தனது உயிரை காப்பாற்றிய மருத்துவமனைக்காக சிறுவன் ரூபாய் 2.75 கோடி நிதி திரட்டியது பலரது பாராட்டையும் பெற்றுக் கொடுத்துள்ளது லண்டனை சேர்ந்த டோனி என்ற சிறுவன் குழந்தையாக இருந்த சமயம் அவரது பெற்றோரால் காயமடைந்து தனது இரண்டு கால்களையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். தற்போது வளர்ப்பு பெற்றோருடன் வசித்து வரும் அவர் கொரோனா களத்தில் அயராது பணிபுரிந்து வரும் மருத்துவர்களுக்கு உதவ இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற கேப்டன் ஒருவர் தனது தோட்டத்தில் நடந்து நிதி திரட்டிய சம்பவம் […]
Tag: நிதி
15 வது நிதிக்குழுவின் பரிந்துரையின்படி நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மொத்தம் 28 மாநிலங்களுக்கு ரூ.5,005 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தமிழகத்திற்கு ரூ.295.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் ஏற்கனவே மத்திய அரசிடம் நிறுத்து ரூ.1928.56 தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த தொகை கோடி 2020-21ம் […]
காவல்துறையினருக்கு கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முக கவசங்களையும் ஆரோக்கியம் தரும் குளிர்பானங்களையும் நடிகர் யோகிபாபு வழங்கியுள்ளார் தமிழ் திரையுலகில் யோகி படத்தின் மூலம் அறிமுகமாகி தனது கடின உழைப்பால் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து சிறந்த நகைச்சுவை நடிகராக வளர்ந்து வருபவர் யோகிபாபு. நகைச்சுவை மட்டுமல்லாது அதிகப்படியான மனிதாபிமானத்தையும் கொண்டவரே இவர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வறுமையில் வாடிய மக்களுக்கு உதவும் நோக்கத்தில் சில தினங்களுக்கு 1250 கிலோ அரிசியும் அரிசி மூட்டைகளை வழங்கினார். […]
உலக சுகாதார நிறுவனத்திற்கு மேலும் 30 மில்லியன் டாலர் நிதி வழங்கவுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது ஸ்விட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவை தலமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் உலக சுகாதார நிறுவனம் ஐநா சபையின் துணை அமைப்பாகும். உலக அளவில் சுகாதார விவகாரங்களை இந்நிறுவனமே கையாண்டு வருகிறது. இந்தியா உட்பட 194 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்நிறுவனம் செயல்படுவதற்கான அதிகளவு நிதிப் பங்களிப்பை அமெரிக்கா தான் வழங்கி வந்தது. தற்போது உலகம் முழுவதும் கொரோனா பரவி […]
ஆந்திர மாநில முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, மாநிலத்தில் உள்ள அனைத்து மசூதிகள், கோயில்கள் மற்றும் தேவாலயங்களுக்கு ரூ .5 ஆயிரம் உதவி வழங்கப்படும் என்று அறிவித்தார். கொரோனா வைரசுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முஸ்லிம் மதத் தலைவர்களுடன் இன்று வீடியோ கான்பரென்ஸ் நடத்திய போது ஆந்திர முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த கூட்டத்தில், புனித ரமலான் மாதத்தில் வீடுகளில் பிரார்த்தனை செய்யுமாறு சமூகத்தை வலியுறுத்தியதற்கான தனது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட […]
மேற்குவங்க மாநிலத்தில் 1 ரூபாய்க்கு அத்தியாவசியப் பொருட்களை தன்னார்வ தொண்டு நிறுவனம் வழங்கி வருகின்றனர் நாடு முழுவதும் கொரோனா பரவலின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் சில மாநிலங்களில் தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு தேவையானவற்றை செய்து வருகின்றனர். அவ்வகையில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் இருக்கும் போங்கான் நகரில் தற்காலிகமான பஜார் ஒன்றை தொடங்கியுள்ளனர் தன்னார்வலர்கள். நுழைவு கட்டணமாக ஒரு ரூபாயை வசூலித்து கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தேவைப்படும் […]
மகாராஷ்டிராவில், நேரடி தொழிலாளர் பரிமாற்றத் திட்டத்தின் மூலம் பதிவுசெய்யப்பட்ட 12 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா ரூ .2,000 உதவி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்த்துள்ளது. அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் தலா ரூ.2,000 வழங்கப்படும் என தொழிலாளர் அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும், ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தினசரி ஊதியம் வாங்கும் தொழிலாளாளர்கள் என பல்வேறு தப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட […]
உலக சுகாதார அமைப்பு வழங்கும் நிதியை நிறுத்த அதிபர் உத்தரவிட்டது ஆபத்தானது என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார் உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், முன்னதாகவே உலக நாடுகளை எச்சரிக்கவில்லை எனவும் அமெரிக்க அதிபர் குற்றம் சாட்டி அமைப்பிற்கு வழங்கி வந்த நிதியை நிறுத்த உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலில் இவ்வாறு செய்வது ஆபத்தான செயல் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கவலையை வெளிப்படுத்தியிருந்தார். Halting funding for the […]
உலக சுகாதார அமைப்புக்கான நிதியை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார மையம் செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். சீனாவில் உருவாகி இன்று உலகையே மிரள வைத்துள்ள கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு அமெரிக்காவில் உயிரிழப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வரும் நிதியை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளர். அதிபரின் இந்த குற்றசாட்டை உலக சுகாதார நிறுவனம் மறுத்தது. […]
மருத்துவ உபகரணம் வாங்க ரூ.1,000 கோடி உடனடியாக ஒதுக்க வேண்டும் என பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வேளாண்துறைக்கு என தனி சிறப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும். மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் உதவ வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார். பிரதமர் மோடி 3வது முறையாக மாநில முதலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 4 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் சார்பில் பல்வேறு […]
கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு பலரும் தங்களால் இயன்ற உதவியை செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் தற்போது இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் கொரோனா பாதிப்பிற்கு ரூ. 3 கோடி நிதி வழங்கியுள்ளார். இதுபோலவே நடன கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சமும், பெப்சி தொழிலார்களுக்கு ரூ.50 லட்சமும், மாற்று திறனாளிக்குரூ. 25 லட்சமும், ஏழை மக்களுக்கு ரூ. 75 லட்சமும் நிதி வழங்கி உதவி புரிந்தார்.
கேரளாவில் இன்று 12 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கண்ணூர் மற்றும் காசராகோடு பகுதிகளில் தலா 4, மலப்புரத்தில் 2, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் தலா ஒருவரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதுவரை 8 வெளிநாட்டவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதில் சிலர் […]
இதுவரை 1,21,271 பேருக்கு கொரோனா சோதனைகள் மேற்கொண்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5194 ஆக உயர்ந்துள்ளது. அதில் இதுவரை கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4643 ஆகும். மேலும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 773 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் […]
இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப் தற்போது உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்திவிடுவோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிக அளவு கொரோனாவால் பாதிப்பை சந்தித்த நாடு அமெரிக்கா. இந்நிலையில் அதிபர் டிரம்ப் இந்தியா ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்து கொடுக்காமல் இருந்தால் பின்விளைவுகளை சந்திக்க கூடும் என இந்தியாவிற்கு மிரட்டல் விடுத்ததோடு, உலக சுகாதார அமைப்பு கொரோனா குறித்து சரியான தகவல் அளிக்கவில்லை எனவும் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவர்களுக்கு வழங்கும் நிதியை நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். […]
மாநிலங்களுக்கான தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஏற்கனவே 1100 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது, மேலும் ரூ .3000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். இந்தியாவில், கடந்த 24 ,மணி நேரத்தில் புதிதாக 693 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளதாவும், இதையடுத்து இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4067 ஆகக் உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இதில் ஜப்லிகி ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய 1445 பேருக்கு […]
விருதுநகர் மாவட்டம் சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அங்கு தொழிலாளர்கள் வழக்கம் போல பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வெடிவிபத்து நிகழ்ந்தது. இதில் நான்கு கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டு கட்டுக்குள் கொண்டுவந்தது. கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று […]