தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டார். இந்த திட்டத்தை வருகின்ற ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கின்றார். இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஒரு கிலோ […]
Tag: நிதி ஒதுக்கீடு
தமிழகத்தில் பேருந்து நிலையங்களை புணரமைக்கும் பணி மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த வகையில் மாநகராட்சிகளான திருப்பூரில் ரூ.26 கோடி மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதை […]
கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீ ராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகத்தில் ஆதி திராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு 15 இல் இருந்து 17 சதவிகிதமாகவும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு 3 ல் இருந்து 7 சதவிகிதமாகவும் அதிகரிக்க அரசு ஏற்கனவே முடிவு செய்திருக்கிறது. இதற்கான அவசர கூட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து ஒன்பதாவது அட்டவணையில் இட ஒதுக்கீடு அதிகரிப்பை சேர்க்க முடிவு செய்து […]
உக்ரைன் நாட்டிற்கு எதிராக ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் ரஷ்யா மேற்கொண்டு வரும் போரானது தொடர்ந்து ஆறு மாதங்களை கடந்து நீடித்து வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் நேரிடையாக களமிறங்கியுள்ளது. எனினும் நோட்டாவில் உக்ரைன் உறுப்பினர் அல்லாத சூழலில் படைகளை இறக்க முடியவில்லை. ஆனால் ஆயுதங்கள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை வழங்குவதற்கான மற்றும் நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுபோல் ரஷ்யாவிற்கு எதிராக பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டிருக்கிறது. […]
ராஜஸ்தான் அரசு 2022-2023 பட்ஜெட்டில் பெண்கள், சிறுமிகளுக்கு இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்திற்காக ரூபாய்.200 கோடி ஒதுக்கீடு செய்து இருக்கிறது என பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி மம்தா பூபேஷ் தெரிவித்து இருக்கிறார். மேலும் இது தொடர்பாக மம்தா பூபேஷ் கூறியிருப்பதாவது “மாநிலம் முழுதும் நான் சக்தி உதான் திட்டம் படிப் படியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே இது போன்ற திட்டம் பெரியளவில் செயல்படுத்தப்படும் முதல் மாநிலம் ராஜஸ்தான் ஆகும். கிராமப் புறங்களில் பெண்கள் […]
நாடு முழுவதும் மக்களுக்கு சுகாதாரமான சமையல் எரிவாயு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு இலவச சிலிண்டர் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே சிலிண்டரின் விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்களின் நிதி சுமையை குறைக்கும் வகையில் மத்திய அரசிடம் இருந்து சிலிண்டருக்கான மானியமும் வழங்கப்படுகிறது. இந்த மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். பயனாளிகள் முதலில் சிலிண்டருக்கான முழு […]
தர்மபுரி அரசு மருத்துக் கல்லூரி கலையரங்கில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி போன்ற நான்கு மாவட்டங்களிலுள்ள கல்வி அதிகாரிகளுடனான மண்டல அளவிலான 2ஆம் கட்ட ஆலோனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, பள்ளிக்கல்விதுறை வளர்ச்சி மற்றும் ஆய்வு குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இந்த கூட்டம் முடிந்தபின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, […]
தமிழகத்தை சேர்ந்த சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ரொக்க பரிசு வழங்குவதற்கான நிதிகளை ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில், சிறந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கக்கூடிய வகையில் முதல்வரின் மாநில விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன் படி, 2018-19, 2019-20 ஆம் ஆண்டுக்கான விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சிறந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளான எஸ்.பிரிதிவி சேகர், ஜீவன் நெடுஞ்செழியன், ஸ்ரீ நிவேதா, சுனைனா சாரா குருவில்லா, பிரஜ்நேஸ், ஆர்.மோகன் […]
உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள மாநில நிதி ஆணையத்தின் கீழ் ரூ.752 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ 752 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. கிராம ஊராட்சிகளுக்கு ரூ 424 கோடி, ஒன்றியங்களுக்கு ரூ 269 கோடி, மாவட்ட ஊராட்சிகளுக்கு ரூ 58.6 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு […]
தமிழகத்தில் பாமாயில் சமையல் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் எண்ணெய் பனை சாகுபடியை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக 5.65 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்து பேசிய வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், உள்நாட்டில் பாமாயில் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திலும், தமிழக விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையிலும், எண்ணெய் பனை சாகுபடியை உயர்த்துவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வடிகால் வசதியுடன் வளமான […]
தமிழ் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளின் விவரம் குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் உலக ஆராய்ச்சி தமிழ் அறக்கட்டளை சார்பில் கனகராஜ் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அரசாணைகளை தமிழில் வெளியிடுதல், அரேபிய எண் மொழிக்கு பதில் தமிழ் எண் மொழியை பயன்படுத்துதல், தமிழ் மொழி மேம்பாடு குறித்து ஆராய்வதற்கு அறிஞர்கள் அடங்கிய நிரந்தர குழுவை அமைத்தல், நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்தல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது. […]
கோவை நீலகிரியில் நடக்கும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு கோவை சென்றடைந்தார். கோவை வஉசி மைதானத்தில் கண்காட்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பாக ஓவியக் கண்காட்சியை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன் பிறகு கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்ட தொழில் முனைவோருடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “குணத்தால், […]
கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக படித்து வந்தனர். இதனையடுத்து அரசு எடுத்த நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதனால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்றனர். இந்த கொரோனா காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக அரசு மக்கள் நலனில் மட்டும் அல்லாமல் […]
வகுப்பறைகள் மேம்பாட்டிற்காக 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 2022 -2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டுதொடர் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் இன்று சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் “இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் சார்பாகவும் அனைத்து எம்எல்ஏக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை […]
கிராமப்புறங்களில் 100 நாட்கள் வேலை உறுதி திட்டத்தின் வாயிலாக ஏழை மக்கள் பயனடைந்து வருகின்றனர். 100 நாள் வேலைத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூபாய் 949 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித்திட்டமான 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியில் 75 சதவீதம் மத்திய அரசும், 25 சதவீதம் மாநில அரசும் வழங்குகின்றன. அதனடிப்படையில் தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மகாத்மா காந்தி தேசிய […]
கிராமப்பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வீடு இல்லாதவர்களுக்கு சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் அரசால் கட்டப்பட உள்ளது. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் 20 ஆயிரம் வீடுகள் கட்ட அரசு மானியம் வழங்க ரூ.499.227 கோடி ஒதுக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்படி பசுமை வீடு திட்டத்தின் முதற்கட்டமாக ரூ.299 கோடி நிதி விடுவிப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த […]
நகை கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நகை கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகள் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நகை கடனுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவந்தது. இதில்போலி நகைகளைக் கொண்டு கடன் பெறுவது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
கடந்த ஆண்டைவிட சீன ராணுவத்திற்கு 7.1 சதவீதம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகத்திலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக ராணுவத்திற்கு அதிக செலவு செய்யும் நாடாக இரண்டாவது இடத்தை சீனா பிடித்துள்ளது. இந்நிலையில் சீனா அரசு நடப்பு ஆண்டிற்கான வரவு, செலவுத் திட்டங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. இதனை அடுத்து கடந்த ஆண்டைவிட 7.1 சதவீதம் கூடுதலாக சீன ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு […]
தமிழக அரசு ரூ.5 கோடியை மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்வதாக அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக திகழும் கடற்பசுவை பாதுகாப்பதற்காக தமிழக அரசு மன்னார் வளைகுடாவில் கடற்பசு பாதுகாப்பகம் அமைப்பதாக அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் கள ஆய்வு நடத்த ரூ.25 லட்சத்தை முதல் கட்டமாக ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் அனுமதிக்காக […]
தமிழகத்தில் தொழில் துறை 4.0 திட்டத்திற்கு ரூ.2,201 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரூ.2,201கோடி செலவில் 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தொழில்நுட்ப மையங்களாக தயார் படுத்தப்படும். 71 ஐடிஐக்களுக்கு புதிய உபகரணங்கள்,இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் அமைக்க ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. உள்ளூர், உலகளாவிய தொழில் தேவைகளுக்கான பயிற்சி ஆலோசனை உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பனை ஆராய்ச்சிக்காக தமிழக அரசு ஒரு கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் முன்பெல்லாம் பனை மரங்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் .தற்போது பனை மரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காகவும், பனைமரத்தில் புதுமையான ஆராய்ச்சி மேற்கொள்வதற்காகவும் தமிழக அரசு ரூபாய் 50 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வினியோகிக்க ரூபாய் ஒரு கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு […]
சென்னையில் நடைபெறும் பிரம்மாண்ட கலை விழாவுக்காக 90 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நம்ம ஊரு திருவிழா எனும் தலைப்பில் சென்னையில் 7 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சிகளுக்காக 91 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கலை பண்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த கலை பண்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னையில் 500 க்கும் மேற்பட்ட கலைஞர்களை […]
கடந்த ஆண்டு முதல் பரவ தொடங்கியது கொரோனா தொற்று காரணமாக பல்வேறு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதிலும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டது. இந்தியா முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிவேகத்தில் உயர்ந்தது. இதனால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது. இதனை அனைத்து மாநில அரசுகளும் செயல்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 20 ஆயிரத்து […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால் பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக சென்னை மழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய, 7 பேர் கொண்ட குழு தமிழகம் வந்து ஆய்வு மேற்கொண்டது. இந்நிலையில், மழை வெள்ள பாதிப்பை சரி செய்வதற்காக 14 துறைகளுக்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]
காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி பவளவிழா ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் பெரியகருப்பன் விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது, முதல்வர் முக ஸ்டாலின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் செயல்படுத்தி வருகிறார். இந்தக் கல்லூரி பல லட்சம் மாணவர்கள் உருவாக்கியுள்.து இந்த விதையை விதைத்தவர் அழகப்பர் . மு க ஸ்டாலின் மக்களுக்கு சொன்னதையும் சொல்லாததையும் கூட செய்து வருகிறார். இதனால் மக்கள் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றனர். கல்விக்கு […]
தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டண நிதி 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக முதலமைச்சர் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விக்காக ஆகக்கூடிய செலவினங்களை கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் […]
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத் திட்டங்களுக்கு ரூ.805.92கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி நகர்புறம், கிராமப்புறங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் உட்பட 19 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.8,453.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.19 மாநிலங்களில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சுகாதாரத்துறை மானியமாக ரூ.8,453.92 கோடி நிதி அமைச்சகத்தின் செலவின துறை வெளியிட்டுள்ளது. 15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி இந்த மானியங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து கொண்டிருக்கிறது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த 3 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மழை வெள்ள பாதிப்புகளை சென்னை பெரிதும் சந்தித்து வருகிறது. அதனால் சென்னை மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதன் காரணமாக ஒவ்வொரு வருடமும் சென்னையில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட அளவிலான நிதி ஒதுக்கப்படும். அவ்வாறு ஒதுக்கப்பட்ட ஆளும் அது […]
தமிழகத்தில் 3,087 கோவில்களில் சிலை பாதுகாப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம், புலியூர் பாரத்வாஜேஸ்வரர் கோவிலில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு அறையை நேற்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், தமிழகத்தில் உள்ள 3,087 கோவில்களுக்கு கண்காணிப்பு கேமரா மற்றும் களவு எச்சரிக்கை மணி பொருத்தப்பட்ட பாதுகாப்பு அறை கட்டுவதற்கு ஒதுக்கப்பட்டுள்ள 309 கோடி நிதியில் திருவிடைமருதூர், பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் […]
லக்னோவில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 11 மாநிலங்களுக்கு நகர்புற வளர்ச்சிக்காக ரூ.4,943,73 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.741 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து மத்திய பிரதேசம் ரூ.299.40 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.267.60 கோடியும், தமிழகத்திற்கு ரூ.267.90கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு இ-பட்ஜெட்டாக தாக்கல் செய்து உரையாற்றினார். இதில், துறைவாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி விவரம்: * தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80.26 கோடி ஒதுக்கீடு * தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி ஒதுக்கீடு * காவல்துறைக்கு 8.9 கோடி நிதி ஒதுக்கீடு * நீதித்துறை நிர்வாகத்துக்கு ரூ. 1,713 கோடி ஒதுக்கீடு * மீன்வளத் […]
தமிழகத்தில் கொரோனா சூழலை கட்டுப்படுத்துவதற்காக 533.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்ற […]
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக மிக கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. ஆகையால் இந்தியாவின் நிலையை சரி செய்வதற்காக சர்வதேச நாடுகள் உதவி கரம் நீட்டி வருகின்றது. இந்தியாவுக்கு உதவியாக நின்று தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன் வருவதாக அமெரிக்கா கனடா பிரான்ஸ் போன்ற நாடுகள் கூறியிருக்கின்றனர். […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]
தமிழகத்தில் தேர்தல் வாக்குகளைப் பெற நிதி ஒதுக்கீடு கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக் […]
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 8 ஆயிரத்து 754 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் 10 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 2011 ஆம் ஆண்டு கடைசியாக இந்த பணி நடைபெற்றது. இதையடுத்து இந்த ஆண்டில் கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் நிதி ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், […]
கிள்ளியூர் சட்டசபைத் தொகுதியில் சாலை சீரமைப்பு பணிக்காக ரூபாய் 8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எம் எல் ஏ ராஜேஷ்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜேஷ்குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:- கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தன. அதை சீரமைக்க தொகுதி முழுவதும் பல்வேறு தரப்பினர் என்னிடம் வலியுறுத்தினார்கள். அவர்கள் கோரிக்கையை ஏற்று கிள்ளியூர் பகுதியில் பழுதடைந்த […]
வனத்துறை தலைமையக கட்டிடம் கட்டுவதற்கான மீதி நிதியை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க உள்ளது. சென்னையில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளரான சந்தீப் சக்சேனா ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளார். அதில் குறிப்பிட்டிருப்பது,’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் வேளச்சேரியில் வளத்துறை தலைமையாக கட்டிடம் கட்டுவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.அதனை கட்டுவதற்காக ரூபாய் 30 கோடி ஒதுக்கி கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் […]
கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி ஊராட்சி மன்ற கூட்டமைப்பினர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளுக்கு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம் சாட்டி பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோரிக்கை மனுவை அளிக்க சென்ற போது வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு இல்லை என்றும் […]
கொரோனா தடுப்பு பணிக்காக ரூ 44கோடி நிதியை ஒத்துக்கியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது 6வது கட்ட நிலையில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது கொரோனா பாதிப்பானது தமிழகத்தில் 98 ஆயிரத்தை கடந்த நிலையில், இதை எதிர்த்து தொடர்ந்து போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு உணவு பொருட்களை வழங்குவது, அவர்களுக்கு […]
ஜூன் மாதம் வருவாய் பங்கீட்டு நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.335.41 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரம் பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் […]
சிறு, குறுதொழில் நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் கடன் வழங்க பிரதமர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடனுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் “சுயசார்பு இந்தியா” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடி திட்டங்களை வெளியிடுவதாக அறிவித்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை சீராக்க ஊக்குவிப்பு திட்டங்களை பிரதமர் அறிவித்திருந்தார். இந்த திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை கடந்த வாரம் […]
100 நாள் வேலை திட்டத்துக்காக கூடுதலாக ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பை அதிகரிக்க மத்திய அரசு பட்ஜெட்டில் ஏற்கனவே ரூ.61,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ. 40,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது என கூறியுள்ளார். சொந்த மாநிலங்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இந்த நிதி உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் […]
மருத்துவம், சுகாதார பணியாளர்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பில், மருத்துவ பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கும் 300 நிறுவனங்கள் தற்போது இயங்கி வருகின்றன கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்காக இதுவரை ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 11.07 கோடி ஹைட்ரோகுளோரோகுயின் மாத்திரைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன 51 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது 87 லட்சம் என் – 95 முக கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது மருத்துவ […]
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளுக்கும் விரைவாக பரவி உலகையே அச்சுறுத்தி வருகின்றது. உலக பொருளாதாரத்தில் முதன்மை வகிக்கக்கூடிய அமெரிக்காவையும் இந்த வைரஸ் விட்டுவைக்காமல் தும்சம் செய்துள்ளது. அங்குள்ள 3,536 பேருக்கும் கொரோனாஉறுதி செய்யப்பட்டு 58 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணத்திலும் பரவிய இந்த வைரஸ் வைரஸை கட்டுப்படுத்த அமெரிக்கா பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளைமாளிகையில் […]