நியூசிலாந்து நாடு புதிதாகப் பிறந்த 2022ஆம் ஆண்டு கோலாகலமாக கொண்டாடங்களுடன் வரவேற்றுள்ளது. உலகின் முதல் நாடாக நியூஸிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்து உள்ளது. இதனை வானவேடிக்கையுடன் பொது மக்கள் உற்சாகமாக வரவேற்று உள்ளனர். 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று இனிப்புகள் வழங்கிய பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
Tag: நியூஸிலாந்து
உலகின் 8-வது கண்டம் நியூஸிலாந்துக்கு அருகில் உள்ளதாக நியூசிலாந்தை சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளரானா நிக் மோர்டைமர் தலைமையிலான விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர். உலகில் வாழும் அனைவருக்கும் 7 கண்டங்கள் மட்டுமே உள்ளதாக அறியப்பட்டு வந்த நிலையில், தற்போது எட்டாவது கண்டத்தை விஞ்ஞானிகள் ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அதாவது தென்மேற்கு கடலில் மூழ்கிய நிலையில் தென்பட்ட புதிய நிலப்பகுதி ஒன்றை 8-வது கண்டமாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்நிலையில் விஞ்ஞானிகளால் ஸீலான்டியா என்று அழைக்கப்படும் அந்த 8-வது கண்டத்தில் ஒரு […]
நியூஸிலாந்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்ததாகவும் அடுத்த 3 நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார் . பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த மிக ஆபத்தான மாபெரும் கொரோனா தொற்று நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில் மூன்று பேருக்கு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது .அதனால் நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே கொரோனாவை கட்டுப்படுத்த நியூஸிலாந்து மேற்கொண்ட அதே முயற்சிகளை இந்த […]
நள்ளிரவில் தென்பசிபிக் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு அமெரிக்க ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது . அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தென்பசிபிக் கடலுக்கு அடியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கடற்கரைப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை செய்துள்ளது. நேற்று நள்ளிரவு ஆஸ்திரேலியா கடற்பரப்பிற்கு அருகே தென்பசிபிக் பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் ஏற்பட்டது . அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 7.7 ஆக பதிவாகி உள்ளதாக […]
மியான்மர் ராணுவ ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டதற்கு நியூஸிலாந்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . மியான்மரில் ராணுவத்தின் நடவடிக்கைக்கு அந்நாட்டு குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. மியான்மரின் நட்பு நாடான நியூசிலாந்து மியான்மர் ராணுவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இருநாட்டின் அனைத்து உயர்மட்ட அரசியல் மற்றும் ராணுவ தொடர்புகளை தற்காலிகமாக தடை செய்வதாக அறிவித்துள்ளது .மேலும் மியான்மருக்காண நியூஸிலாந்தின் உதவிகளுக்கு தடை விதிப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து நியூஸிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் […]
அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகள் பகிரப்பட்ட உளவு குழு கொரோனா வூஹான் ஆய்வகத்தில் இருந்து வெளிவர வில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் ஆய்வகத்தில் இருந்து தான் வெளிவந்தது என அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ வூஹானில் இருக்கும் வைராலஜி ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வந்தது என்பதற்கு போதிய சான்றுகள் இருப்பதாகவும் கூறியிருந்தார். கொரோனா […]
ஊரடங்கினால் இந்தியாவில் சிக்கிய நியூசிலாந்து வாழ் இந்தியர் 7 மாத குழந்தையுடன் நேற்று சிறப்பு விமானம் மூலம் நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் ஆந்திர மாநிலம் பாரடி கிராமத்தைச் சேர்ந்த சமந்தா தல்லியர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொண்டு நியூசிலாந்தின் வசித்து வருகிறார். பாரடி கிராமத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் தந்தையை சந்திப்பதற்காக தனது 7 மாத குழந்தையுடன் சமந்தா தல்லியர் வந்துள்ளார். பின்னர் மார்ச் மாதம் நியூசிலாந்து திரும்புவதற்கு திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் […]
தங்கள் நாடு கொரோனா சங்கிலியை உடைத்து விட்டதால் அடுத்த திங்களன்று கட்டுப்பாடுகளை தளர்த்த போவதாக நியூஸிலாந்து பிரதமர் தெரிவித்துள்ளார். நியூசிலாந்து நான்காம் நிலை கட்டுப்பாட்டினை ஏப்ரல் 27ஆம் தேதி முடித்துக்கொள்ள இருப்பதாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அடேர்ன் தெரிவித்துள்ளார். மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து முடிவெடுக்க மே 11 ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும். மூன்றாம் நிலை கட்டுப்பாட்டின்கீழ் பள்ளிகள் திறக்கப்படும். கட்டுமானம் மற்றும் வனத் துறை தொடர்பான நிறுவனங்கள் உட்பட தொழில்நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படும். நான்காம் […]