தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு 2வது கட்டமாக கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனையடுத்து இலங்கைக்கு 2வது கட்டமாக தமிழ்நாட்டிலிருந்து கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும் பணியை அமைச்சர்கள் சக்கரபாணி, செஞ்சி மஸ்தான், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து VTC SUN கப்பல் மூலம் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு செல்கின்றன. […]
Tag: நிவாரண பொருட்கள்
சென்னை துறைமுகத்தில் இருந்து நாளை மாலை 5 மணிக்கு இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி மக்கள் போராட்டங்கள் நடத்தியதால் இலங்கை கலவர பூமியாக மாறியது. இந்நிலையில் இலங்கை மக்களுக்கு உதவ தமிழக அரசு சார்பில் 50 கோடி ரூபாய் மதிப்பில் உள்ள நான்கு கோடி கிலோ அரிசி, 28 கோடி ரூபாய் மதிப்புள்ள […]
உக்ரைனின் தலைநகரம் உள்ளிட்ட பல இடங்களில் உணவு, தண்ணீருக்கு வரும் நாட்களில் பஞ்சம் ஏற்படும் என்று எம்பிக்கள் எச்சரித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் மனிதாபிமான நிவாரண உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு இந்தியாவின் விமானிகளை பயன்படுத்த வேண்டும் என்று எம்பிக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து 20 எம்பிக்கள் அதிபர் ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில் “உக்ரைனின் தலைநகரம் உட்பட பல இடங்களில் வரும் நாட்களில் உணவு, […]
சீன அரசு உக்ரேன் நாட்டிற்கு ஒரு கோடி யுவான் மதிப்பிலான நிவாரண பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரேன் இடையிலான போர் நடக்கும் இவ்வேளையில் ரஷ்யாவின் நெருங்கிய நண்பனான சீன நடுநிலைப்பாட்டை வகித்துவருகிறது. மேலும் உக்ரைனுக்கு அடிப்படை தேவையான உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் 50 லட்சம் யுவான் அதாவது இந்திய நாட்டின் மதிப்பின்படி ரூபாய் 6 கோடி மதிப்பிலான பொருட்களை வழங்குவதாக சீனா கூறியது. இந்நிலையில் சீன நாட்டின் செஞ்சிலுவை சங்கம் உக்ரைனுக்கு […]
எரிமலை வெடிப்பால் நில அதிர்வு மற்றும் சுனாமி போன்ற பேரழிவை எதிர்கொண்ட டோங்கா நாட்டிற்கு ஆஸ்திரேலிய அரசு நிவாரண பொருட்கள் அனுப்பியிருக்கிறது. டோங்கா என்ற பசிபிக் தீவு நாட்டில் கடலுக்கு அடியில் இருந்த எரிமலை வெடித்து சிதறியதில் சுனாமி உருவாகி பெரும் அழிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பாதிப்படைந்தனர். மேலும், பல்வேறு பகுதிகள் கடும் சேதமடைந்தது. இதனால் ஏற்பட்ட சாம்பல் விமான நிலைய ஓடுபாதை முழுக்க படர்ந்து காணப்பட்டது. அது தற்போதுதான் நீக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]
ரஷ்யா நேற்று ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு நிவாரணப் பொருட்களை, ராணுவ விமானங்களில் அனுப்பியதோடு, அந்நாட்டிலிருந்த தங்கள் மக்களையும் அழைத்துச் சென்றிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின் பல நாடுகள் தங்கள் மக்கள் மற்றும் தூதரக அலுவலர்களை விமானங்கள் மூலம் அங்கிருந்து மீட்டது. எனினும், காபூல் நகரில் இருக்கும் ரஷ்ய தூதர்களை மட்டும் அந்நாடு வெளியேற்றாமல் இருந்தது. ரஷ்ய அரசு, கடந்த 2003 ஆம் வருடத்தில் தலிபான்களை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. எனினும் அவர்களுடன் தொடர்பில் தான் இருக்கிறது. கடந்த […]
சைக்கிள் வாங்க சேமித்த பணத்தில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறுமி நிவாரண பொருட்களையளித்தார். சென்னையில் உள்ள புளியந்தோப்பு குட்டி தம்புரான் தெருவை சேர்ந்தவர்கள் காந்தி நாகராஜன்-சிவரஞ்சனி தம்பதியினர். இத்தம்பதியினரின் மகள் தான் ஜனனி (வயது 7). இவர் அரசு பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். சென்னையில் பலத்த மழை காரணமாக ஜனனியின் வீடு உட்பட அருகில் இருக்கும் வீடுகளுக்குள் மழை நீர் தேங்கியது. இதனால், அந்த பகுதியில் இருக்கும் மக்கள் உணவுக்காக அவதிபட்டனர். இந்நிலையில், ஜனனி வீட்டுக்கு […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்து சென்றது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கியது.அதிலும் குறிப்பாக சென்னையில் கடந்த ஒரு வாரமாக இடைவிடாது கனமழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதனால் மக்கள் வீட்டை விட்டு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று விடிய விடிய பெய்த கனமழையால் சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. மேலும் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதையடுத்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதால் மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில், […]
மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேமுதிகவினர் உதவி செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தொடர் மழையால் பல பகுதிகளில் அணைகள், ஏரிகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், கரையோரம் வசித்து வரும் மக்களை அப்புறப்படுத்தி, அவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். மேலும் அவர்களுக்கு தேவையான உணவு மருத்துவம் போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மழைக்காலங்களில் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. சென்னையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதல்வர் முக. ஸ்டாலின் 2-வது நாளாக இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதில் முதற்கட்டமாக சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்யாணபுரத்தில் மழையால் பாதிப்படைந்த பகுதிகளை முதல்வர் முக. ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார். மேலும் கனமழையால் பாதிக்கப்பட்ட […]
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் தமிழரசி எம்.எல்.ஏ. ஏழை, எளிய குடும்பங்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பல்வேறு பகுதிகளில் தமிழரசி எம்.எல்.ஏ. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு தனது சொந்த செலவில் நிவாரண பொருட்களை வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து வின்சென்ட் நகர், காந்திஜி நகர் பகுதியில் நேற்று 125 குடும்பங்களுக்கு காய்கறிகள், அரிசி ஆகிய நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார். […]
வெளிநாட்டிலிருந்து தமிழகத்திற்கு நன்கொடையாக பெறப்படும் கொரோனா நிவாரண பொருட்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக கடந்த மாதம் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனாலும் கொரோனா பாதிப்பு […]
அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் 5 கிலோ அரிசி எப்படி போதும் என பொதுமக்கள் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2005 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசங்கள் அணிந்து, வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் […]
சேலம் எடப்பாடியில் கொரோனா நிவாரண பொருட்களை முதல்வர் பழனிசாமி மக்களுக்கு வழங்கினார். சேலம் மாவட்டத்திற்கு நேற்று மாலை எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்திருந்தார். இன்று காலை சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட அவர், நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமராமத்து பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால் […]