குருவிக்காரர் சமுதாயத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கும் மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. ஏற்கனவே கடந்த 15ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இரு அவைகளிலும் மசோதா நிறைவேறிய நிலையில் சில தினங்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tag: நிறைவேற்றம்
மியான்மரின் என்.எல்.டி கட்சியின் தலைவராக இருப்பவர் ஆங் சான் சூகி. இவர் கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்துள்ளது எனக் கூறி ஆங் சான் சூகியின் ஆட்சியை ராணுவம் கவிழ்த்தது. இதனையடுத்து ராணுவத்தின் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ராணுவ ஆட்சியை எதிர்த்து ஆங் சான் சூகி போராட்டம் நடத்தினார். அப்போது இவர் உட்படப் பலரை ராணுவம் வீட்டுக் காவலில் அடைத்து வைத்தது. இந்நிலையில் […]
அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில் தற்போது கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும் இரு மசோதாக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்புரிமை தேசிய அளவியல் சட்டபூர்வமாகிய 50 வருட கால உத்தரவை ரத்து செய்துள்ளது. தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கும் முரணாக பெண்கள் கரு கலைப்பு செய்வதற்கு அனுமதி வழங்கும் வகையில் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கருக்கலைப்பிற்கு அனுமதி அளிக்க பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் அளித்துள்ள […]
கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்க வேண்டும் என்று விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்கம் சார்பில் மாநில மாநாடு நாகை அவுரித்திடலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விதவை பெண்கள் வாழ்வுரிமை சங்க தலைவர் கஸ்தூரி தலைமை தாங்கி பேசினார். அதில் விதவை பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மாதம் 1500 வழங்க வேண்டும் . அரசு நிதி உதவி மூலம் வீடு கட்டும் திட்டத்திற்கு […]
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது . திருச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடந்த கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் மாற்றம் நடைபெற உள்ளது என கூறப்பட்டு வரும் நிலையில், அதில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இந்த தீர்மானத்தால் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
CUET நுழைவுத்தேர்வுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நுழைவுத் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று காலை முதல்வர் முக ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் அதிமுக, மதிமுக, பாமக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு […]
வாடகை ஒப்பந்தங்கள் அனைத்தையும் பதிவு செய்வதை கட்டாயமாக்கும் சட்டதிருத்தம் உட்பட 6 சட்ட மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சிதுறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்த மசோதாவில், சொத்துரிமையாளர், வாடகைதாரர்களின் உரிமைகள், பொறுப்புகளை சமநிலைப்படுத்துவதை, இந்த மசோதா நோக்கமாக கொண்டு இருக்கிறது. இதனையடுத்து வாடகை ஒப்பந்தங்கள் அனைத்தையும் கட்டாயமாக பதிவு செய்ய 2017-ஆம் ஆண்டு தமிழ்நாடு சொத்து உரிமையாளர், வாடகைதாரர்களின் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம்வகை செய்கிறது. இவை அனைத்து மாநிலங்கள், […]
இந்தியாவில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரியும் ஊழியர்கள் நாளொன்றுக்கு 8 மணி நேரம் என்ற கணக்கில் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை செய்து வருகின்றனர். அந்த வகையில் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரம் பணி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலாளர்களின் நான்கு சட்டங்களை உள்ளடக்கிய புதிய விதிமுறை ஒன்று கடந்து 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது. இந்த புதிய விதிகளை தனியார் நிறுவனங்களில் அமல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. […]
தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் சற்று நேரத்திற்கு முன்பாக நிறைவேற்றப்பட்டது. தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று புதிய சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் ஒருவரின் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதை தடுப்பதற்கு ஆதார் எண்ணை இணைப்பது சரியான வகையில் இருக்கும். ஆதார் எண்ணை தர இயலாதவர்கள் வாக்காளர்கள் சேர்த்துக் கொள்ள […]
சேதமடைந்துள்ள பள்ளி கட்டிடங்களை உடனடியாக இடிக்க வேண்டும் என்று ஆசிரியர் கூட்டணி தீர்மானம் செய்துள்ளது . தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழுக் கூட்டம் தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் நவம்பர் 1 முதல் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருவதால் சேதமடைந்த பள்ளிக்கட்டிடங்களினால் மாணவர்களின் பாதுகாப்பு பாதிக்கப் படும். எனவே மாவட்ட நிர்வாகம் […]
3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த வாரம் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த சட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. முதல் நாளான இன்று காலை மக்களவையிலும், […]
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வடிவை மு க ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் இறுதிநாளான இன்று நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்ட மசோதாவை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தாக்கல் செய்தார். இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்த பின்பு, பேசிய அவர், நீட் ஒரு நடுநிலையான தேர்வு முறை இல்லை என்பது ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் குழுவினர் அறிக்கையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. கடந்த […]
கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாநிலத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டினால் காரைக்காலுக்கு வரக்கூடிய 7 டிஎம்சி தண்ணீர் வராது என கூறிய நிலையில் முதல்வர் ரங்கசாமி தீர்மானத்தை முன்மொழிய விவாதம் இன்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருமனதாக இந்த தீர்மானத்தை நிறைவேற்றி […]
புதுச்சேரியில் இன்று நடைபெற்ற சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சட்டசபையில் இந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று சபாநாயகரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் கேரளா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பாஜகவை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் அவையில் […]
மேகதாது பிரச்சனை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து […]
லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியை திரும்பப் பெறக் கோரி கேரள சட்டப்பேரவையில் முதல்வர் பினராய் விஜயன் கொண்டு வந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. லட்சத்தீவு பகுதியில் புதியதாக நியமிக்கப்பட்ட பிரபுல் கோடா படேல் சில மாற்றங்களை கொண்டு வந்தார். இதையடுத்து இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் லட்சத் தீவு பகுதிகளில் மாட்டிறைச்சிக்கு தடை என்றும், மதுபான கடைகளுக்கு அனுமதி அளித்ததாகவும் கூறியிருந்தார். மேலும் அரசின் திட்டங்களுக்காக பொது மக்களின் நிலங்களை கையகப்படுத்தும் சட்டத்தை அமல் படுத்தவும் தெரிவித்தார். இது […]
தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் சென்னை ஆணையர் […]
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை நிறைவேற்றியுள்ள தீர்மான வாக்கெடுப்பில் இந்தியா கலந்து கொள்ளவில்லை இலங்கையில் நடத்தப்படும் இனப்படுகொலைக்கு எதிராக ஐ.நா உரிமை கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதாவது இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான 2009 ஆம் ஆண்டில் இறுதி கட்ட போரில் இலங்கை மனித உரிமைகளை மீறி இனப்படுகொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடந்து கொண்டு வருகிறது. அப்போது அதிபராக இருந்த தற்போது பிரதமர் மகிந்த ராஜபாக்சே ஆட்சியில் 2012- 2014 ஆம் […]
26 வாரங்கள் வரை கருக்கலைப்புக்கு அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாயன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. கருவுற்ற பெண்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் தங்களது கருவினை கலைக்க விரும்புவார்கள். அப்படி 20 வாரங்கள் வரை கருவை கலைப்பதற்கு சட்டம் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கால அளவினை 24 வாரங்கள் ஆக உயர்த்த வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் 24 வரை கருக்கலைப்பை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் செவ்வாய்க்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை […]
தமிழகத்தில் வரதட்சணை கொடுமை மற்றும் பாலியல் குற்றங்களுக்கு எதிரான சட்ட திருத்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெண்களுக்கு எதிரான பல குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும் சில காம கொடூரர்கள் இது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு […]
நாடாளுமன்றக் கூட்டத்தில் மருத்துவப் படிப்பிற்கான உள்ஒதுக்கீடு அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. இரு நாட்களாக நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் பல்வேறு வகை மசோதாக்கள் எழுப்பப்பட்டு அதற்கான தீர்வுகள் தீர்மானிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்பொழுது கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் அபராதம் விதிக்கப்படும் என்ற மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று, அரசுப்பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்இட ஒதுக்கீடு பெறுவற்கான சட்ட மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. […]