பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அவரது இல்லத்தில் சந்தித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு புதிய ஆளுநரை நியமித்துள்ள நிலையில், தமிழக ஆளுநர் திடீர் டெல்லி விசிட் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது. ஏற்கெனவே குடியரசுத்தலைவரை ஆளுநர் சந்தித்து பேசியிருந்த நிலையில், பிரதமர் மோடியுடன் சந்தித்து பேசினார். தமிழக ஆளுநரின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதால் தமிழகத்துக்கு புதிய ஆளுநரை தேர்வு செய்வதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. அதன்படி தமிழகத்தின் புதிய […]
Tag: நியமனம்
வாஸி நேவிகேஷன் ஆப்பின் தலைமை நிர்வாகியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நேஹா பாரிக் நியமிக்கப்பட்டுள்ளார். கூகுள் நிறுவனத்தின் வாஸி நேவிகேஷன் ஆப்பின் தலைமை நிர்வாகியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நேஹா பாரிக் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பயண வெப்சைட்டான ஹாட்வொயரின் முன்னாள் அமெரிக்க இந்திய தலைவராக இருந்த நிலையில், தற்போது வாஸி நேவிகேஷன் ஆப்பின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆப்பின் சிஇஓ-வாக இருந்த நோம் பார்டின் கடந்த நவம்பர் மாதத்தில் பதவி விலகியதை தொடர்ந்து […]
கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அனில் காந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு இருந்த டிஜிபி லோகநாதனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய டிஜிபியாக இவர் பதவியேற்றுள்ளார். 1988 ஆம் ஆண்டைச் பேட்சை சேர்ந்த அனில் காந்த் கேரளாவில் ஏடிஜிபியாக பணிபுரிந்துள்ளார். சுரேஷ்குமார், பி சந்தியா, அனில் காந்த் ஆகியோர் பெயரை குடிமையில் பணிகள் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் […]
மக்கள் நீதி மைய கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மக்கள் நீதி மைய கட்சியில் சமீபகாலமாக நிர்வாகிகள் அனைவரும் ராஜினாமா செய்து வெளியேறி வரும் நிலையில், காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட்சித் தலைமை ஆலோசனை செய்து வந்தது. இதையடுத்து மக்கள் நீதி மைய கட்சியில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மக்கள் நீதி மையத்தின் அரசியல் ஆலோசகர்களாக பழ கருப்பையா, பொன்ராஜ் வெள்ளைச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் துணைத் தலைவராக ஐஎப்எஸ் அதிகாரி ஏகே ஷர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார். மோடிக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஏகே ஷர்மாவுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தற்போது புதிய பிரதேச மாநிலத்தின் பாஜக துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, ஏகே சர்மாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பது உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு விருப்பமில்லை என்று கூறப்பட்டு வருகின்றது. இதன் காரணமாகவே மோடிக்கும் ஆதித்ய நாட்டுக்கும் இடையில் மனக்கசப்பு நிலவி […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், ஆக்ஸிஜன் பற்றாக்குறை போன்ற பல தட்டுப்பாடுகள் நிலவுகின்றன. இதனை சரிசெய்யும் முயற்சியில் தமிழக அரசு தீவிரம் காட்டிவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 2 ஆயிரம் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் குறிப்பாக கவனிக்கப்பட்ட துறை லஞ்ச ஒழிப்பு துறை ஆகும். முன்னாள் அமைச்சர்கள் தொடங்கி சாதாரண அரசு ஊழியர்கள் […]
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி அன்று சுசில் சந்திரா நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதியிலிருந்து தேர்தல் ஆணையராக பணியாற்றி வருகின்றார். அவரின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மே 14-ஆம் தேதி முடிவடைய உள்ளது. அவரின் தலைமையில் கோவா, மணிப்பூர், உத்திரகாண்ட், பஞ்சாப் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் கமிஷன் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கு முடிவு […]
கேரள மாநிலத்தில் எதிர்க்கட்சி தலைவராக வீட்டில் வி.டி.சதீசன் என்பவர் நியமனம் செய்யப்பட்டார். கேரளாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கேரளாவின் முதல்வராக பினராய் விஜயன் நேற்று முன்தினம் பதவியேற்றார். இதைதொடர்ந்து 20 அமைச்சர்களும் பதவியேற்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக காங்கிரசை சேர்ந்த வி.டி.சதீசனை காங்கிரஸ் தலைமை நியமனம் செய்துள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சித் தலைவராக ரமேஷ் சென்னிதலா இருந்த நிலையில் தற்போது இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.எதிர்க்கட்சித் தலைவராக வி.டி.சதீசன் […]
தமிழகத்தில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை கவனிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தொடர்ந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் சுகாதார ஊழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2,100 சுகாதார பணியாளர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை […]
கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க மாவட்டங்களுக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லாத சூழ்நிலை உருவாகிக் கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழக அரசு தற்போது […]
அரியலூர் மாவட்டத்தில் வெளிமாநிலத்தவர்களை கண்காணிப்பதற்காக புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியாளர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் ஊரடங்கில் இருந்து சில தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு […]
திண்டுக்கல் அருகே உள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு புதியதாக துணைவேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் அருகே காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு துணைவேந்தராக பணியாற்றி வந்த நடராஜன் ஓய்வு பெற்றார். அதன்பின் துணைவேந்தராக யாரும் நியமிக்கப்படவில்லை. இதையடுத்து துணைவேந்தராக தற்போது பல்கலைக்கழக பேராசிரியர் தேவேந்திரன் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் காந்திகிராம கிராமிய பல்கலைகழகத்திற்கு மத்திய உயர் கல்வித்துறையின் உத்தரவின்பேரில் பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த […]
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.பாப்டே அவர்களின் பதவிக்காலம் வருகின்ற 23ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அவரைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு யார் நியமிக்கப்படுவார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. பொதுவாக தற்போது பதவியில் இருக்கும் தலைமை நீதிபதி ,தனக்குப்பின் பணியாற்றியுள்ள புதிய தலைமை நீதிபதியின் பெயரை பரிந்துரைப்பது வழக்கமான ஒன்றாகும். அதன்படி எஸ்.ஏ.பாப்டே தனக்குக் கீழ் முதன்மை நீதிபதியாக செயல்படும் என்.வி.ரமணாவை […]
அமெரிக்க வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கைக்கு முக்கிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே முதன் முறையாக அதிபர் ஜோ பைடன் துணை சுகாதார செயலாளர் பதவிக்கு திருநங்கையான Dr.Rachel Levine என்பவரை நியமித்தார். இதற்கு குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த நியமனதிற்கான மசோதா புதன்கிழமை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சபையில் 52க்கு 48 என்ற கணக்கில் ஆதரவான வாக்குகள் பெற்று துணை சுகாதார துறை அமைச்சராக Rachel Levine நியமனம் […]
தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூடுதலாக 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]
தமிழகத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். […]
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்களை பற்றி இவர்கள் ஆய்வு செய்வர். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அதுல் ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், […]
தென்மேற்கு ராணுவ தலைமையிட செயல்பாட்டில் ராணுவ உயர் அதிகாரிகள் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மூத்த லெப்டினன்ட் ஜெனரல் ஒருவரை இராணுவத்தளபதி எம்எம் நரமணே நியமித்துள்ளார். ராஜஸ்தான், பஞ்சாப் மாநில பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைக்கு பொறுப்பான தென்மேற்கு ராணுவ தலைமையகத்தில் பொறுப்பில் உள்ள ராணுவ அதிகாரிக்கும், அவருக்குக் கீழ் பணியாற்றும் ராணுவ அதிகாரிக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தலைமையிட செயல் பாட்டில் தடைகள் ஏற்பட்டு உள்ளதாக […]
இந்திய கடற்படையின் போர்க்கப்பலில் முன்கள போராளிகளாக முதன்முதலாக இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய கடற்படையில் பல பிரிவுகளில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தாலும், போர்க்கப்பல்களில் பெண் அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் முதன்முறையாக போர்க்கப்பலில் இரண்டு பெண் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். சப்-லெப்டினன் குமுதினி தியாகி மற்றும் சப்-லெப்டினன் ரீத்தி சிங் ஆகியோர் கடற்படை போர்க் கப்பல்களில் முன்கள பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தாங்கள் இருவரும் 60 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டதாகவும், பயிற்சி மிகவும் கடுமையாக இருந்தது எனவும் […]
உலகம் முழுவதிலும் கொரோனாவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட உலக சுகாதார அமைப்பு ஒரு குழுவை நியமனம் செய்துள்ளது. உலக சுகாதார அமைப்பால் நியமனம் செய்யப்பட்ட சுயாதீன குழு, அடுத்த வருடம் சுகாதார நிறுவனம் மற்றும் கொரோனா தாக்கத்திற்கான பதிலை உலக அளவில் மறு ஆய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிடும் என கூறப்படுகின்றது. அந்த குழுவின் தலைவராக முன்னாள் லைபீரியா அதிபர் எலன் ஜான்சன் மற்றும் நியூசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஹெலன் கிளார்க் இணைந்து பணியாற்ற […]
தமிழக காவல்துறையின் சிபிசிஐடி டிஜிபியாக பிரதீப் வி.பிலிப் என்பவரை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி டிஜிபியாக இருந்த ஜாபர் சேட் குடிமை பொருள் தடுப்புப் பிரிவுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜாபர் சேட் கடந்த 2011ம் ஆண்டில் மண்டபம் பிரிவுக்கான காவல்துறை அதிகாரியாகவும், ஏடிஜிபி யாகவும் இருந்தார். அதன்பின்னர் காவலர் பயிற்சி பள்ளியில் அதிகாரியாக இருந்தார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிபிசிஐடியில் டிஜிபியாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், […]
காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகள் திட்டம், குடிமராமத்து பணிகளை பார்வையிட அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். குடிமராமத்து பணிகளை மேற்பார்வையிட்டு, ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்த 7 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 7 ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களுக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கணட மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவதற்காக தமிழக அரசு 67 கொடியே […]
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 4 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஒரு காவல் அதிகாரி கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகமாக உள்ள மண்டலங்களில் கூடுதலாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் […]
அதிமுகவின் தகவல் தொழில் நுட்பப் பிரிவு கூண்டோடு கலைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்ப செயலாளர், துணை நிர்வாகிகளாக இருந்தவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிமுகவின் அனைத்து ஊரக கழக செயலாளர்கள் பொறுப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் இந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை, வேலூர், கோவை மற்றும் மதுரை என பிரிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகியவை சென்னை மண்டலத்தில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர், […]
சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் உடனடியாக காவலரை நியமிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் இல்லாத ஏடிஎம் மையங்களை உடனடியாக மூட வேண்டும் என சேலம் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மையங்களில் அவ்வப்போது கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 203 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 2,526 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று […]
வெளிமாநிலத்தில் உள்ள தொழிலாளர்களை தமிழகம் அழைத்து வரும் பணிகளை மேற்கொள்ள அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வெளிமாநிலத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்கள், சுற்றுலா சென்றவர்கள் ஆகியோரை தமிழகம் அழைத்து வர மத்திய அரசு அதிகாரிகளுடன் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். வருவாய் பேரிடர் மேலாண்மை துறை செயலர் அதுல்ய மிஸ்ராவை நியமித்துள்ளதாக தலைமை செயலாளர் சண்முகம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். ஊரடங்கு காரணமாக பிற மாநிலங்களில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். […]
நகர்ப்புற, உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள அம்மா உணவகங்களில் தரமான உணவு வழங்க தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி,வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். அம்மா உணவகங்களில் நாள்தோறும் தரமான உணவுகளை தடையின்றி வழங்க தனிப்பொறுப்பு அலுவலரை நியமிக்க வேண்டும் என கூறியுள்ளார். அம்மா உணவகங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதையும் அந்தந்த பொறுப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநில அளவிலான ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி […]