நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் ஜெயப்பிரியா மற்றும் மருமகன் நவீன்குமார் போன்றோர் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் மகளை கைது செய்யக்கூடாது என்று காவல்துறைக்கு சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பதிலளிக்கவும் ஐகோர்ட்டுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
Tag: நில அபகரிப்பு வழக்கு
ஆர்.டி.ஒவின் டிஜிட்டல் கையொப்பத்தை பயன்படுத்தி நில மோசடியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு அதிகாரிகளின் உதவியோடு அதிமுக பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் உள்பட 27 பேர் அரசு நிலத்தை அபகரித்து பட்டா பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்துள்ளது. அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரனின் உத்தரவின்படி, பெரியகுளம் சப் கலெக்டர் ரிஷிப் விசாரணை நடத்தியுள்ளார். அந்த விசாரணையில் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் அபகரிக்கப்பட்ட 94.65 ஏக்கர் […]
சென்னையில் போலியான ஆவணங்களை வைத்து நிலத்தை அபகரித்த இருவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். சென்னையை சேர்ந்த செல்வம் என்பவர் 2003 ஆம் ஆண்டு சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஸ்ரீகாமகோட்டி நகரில் 3600 சதுர அடி கொண்ட காலி நிலத்தை அவரது மனைவி திருமதி பாக்கியலட்சுமி பெயரில் வாங்கியுள்ளார்.நிலத்தின் மதிப்பு சுமார் 1.30 கோடி மதிப்புடையதாகும். இவர் நிலத்தை பார்த்து வெகு நாள்கள் ஆன நிலையில் அண்மையில் நிலத்தை பார்ப்பதற்கு சென்றுள்ளார்.அப்போது அவர் […]