மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் தாலுகா பகுதியில் கன மழை பெய்து வருவதால் வெள்ளேரிசோலாடி, பொன்னானி, விளக்கலாடி உள்ளிட்ட ஆறுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மேலும் சாலைகளில் மண் சரிவுகள் ஏற்பட்டு வருகின்றது. ஆதிவாசி காலனிக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் மக்கள் குடியிருக்க முடியாமல் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். இதைத்தொடர்ந்து பந்தலூர் வருவாய் துறை சார்பாக அவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை தாசில்தார் நடேசன் […]
Tag: நிவாரண உதவி
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டைனுக்கு சொந்தமான 2 தீவுகளை விற்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமாக கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க நாட்டில் தொழிலதிபரான ஜெஃப்ரி எப்ஸ்டைன் என்பவர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதனால் சிறைக்கு சென்றார். இவருக்கு சொந்தமான 2 தீவுகளை விற்பனை செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் அந்த தொகையை கொடுக்க வேண்டும் என்று நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த கரீபியன் தீவுகளுக்கான விலை 125 மில்லியன் டாலர் என கூறுகின்றனர். இந்த தீவில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதில் சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், சென்னை மாநகரின் பல பகுதிகள் 2015 ஆம் ஆண்டில் சந்தித்த பாதிப்பை விட தற்போது மோசமான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. வட சென்னை மற்றும் தென் சென்னை அனைத்து பகுதிகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது. […]
நெல்லை மாவட்டத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை 2ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் வியாபாரிகள் கடைகளை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்டம் பணகுடி வியாபாரிகள் சங்கம் சார்பில் நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பணகுடி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வைத்து சங்கத் தலைவர் […]
இசைக் கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என கோரிக்கை. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 8 மாதங்களாக தொழில் இன்றி வறுமையில் வாடும் இசை கலைஞர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என நாகர்கோவிலில் நடைபெற்ற மாவட்ட தமிழ் கிராமிய பாண்ட் வாத்திய இசை கலைஞர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை எழுப்பப்பட்டது. வடசேரியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ் கிராமிய பாண்ட் வாத்திய குழுவை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவர் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய தொழில்துறை அமைச்சர் மற்றும் ஆட்சியருக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க வேண்டும் என்றும் […]
தர்மம் தலைகாக்கும் என்ற கூற்றின் படி 1,10,000 ரூபாய் கொரோனா நிதி உதவியாக பிச்சை எடுத்து ஒரு முதியவர் கொடுத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த 70 வயதான பூல்பாண்டியனுக்கு மனைவி, இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். வயோதிக காலத்தில் பிச்சை எடுத்துதான் சாப்பிடக்கூடிய நிலை இருந்தாலும் தனக்குப் போக தான் தானமும் தர்மமும் என்ற கருத்திற்கு விதிவிலக்காக இவர் அமைந்துள்ளார். ஏனென்றால் இவர் தனக்கு கிடைக்கும் வருமானத்தை வைத்து அவர் […]
உயிரிழந்த ஆயுதப் படை வீரர் பிரபுவின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் – சென்னிமலை மாநில நெடுஞ்சாலையில், திட்டுப்பரை என்ற இடத்தில் சென்ற ஜூன் 29 ஆம் தேதி அன்று சோதனைச்சாவடி நோக்கி ஒரு லாரி வேகமாக வந்து நிற்காமல் சென்றதால் அந்த இடத்தில் பணியில் நின்று கொண்டிருந்த ஆயுதப் படை வீரர் இரு சக்கர வாகனத்தில் விரட்டி சென்ற சம்பவத்தில் 23 வயது காவலர் பிரபு உயிரிழந்துவிட்டார். […]
கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு அருகே ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கிய தேயிலை தோட்ட தொழிலாளர்களில், 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. இதில் காந்திராஜ் (48), சிவகாமி (38), விஷால் (12), ராமலட்சுமி (40), முருகன் (45), மயில்சாமி (48), கண்ணன் (40), அண்ணாதுரை (44), ராஜேஸ்வரி (43) ஆகிய 9 பேரின் சடலங்கள் […]
தன்னார்வலர்கள் நிவாரண உதவி வழங்க தமிழக அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து தி.மு.க. தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு வழங்க உள்ளனர். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல், உணவில்லாமல் சாலை ஓரங்களிலும் பலர் தவிக்கின்றனர். அவர்களை தமிழக அரசு கண்டறிந்து உணவு வழங்கி வரும் நிலையில் தன்னார்வலர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினரும் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான உணவு, நிதியுதவியை வழங்கி வந்தனர். இதுபோன்று சம்பவங்களால் கொரோனா தொற்று ஏற்பட […]