நவம்பர் மாதத்தில் நம் நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தி 7.587 கோடி டன்னாக அதிகரித்து இருக்கிறது. கடந்த வருடம் 6.794 கோடி டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தியானது இந்த ஆண்டு 11.66 % அதிகரித்து உள்ளது. இதுகுறித்து நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது, நவம்பர் மாதத்தில் இந்திய நிலக்கரி நிறுவனத்தின் உற்பத்தி 12.82 % அதிகரித்து இருக்கிறது. சிங்கரேணி காலியரீஸ் நிறுவனம் மற்றும் பிற கேப்டிவ் சுரங்கங்களின் உற்பத்தி முறையே 7.84% மற்றும் 6.87% அதிகரித்துள்ளது. […]
Tag: நிலக்கரி
தமிழகத்தில் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில்பாலாஜி “இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது என்று தெரிவித்தார். குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்கள் அனைத்தும் கூடுதல் விலைக்கு நிலக்கரி இறக்குமதி செய்கிறது எனவும், தமிழகம் மட்டும் தான் குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது எனவும் கூறினார். மேலும் அனைத்து விதிமுறைகளுக்கு உட்பட்டே டெண்டர் வழங்கப்படுகிறது” என்று அமைச்சர் செந்தில்பாலாஜி […]
நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் 42 பயணிகள் ரயில்கள் காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. கோடையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் தேவையும் அதிகரிக்கின்றது. நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில் மூழ்கும் நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் தொழிற்சாலை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக நிலக்கரி […]
மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காத காரணத்தினால் தான் மின்தடை ஏற்படுகிறது என்று சட்டசபையில் செந்தில்பாலாஜி விளக்கமளித்தார். மின்வெட்டு தொடர்பாக அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து பேசினார். அப்போது “மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காததால் தான் மின் தடை ஏற்படுகிறது, குறைந்த விலையில் 3000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. மே மாதத்திற்கான நிலக்கரி தேவைகள் கணக்கிடப்பட்டு 4 லட்சத்து 80 ஆயிரம் டன் நிலக்கரி இறக்குமதி […]
தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு கப்பல் வாயிலாக 60,000 மெட்ரிக்டன் நிலக்கரி வந்ததை அடுத்து அனைத்து யூனிட்டுகளிலும் மின்உற்பத்தி துவங்கி இருக்கிறது. தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரித் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து மொத்தம் உள்ள 5 யூனிட்டுகளில் 3 யூனிட்டுகள் நிறுத்தப்பட்டது. 2 மற்றும் 4வது யூனிட் மட்டும் இயங்கி வந்தது. இதன் காரணமாக 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு கப்பல் வாயிலாக 60,000 மெட்ரிக் டன் நிலக்கரி வந்ததை […]
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தினமும் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் மின்சாரம் 1,050 மெகாவாட் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் மொத்தமுள்ள 5 யூனிட்டுகளில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒன்றில் மட்டுமே மின்சாரம் 210 மெகாவாட் உற்பத்தியாகிறது. ஆனால் மற்ற யூனிட்டுகளில் தற்போது மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிலக்கரியை ஒதுக்கீடு செய்யாத காரணத்தினால் தான் தூத்துக்குடி அனல் மின்நிலையம் […]
மத்திய அரசிடம் இருந்து ஒரு நாளைக்கு 48 ஆயிரம் டன் நிலக்கரி மட்டுமே கிடைக்கின்றது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் மின் உற்பத்திக்கு 76 டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் மத்திய அரசு ஒரு நாளைக்கு 40 ஆயிரம் முதல் 50 டன் நிலக்கரி மட்டுமே வழங்கி வருகிறது. இந்த ஆண்டில் தமிழகத்துக்கு தேவையான 17 ஆயிரத்து 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த அதிமுக ஆட்சியில் […]
நாடு முழுதும் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பானது குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகிறது. இந்த நிலையில் மின்சாரம் உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை கையிருப்பில் வைத்து இருக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மின்சார அமைச்சகமானது தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாநில மின்உற்பத்தி நிறுவனங்கள், மத்திய மின் உற்பத்தி நிறுவனங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களுடன் மத்திய மின்சார அமைச்சகம் ஆலோசனை மேற்கொண்டுள்ளது. நிலக்கரி பற்றாக்குறைநிலவினால் அதை சரிசெய்ய முன்பே விகிதாச்சார அடிப்படையில் வழங்கப்படும் நிலக்கரி அளவைத் தவிர […]
மியான்மரில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளார் மற்றும் 70 பேர் மாயமாகி உள்ளனர். வடக்கு மியான்மரில் உள்ள பச்சை மாணிக்க கற்களை வெட்டி எடுக்கும் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் ஒருவர் பலியாகியுள்ளார். மற்றும் 70 க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்று தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நேற்று அந்நாட்டு நேரப்படி சுமார் 4 மணி அளவில் பச்சை மரகதக் கற்களை தொழிலாளர்கள் வெட்டி எடுக்கும் போது ஏற்பட்ட இந்த திடீர் […]
தமிழகத்திற்கு தினமும் 10,000 டன் நிலக்கரியை ஒதுக்க வேண்டும் என்று டெல்லி மின்சாரத்துறை மந்திரியை சந்தித்து செந்தில்பாலாஜி கோரிக்கை வைத்துள்ளார். டெல்லியில் மத்திய மின்சார துறை மந்திரி ஆர்கே சிங்குடன் அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது எரிசக்தி துறை சம்பந்தமான 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார். மேலும் மின் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் மீது […]
ஐ.நாவில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் மின்சாரத்திற்கு நிலக்கரியை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று இந்தியாவும், சீனாவும் கூறியது தொடர்பான முழு விளக்கத்தை அளிக்க வேண்டும் என்று பருவநிலை மாநாட்டின் தலைவர் தெரிவித்துள்ளார். ஐ.நாவில் பருவநிலை மாநாட்டின் தலைவர் பங்கேற்ற பருவநிலை கூட்டம் நடைபெற்றுள்ளது. அப்போது இந்தியாவும், சீனாவும் மின்சாரத்திற்கு நிலக்கரியை பயன்படுத்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக பருவநிலை மாநாட்டின் தலைவர் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மாநாட்டின்போது சீனாவும், இந்தியாவும் வலியுறுத்தியது […]
பலத்த மழையால் ரோட்டில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் ஊட்டியில் மத்திய பேருந்து நிலையம் மேல் பகுதியில் இருக்கும் எமரால்டு சாலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்துவிட்டது. இதனால் அப்பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது மட்டுமில்லாமல் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 1/2 மணி நேர போராட்டத்திற்கு […]
நிலக்கரி ஏற்றி வந்த லாரி வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கே.ஏ.எஸ். நகரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான மில் ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் மில்லிற்கு தேவையான நிலக்கரி லாரியில் ஏற்றப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து புறப்பட்டது. அந்த லாரியை டிரைவர் குமார் என்பவர் ஓட்டி வந்தார். இதனையடுத்து லாரி கே.ஏ.எஸ். நகர் அருகே ஓடும் காலிங்கராயன் வாய்க்கால் கரையின் மண் சாலையில் வந்து கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக […]
இந்தியாவின் மொத்த மின் தேவையில் 70%/ நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் மின் ஆலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. காலநிலை மாற்றத்தில் அதிகமாக கார்பனை வெளியிடும் நிலக்கரியின் பங்கு வகிக்கிறது. அதனால் மரபுசாரா எரிசக்தியை ஊக்குவிக்க உலகநாடுகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிற நிலையில், காலநிலை மாற்றத்தை தடுப்பதற்காக நிலக்கரி உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்ற ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை. இது சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காலநிலை மாற்ற பாதிப்பை தடுக்கும் வகையில் நிலக்கரி […]
இந்தியா முழுவதும் 50க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி 4 நாட்களுக்கு மட்டுமே கையிருப்பு உள்ளதாக மத்திய மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே நிலக்கரித் தட்டுப்பாடு என்பது ஒரு பேசப்படும் பொருளாகவே இருந்து வருகிறது. இதனால் மின்சார உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்பட்டு பல மாநிலங்கள் இருளில் தத்தளித்து வருகின்றனர். இது தொடர்பாக பலர் வதந்திகளை பரப்பி வருவதாகவும் அவர்கள் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் […]
தமிழகத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. 24 மணிநேரமும் சீராக மின் வினியோகம் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல காரணங்களால் நிலக்கரி உற்பத்தி மற்றும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனல் மின் நிலையங்களில் கையிருப்பில் உள்ள நிலக்கரியை வைத்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அனல் மின் நிலையங்களில் உள்ள நிலக்கரி ஓரிரு நாட்களில் தீர்ந்துவிடும் என்று கூறப்படுகிறது.இதையடுத்து தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது என்றும், நிலக்கரி […]
நிலக்கரி அமைச்சகத்தின் எச்சரிக்கையை மாநில அரசுகள் கேட்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலக்கரி தட்டுப்பாட்டை மறுத்துவரும் மத்திய அரசு, மாநில அரசுதான் நிலக்கரி அமைச்சகத்தின் பேச்சைக் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றது. இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்ரா மாவட்டத்தில் உள்ள அசோகா நிலக்கரி சுரங்க பணிகளை மத்திய அமைச்சர் பிரஹலாத் […]
கர்நாடகாவில் மின் பற்றாக்குறை இல்லை. தேவையான நிலக்கரி இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். கர்நாடகாவில் தேவையான அளவு நிலக்கரி இன்னும் ஒரு சில நாட்களில் கிடைக்கும் என அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது, நாடு முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதாக பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த வாரம் கர்நாடகத்திற்கு தேவையான நிலக்கரி மத்திய அரசிடம் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் […]
மின்சார உற்பத்திக்கு தேவையைவிட அதிகமாகவே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக மத்திய நிலக்கரித் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். மத்திய நிலக்கரித் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் உள்ள நிலக்கரி சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியை பார்வையிடுவதற்காக சென்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அந்த பேட்டியில் கூறியதாவது, இந்தியாவில் நிலக்கரி பிரச்சனை குறித்து தொடர் சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. நிலக்கரி பிரச்சனை குறித்து அரசியல் செய்ய தான் விரும்பவில்லை என்று அவர் […]
நிலக்கரி தட்டுப்பாட்டு எதுவும் இல்லை தேவைக்கேற்ப நிலக்கரி கிடைக்கும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் சில பகுதிகள் இருளில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது மேலும் நிலக்கரி பற்றாக்குறையால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், இதனால் மின்சார தட்டுப்பாடு ஏற்படலாம் என டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள் கவலை தெரிவித்திருந்ததனர். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரஅமித்ஷா, நிலக்கரித்துறை […]
தமிழகத்தின் அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வருவது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரும்பொருட்களை தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு அவற்றின் வளத்தை அயராத உழைப்பாளர்களுக்கு அள்ளித் தந்து மகிழ்பவள் அன்னை பூமி. இத்தகைய அரும் பொருட்களில் ஒன்றான நிலக்கரி நமக்கெல்லாம் மின்சாரத்தை தந்து அதன் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியையும், விவசாய வளர்ச்சியையும், […]
போதுமான அளவு நிலக்கரி கையிருப்பு உள்ளதாகவும், மின் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 4ஆம் தேதி கணக்கெடுப்பு படி இந்தியாவில் நிலக்கரி மூலம் மின்சாரம் தயாரிக்கும் 135 ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மூன்று நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி உள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன் காரணமாக டெல்லி, ஆந்திரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என கூறப்பட்டது. இதனால் பல்வேறு […]
தமிழகத்தில் மின்உற்பத்தியானது 43% இருந்து 70% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், தினமும் 60 ஆயிரம் டன் நிலக்கரி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. மத்திய அரசு மாநிலங்களின் தேவைக்கேற்ப கையிருப்பில் உள்ள நிலக்கரியை பிரித்து வழங்கி வருகிறது. தமிழகத்தில் ஒரு நொடி கூட நிலக்கரித் தட்டுப்பாடு காரணமாக மின்வெட்டு ஏற்படாது என்றும், தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி […]
நிலக்கரி பற்றாக்குறையின் காரணமாக தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினை தலைதூக்கலாம் என்று அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ஒரு மின்வெட்டு காலகட்டத்தை தமிழகம் தாங்காது என மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனல் மின்நிலையங்கள் தங்கு தடையின்றி இயங்க நிலக்கரி அவசியமாக உள்ள நிலையில் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். எனவே தேவையான நிலக்கரியை மத்திய அரசிடம் கேட்டுப் […]
தமிழகத்தில் அனல் மின் நிலையங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை கிண்டி ஐஐடியில் உள்ள துணை மின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார. மேலும் அனல் மின்நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவியது என்று வந்த தகவல் பொய்யான தகவல் என்று அவர் கூறினார். இதையடுத்து […]
கடந்த அதிமுக ஆட்சியில் வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2.38 லட்சம் டன் நிலக்கரி கணக்கில் இல்லை என்று அமைச்சர் செந்தில்பாலாஜி அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். பதிவேட்டில் உள்ளதற்கும், இருப்பு உள்ளத்திற்கும் வித்தியாசம் மட்டும் 2.38 லட்சம் டன். இதற்கு கணக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் முதற்கட்ட ஆய்வில் இதன் மதிப்பு தோராயமாக ரூ.85 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, […]
நான்காவது மாதமாக ஜூனில் நிலக்கரி, கச்சா எண்ணெய் உள்ளிட்ட முக்கியத் எட்டு துறைகள் உற்பத்தி 15 விழுக்காடு பின்னடைவைச் சந்தித்துள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் ஜூன் காலாண்டில் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உருக்கு, சிமெண்ட், மின்சாரம், உரம், சுத்திகரிப்பு ஆகிய எட்டு துறைகளின் உற்பத்தி 24.6 விழுக்காடு எதிர்மறை வளர்ச்சியை கண்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. […]
சூரியசக்தி பயன்பாடு பிரபலம் அடைந்ததற்கு இந்தியா நல்ல எடுத்துக்காட்டாக திகழ்கிறது என ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார். தூய்மையான எரிசக்தியை மாற்ற உச்சிமாநாட்டில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோணியோ குட்ரெஸ் பல கருத்துக்களை கூறியுள்ளார். சர்வதேச சமூகத்தின் நிலக்கரி பயன்பாட்டை குறைப்பதிலும் வளர்ந்து வரும் நாடுகளில் நிலக்கரியின் வெளிப்புற நிதியுதவிக்கும் தீர்வு காண வேண்டும். மேலும் தற்போது உள்ள சூழ்நிலையில் நிலக்கரி பிரச்சனைக்கு தீர்வு காண்பது கடினம். நிகர பூஜ்ஜிய உணர்வுகளுக்கு 2050 ஆம் ஆண்டுக்குள் உறுதி கூற வேண்டும். மேலும் […]
கட்டமைப்பு சார்ந்த 8 துறைகளில் சீர் திருத்த அறிவிப்புகள் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறார். அதில் நிலக்கரி, சுரங்கத்துறையில் வர்த்தக ரீதியாலான மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளன, ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதால் சீர்திருத்தங்கள் தேவைப்படுகிறது என கூறிய அவர், நிலக்கரித்துறை தனியார் மயமாக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். சுரங்கங்களில் இருந்து நிலக்கரியை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்புக்கு ரூ.50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், முதற்கட்டமாக 50 நிலக்கரி சுரங்கங்கள் தனியார் […]
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்போது பாதிப்படைந்துள்ளது. நெய்வேலி என்.எல்.சி வித்யா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக நிலக்கரியானது முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு செல்லும். இந்த விரிவாக பணியில், பெல்ட் செல்லும் பாதையில் […]