத்தை எதிர்த்து நாடு முழுக்க இன்று கடையடைப்பு போராட்டம் நடக்கிறது. இதற்கு கல்வி, போக்குவரத்து மற்றும் வங்கி பணியாளர்களும், […]
இலங்கையில் 1000-த்திற்கும் அதிகமான பௌத்தத் துறவிகள் கொழும்பு நகரில் இடைக்கால ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேற்று பேரணி நடத்தியிருக்கிறார்கள். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் இடைக்கால ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான பௌத்த துறவிகள் சிறீசுமன என்ற மூத்த துறவியின் தலைமையில் பேரணி நடத்தியிருக்கிறார்கள். இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்து, […]
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே எந்த சூழ்நிலையிலும் நான் பதவி விலகப் போவதில்லை என்று கூறியிருக்கிறார். இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களோடு இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது அவர் பேசியதாவது, நாட்டில் இருக்கும் பிரச்சினைகளை படிப்படியாக தீர்த்துக் கொண்டு வருகிறோம் என்பது உங்களுக்கு தெரியும். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகள் மட்டுமல்லாமல் நம்முடன் நட்பாக இருக்கும் நாடுகளும் இந்த […]
இலங்கையில் இரு வாரங்கள் கழித்து திறக்கப்பட்ட பங்குச்சந்தை 13% சரிவடைந்ததால் நிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அந்நாட்டு அரசை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனிடையே, இரண்டு வாரங்கள் கழித்து கொழும்பு பங்குச் சந்தையில் வர்த்தகத்தை மீண்டும் தொடங்கினர். ஆனால் தொடங்கப்பட்ட சில நொடிகளிலேயே உள்ளூர் Standard & Poor குறியீடானது 7% சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதன்பின்பு, மீண்டும் 13% சரிவடைந்தது. எனவே, பங்கு சந்தை மூடப்பட்டிருக்கிறது. கடந்த […]
இலங்கையில் உயிர் காக்கக்கூடிய அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதால் மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக மக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் மயக்க மருந்து, மருந்து பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இதனை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மருத்துவர்களும், செவிலியர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், மக்களின் அடிப்படை உரிமை மருத்துவம் என்றும் இலங்கை மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள் என்றும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.
இலங்கை நாட்டின் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, கச்சத்தீவை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க வாய்ப்புகள் கிடையாது என்று கூறியிருக்கிறார். இலங்கை நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், ஒவ்வொரு நாளும் அந்நாட்டு மக்கள் இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். மேலும், அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதோடு, பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தினசரி பல மணி நேரங்களாக மின்தடை ஏற்பட்டு மக்களை மேலும் அவதிக்குள்ளாக்குகிறது. எனவே, மக்கள் அந்நாட்டு அரசாங்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். […]
இலங்கையில் இருக்கும் மருத்துவமனைகளில் வரும் நாட்களில் அவசரகால சிகிச்சை வழங்குவதற்கு கூட உரிய மருந்து பொருட்களின்றி அவதிப்படும் நிலை உண்டாகும் என்று தேசிய மருத்துவ கழகம் எச்சரித்திருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் தகுந்த அளவில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சேவுக்கு நாட்டின் மருத்துவ கழகம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மருத்துவமனைகளில் தகுந்த மருந்துகளின்றி, ஏற்கனவே வழக்கமாக நடக்கும் […]
கடும் நிதி நெருக்கடியில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு 40 ஆயிரம் டன் டீசல் இந்தியா அனுப்பியிருக்கிறது. இலங்கையில் கடும் நிதி நெருக்கடி காரணமாக உணவு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. டீசல் பெட்ரோல் போன்ற எரிபொருட்கள் பற்றாக்குறையால் போக்குவரத்து முடங்கிவிட்டது. மேலும் மின்சாரம் இல்லாததால் ஒவ்வொரு நாளும் 13 மணி நேரங்கள் மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில், மண்ணெண்ணெய்க்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால் இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டி இருக்கிறது. அதன்படி கப்பலில் 40 ஆயிரம் டன் டீசல் இலங்கைக்கு இந்தியா […]
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில் அதிபர் ராஜபக்சேவை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்த நிலையில், அதிபர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கொரோனா போன்ற காரணங்களினால் இலங்கை, ஒவ்வொரு நாளும் நிதி நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பேருந்து கட்டணத்திலிருந்து உணவு பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். இலங்கை […]