நியூயார்க்கில் இளம்பெண் ஒருவர் தனது குளியலறைக்கு பின்புறம் மறைந்திருந்த மர்மத்தை கண்டுபிடுத்துள்ளார். நியூயார்க்கில் சமந்தா ஹார்ட்ஸ்டோ என்ற பெண் வசித்து வருகிறார். இவர் தனது குளியல் அறைக்கு சென்றபோது அங்கிருந்து குளிர்ந்த காற்று வீசுவதை உணர்ந்துள்ளார். ஆனால் குளியலறையில் ஜன்னலே இல்லாத பொழுது குளிர்ந்த காற்று வீசுவது எப்படி என்பதை கண்டறிய வேண்டுமென்று நினைத்து தனது நண்பர்களுக்கு இந்த செய்தியை தெரிவித்து அவர்களை உதவிக்கு அழைத்து உள்ளார். பின்னர் சமந்தா ஹார்ட்ஸ்டோ குளியல் அறையில் மாட்டி இருந்த […]
Tag: நியூயார்க்
நியூயார்க்கில் கடலிலிருந்து கரை ஒதுங்கிய தலையில்லாத உடலை கண்ட ஜாகிங் செல்லும் நபர் போலீசில் தெரிவித்துள்ளார் . நியூயார்க்கின் ப்ரூக்ளின் பகுதியில் தலை, கைகள் மற்றும் ஒரு கால் இல்லாத உடம்பு கடலிலிருந்து கரை ஒதுங்கியுள்ளது. இதனை ஜாக்கிங் சென்ற நபர் பார்த்த உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மீதமுள்ள பாகங்களை தேடியும் கிடைக்கவில்லை. மேலும் அந்த இறந்த நபர் கை, கால்கள் வெட்டப்பட்டு கடலில் வீசப்பட்டாரா அல்லது கடலில் […]
நியூயார்க்கில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நியூயார்க்கில் கடந்த நவம்பர் மாதம் B.1.526 எனும் திடீர் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடித்தனர். மேலும் இந்த புதிய வகை தொற்று வேகமாக பரவி வருவதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். இந்தபுதிய வகை கொரோனா வைரஸ், தடுப்பூசிகளின் செயல் திறனை குறைக்கக் கூடியதாக இருப்பதாக தகவல் வெளியாகின . இந்த வைரஸ் தடுப்பூசிகள் மூலம் செலுத்தப்படும் ஆன்டிபாடிகளுக்கு இடையூறு அளிப்பதுடன் சிகிச்சையிலும் […]
வெளிநாட்டில் ஒரு வருடமாக அடிமையாக நடத்தப்பட்ட இலங்கை பெண் தற்போது அதிலிருந்து வெளியே வந்த சம்பவம் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம் என்பவருக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவியில் இருக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு தன் வாழ்க்கை இப்படி மோசமாக இருக்கும் என தான்யா கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். எரிக் ஷ்னீடர்மேன் என்ற நபர் தான்யாவை ஒரு அடிமைப் போல் நடத்தியிருக்கிறார். எரிக் தாம்பத்திய உறவின் […]
நியூயார்க்கின் அதிக பனிப்பொழிவினால் நகர ஆளுநர் மக்களுக்கு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே நியூயார்க்கில் அவசரநிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நியூயார்க் நகரின் ஆளுநரான கியூமோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்த பனி புயலானது அசாதாரணமானது. மேலும் இது பிற்பகலில் மிகவும் ஆபத்தானதாக மாறலாம். மேலும் மிக அபாயகரமான நிலையில் சாலைகள் இருக்கிறது. […]
தடுப்பூசி செலுத்துவதில் பாகுபாடு காட்டுவதை நியூயார்க் மேயர் பில் டி பிளாசியோ ஒப்புக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்ட உலக நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. தற்போது அமெரிக்கா தடுப்பூசி செலுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு உள்ள நியூயார்க் நகரில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பாகுபாடு காட்டப்படுவது உண்மைதான் என்பதை நியூயார்க் நகர மேயர் ஒப்புக்கொண்டுள்ளார். நியூயார்க்கில் வாழும் கருப்பின, லத்தீன் இன மக்களுக்கு அங்கு வாழும் வெள்ளையின மக்களை விட குறைந்த விகிதத்தில் […]
கொரோனா நோய்தொற்று, பணி மற்றும் முதுமை ஆகியவற்றால் பெரும்பாலான நேரங்களில் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் அமெரிக்க முதியவர்களின் வீடு தேடி சென்று பசியாற்றி வருகிறது இந்த நிறுவனம். அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் வசிக்கும் மக்களின் 6 ஒருவர் 65 வயதை கடந்த புதியவர்களாக இருக்கின்றனர். இது நியூயார்க் மாகாணத்தின் மக்கள் தொகையில் 60% ஆகும். கொரோனா பெரும் தொற்று, முதுமை காரணமாக புதியவர்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தனிமையில் வசிக்கும் பெரும்பாலான முதியவர்கள் […]
தேவாலயத்தின் முன் துப்பாக்கிசூடு நடத்தியநபரை காவல்துறையினர் சுட்டதில் அவர் உயிரிழந்தது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரின் செயின்ட் ஜான் கீ டிவைன் கதீட்ரல் தேவாலயம் உள்ளது. இத்தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென தேவாலயத்தின் உள்ளே வந்த 52 வயது மதிக்கத்தக்க நபர் “என்னை கொல்லுங்கள்”,”என்னை கொல்லுங்கள்” என்று கூறிக்கொண்டே தேவாலயத்தின் முன் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலர்கள் அங்கிருந்த மக்களை தேவாலயத்திற்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதனைத்தொடர்ந்து […]
இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம் தொழிலதிபர் நியூயார்க்கில் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்திய வம்சாவளியான குடும்பம் ஒன்று சவுதி அரேபியாவில் வாழ்ந்து வரும் நிலையில் அந்த குடும்பத்தின் ஒரே ஆண் வாரிசான சாலே தனது சொந்தக் காலில் நின்று 33 வயதிலேயே கோடீஸ்வரர் ஆக்கியுள்ளார். குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்ட அவர் சமூகவலைதளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் எப்பொழுதும் தனது தங்கைகளுடன் எடுத்த புகைப்படங்களாகவே இருக்கும். சென்ற வருடம் […]
இறந்த தாயின் வீட்டில் ஃப்ரீஸரில் பதப்படுத்தப்பட்ட சடலம் இருந்ததை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் நியூயார்க்கில் வசித்து வந்த தனது தாய் மரணமடைந்ததை தொடர்ந்து அவரது அடுக்குமாடி வீட்டிற்கு தாயின் உடைமைகளையும் பொருட்களையும் எடுக்க சென்ற மகன் வீட்டிலிருந்த ஃப்ரீஸர் திறந்து அதிர்ச்சிக்குள்ளாகி சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வர ஃப்ரீஸரில் அழுகிய நிலையில் இருந்த சடலத்தை கண்டு அதிர்ந்து உள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து […]
அமெரிக்காவில் தனது வீட்டிற்கு குடியேற வரும் பெண்கள் வாடகை பணத்திற்குப் பதிலாக தன்னுடன் பாலியல் உறவு கொள்ளலாம் என்று வீட்டு உரிமையாளர் விளம்பரம் கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வருகின்றது. இந்த சூழலில் நியூயார்க்கின் long islandஐ சேர்ந்தவர் தான் எட்டி (eddie). இவர் craigslist என்ற விளம்பர நிறுவனத்தில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், எனது சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடிவரும் 20-50 வயதுக்குள்ளான பெண்கள் வாடகை பணம் எதுவும் […]
டிரம்ப் உடலிலிருக்கும் தொற்றை அழிக்க கிருமிநாசினிகளை உடலில் செலுத்தலாம் என கூறிய கருத்தை நியூயார்க் மக்கள் பின்பற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதும் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை எதிர்கொண்டது. தொற்றை தடுப்பதற்காக பெரிய போராட்டமே நடந்து வரும் நிலையில் அதிபர் டிரம்ப் கூறிய கருத்து ஒன்று அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிருமிநாசினிகள் வைரஸை அழிக்கும் என்றால் அதனை ஏன் பாதித்தவர்களின் உடலில் செலுத்தக் கூடாது என்ற மிக அற்புதமான […]
நியூயார்க் நகரில் குடியிருக்கும் தாயார் (brittany jencik) ஒருவர் தத்தெடுக்கபட்டவர்கள் உள்ளிட்ட 17 பிள்ளைகளுக்கு கொரோனா வைரஸை பரப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது… அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்துவரும் பிரிட்டானி ஜென்சிக் (brittany jencik) என்பவர் கடந்த ஐந்து வாரங்களுக்கு முன் கொரோனவால் பாதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் தனது பிள்ளைகளுடன் சாதாரணமாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்தான் அவருக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்தது. இதனால் அவரது பிள்ளைகளுக்கும் கொரோனா அறிகுறி […]
நியூயார்க் நகரில் ஒரு பெண் கொரோனா பிடியால் கோமா நிலைக்கு போய் அதிலிருந்து மீண்டு தான் பெற்றெடுத்த குழந்தையை முதல் முறையாகச் சந்தித்து கொஞ்சும் நிகழ்வு நெஞ்சை நெகிழச் செய்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா அதிவேகமாக பரவி வருகின்றது. அந்நாட்டின் நியூயார்க் நகரின் லாங் தீவை சேர்ந்த யானிரா சோரியானோ என்ற நிறைமாத கர்ப்பிணிப்பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரத்துக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிசேரியன் மூலம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது.. ஆனால் […]
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குவிந்து வரும் நிலையில், இறந்தவர் என நினைத்து ஒருவரை உயிரோடு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா தான் கொரோனாவின் பிடியில் சிக்கி முதலிடத்தில் இருக்கிறது.அங்கு நாள்தோறும் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. அந்நாட்டில் இதுவரை 22,115 பேர் பலியாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக நியூயார்க்கில் தான் அதிகப்படியான பாதிப்பு இருக்கிறது.நியூயார்க்கில் கொரோனா வைரசால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு […]
நடிகை டாப்சி முதல்முறையாக நியூயார்க் சென்ற அனுபவத்தை ரசிகர்களிடம் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக அடுத்த மாதம் 14ஆம் தேதிவரை நாட்டில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வீட்டில் முடங்கியுள்ளனர். ஓய்வில்லாமல் எப்போதும் கடிகாரம் போல் தொடர்ந்து சுற்றித் திரிந்த அவர்கள், தற்போது வீட்டில் முடங்கியுள்ளதால் ஏதாவது செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். […]
கொரோனா வைரஸ் தாக்குதலால் நியூயார்க் நகரில் பள்ளிகள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் பொது இடங்கள் மூடப்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து நெரிசலின்றி வெறிச்சோடி கிடக்கின்றது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பயமுறுத்தி வருகிறது. இதுவரையில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து […]
நியூயார்க்கில் நாளையில் இருந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறை தடை விதித்துள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பைகளை எரிப்பதாலும் காற்று மாசடைகிறது. அதேபோல் எரிக்காமல் எங்கேயாவது தெருவோரங்களில் தூக்கி எரிந்து விட்டால் விலங்குகள் அதனை சாப்பிட்டு உயிரிழக்க நேரிடுகிறது. மேலும் பிளாஸ்டிக் பூமிக்குள் புதைந்து மட்காமல் மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்துகின்றது. இப்படி பல பிரச்சனைகள் பிளாஸ்டிக் பைகளால் உள்ளன. உலகில் இருக்கும் […]