வெள்ள நிவாரணத் தொகை பெற வருகின்ற 15ஆம் தேதி கடைசி நாள் என மயிலாடுதுறை ஆட்சியர் அறிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகா பகுதிகளில் சென்ற நவம்பர் மாதம் 11-ம் தேதி பெய்த கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்தது. இப்பகுதியை சென்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழக முதல்வர் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் இருக்கும் குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். […]
Tag: நிவாரண தொகை
சென்னையில் பணியின் போது உயிரிழந்த ஒப்பந்தத் தொழிலாளர் நெல்சன் குடும்பத்திற்கு நிவாரண தொகையாக ரூபாய் 15 லட்சம் வழங்கிட முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கழிவுநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் இயந்திரத்தில் தவறி விழுந்தார். அவரை மீட்பதற்காக ஒப்பந்த தொழிலாளி ரவியும் இயந்திரத் துளையில் விழுந்து விட்டார். இருவரையும் உயிருடன் மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் […]
சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்படும் இழப்பீடு தொகை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் சாலை விபத்துகளில் மரணம் அடைந்தவர்களுக்கு மத்திய அரசு சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டு தொகை தற்போது 8 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி 25 ,000 ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாயாக இழப்பீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான அறிவிக்கை […]
விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பருவநிலை மாறுபாட்டால் கனத்த மழை பெய்து கடும் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, இதில் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை அளிக்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் உள்ள தாலுகா அலுவலகங்களின் முன்பு விவசாயிகளுடன் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தவுள்ளதாக அதிமுக தெரிவித்திருக்கிறது. இதுபற்றி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் […]
மத்திய அரசின் தேசிய பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்தை புறக்கணித்தது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கும் நிலையில், பொங்கலுக்கு ரொக்கம் கொடுக்காததற்கு என்ன காரணம்? என்று திமுகவினர் கூறியுள்ளனர். தைத்திங்கள் முதல் நாளன்று தமிழர்களால் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இப்பண்டிகைக்காக தமிழ்நாட்டில் இருக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, சர்க்கரை, முந்திரி, பச்சரிசி, திராட்சை, ஏலக்காய் போன்ற பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்படும். அதன்படி இந்த வருடமும் பொங்கல் பண்டிகை அன்று 21 பொருட்கள், அரிசி […]
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதேபோல் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்களுக்கு நிவாரண தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்ததன் காரணமாக 4.78 லட்சதிற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பொருளாதார நிலையை கவனத்தில் கொண்டு கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்தது. இதனால் விவசாயிகளின் பயிர் நிலங்கள் அதிக அளவில் நாசமாகியுள்ளது. இது குறித்து த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயத்தை பாதுகாக்கவும் மற்றும் விவசாயிகளின் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் நிவாரணம் வழங்க வேண்டும். இதையடுத்து விவசாயிகள் ஒவ்வொரு ஏக்கருக்கு ரூ.30,000 வரை செலவு செய்து லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் மழையினால் மூழ்கி […]
தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி மாநில சட்டமன்றத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ரங்கசாமி ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளரிடம் பேசிய அவர், புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் 54 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்றும் மற்ற ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளது. மேலும் கனமழையின் காரணமாக புதுச்சேரி […]
தமிழகத்தில் மீன்பிடிக்க தடைக்கால நிவாரண தொகையை ரூ.6000 மாக உயர்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது மீன்பிடி குறைவு கால நிவாரண தொகையை ரூ.5000 லிருந்து ரூ.6000 மாக உயர்த்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி தற்போது மீன்பிடி குறைவு கால நிவாரணத் தொகையை ரூ.6000 மாக உயர்த்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் 14 கடலோர மாவட்டங்களில் உள்ள1,80,000 மீனவ குடும்பங்களுக்கு […]
பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வைப்பீடு செய்து 18 வயது முடிந்தவுடன் வழங்கும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி […]
கொரோனா நிவாரண தொகையாக 19 திருநங்கைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் காசோலையை அமைச்சர் வழங்கியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் திருநங்கைகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு நிவாரண உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி கலெக்டர் அரவிந்த் தலைமையில், அமைச்சர் மனோ தங்கராஜ் 19 திருநங்கைகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண உதவி தொகையாக வழங்கினார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியபோது […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முன் களப் பணியாளர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. மருத்துவ மற்றும் சுகாதார துறை பணியாளர்கள் முன்கள பணியாளர்களாக செயலாற்றி கொரோனாவை கட்டுக்குள் வைக்க போராடி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் என் உயிரை பணயம் வைத்து கொரோனா குறித்த விழிப்புணர்வுகளை பத்திரிக்கையாளர்கள் மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள். அவர்களும் முன்களப்பணியாளர்கள் என்று தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இவர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் […]
மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரண தொகையை கூடுதலாக தரவேண்டும் என்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு தற்போது 5 ஆயிரம் ரூபாய் தடைக்காலதிற்கான நிவாரணம் தொகை கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்த உதவித் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக தர வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் 150 மீனவர்களுக்கு இந்த ஆண்டிலேயே உரிய உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை […]
சேலம் மாவட்டத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை பெறுவதற்கான டோக்கன் வழங்கும் பணி நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி பொறுப்புக்கு வந்த உடன் தேர்தல் அறிக்கையில் கூறிய படி கொரோனா நிவாரண தொகையாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதில் முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். மேலும் கூட்டத்தை தவிர்க்கும் வகையில் தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]
மீன்பிடி தடைகாலம் தொடங்கியதால் நாகையில் 2 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மீனவ கிராமங்களில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் 61 நாட்கள் நேற்று முன்தினம் முதல் தொடங்கியது. இதனால் மீன்பிடி தொழில் மற்றும் அதைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு வருமான இழப்பீடு ஏற்பட்டது. மீன்பிடிக்க செல்லாமல் இருக்கும் மீனவர்கள் வலைகளை சீரமைத்தல், விசைப்படகுகளில் பழுது நீக்குதல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபடுவார்கள். தமிழக அரசு சார்பில் இந்த காலத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 5 […]