ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் நிதி உதவியை எம்.பி.கனிமொழி வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட த்திற்கு அருகே இருக்கும் சிலுவைப்பட்டியை சேர்ந்தவர்கள் பூண்டி மாதா கோவிலுக்கு தரிசனம் செய்வதற்காக ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளார்கள். அவர்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்த போது 6 பேர் ஆற்றில் மூழ்கி பரிதாபமாக உள்ளார்கள். இதை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறு பேர் குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்து முதல் அமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று […]
Tag: நிவாரண நிதி
கொள்ளிடம் ஆற்றில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். ஆன்மீக சுற்றுலாவிற்காக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்திருந்த தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி கிராமம் சிலுவை பட்டியைச் சேர்ந்த சார்லஸ் (38) திரு பிரித்திவிராஜ் (36) திரு தாவீது ராஜா (30) திரு பிரவீன் ராஜ் (19) திரு ஈசாக்(19) மற்றும் செல்வன் அண்டோ கெர்மஸ் ரவி போன்ற 6 பேரும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது பள்ளத்தில் விழுந்ததில் நீச்சல் தெரியாமல் நீரில் […]
கர்நாடகாவில் லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும குரு மாவட்டத்தில் உள்ள சிரா என்னும் பகுதிக்கு அருகே இன்று தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மீது ஜிப் ஓன்று வேகமாக மோதியுள்ளது. இந்தக் கோர விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அதில் மூன்று குழந்தைகள் அடங்கும் மேலும் 11 பேர் காயமடைந்து இருக்கின்றார்கள். இதனை அடுத்து காயம் அடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் […]
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தாலுகா ஆழ்ங்கிணற்றை சேர்ந்த பாண்டியன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகள், ஒரு மகன் இருக்கின்றார்கள். மும்பையில் தேய்ப்பு கடை நடத்தி அங்குள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 15 வருடம் பணி செய்து குழந்தைகள் அனைவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அதன் பின் 2010 ஆம் வருடம் தமிழ்நாடு வந்த இவரை குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்திருக்கின்றனர். இதனால் வேலூர், திருவண்ணாமலை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு […]
ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி இலங்கை மக்களுக்காக சேமிப்பு நிதியிலிருந்து 3000 ரூபாயை ஆட்சியரிடம் வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களை மீட்பதற்காக நிதி உதவி அளிக்க முன் வருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதன் விளைவாக காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள வாலாஜாபாத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் லட்சுமி பிரியா என்ற மாணவி […]
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் நெல்லி வாசல் நாடு மதுரா புலியூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட நபர்கள் கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு வேனில் சென்ற போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பரசுராமன் என்பவரின் மனைவி துர்கா, அவரது மகன்கள் பவித்ரா, ஷர்மிளா, என்பவரின் மனைவி செல்வி, வேந்தன் என்பவரின் மனைவி சுதந்திரா மற்றும் குள்ளப்பன் என்பவரின் மனைவி மங்கை போன்ற 6 […]
ஆந்திராவில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் அருகே உள்ள கடல பள்ளி கிராமத்தில் நேற்று காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். இதில் 2 பேர் குழந்தைகள் ஆவர். பெல்லாரியில் நடைபெற்ற பா.ஜ.க செயற்குழு உறுப்பினர் கோரா வெங்கட்டப்பாவின் மகள் திருமணத்திற்காக அனந்தபூர் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிர் திசையில் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து […]
பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதற்கட்டமாக 85,50,000 ரூபாய் நிவாரண நிதி சுற்றுலாத்துறை அமைச்சர் முன்னிலையில் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவ மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக வேளாண் பயிர்களான நெல், பருத்தி, சோளம், மக்காச்சோளம், உளுந்து, கரும்பு, தென்னை ஆகியவை 109.88 ஹெக்டரும், தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், தக்காளி மற்றும் பல்லாண்டு பயிரான முருங்கை, காய்கறி வகைகள், […]
ஸ்ரீவில்லிபுத்தூர் நாகலாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை முருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பட்டாசு தொழிற்சாலை ஆரம்பித்து கிட்டத்தட்ட 2 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். புத்தாண்டை முன்னிட்டு 80 பேர் வேலை பார்த்து வந்தனர். இந்த பட்டாசு தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 23 அறைகள் உள்ளது. இந்தநிலையில் நேற்று காலையில் கெமிக்கல் கலக்கும் வரையில் திடீரென மருந்துப் பொருள்களை கலக்கும் போது […]
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதிப்படைந்த மக்களுக்கு உதவ வேண்டும் என்று உலக நாடுகளிடம் கோரியிருக்கிறார். இஸ்லாமாபாத்தில் ஆப்கானிஸ்தானில் நிலை தொடர்பில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளதாவது, உலக நாடுகள் ஆப்கானிஸ்தான் நாட்டை தனிமையாக்குவது ஆபத்தில் முடியும். அந்நாட்டில் பாதிப்படைந்த மக்களுக்கு உலக நாடுகள் உதவ வேண்டும். மனிதாபிமான சிக்கலை தடுக்க அந்நாட்டு மக்களுக்கு அனைத்து வழிகளிலும் பாகிஸ்தான் அரசு ஆதரவு கொடுக்கும். எங்கள் நாட்டிலிருந்து ஆப்கானிஸ்தானிற்கு தேவையான […]
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று ராணுவ வீரர்களின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து ஆறுதல் தெரிவித்தார். அதன் பிறகு கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் காசோலை வழங்கினார். அதில் காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்தைச் சேர்ந்த படைவீரர் கே. ஏகாம்பரம் அவர்களுடைய மனைவி இ. குமாரி, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டத்தைச் சேர்ந்த படைவீரர் கே. கருப்பசாமி அவர்களுடைய மனைவி ஆர். […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளக்காடாக காட்சியளிகிறது. மேலும் மக்களின் வாழ்வாதாரம் பாதித் உள்ளதால் தமிழக அரசின் நிவாரண உதவியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மத்திய உள்துறை அமைச்சரிடம் வெள்ள நிவாரண நிதி ரூ.2,079 கோடி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து கடந்த 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் உள்துறை இணை செயலாளர் […]
நாடு முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் பரவல் பல்வேறு அலைகளாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1- அலையில் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிக அளவில் இல்லை. ஆனால் 2- வது அலையில் அதிக அளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது. அது மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது. அதனால் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். தற்போது கொரோனா தொற்று 2- வது அலை குறைந்துள்ளதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். மேலும் வருமானம் ஈட்டும் நபர்கள் கொரோனா […]
தமிழகத்தில் கொரானா காலகட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றி உயிர் தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவி இன்னும் கிடைக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவை கண்டு பயந்து வீட்டிலேயே முடங்கிக் கி கிடந்தன. இந்த நிலையில் உயிருக்கு அஞ்சாமல் சாலைகள் மற்றும் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான காவலர்கள் பணியாற்றினர். அவ்வாறு பணியாற்றியவர்கள் கடந்த மே மாதம் 84 காவல்துறையினர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 84 பேரில் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு […]
தமிழகத்தில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மளிகை பொருட்களை மலிவான விலையில் பெரும் வகையில் நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா பரவுதலின் காரணமாக கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் நியாயவிலை கடைகள் மட்டும் செயல்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி நியாய விலை கடையில் பணிபுரிந்த சில ஊழியர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இந்நிலையில் கூட்டுறவுத்துறை,கொரோனாவால் உயிரிழந்த ரேஷன் கடை ஊழியர்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.25 லட்சம் […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் முதல்வரின் பொது நிவாரண நிதி வழங்க புதிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. […]
தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு முதலமைச்சரின் பொது நிவாரண நிதி என்ற பெயரில் நிதி திரட்டப்பட்டது. இதற்கு ஏராளமான நடிகர், நடிகைகள், நிறுவனங்கள், பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கூட இதற்கு நிதி வழங்கினார். மேலும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் செய்யப்படும் செலவு கணக்குகள் அனைத்தும் மக்களிடம் தெரிவிக்கப்படும் என […]
ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது. கொரோனா ஊரடங்கு காரணமாக ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக முதல்வர் திரு.முக. ஸ்டாலின் 14 வகையான மளிகைப் பொருட்கள் மற்றும் நிவாரண நிதி வழங்கி வருகிறது. இதனையடுத்து பொதுமக்கள் ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் வேலூர் காகிதப்பட்டறையிலுள்ள ரேஷன் கடையில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்துபொருட்களை வாங்கி சென்றனர்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழக அரசு பல்வேறு நிவாரண உதவிகளை […]
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா நிவாரணமாக முதல் தவணை ரூபாய் 1,500 நாளை முதல்வர் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தை போன்று புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா நிவாரண […]
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்தவகையில் இயக்குனர் பாரதிராஜா, நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் […]
தேனியில் அக்கா-தம்பி தங்களுடைய சேமிப்பு பணத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள். தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்கும் பணிக்காக முதலமைச்சரினுடைய நிவாரண நிதிக்கு பலரும் நிதி வழங்கி வருகிறார்கள். அதேபோல் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ஆசிரியர் வேலையை செய்து வரும் மாதவன் என்பவருடைய மகள் மற்றும் மகன் தாங்கள் சேமித்து வைத்த சிறுசேமிப்பு பணத்தை நிதிக்கு வழங்குவதற்கு முடிவு செய்தனர். அதன்படி இருவரும் தலா 5,000 ரூபாய் வீதம் மொத்தமாக 10,000 ரூபாயை முதலமைச்சரினுடைய […]
நெல்லையில் சமூக சேவகர் முக கவசம் விற்ற 14,000 ரூபாயை கொரோனாவிற்கான நிவாரண நிதியாக மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சமூக சேவகரான பாபுராஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பாபுராஜ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரினுடைய நிவாரண நிதிக்கு ரூபாய் வழங்கும் எண்ணத்தோடு, வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் கொரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி முக கவசத்தையும் விற்றுள்ளார். அதன்மூலம் 14,000 ரூபாயை நிதியாக திரட்டினார். அந்த நிதியை மாவட்ட […]
உதகை மாவட்டத்தில் குழந்தைகள் சிலர் கொரோனா நிவாரண நிதியை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கியுள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள், பொது நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து பல பிரபலங்களும், நிறுவன […]
தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 3000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து முதல் தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. இரண்டாவது தவணை ரூ.2000 ஜூன் 3ம் தேதிக்குள் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து அண்டை மாநிலமான […]
தமிழகத்தில் வரும் ஜூன் 3-ம் தேதிக்குள் மீதமுள்ள கொரோனா நிவாரண தொகை ரூபாய் இரண்டாயிரத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் முதலில் கையெழுத்து இட்டதே கொரோனா நிவாரண நிதிக்கு தான். தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் நான்காயிரம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து முதல் தவணையாக ரூபாய் 2000 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் […]
திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனாவிற்கான நிவாரண நிதியை கேட்டு திருநங்கைகள் மனுவை கொடுத்தனர். திருநெல்வேலியிலிருக்கும் கலெக்டர் அலுவலகத்திற்கு திருநங்கைகள் பலரும் திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் கொரோனாவிற்கான ஊரடங்கால் தங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது பொது மக்களுக்கு அரிசி ரேஷன் கார்டுகளுக்கு கொரோனாவிற்கான நிவாரண நிதியாக 4,000 ரூபாயை கொடுப்பதுபோல் தங்களுக்கும் நிதி கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் நிதி தொடர்பாக மனுவையும் கொடுத்தனர்.
குஜராத் பகுதியில் டவ்-தே புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து ஹெலிகாப்டரில் பார்வையிட்ட பிரதமர் மோடி ஆயிரம் கோடியை உடனடியாக நிவாரணமாக அறிவித்துள்ளார். அரபிக் கடலில் உருவான டவ்-தே புயல் கடந்த திங்கட்கிழமை இரவு குஜராத் மாநிலத்தில் கரையை கடந்தது. இது கடலோரப் பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக 16 ஆயிரம் வீடுகள், 40 ஆயிரம் மரங்கள் வேரோடு சாய்ந்தது. 70 ஆயிரம் மின்கம்பிகள் சாய்ந்தது. இதன் காரணமாக மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு வேலை செய்ய […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் […]
கொரோனா நிவாரண பணிகளுக்கு சென்னையை சேர்ந்த திருநங்கைகள் ரூபாய் 50,000 தொகையை நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண […]
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முன்தினம் முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் […]
திருப்பத்தூரில் முதலமைச்சர் அறிவித்த நிவாரண நிதிக்கு சகோதரிகள் உண்டியல் பணத்தை வழங்கியிருக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நிவாரண நிதி வழங்குவது தொடர்பாக திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தார். திருப்பத்தூர் மாவட்டத்தில் குமார் மற்றும் சுதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியில் சலூன் கடை நடத்தி வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு அர்ஷிதா மற்றும் சத்யாஸ்ரீ என்ற மகள்கள் இருக்கின்றனர். இந்த சகோதரிகள் இருவரும் சேர்ந்து அவர்களுடைய உண்டியலில் சேமித்து […]
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல புதிய கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர். அந்தவகையில் […]
கொரோனா நிவாரண பணிகளுக்கு விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இணைந்து ரூபாய் 11 கோடி நிதி திரட்டி உள்ளனர் . இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் இந்தியாவின் கொரோனா பாதிப்பிற்கு பல்வேறு வெளிநாடுகளும், பிரபலங்களும் கொரோனா நிவாரண பணிகளுக்காக நிதி உதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி […]
தேமுதிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் விஜயகாந்த் வழங்கியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க […]
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 இன்று காலை 8 மணி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றார். முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதலாவதாக தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். அதில் முதலாவதாக […]
இந்தியாவிற்கு கொரோனா நிவாரண நிதியாக டுவிட்டர் நிறுவனம் 110 கோடியை நிவாரண நிதியாக வழங்கியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. மக்கள் தொடர்ந்து அதிக அளவில் […]
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் கொரோனா பாதித்தவர்களுக்கு […]
தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று கூறப்பட்ட 2000 ரூபாய் சர்க்கரை அட்டைதாரர்களுக்கு வழங்கப்படமாட்டாது என்று தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்ற கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில் தற்போது மே 10ம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு […]
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பிற்கு, விராட் கோலி – அனுஷ்கா தம்பதியினர் ரூபாய் 2 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது .தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், மக்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆக்சிசன் மற்றும் மருந்துகள் தட்டுப்பாட்டால் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தினசரி தொற்றின் எண்ணிக்கை, தற்போது 4 லட்சத்தை தாண்டியுள்ளது. எனவே இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும் உதவி செய்து வருகின்றனர். அந்தவகையில் […]
தமிழக முதலமைச்சராக இன்று காலை 9 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் ஸ்டாலின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று கூறி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார். இதையடுத்து முதலமைச்சராக பதிவேற்றதையடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் Chief Minister Of Tamil Nadu என மாற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதை திமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு […]
தமிழகத்தில் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 கொரோனா நிவாரண நிதியாக வழங்கப்படும் என்ற கோப்பில் முதல்வர் மு க ஸ்டாலின் கையெழுத்திட்டார். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினார். அதன்பின் இன்று தலைமை செயலகத்திற்கு மு.கஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் முகஸ்டாலின் முதன்முறையாக தலைமைச் செயலகம் வருகை தந்தார். அப்போது அவருக்கு […]
நாளை தமிழகத்தின் முதல்வராக முகஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் முதலில் மூன்று கோப்புகளில் கையெழுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2 ம் தேதி நடந்து முடிந்தது. இதில் பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றி திமுக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து நாளை திமுக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் காலை 9 மணிக்கு முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் முதலமைச்சரான பிறகு ஸ்டாலின் முதலில் மூன்று கோப்புகளில் கையெழுத்து […]
நெல்லையில் பணியில் இருக்கும்போதே உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையிலிருக்கும் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சுப்பிரமணியன். இந்நிலையில் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதனால் இவர் திடீரென்று கடந்த 14.3.20 தேதியன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே இவர் பணியை ஆற்றிக் கொண்டிருக்கும்போதே உயிரிழந்ததால் தமிழகத்தின் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து, அவரது குடும்பத்தினருக்கு 3,00,000 ரூபாய் நிதியாக வழங்கப்பட இருந்தது. இதனை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டான மணிவண்ணன், […]
அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2,000 வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சென்ற வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளடங்கிய பரிசு பொருள்கள் தொகுப்பு அதனுடன் கூடிய ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொங்கல் பண்டிகை […]
மதுரையில் கொரோனா நிவாரண நிதிக்காக எட்டாவது முறையாக பத்தாயிரம் ரூபாயை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள யாசகருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் பூல்பாண்டியன் என்பவர் வசித்துவருகிறார். பொது சேவையில் ஆர்வம் கொண்டுள்ள இவர், பல்வேறு இடங்களுக்கு சென்று யாசகம் பெற்று வந்த பணத்தை பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு கொடுத்து உதவிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பூல்பாண்டியன் கடந்த மார்ச் மாதம் யாசகம் பெறுவதற்காக மதுரைக்கு சென்றுள்ளார். அச்சமயத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அரசுப்பள்ளியில் […]
கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனமும் கேரள அரசும் தலா ரூபாய் 20 லட்சம் நிவாரண தொகை வழங்க உள்ளனர். கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளானதில், 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த 12 வயதிற்கு மேற்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 […]
மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த 5ம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களை நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரண நிதி வழங்கியது. மேலும் ரேஷனில் […]
முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.367.05 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு கிடைத்த தொகையின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்க பல்வேறு தீவிர நோய்தடுப்பு பணிகளையும் நிவாரண பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிவாரணப் பணிகளுக்கென முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தொழில் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், அரசு சார் நிறுவன ஊழியர்கள், அரசு […]
ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும் இந்த சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரிவான தகவல்களை வெளியிட்டு வருகிறார், அதில் ஏழைகளுக்கு உதவுவதற்காக ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண […]