உத்திரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தெஹ்ரி கார்வால் என்ற இடத்தில் இன்று மாலை 6 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி இருக்கிறது. நிலநடுக்கம் குறித்த தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் அங்கு ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த ஒரு தகவலும் தற்போது வரை வெளியாகவில்லை.
Tag: #நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் மிகவும் சக்தி வாய்ந்த கடல் பகுதியில் ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு இந்தோனேசியாவில் இன்று அதிகாலை மிகவும் சக்தி வாய்ந்த ஆழமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதில் எந்த ஒரு சேதமும் உண்டாகவில்லை. தென்கிழக்கு சுலவேசி மாகாணத்தில் கட்டாபுவின் தென்கிழக்கில் 220 கிலோமீட்டர் தூரத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 அளவாக நிலநடுக்கம் பதிவாகி இருக்கின்றது. மேலும் கடலுக்கு அடியில் 627 கிலோமீட்டர் மையத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் […]
பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, ரிக்டர் அளவு 6.4 ஆக பதிவாகியுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இன்று காலை ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி இருப்பதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 450 கிலோ மீட்டர் தென் கிழக்கில் இருந்ததாகவும், அது கடலுக்கு மேற்பரப்பிலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியதாகவும் […]
இமாச்சல பிரதேச மாநிலத்தின் சம்பா பிராந்தியத்தில் லேசான நிலநடுக்கம் இன்று ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவிலான நிலநடுக்கம் இன்று மதியம் 12:17 மணியளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பாவின் பிராந்திய எல்லையில் தர்மஷாலாவிலிருந்து மேற்கு மற்றும் வடமேற்கில் 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், மதியம் 12:17 மணிக்கு ஏற்பட்டது எனவும் தகவல்கள் வெளியகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 19 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. மேலும், காங்க்ரா மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இந்த நிலஅதிர்வு […]
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டர் அளவு கோலில் 7.5ஆக பதிவாகி உள்ளது. அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவுகளில் கடலுக்கு அடியில் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி இருப்பதால் இந்த நிலநடுக்கத்தால் ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையில் பயங்கர சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதேபோல ரஷ்யாவின் குரில் […]
இந்தோனேஷியாவில் 5.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நில நடுக்கத்தால் பலர் தங்கள் வீடுகளையும், உயிர்களையும் இழந்துள்ளனர். அதன்படி அதிகாலை 3.24 மணியளவில் வடமேற்கு இந்தோனேசியாவின் சுமார் 229 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சயூம்லாகி பகுதியில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நடுக்கமானது 157 கி.மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த […]