தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளர் தி.மு.க வில் நிர்வாக ரீதியாக இருக்கக்கூடிய 23 அணிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தி.மு.க துணை பொது செயலாளர் பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி, கருணாநிதி பொன்முடி, ஆ.ராசா போன்றோர் நிர்வாக ரீதியான அணிகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை அறிவாலயத்தில் கலைஞர் அரங்கத்தில் கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க அனைத்து அணிகளின் நிர்வாகிகள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள்கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Tag: நியமனம்
மும்பை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்து வருபவர் தீபாங்கர் தத்தா. இவரை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியாக நியமிக்க தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான கொலிஜியம் மத்திய அரசுக்கு சென்ற செப்டம்பர் 26-ஆம் தேதி பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு தீபாங்கர் தத்தாவை சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இத்தகவலை மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டில் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையானது (தலைமை நீதிபதியையும் சேர்த்து) […]
திமுக கட்சியில் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு கனிமொழி நியமிக்கப்பட்டார். அதேபோல் தற்போது இளைஞர் அணி செயலாளர், மகளிர் அணி செயலாளர், பிரச்சார குழு செயலாளர், சமூக வலைதள பொறுப்பாளர்கள், ஆலோசனைக் குழு உள்ளிட்ட பதவிகளுக்கு பொறுப்பாளர்களை செயலாளர் துரைமுருகன் நியமித்துள்ளார். இந்நிலையில் இளைஞரணி செயலாளராக முதலமைச்சரின் மகன் உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.
பச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 254 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது என ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஆட்சியில் பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் நியமனங்களில் பெரும் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. முறைகேடாக நியமிக்கப்பட்டவர்களின் நியமனத்தை ரத்து செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தற்போது வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் 2013 முதல் 2015 வரை நியமிக்கப்பட்ட 254 பேராசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார். தகுதியற்ற கல்லூரி […]
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும் எனும் அறிவிப்பு சென்ற 2015ம் வருடம் பிப்ரவரியில் வெளியாகியது. இதையடுத்து மதுரை தோப்பூரில் அதற்கான இடம் தோ்வுசெய்யப்பட்டு கடந்த 2019ம் வருடம் பிரதமா் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்குரிய கட்டுமானப் பணிகளானது இதுவரை நிறைவடையாத சூழ்நிலையில், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூயில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான MBBS வகுப்புகள் கடந்த வருடம் முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் தலைவர்ஆக நரம்பியல் சிறப்பு மருத்துவரான வி.நாகராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக அரசு போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.அதே சமயம் காலி பணியிடங்களை நிரப்பவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக புதிதாக 4000 உதவி பேராசிரியர்கள் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். உதவி பேராசிரியர்கள் தேர்வில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு 15 சதவீதம் வெயிட்டேஜ் […]
2,381 அங்கன்வாடி மையங்களில் LKG, UKG வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என்ற தமிழக அரசு அறிவிப்புக்கு ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அங்கன்வாடி மையங்களில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்து கொள்ளலாம் என்றும் வருடத்திற்கு 11 மாதங்கள் மட்டுமே பணிக்காலம் என்றும் அறிவித்துள்ளது மேலும் இவர்களுடைய பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது மட்டுமே என்றும், சிறப்பு ஆசிரியர்களுக்கு மாதம் 5000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கவும் பள்ளி மேலாண்மை குழு உத்தரவு பிறப்பித்துள்ளது. இல்லம் தேடி […]
தமிழகத்தில் மாற்றுப் பணியில் உள்ள 182 ஆசிரியர்களுக்கு பதில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. 20 சதவீதம் ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர். 13,330 ஆசிரியர்களை நியமனம் செய்வதாக அறிவிப்பு வெளியான நிலையில் 20% ஆசிரியர்கள் மட்டுமே தற்போது வரை நியமிக்கப்பட்டுள்ளதால் பல பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 182 தற்காலிக […]
2006 மற்றும் 2007ல் தேர்வு செய்யப்பட்ட 4500 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பட்டியலை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அவகாசம் வழங்கியுள்ளது. தமிழக அரசு ஊழியர்களுக்கான ஏழாவது ஊதியக்குழு, சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு அளித்திருந்தது. இதில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் அவற்றை சரி செய்ய ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டு ஆகஸ்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டுக்கு பிறகு […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிப்பதற்காகவும், ஊட்டச்சத்து குறைபாடுகளை போக்கவும், கற்றல் இடை நீற்றலை தவிக்குவதற்காக காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்தார். இந்த திட்டத்தின் முதற்கட்டமாக 1545 அரசு பள்ளிகளிலும் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தினை திறன் பட செயல்படுத்திட ஏதுவாக […]
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் புதியதாக 1,0300 ஆசிரியர்களை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று சேலம் வந்திருந்தார். பின்னர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வாளர் மாளிகையில் செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது: “ஏற்காட்டில் புளியங்குடி என்ற கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி கட்டிடம் பழுதடைந்து இருப்பதை அறிந்து பார்வையிட்டு ஆய்வு செய்தேன். உடனடியாக அந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு […]
சென்னை மாநகராட்சியில் அரசு சார்பாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களாக தனியார் பள்ளிகள் மீது இருந்த மோகம் மற்றும் ஆங்கில ஆக்கிரமிப்பு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையானது குறைந்தது. அதாவது அரசு பள்ளிகளில் பயின்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கையானது 83 ஆயிரம் வரை குறைந்தது. இதன் காரணமாக அதற்கு தகுந்தாற்போல் ஆசிரியர் எண்ணிக்கையும் குறைந்தது. இந்த நிலையில் சென்ற 2 வருடங்களாக […]
அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து […]
தமிழ்நாடு அரசின் பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப திட்டமிட்டு அரசு சென்ற 23ஆம் தேதி ஒரு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்து இருந்தார். அவற்றில் கடந்த 2013 ஆம் வருடம் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சியடைந்த பெரும்பாலானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் […]
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.7,500 முதல் ரூ.13,000 வரை சம்பளம் வழங்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ராணுவ துணை கீழ்நிலைச் செயலாளர் என்ற உயர் பதவிக்கு இந்திய வம்சாவளியான டாக்டர் ராதா ஐயங்கார் பிளம்பை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். இந்தப் பெண் அதிகாரி, இதுவரை கூகுளில் நம்பிக்கை, பாதுகாப்பான ஆராய்ச்சி மற்றும் நுண்ணறிவு இயக்குனர் பதவி வகித்து வந்தார். அதுமட்டுமில்லாமல் பேஸ்புக் நிறுவனத்தில் கொள்கை பகுப்பாய்வு பிரிவின் உலகளாவிய தலைவராகவும், கார்ப்பரேஷனில் மூத்த பொருளாதார நிபுணராகவும் வாஷிங்டன் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் மூத்த அதிகாரியாகவும் பதவி வகித்து வருகிறார். […]
டிஎன்பிஎஸ்சி தலைவராக சி.முனியநாதன் (பொ) நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9-ம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவர் நியமிக்கப்படும் வரை சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
ஐநா சபையின் பொதுச் செயலாளராக அண்டனியோ குட்ரோஸ் இருக்கிறார். இவரின் தொழில்நுட்ப தூதராக இந்தியாவை சேர்ந்த அமர்தீப் சிங்கில் என்பவர் நியமிக்கப்பட்டு இருக்கின்றார். இவர் சர்வதேச டிஜிட்டல் ஒத்துழைப்புக்கான திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கான தொழில்நுட்பம் மீதான தூதராக செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது. மேலும் அமந்தீப் சிங் கில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் பிடெக் பட்டம் பெற்று இருக்கின்றார். அதன்பின் லண்டனிலுள்ள கிங்ஸ் கல்லூரியில் அணுக்கரு கற்றலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அமந்தீப் சிங் கில்கடந்த 1992 […]
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் துறையின் இயக்குனராக பணியாற்றிய சான்கியாங் ரீ கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த இடம் காலியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 22ஆம் தேதி பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றார். அதனை ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிருஷ்டலீனா ஜார்ஜியவா அவர் நேற்று அறிவித்துள்ளார். கிருஷ்ணா சீனிவாசன் இந்திய பொருளாதார நிபுணராக இவர் […]
டெல்லியின் புதிய துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனா நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகின்றது. இந்த மாநிலத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அனில் பைஜால் துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார். பதவிக்காலத்தில் அவருக்கும் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே பல விஷயங்களில் மோதல் ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே கடந்த […]
தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா மே 14 ஆம் தேதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து, தற்போது தேர்தல் ஆணையராக இருக்கும் ராஜீவ் குமார் தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மே 15ஆம் தேதி தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் 3,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்பது வடமாவட்டங்களில் 3,000 பட்டதாரி ஆசிரியர்களை கூடுதலாகவும், காலி பணியிடங்களிலும் நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சம்பளம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வி அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1.8.2021 ஆண்டு நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் மேற்கொண்டதன் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவை உள்ள […]
அமெரிக்காவின் துணை அதிபரான கமலா ஹாரிஸின் பாதுகாப்பு பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார். சாந்தி சேர்த்தி என்ற அந்த பெண்மணி ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவராவார். இவர் 2012ஆம் ஆண்டு வரை போர் கப்பல் ஒன்றில் கமாண்டராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது அதோடு சாந்தி சேத்தி அமெரிக்க கப்பல் படையின் முன்னாள் அதிகாரியாகவும் விளங்கியவர் ஆவார்.
தகவல் தொழில் நுட்ப துறையைச்சோ்ந்த விப்ரோ இந்திய நிறுவனத்தின் தலைவராக சத்யா ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். இது தொடர்பாக விப்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, விப்ரோ நிறுவனத்தின் இந்தியப்பிரிவு செயல்பாடுகளுக்கான தலைவராக சத்யா ஈஸ்வரன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். இவா் கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவனத்தின் மூத்தநிா்வாகியாக பொறுப்பு வகித்தவா் ஆவார். புது இலக்குகளை அடைவதற்கான வியூகம், மாற்றம் மற்றும் நவீனமயமாக்கல் ஈடுபாடுகள் போன்றவற்றின் வாயிலாக இந்தியாவில் முக்கியத் துறைகளில் நிறுவனத்தின் வா்த்தகத்தை வலுப்படுத்துவதில் சத்யா ஈஸ்வரன் […]
இந்திய ராணுவத்தில் புதிய தலைமை தளபதியாக மனோஜ் பாண்டேவை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய ராணுவத்தில் கிழக்குப்பகுதி அந்தமான் -நிக்கோபார் பகுதிகளில் இவர் தளபதியாக செயல்பட்டவர். மேலும்19 82 ஆம் ஆண்டிலிருந்து ராணுவத்தில் பொறியாளராக பணியாற்றியவர். பொறியாளராக இருப்பவர் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
அமெரிக்காவில் இரண்டு முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். அமெரிக்க நாட்டில் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் இந்தியர்கள் முக்கிய பதவிகளை அலங்கரிப்பது நீட்டித்து வருகிறது. இப்போது இரண்டு முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரை செய்துள்ளார். இந்திய வம்சாவளி வக்கீல் கல்பனா கோட்டகல் சம வேலைவாய்ப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வினை சிங் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் […]
தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,774 ஆசிரியர் பணியிடங்களை அடுத்த ஐந்து மாதங்களுக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. மேலும் இந்தப் பணியிடங்களை அந்தந்த பள்ளிகள் செயல்பட்டு வரும் பெற்றோர், ஆசிரியர் கழகத்தின் மூலம் நியமனம் செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகளை நியமிப்பது குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர்களாக இருந்த என்.மாலா, எஸ்.சவுந்தர் போன்றோர் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையானது 13 ஆக அதிகரிக்கிறது. தற்போது 14 பணியிடங்கள் காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
16ஆவது சட்டப் பேரவையின் இரண்டாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் கடந்த 18 மற்றும் 19 ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கலும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சட்டமன்றத்தில் துபாஷ் என்ற பெயருடன் அழைக்கப்படும் இந்த பொறுப்பு சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும்போது முன்னே செல்வார். அதன்பின் சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியே காத்திருப்பார். மீண்டும் […]
தமிழகத்திற்கு 3 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி ஆர்.வி.சஞ்சீவனா, சி.பழனி, ஏ.பி.மகாபாரதி ஆகியோர் தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். விதிகளின்படி, இந்திய நிர்வாக பணியிடங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அந்தந்த மாநிலங்களுடன் ஆலோசனை செய்து பணிகளை நிரப்பலாம் என்னும் அடிப்படையில் இந்த நியமனங்கள் நடைபெற்றுள்ளதாக அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களுக்கு அறநிலையத் துறை ஊழியர்களை அயல்பணியாக நியமித்ததை எதிர்த்து டி.ஆர்.ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, கோவில் ஊழியர்களை நியமிக்க அறங்காவலர்களுக்கு மட்டுமே அதிகாரம் இருக்கிறது, அறநிலையத் துறை ஆணையருக்கு இதில் அதிகாரமில்லை என்று மனுதாரர் வாதிட்டார். அதுமட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் கோவில்களில் 19 ஆயிரம் கோயில்களில் பரம்பரை அறங்காவலர்கள் இல்லை […]
பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை டிஎன்பிஎஸ்சி-யிடம் ஒப்படைக்க தமிழக உயர்கல்வி துறை திட்டமிட்டுள்ளது. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் நியமனத்தை அந்தந்த பல்கலைகளே மேற்கொள்கின்றன. இதில் இட ஒதுக்கீடு மற்றும் கல்வித்தகுதி முறைகள் பின்பற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இந்த நிலையில் அனைத்து பல்கலைகளிலும் பணியாளர்களை நியமிக்கும் பொறுப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் ஒப்படைக்க பரிசீலனை நடைபெறுகிறது. இது குறித்து உயர்கல்வி துறை துணை செயலர் இளங்கோ ஹென்றிதாஸ் […]
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரியை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்தவரை தலைமை நீதிபதியாக நியமிக்க கடந்த வாரம் கொலிஜியம் பரிந்துரை செய்தது. இதனை ஏற்று அவரை தலைமை நீதிபதியாக குடியரசு தலைவர் நியமனம் செய்துள்ளார்.
டெல்லி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்தி ஸ்ரீ துலிப்புடி என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தின் சாவித்ரி பாய் புலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பணிபுரியும் சாந்திஸ்ரீ துலிப்புடி என்பவர் சர்வதேச உறவுகள் குறித்த படிப்பில் எம்.பில். பி.எச்.டி. படித்து முடித்துள்ளார். இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டெல்லியில் உள்ள புகழ்பெற்ற நேரு பல்கலைக்கழகத்தில் முதல் பெண் துணைவேந்தராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இவரது நியமனத்திற்கு ஒப்புதல் […]
இந்தியாவின் இஸ்ரேல் தூதராக இருந்து வரும் நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியா- பூட்டான் நாடுகளுக்கு தூதராக செயல்பட்டு வந்த நயோர் கிலான் தற்போது இலங்கைக்கும் இஸ்ரேல் நாட்டின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சேவை சந்தித்து, அதற்கான சான்றுகள் அளித்து அதிகாரபூர்வமாக இலங்கை – இஸ்ரேல் தூதராக பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்துப் பேசிய நயோர்கிலான், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் […]
திமுக தகவல் தொழில் நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ -வும் திமுக அணி செயலாளராக மாநிலங்களவை எம்.பி. அப்துல்லாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுபற்றி பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, திமுக தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராக டி.ஆர்.பி ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், மேலும் திமுக அணி செயலாளராக மாநிலங்களவை எம்பி அப்துல்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும், தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் […]
பஞ்சாப் மாநிலத்தின் புதிய காவல் துறை தலைவராக ஐபிஎஸ் அதிகாரி வீரேஷ் குமார் பவ்ராவை நியமித்து அரசு சனிக்கிழமையன்று ஆணையிட்டது. 1987 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான இவர், கடந்த 3 மாதங்களில் 3-வது காவல் துறை இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பதவியேற்ற நாளிலிருந்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு அவர் பதவியில் தொடருவார். பஞ்சாப் கவர்னர் எம்பனல்மெண்ட் கமிட்டி உயர் பதவிக்கு பாவ்ரா, முன்னாள் மாநில காவல்துறை தலைவர் தினகர் குப்தா மற்றும் ஐபிஎஸ் அதிகாரி பிரபோத் குமார் […]
தமிழகத்தில் கடந்த வருடம் பரவிய கொரோனா தொற்று குறைந்து வருவதை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் அதாவது இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் இந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையும் அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளை பொறுத்தவரையிலும் வருடந்தோறும் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் […]
தேசிய பாதுகாப்பு கவுன்சில் பிரதமர் மோடியின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த கவுன்சில் வெளிப்புற மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு குறித்து அனைத்து பணிகளையும் செய்து வருகிறது. தற்போது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராக விக்ரம் மிஸ்ரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சீனாவுக்கான இந்திய தூதர் ஆக 3 ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பிறகு இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் பல்வேறு முக்கிய பொறுப்புக்களில் […]
தென்காசி மாவட்டம் சுரண்டை சிறப்பு நிலை பேரூராட்சியாக செயல்பட்டு வந்தது. இதனை தமிழக அரசு நகராட்சி ஆக உயர்த்தி உத்தரவிட்டு பூர்வாங்க பணிகள் நடந்து வந்தது. இந்த நகராட்சியின் முதல் ஆணையாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று பதவியேற்றுக்கொண்டார். இவர் இதற்கு முன்பு பேரூராட்சிகள் மண்டல இயக்குனர் அலுவலகத்தில் தலைமை எழுத்தாளராக பணிபுரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், புதிய ஆணையாளராக லெனினுக்கு அலுவலக ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் விஜய வரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக ராயப்பேட்டையில் உள்ள 250 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு விட நவம்பர் 24 அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து வழக்கறிஞர் ஜெகநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோவிலில் அறங்காவலர்கள் இல்லாத நிலையில் கோவில் சொத்துக்களை ஏலம் விடக்கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனைதொடர்ந்த்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கோவில்களுக்கு விரைவில் அறங்காவலர்கள் […]
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஊதியம் குறித்த மசோதாவின் மீது மக்களவையில் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டது. அப்போது பேசிய விசிக தலைவர் திருமாவளவன் “நீதிபதிகள் பணியிட மாற்றத்தில் அநீதி இழைக்கப்படுகிறது.சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜீ பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதில் இது பிரதிபலிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் உச்சநீதிமன்ற கிளை உருவாக்கவேண்டும். நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும். கொலிஜியம் முறை ஜனநாயகப்பூர்வமானதாக இல்லை; இதனை ரத்து செய்து விட்டு ஜனநாயகப்பூர்வமானதான முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் […]
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சென்னையில் வடகிழக்கு பருவமழையை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் மாவட்டங்களுக்கு 4 பொறுப்பாளர்களை தேமுதிக நியமித்துள்ளது. அதன்படி வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டங்களுக்கு கட்சியின் துணை செயலாளர் சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மற்றும் தென்காசி […]
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர். என்.ரவியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். ஆர் என் ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், மத்திய உளவுத் துறையின் சிறப்பு இயக்குனராகவும் பணியாற்றினார். மேலும், தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக இருப்பார் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர் பாண்டியனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: கடந்த அதிமுக ஆட்சியின்போது வேலூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் என்று மூன்று மாவட்டங்களாகப் மாறியது. இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டராக கிளாஸ்டோன் புஷ்பராஜ் பணியாற்றி வந்தார். தற்போது அவர் மாநில திட்ட ஆணைய உறுப்பினர் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதிய மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் ஐ நியமித்து […]
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மேளம் வாசிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. குருவாயூர் கோவில் உள்ளிட்ட பெரும்பாலான கோவில்களில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் தற்போது தலித் இளைஞர் ஒருவர் மேளம் வாசிக்கும் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். குருவாயூர் கோயில் உள்ளிட்ட கேரளாவில் பெரும்பாலான கோவில்களில் சில குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே மேளம் வாசிப்பது வழக்கம். அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களே வழிவழியாக இந்த பணிக்கு நியமனம் […]
மணிப்பூர் மாநில ஆளுநராக தமிழக பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை நியமனம் செய்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவராகவும், தேசிய துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் இல. கணேசன். இந்தநிலையில் தற்போது அவர் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவியத் தொடங்கியுள்ளன.
தமிழக சட்டப்பேரவையில் தலைவர் இல்லாத பொழுது அன்பழகன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், டி.ஆர்.பி.ராஜா ஆகிய 4 பேர் மாற்று தலைவர்களாக செயல்படுவார்கள் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக தலைமையிலான அரசு சார்பில் கடந்த 13ம் தேதி முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை திமுக கட்சியின் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து 14ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனை […]
நியூயார்க் மாகாணத்தின் ஆளுநராக முதன் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். பாலியல் புகாரில் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவின் ராஜினாமாவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேத்தி ஹோச்சுல் என்னும் அப்பெண் வழக்கறிஞர் 57வது ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார். 2015ஆம் ஆண்டு நியூயார்க்கில் துணைநிலை ஆளுநர் ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.