Categories
தேசிய செய்திகள்

ALERT: டாட்டூ குத்தினால் வேலை இல்லை…. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…..!!!!!

டாட்டூ குத்தி இருந்த நபருக்கு மத்திய போலீஸ் படை, தேசிய புலனாய்வு முகமை மற்றும் பிற படைகளில் சமீபத்தில் வேலை நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி இருந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பாக வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகினார். அந்த வழக்கறிஞர் கூறியதாவது “மதரீதியில் டாட்டூ குத்துவது உள்துறை அமைச்சக விதிமுறைகளுக்கு எதிரானது” என்று அவர் வாதிட்டார். அதுமட்டுமின்றி இரண்டு வாரங்களுக்குள் டாட்டூவை நீட்டினால் மட்டுமே வேலை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ராஜேந்திர பாலாஜி கோரிக்கை நிராகரிப்பு….. உச்சநீதிமன்றம் அதிரடி அறிவிப்பு…..!!!!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. அதாவது தனக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விரைந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிலுவையில் உள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவும் ராஜேந்திர பாலாஜி கோரிக்கை விடுத்து இருந்தார். இந்த நிலையில் அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்து இருக்கிறது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது கடந்த 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது […]

Categories
தேசிய செய்திகள்

வார இறுதி நாட்களில் ஊரடங்கு ரத்து? ஆளுநர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், டெல்லியிலும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசு தின அணிவகுப்பு…. தமிழக ஊர்தி நிராகரிப்பு…. வெளியான தகவல்….!!!!

நாட்டின் தலைநகர் டெல்லியில் இந்திய பிரதமர் மறைந்த இந்தியப் படை வீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீர வணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிடுவார். இதையடுத்து அந்த விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்களில் சார்பில் அலங்கார ஊர்திகளும் இடம்பெறும். இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்தியை […]

Categories
மாநில செய்திகள்

விண்ணப்பங்கள் நிராகரிப்பு….. தமிழக அரசிடம் மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தல்….!!!

உதவித் தொகைக்கான விண்ணப்பங்கள் தேவையில்லாமல் நிராகரிக்க வேண்டாம் என தமிழக அரசிடம் டிசம்பர் 3 இயக்கம் வலியுறுத்தியுள்ளது. உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் தேவையில்லாமல் நிராகரிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அரசுக்கு டிசம்பர் 3 இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக டிசம்பர் 3 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாடு அரசு மூலமாக மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை 1,000 ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 16 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இதில் 13 லட்சம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல ஹிட் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்…. வேண்டாம் என மறுத்த சிவகார்த்திகேயன்…. காரணம் இதுதான்….!!

பிரபல மலையாள ‘பிரேமம்’ படத்தை தமிழ் ரீமேக் செய்ய மறுத்துள்ளார் சிவகார்த்திகேயன்.  தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. மேலும், இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் நல்ல சாதனை படைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார். […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி…. பாஸ்போர்ட் விண்ணப்பம் நிராகரிப்பு….!!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா பாஸ்போர்ட் கோரி பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்  மந்திரியான மெகபூபா முப்தி அவர்கள்  ஸ்ரீநகரில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பம் பதிவு செய்திருந்தார். அதன்பின் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தெரியவந்தது. அது தொடர்பாக பாஸ்போர்ட் அதிகாரி மெகபூபாவுக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் ‘காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குற்றவியல் விசாரணை பிரிவின் கீழ், தங்களுக்கு பாஸ்போர்ட் […]

Categories
மாநில செய்திகள்

மருத்துவ படிப்பில்…. 10 சதவீத இட ஒதுக்கீடு நிராகரிப்பு….!!

புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ படிப்பிற்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசு பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. கடந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியது. இதன் காரணமாக பல அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வின் மூலம் மருத்துவம் படிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் புதுச்சேரி அரசின் […]

Categories
மாநில செய்திகள்

7 பேர் விடுதலை நிராகரிப்பு… ஆளுநர் பரபரப்பு உத்தரவு…!!!

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்து விட்டார். பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுவிக்க வேண்டுமென்று ஆளுநரிடம் தமிழக அரசு பரிந்துரை செய்தது. ஆனால் தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நிராகரித்து விட்டார். 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உண்டு. அனைத்து ஆவணங்களையும் பரிசீலித்த பிறகு இந்த முடிவுக்கு வந்ததாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தரப்பில் மத்திய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் தீர்மானம் நிராகரிப்பு… ஐநா பாதுகாப்பு கவுன்சில்…!!!

ஈரான் மீதான ஆயுத தடையை நீட்டிக்க கோரும் அமெரிக்காவின் தீர்மானத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சில் நிராகரித்துள்ளது. மேற்கு ஆசிய நாடான ஈரான் அதிக அளவிலான அணு ஆயுதங்களை பயன்படுத்தி உலக நாடுகள் அனைத்திற்கும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. அதன் காரணமாக கடந்த 2010ஆம் ஆண்டு ஈரான் மீது ஐநா ஆயுத தடையை விதித்திருந்தது. அதன் மூலம் ஈரான் வெளிநாடுகளில் இருந்து போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3½ இலட்சம் இபாஸ் நிராகரிப்பு… இது தான் காரணமாம்..!! அதிகாரி தகவல்..!!

3½ லட்சம் விண்ணப்பங்கள் உரிய ஆவணங்கள் இணைக்கப்படாத காரணத்தால் அதிகாரிகள் நிராகரித்ததாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் அவசியம் என்று அரசு அறிவித்திருந்தது . இதில் உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என்றும், இல்லையெனில் நிராகரிக்கப்படும் என்று  அரசு கூறியிருந்தது . இதுகுறித்து  கோவை மாவட்ட அரசு அதிகாரி ஒருவர் இ பாஸ் பெற உரிய ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

பெய்ரூட் வெடி விபத்து… சர்வதேச விசாரணையில் உடன்பாடில்லை… லெபனான் அதிபர்…!!!

பெய்ரூட் வெடிவிபத்து தொடர்பான சர்வதேச விசாரணைகளில் தனக்கு உடன்பாடு இல்லை என லெபனான் அதிபர் மைக்கேல் அவுன் கூறியுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட் துறைமுக கிடங்கில் ஆறு ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது. அந்த வெடி விபத்தில் 150 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்திற்கும் மேலானோர் படுகாயமடைந்தனர். அதே சமயத்தில் அந்த வெடி விபத்தால் 3 லட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிவிபத்து […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஷாக்…! ”உள்ளே நுழையக் கூடாது” சீனா திமிர் பேச்சு …..!!

வூஹானுக்கு சென்று அமெரிக்க குழு ஆய்வு நடத்த டிரம்ப்  கோரிக்கை விடுத்ததை சீன அரசு நிராகரித்துள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பரவி 200க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. வூஹானில்  இருக்கும் ஆய்வு கூடத்தில் இருந்து வைரஸ் பரவியதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என டிரம்ப் கூறினார். அவரது கருத்திற்கு பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜெங் ஷுவாங் கூறியிருப்பதாவது, “வைரஸ் […]

Categories

Tech |