பெண்ணின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு அருகே கீழ உப்பூரணி பகுதியில் செல்வகனி (53) என்பவர் தனியாக வசித்து வருகிறார். இவருடைய கணவர் நடராஜன் கடந்த 22 வருடங்களுக்கு முன்பாக இறந்துவிட்டார். இதனால் செல்வக்கனி கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார். இதே பகுதியில் திரவியக்கனி- நீலாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் செல்வகனிக்கும் இடையே நிலம் தொடர்பாக தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நீலாவதி அதிகாரிகள் […]
Tag: நிலத்தகராறு
நிலத்தகராறு காரணமாக 2 பேர் கொலை மற்றும் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பைரவபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன். இவரின் அண்ணன் செல்வம். இவர்களுக்கு இடையே நில தகராறு காரணமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியன் அவரது அண்ணன் செல்வத்தின் மனைவி சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டு சங்கீதாவை தாக்கிய பொழுது வெங்கடேசன் என்பவரின் மனைவி வேண்டாமிர்தம் தடுக்க வந்திருக்கின்றார். இதில் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன் வேண்டாமிருதத்தை கத்தியால் […]
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ-வாக இருந்தவர் இதயவர்மன். இவரது தந்தை லட்சுமிபதி திமுகவின் முன்னாள் ஒன்றியக்குழு தலைவராக இருந்தவர். இவர்கள் குடும்பத்தாருக்கும் இதே பகுதியை சேர்ந்த குமார் என்பவருக்கும் இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்துவந்துள்ளது. இந்நிலையில் செங்காடு கிராமத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தின் அருகே குமார் மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமான 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் உள்ளதாக தெரிகிறது.இந்த நிலத்துக்கு பாதையை அமைப்பதற்காக குமார் […]
நீண்ட கால பகையை மறந்து நடிகர் சிங்கமுத்து, மீண்டும் வடிவேலுவுடன் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்த நடிகர் வடிவேலு, ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் சேர்ந்து நடிகர் சிங்கமுத்துவும் பல படங்களில் ஒன்றாக நடித்திருப்பார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த காமெடி, ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பைப் பெறும். ஆனால் கடந்த 2007 ஆம் வருடத்தில் நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் சிங்கமுத்துவிற்கு இடையில் […]
முதியவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து 3 பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள எருமைகரிச்சி கொட்டகை கிராமத்தில் பாண்டி என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனையடுத்து கடந்த மாதம் 27ஆம் தேதி ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முருகன் அரிவாளால் பாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் […]
கவுத்தமாலா என்னும் மத்திய அமெரிக்க நாட்டில் 100 வருடங்களை தாண்டி நீண்டு வரும் நிலத்தகராறில் இருதரப்பினர் இடையே சண்டை ஏற்பட்டு 12 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுத்தமாலா நாட்டின் சண்டா ஹடரினா ஐஸ்டஹூஹன் மற்றும் நாலுலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருதரப்பு மக்களிடையே கடந்த நூறு வருடங்களை தாண்டி நில பிரச்சனை நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நாலுலம் என்னும் பகுதியில் இருக்கும் சின்கியூக்ஸ் என்ற கிராமத்தில் இரண்டு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதில் துப்பாக்கி […]
நிலத்தகராறில் விவசாயியை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கெங்குசெட்டிப்பட்டி பகுதியில் விவசாயி ரங்கநாதன் வசித்து வருகிறார். அதே பகுதியில் விவசாயி ஜெயவேல் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் நிலத்தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் ரங்கநாதன், ஜெயவேல் ஆகிய இருவருக்கும் இடையில் மீண்டும் நிலத்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஜெயவேல், ரங்கநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரங்கநாதன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயவேலை கைது செய்தனர்.