ஏகனாமிஸ்ட் இன்டெலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கை செலவு கணக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு 172 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நியூயார்க் மற்றும் சிங்கப்பூர் போன்ற நகரங்கள் உலக அளவில் இருக்கும் மற்ற நகரங்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மக்கள் வசிப்பதற்கு ஆடம்பரம் மிகுந்த நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் உணவு, ஆடைகள், போக்குவரத்து, வீடு போன்ற 200-க்கும் மேற்பட்ட விஷயங்களுக்கு ஆகும் செலவுகள் பற்றி ஆய்வு […]
Tag: நியூயார்க்
அமெரிக்க நாட்டில் கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டதில், நியூயார்க் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதிலும் நியூயார்க்கில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. அம்மாகாணம் மொத்தமும் கடுமையான காற்று வீசுவதோடு பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஏரி நகரத்தில் ஒரே நாளில் சுமார் 150 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதன் காரணமாக குடியிருப்புகள், சாலைகள் வாகனங்கள் என்று அனைத்திலும் பனி […]
நியூயார்க் நகரில் அடுத்த வருடம் தீபாவளிக்கு பள்ளிகளுக்கு விடுமுறை என மேயர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நியூயார்க் நகரில் அடுத்த வருடம் முதல் தீபாவளி திருநாள் அன்று அரசு பள்ளிகளுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் என அந்த நகர மேயர் எரிக் ஆடம்ஸ் கூறியுள்ளார். இதனை அடுத்து அவர் பேசும்போது தீபாவளி மற்றும் தீபத்திருவிழா என்றால் என்ன என்பதை பற்றி நான் நிறைய கற்றுக் கொண்டேன். இந்த நடவடிக்கை குழந்தைகள் தீபத் திருவிழாவை பற்றி அறிய ஊக்குவிக்கும் […]
அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் இந்து கோவிலுக்கு முன்புறம் இருந்த மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் இழிவுபடுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க நாட்டின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த 16ஆம் தேதி அன்று அதிகாலை நேரத்தில் குயின்ஸில் இருக்கும் கோவிலின் அருகில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தியின் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். அதில், அவர்கள், மிகவும் ஆபாசமான வார்த்தைகளை எழுதி சென்றிருக்கிறார்கள். இந்த மாதத்தில் இரண்டாம் முறையாக அமெரிக்க நாட்டில் உள்ள […]
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் மூன்று வயது குழந்தை அடுக்குமாடி குடியிருப்பின் 29 ஆம் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் 29-ஆம் மாடியிலிருந்து ஒரு 3 வயது குழந்தை தவறி விழுந்திருக்கிறது. குழந்தை விழுந்த சத்தம் பயங்கரமாக கேட்டதாக அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கூறியிருக்கிறார்கள். உடனே வெளியில் வந்து பார்த்தபோது, அந்த குழந்தையின் தாயார், “ஐயோ, என் குழந்தை” என்று கதறி அழுததாக கூறப்பட்டுள்ளது. […]
நியூயார்க்கில் சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு புல்டோசர் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நியூயார்க்கின் ஏரிக் ஆடம்ஸ் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். சட்டத்திற்கு புறம்பாக தயாரிக்கப்பட்ட இந்த இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என தெரிவித்துள்ள ஆடம்ஸ் மேயர் இந்த இருசக்கர வாகனங்கள் தயாரிக்கப்படுவது கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடத்தில் அதிகரிப்பதாக கவலை தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட 2000 வாகனங்களில் முதல் கட்டமாக 100 […]
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், இனிமேல் 21 வயது நிரம்பியவர்கள் தான் துப்பாக்கி வாங்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் கடந்த மாதம் 18 வயதுடைய ஒரு இளைஞர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இதனைத்தொடர்ந்து நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன், சட்டமியற்றுபவர்களிடம் கைத்துப்பாக்கிக்கான சட்டங்களை கடுமையாக மாற்றுமாறு கோரிக்கை வைத்திருக்கிறார். இந்நிலையில், தற்போது நியூயார்க் நகரின் ஆளுநர் இந்த சட்டங்களின் தொகுப்பிற்கு அனுமதி […]
அமெரிக்காவில் குத்துச்சண்டை போட்டி நடந்த சமயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பரப்பப்பட்ட வதந்தியால் மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். அமெரிக்க நாட்டில் தற்போது துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதன்படி டெக்சாஸ் மாகாணத்தின் தொடக்கப்பள்ளியில் 18 வயதுடைய நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் அந்த பள்ளியை சேர்ந்த 19 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நியூயார்க்கில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக வதந்தி பரப்பப்பட்டது. அதனைத் […]
நியூயார்க்கில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நேற்று முன்தினம் நியூயார்க் அருகே உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 3 பெண்கள், 7 ஆண்கள் என 10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தினால் நெரிசலில் சிக்கி 13 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த விபத்தினால் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என்று […]
அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளினிலுள்ள ஒரு சுரங்கப்பாதை நிலையத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த திடீர் தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக நியூயார்க் நகர தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையில் சம்பவ இடத்தில் அங்கு பல வெடிக்கப்படாத சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று நியூயார்க் நகர அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு அதிகாரிகளின் கூற்றுப்படி தாக்குதல் நடத்திய […]
நியூயார்க்கில் கட்டாய தடுப்பூசியை எதிர்த்து நகராட்சி பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். உலக நாடுகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு சில நாடுகளில் தடுப்பூசியை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், நியூயார்க் நகரத்தில் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து நகராட்சி பணியாளர்களும், மக்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதாவது, நியூயார்க் நகராட்சி பணியாளர்கள் கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தடுப்பூசி எடுக்காதவர்கள் பணி […]
கொரோனா வைரஸ்-க்கு எதிராக ஒரு புதிய ரக தடுப்பூசி ஒன்றை கோழி முட்டையிலிருந்து அமெரிக்க மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். நியூயார்க் நகரில் உள்ள ஐச்சன் மவுன்ட் சினாய் மருத்துவ கல்லூரியில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு புதிய ரக கொரோனா தடுப்பூசி ஒன்றை கோழி முட்டையிலிருந்து உருவாக்கியுள்ளது. இதேபோல் ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியும் பிரேசில், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் கோழி முட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. எம் ஆர்.என்.ஏ ரக தடுப்பூசிகளை தயாரிக்க தேவைப்படும் மிக […]
அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் நிலவிய தீவிர பனிப்பொழிவை டைம் லேப்ஸ் மூலம் எடுக்கப்பட்ட வீடியோ நன்கு வெளிக்காட்டி உள்ளது. அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை அதிகாலை வரை பனிப்பொழிவு நிலவியதை டைம் லேப்ஸ் முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் பனிமழை மற்றும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெக்ஸாஸ் மற்றும் கொலராடோவில் இருந்து மத்திய மேற்கு பகுதிகள் வழியாக வடக்கு நியூயார்க்கை இந்த பனிப்புயல் இன்று காலை சென்றடைந்துள்ளது […]
அமெரிக்காவில் இதுவரை காணாத அளவில் வீசி வரும் பனிப் புயலால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க், பாஸ்டன், நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் இதுவரை காணாத அளவில் பனிப் புயல் பொழிந்து வருவதால் அவசர நிலை பிரகடனம் போடப்பட்டுள்ளது.மேலும் அங்கு 1,400 விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகளில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் மீது பணிகள் கொட்டி கிடைப்பதால் அதனை அகற்றுவதற்கான முயற்சியில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் நிலப்பரப்பில் இருந்து 2 அடி உயரத்திற்கு […]
டெஸ்லா நிறுவனத்தில் ஒரே நாளில் சுமார் 100 பில்லியன் டாலர் சரிந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எலான் மஸ்க் டெஸ்லா என்ற எலக்ட்ரிக் கார்களை உருவாக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இது உலக அளவில் புகழ் பெற்று வருகிறது. தென்னாப்பிரிக்காவில் பிறந்த இவர் டெஸ்லா என்ற கார் நிறுவனம் மற்றும் ஸ்பெஸ் எக்ஸ் என்ற விண்வெளி நிறுவனம் ஆகிய இரண்டையும் நடத்தி வருகிறார். இவர் தலைமை தாங்கும் அனைத்து நிறுவனமும் நாளுக்கு நாள் வளர்ச்சி பெற்றுவரும் நிலையில் தற்போது […]
நியூயார்க்கில் இருக்கும் ஒரு பூங்காவின் புதரில் சிதைந்து போன சடலம் எலும்புக்கூடாக கண்டறியப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் சென்ட்ரல் பூங்காவில் நேற்று முன்தினம் மதிய நேரத்தில் எலும்புகூடு கண்டறியப்பட்டதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது ஒரு நபர் அந்த பூங்காவில் ஜாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது அங்கு ஒரு கூடாரம் இருப்பதை பார்த்தவாரே சென்றதால் கால் தடுக்கி புதரின் மேல் விழுந்து விட்டார். அதன்பின்பு தான் அவர் எலும்புக்கூட்டின் மேல் விழுந்தது […]
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் பணியில் இருந்தபோது வீரமரணமடைந்த காவல்துறை அதிகாரிகளுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஒரு பெண், காவல் துறையினரைத் தொடர்பு கொண்டு, என் மகன் என்னுடன் கடுமையாக சண்டையிடுகிறார் என்று புகார் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, உடனடியாக அவர்களின் வீட்டிற்கு சென்ற காவல்துறையினர் மீது, அவரின் மகன் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், 2 அதிகாரிகள் படுகாயமடைந்தனர். எனினும், அதில் ஒரு அதிகாரி, அந்த நபரை துப்பாக்கியால் சுட்டார். ஆனால், படுகாயமடைந்த […]
அமெரிக்காவில் இனவெறித் தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்ந்து வரும் நிலையில், ஒரு நபர் சீக்கிய ஓட்டுனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கடந்த 4 ஆம் தேதி அன்று, ஜான் எப்.கென்னடி என்ற சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியில், சீக்கியரான ஒரு டாக்ஸி ஓட்டுனர் காத்திருந்துள்ளார். அப்போது, திடீரென்று ஒரு மர்ம நபர் அவரை கடுமையாக தாக்கி அடித்து உதைத்திருக்கிறார். இதனை ஒரு நபர் வீடியோ எடுத்து இணைதளங்களில் வெளியிட்டிருக்கிறார். அதில், அந்த சீக்கிய […]
ஓமிக்ரான் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் நியூயார்க் மாகாணத்தில் மருத்துவமனையில் அதிகமான குழந்தைகள் அனுமதிக்கபிபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, தற்போது உள்ள பரிசோதனை பற்றாக்குறையை விரைவில் தீர்ப்பதாக உறுதி கூறியிருக்கிறது. நியூயார்க் மாகாணத்தின் சுகாதாரத்துறை கொரோனா தொற்று பாதிப்பால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று எச்சரித்திருக்கிறது. மேலும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் விகிதம் கடந்த 5-ஆம் தேதியை விட 4 மடங்கு தற்போது அதிகரித்திருக்கிறது. இதில் அதிகமானோர் […]
அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் சேர்ந்து உருவாக்கிய லைட்-1 என்ற நானோ செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருக்கும் கலீபா எனும் பல்கலைக் கழகத்தின் சார்பாக வெளியான அறிவிப்பில், அமீரகம் மற்றும் பக்ரைன் நாடுகள் செய்து கொண்ட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் துறைகளின் ஒப்பந்த அடிப்படையில் இரண்டு நாடுகளின் கூட்டமைப்பில் லைட்-1 என்னும் நானோ செயற்கைக்கோள் இன்று தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த செயற்கைக்கோளை, அபுதாபியின் நியூயார்க் பல்கலைக்கழகம், அமீரகத்தில் இருக்கும் கலீபா பல்கலைகழகம் மற்றும் பக்ரைன் […]
அமெரிக்காவில் நயாகரா நீர்வீழ்ச்சியின் விளிம்பில் மாட்டிய நிலையில் இருந்த வாகனத்திலிருந்து பெண்ணின் சடலம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாகாணத்தில் இருக்கும் நயாகரா நீர்வீழ்ச்சியின் விளிம்புப் பகுதியில் மூழ்கியிருந்த ஒரு வாகனத்திலிருந்து கடற்படை வீரர்கள் 60 வயது பெண்ணின் சடலத்தை கைப்பற்றியிருக்கிறார்கள். இந்த வாகனம் எப்படி நீர்வீழ்ச்சிக்குள் மூழ்கியது? என்பது தெரியவில்லை. எனினும், அருகில் இருந்த சாலையில் குவிந்து கிடந்த பனியில், சரிக்கி வாகனம் நீர்வீழ்ச்சியில் பாய்ந்திருக்க வாய்ப்பிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஹெலிகாப்டர் மூலம் அந்த பெண்ணின் […]
ஐ.நா. தலைமை அலுவலகம் முன்பு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. நியூயார்க்கில் ஐ.நா.தலைமை அலுவலகம் முன்பு தற்கொலை செய்து கொள்பவர் போல் தாடை பகுதியில் துப்பாக்கி வைத்துக்கொண்டு ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அந்த நபரிடம் காவல்துறையினர் துப்பாக்கியை கீழே போட்டுவிடுமாறு அறிவுறுத்தினர். அப்போது அந்த நபர் ஐ.நா. அலுவலகத்தில் சில ஆவணங்களை வழங்க அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை காவல்துறையினர் ஏற்றுக்கொண்டதால் அந்த நபர் தானாகவே முன்வந்து சரணடைந்தார். […]
ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிப்பது முறையற்றது என்றும் அது பலன் தராது என்றும் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஒமிக்ரான் வகையாக உருமாறிய நிலையில் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிப்பது முறையற்றது என்றும் அது பலன் கொடுக்காது என்றும் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் அந்தோனியா குட்டரஸ் பேசியபோது ” ஒமிக்ரான் பாதிப்பைக் குறைக்க பயணத்தை அனுமதித்து பொருளாதார இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன் இதர […]
நியூயார்க்கில் தனது மூன்று வயது மகனுக்காக தந்தை ஒருவர் கட்டிய கோட்டைகள் தற்போது சுற்றுலாத்தலமாக பிரபலமாகி வருகிறது. நியூயார்க்கில் உள்ள லேக் ஜார்ஜின் அருகே பிரம்மாண்டமான மூன்று கோட்டைகள் ரம்மியமான காடுகளில் மறைந்துள்ளது. இந்த மூன்று கோட்டைகளும் தற்போது சுற்றுலா தளமாக மாற்றம் செய்யப்பட்டு பயணிகளும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதாவது கடந்த 1978-ஆம் ஆண்டில் தனது மனைவியிடம் விவாகரத்து வாங்கிய நபர் ஒருவர் தனது மூன்று வயது மகனிடம் “ஒரு நாள் உனக்கு பிரம்மாண்டமான கோட்டை ஒன்றை […]
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் கவர்னர் அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்திருக்கிறது. எனவே. அம்மாகாணத்தின் கவர்னரான Kathy Hochul, அவசர நிலை பிரகடனம் அறிவித்திருக்கிறார். நேற்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், கடந்த 2020 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து மாகாணத்தில் இல்லாத அளவில், தற்போது கொரோனா தொற்று அதிகரித்திருக்கிறது. மேலும், தற்போது கொரோனா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் விகிதம் கடந்த மாதத்தில் தினசரி 300 […]
அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் ஒரு பயணி, விமான பணிப்பெண்ணின் முகத்தில் பலமாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், நியூயார்க் மாகாணத்தின் விமான நிலையத்திலிருந்து, கலிஃபோர்னியா மாகாணத்திற்கு புறப்பட்டுள்ளது. விமானம் புறப்படும் முன், அனைத்து பயணிகளும், முகக்கவசம் அணியுமாறு விமான ஊழியர்கள் அறிவித்தனர். அதன் பின்பு, விமானம் புறப்பட்டது. ஆனால், அதில் ஒரு நபர் மட்டும் முகக்கவசம் அணியவில்லை. எனவே, விமான பணிப்பெண் ஒருவர் சிரித்த முகத்தோடு பணிவாக அவரிடம் முகக்கவசம் அணியுங்கள் […]
உப்புக்கடல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 300 பேரை நிர்வாணமாக்கி நியூயார்க் புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இஸ்ரேல்-ஜோர்டான் நாடுகளுக்கு இடையில் இருக்கும் உப்புக்கடல் என்று அழைக்கப்படும் டெட் சீ காலநிலை மாற்றத்தால் அதன் பரப்பளவு சுருங்கி விட்டது. இந்நிலையில் காலநிலை மாற்றத்தை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு உணர்த்தும் வகையிலும் 200 பெண்கள், ஆண்களை நிர்வாணமாக நிற்க வைத்து நியூயார்க்கை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஸ்பென்சர் ட்யூ நிக் புகைப்படம் […]
கொரோனா பரவல் காரணமாக 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் தவிக்கின்றனர் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் இன்னும் போராடிக் கொண்டு இருக்கின்றது. இந்த நேரத்தில் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடத்திய கொரோனா தொடர்பான நிகழ்ச்சியில் ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் பங்கேற்று பேசினார். அப்போது ஆண்டனியோ குட்டரேஸ் பேசியதாவது “கொரோனா தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தவிக்க விட்டது. இதில் […]
நியூயார்க் மாகாணத்தில் நடைபெற்ற ஐநா பொது சபை கூட்டத்தில் பங்கேற்ற பிரேசில் அதிபரின் மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஐநா பொதுச்சபைக் கூட்டமானது, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். அப்போது, இக்கூட்டத்தில், பிரேசில் நாட்டின் அதிபரான போல்சனாரோவும் கலந்து கொண்டார். அதிபரின் மகனும் கலந்து கொண்டார். இவர்களுடன், அமைச்சர்களும் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். இதில் அமைச்சர் மற்றும் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அதிபரின் […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், நடைபெற்ற ஐ.நா. பொதுசபையின் 76-வது கூட்டத்தில், கூட்டத்தில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். ஜோபைடன் பேசியிருப்பதாவது, நம் பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் சுதந்திரம் போன்றவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்தவை. இதற்கு முன், இல்லாத அளவிற்கு நாம் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். நாம் தற்போது, தீவிரவாத அச்சுறுத்தல்களை சந்திக்கிறோம். ஆப்கானிஸ்தான் நாட்டின் 20 வருட பிரச்சினைக்கு நாம் தீர்வு கொண்டு வந்திருக்கிறோம். இதனை செய்த நாம், அந்நாட்டின் வெளியுறவுக்கொள்கை என்னும் கதவுகளையும் […]
பிரேசில் அதிபர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததால், நியூயார்க் மாகாணத்தில் நடைபாதையில் நின்று பீட்சா சாப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில், இன்று ஐ.நா சபை கூட்டம் தொடங்கியிருக்கிறது. இக்கூட்டத்தில் 193 நாடுகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். மேலும், கொரோனா பரவலால், தலைவர்கள் சிலர் காணொலிக்காட்சி வாயிலாக பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 23ஆம் தேதி அன்று அமெரிக்கா செல்கிறார். இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்க சென்ற, பிரேசில் நாட்டின் அதிபரான ஜயர் […]
அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் 5 ஆவது சக்திவாய்ந்த சூறாவளியினால் பெய்துவரும் கன மழையை முன்னிட்டு அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 5 ஆவது சக்தி வாய்ந்த சூறாவளியாக கருதப்படும் ஐடாவினால் அந்நாட்டிலுள்ள பல மாவட்டங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. இதனையடுத்து சூறாவளியினால் பெய்த கன மழையினால் கிட்டத்தட்ட 42 பேர்கள் பலியாகியுள்ளார்கள். இதிலும் குறிப்பாக அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரம் ஐடா சூறாவளியினால் பெய்த கன மழையினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நகரில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நியூயார்க் […]
நியூயார்க் மாகாணத்தின் ஆளுநராக முதன் முறையாக பெண் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார். பாலியல் புகாரில் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவின் ராஜினாமாவை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேத்தி ஹோச்சுல் என்னும் அப்பெண் வழக்கறிஞர் 57வது ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார். 2015ஆம் ஆண்டு நியூயார்க்கில் துணைநிலை ஆளுநர் ஆக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நாட்டில் லிசா பேன்ஸ் என்ற பிரபலமான நடிகை மீது இருசக்கர வாகனத்தை மோதி கொன்று விட்டு தப்பிச்சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவை சேர்ந்த நடிகை லிசா பேன்ஸ்(65), ஹாலிவுட்டில் Cocktail, Gone Girl போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர். இவர் தற்போது வரை 80 க்கும் அதிகமான படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்திருக்கிறார். இவர் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 4 ஆம் தேதி அன்று […]
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அரசு பெண் பணியாளர்களை, ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ பாலியல் ரீதியாக துன்புறுத்தியது, விசாரணையில் உறுதியானது. நியூயார்க் நகரின் ஆளுநரான, ஆண்ட்ரூ குவாமோ, மீது கடந்த வருடம் பல பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். எனவே, இதுகுறித்து, அரசு பெண் பணியாளர்கள் 179 பேரிடம், லெடிஷியா ஜேம்ஸ் என்பவரது குழுவின் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஆளுநர், பெண்கள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பில், லெடிஷியா ஜேம்ஸ் தெரிவித்துள்ளந்தாவது, […]
அமெரிக்காவில் 8 வயது சிறுமி ஒருவர் பளிங்கு கைப்பிடி சரிந்து விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அன்று இரவு எட்டு மணி அளவில் நியூயார்க் நகரின் வெஸ்ட்செஸ்டர் சதுக்கம் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களின் குடியிருப்பு முற்றத்தில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பளிங்கு கைப்பிடி ஒன்றை இருவர் லேசாக நகர்த்தியுள்ளனர். அதில் தவறி சரிந்து விழுந்த அந்த பளிங்கு கைப்பிடி 8 வயது சிறுமி […]
அமெரிக்காவில் மொத்தமாக சுமார் 37 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் யோகா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் இருக்கும் டைம்ஸ் என்ற பிரபலமான சதுக்கத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 3000 நபர்கள் பங்கேற்று யோகா செய்தனர். அமெரிக்காவில் வாழும் பல நாடுகளை சேர்ந்த மக்களும் ஆர்வமாக பங்கேற்றுள்ளனர். அதாவது சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய வார்த்தை தான் யோகாவாகும். ஒன்றிணைதல் என்பது இதன் பொருளாகும். முதலில் இந்தியாவில் தோன்றிய இந்த பழங்கால வழக்கமானது […]
கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 70 சதவீதம் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தொடங்கி 2 ஆண்டுகள் ஆகியும் இதனுடைய தாக்கம் குறையவில்லை. இதனால் பல்வேறு உலக நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது […]
அமெரிக்காவில், இளம் பெண் ஒருவர் தன் பிஞ்சு குழந்தைகளை மாடியிலிருந்து கீழே தூக்கி வீசிவிட்டு தானும் நிர்வாணமாக குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் என்ற பகுதியில் வசிக்கும் பெண் Dejhanay Jarrell (24). இவர் கடந்த சனிக்கிழமை அன்று தன் பிஞ்சு குழந்தைகள் இரண்டையும் வீட்டின் இரண்டாம் மாடியில் இருக்கும் ஜன்னல் வழியாக வீசி விட்டார். இதில் குழந்தைகள் ஆடைகளின்றி கீழே விழுந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அவரும் ஆடையின்றி நிர்வாணமாக கீழே குதித்து […]
அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தின், CEO வாக பணியாற்றும் சுந்தர் பிச்சையின் சம்பளம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள கூகுள் தலைமை மற்றும் அதன் முதன்மை நிறுவனமான ஆல்பபெட்டினுக்கும் சுந்தர் பிச்சை தான் CEO ஆக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இந்நிலையில் அதிகமாக சம்பளம் வாங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் CEO க்கள் சம்பள பட்டியலானது, நியூயார்க்கின் பிரபல பத்திரிக்கை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில் 4.17 லட்சம் கோடி ரூபாய் முகநூல் நிறுவனரான, […]
நியூயார்க்கின் பிரபல பத்திரிகை நிறுவனம், செவ்வாய்கிரகத்தில் தர்பூசணி இருப்பதாக செய்தியை வெளியிட்டு, அதனை அகற்றியுள்ளது. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் உலக அளவில் பிரபலமான நியூயார்க்கின் செய்தி நிறுவனம் ஒன்று தர்பூசணி பழங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்ததாகவும், அதனை காவல்துறையினர் உறுதிப்படுத்தியதாகவும் செய்தி வெளியிடப்பட்டது. எனினும் அந்நிறுவனம் சில நேரங்களில், அந்தப் பதிவை அகற்றியதோடு தவறாக அந்த செய்தி வெளியானதாக கூறியது. எனினும் இணையதளவாசிகள் இதனை கவனித்து, விமர்சித்து […]
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உலகப்புகழ் பெற்ற சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லிபர்டி தீவில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் சுதந்திர தேவி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது.ஹட்சன் ஆற்றின் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி தீவில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவப்பட்டுள்ள சுதந்திர தேவி சிலை 305 அடி உயரமும், 204.1 டன் எடையும் கொண்டது. அமெரிக்கா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டு ஆன போது அதாவது 1886 […]
அமெரிக்காவில் நேற்று திடீரென்று நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் சிறுமி உட்பட 3 அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருக்கும் டைம்ஸ் சதுக்கத்தில் நேற்று மாலையில் சுமார் ஐந்து மணிக்கு நான்கு நபர்களுக்கிடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் மூவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிப்படைந்தவர்களுக்கு இதில் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றும் அதில் ஒரு நபர் தன் குடும்பத்தினருடன் […]
அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் மர்ம நபர் பட்டபகலில் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் குறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் வாட்டர்டவுன் பகுதியில் கண்மூடித்தனமான இந்த தாக்குதல் மர்ம நபரால் நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போது அந்த மர்ம நபர் வாகனம் ஒன்றில் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலர் காயம் அடைந்திருக்கலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும் அவர்களின் நிலை […]
நியூயார்க்கில் பெற்ற தாயே தன் இரு குழந்தைகளை கொடூரமாக கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த 23 வயதான இளம்பெண்ணுக்கு Dakota Bentley மற்றும் Dallis Bentley என இரட்டை குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அந்த இளம் பெண்ணின் உறவினர் ஒருவர் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள் என விசாரித்ததற்கு அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த உறவினர் காவல் நிலையத்தில் புகார் […]
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் 25 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது. அமெரிக்கா நியூயார்க் பகுதியை சேர்ந்த டியாகோ அயலா (35)என்பவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ காட்சி பதிவு செய்துள்ளார்’ இதுகுறித்து அந்த சிறுமி கூறியதை தொடர்ந்து அயலா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.அதில் அவருக்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்ததோடு இனி எந்தவித […]
அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவரின் பிறந்தநாளன்று அவரின் தந்தை மொத்த குடும்பத்தையும் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் 9 வயதுடைய சிறுமி ஒருவர் அவசர உதவி குழுவினரை தொடர்பு கொண்டு, என் பிறந்தநாளிற்காக வீட்டிற்கு வந்த அப்பா அனைவரையும் சுட்டு விட்டார் என்று பதற்றமாக கூறியுள்ளார். இதனால் உடனடியாக நியூயார்க்கில் இருக்கும் அந்த குறிப்பிட்ட முகவரிக்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அப்போது Rasheeda Barzey (45) […]
இனவெறியை கண்டித்து நியூயார்க்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆசிய இனத்தவருக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை கண்டித்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆசிரியருக்கு எதிரான வெறுப்புணர்வை கைவிட வேண்டும். இனவெறி வேண்டாம் என்று கோஷங்களை எழுப்பி மக்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்
நியூயார்க்கில் 17 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 22 வயது இளைஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரபலமானவர் Bianca Devins என்ற 17 வயது சிறுமி. இவரும் நியூயார்க்கை சேர்ந்த Brandon Clark என்ற 22 வயதான இளைஞரும் இணையம் மூலமாக சந்தித்து நண்பர்கள் ஆனவர்கள். இந்நிலையில் இருவரும் இசை நிகழ்ச்சிக்கு ஒன்றாக சென்றுள்ளனர். அங்கு Bianca தனது மற்றொரு நண்பர் Alex-ற்கு முத்தம் கொடுத்துள்ளார். இதனை பார்த்த Brandon ஆத்திரத்தில் இருந்துள்ளார். பின்னர் […]
நியூயார்க்கின் இரவு நேரத்தில் ஆபத்திலிருந்த இளம்பெண்ணை சமயோகித யோசனையால் காப்பாற்றிய பெண்ணிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. நியூயார்க் நகரின் இரவு நேரத்தில் Pikka என்ற இளம் பெண் காரில் வந்து கொண்டிருந்துள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் ஒரு இளம்பெண்ணிடம் சீண்டியிருக்கிறார். இதனை தற்செயலாக பார்த்த Pikka அந்த பெண்ணை காப்பாற்ற நினைத்துள்ளார். எனினும் இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் பயத்துடன் அப்பெண்ணுக்கு நேரப்போகும் ஆபத்தை தடுக்க எண்ணி அவர்கள் அருகில் நெருங்கியுள்ளார். அதன் பின்பு […]