துருக்கியின் நிலக்கரி சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் இதுவரை 40 பேர் பலியாகி உள்ளனர். துருக்கியின் வடக்கில் பார்டின் நகருக்கு அருகே இந்த சுரங்கம் அமைந்துள்ளது. சுரங்கப் பணியின் போது வைக்கப்பட்டு இருந்த ரசாயனத்துடன் மீத்தேன் வாயு கலந்ததால் வெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. 300 அடி ஆழத்தில் நடந்த இந்த விபத்தில் 40 பேர் உயிரிழந்த நிலையில் 48 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Tag: நிலக்கரி சுரங்கம்
ஜெர்மனியில் கடந்த 2018-ம் ஆண்டு பிராஸ்பேர் கேனியல் நிலக்கரி சுரங்கம் மூடப்பட்டது. இந்த சுரங்கமானது 155 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில், திடீரென மூடப்பட்டதால் தொழிலாளர்கள் சுரங்கத்தை விட்டு வெளியேறும்போது கண்கலங்கி சென்றனர். இந்த சுரங்கம் ஆனது பசுமை இல்ல வாயுக்கள் என்று கூறப்படும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளிப்படுவதை தடுப்பதற்காகவே மூடப்பட்டது. இதற்கான முக்கிய காரணம் ஐநா சபை பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றுவது அழிவுப்பாதையை நோக்கி செல்லும் என்று எச்சரிக்கை விடுத்ததுதான். […]
நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். போலந்து நாட்டின் பாவ்லோவிஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 1000 மீட்டர் ஆழத்தில் உள்ள மீத்தேன் வாயு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனைத் அடுத்து இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். மேலும் […]
ரஷ்யாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யாவின் செர்பியா மாகாணத்தில் உள்ள லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி சுரங்கத்தில் 280 தொழிலாளிகள் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்கள் 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நிலக்கரிச் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு […]