நீட் தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மோசடி செய்து மாட்டிக்கொண்ட வழக்கில் 3 மாணவிகள் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 7ஆம் தேதி மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. அதில் பரமக்குடியை சேர்ந்த மாணவி தீஷா மற்றும் அவரது தந்தை பாலச்சந்திரனும் கலந்து கொண்டனர். அப்போது தீசா தனது மதிப்பெண் சான்றிதழை அளித்தார்.அதில் அவள் 610 மதிப்பெண் பெற்று இருந்தது தெரியவந்தது. ஆனால் அந்தச் சான்றிதழ் போலியானது என்று தெரியவந்தது. இதையடுத்து […]
Tag: நீட் தேர்வு
மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கு தடைவிதிக்க கோரிய வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது கடந்த மூன்று முறை நான் நீட் தேர்வில் கலந்துகொண்டு 565 மதிப்பெண் எடுத்து இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த நிலையில், 7.5% இட ஒதுக்கீடு அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு வழங்கும் அரசாணை மூலம் தனது வாய்ப்பு பறிக்கப்பட்டு இருப்பதாகவும், 135 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு கூட இடம் அளிக்கப்பட்டு இருப்பதால் அரசு […]
முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு முறையில் மத்திய அரசு விலக்கு அறிவித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இருந்தாலும் அரசு அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது. அதனால் மாணவர்களின் உயிர்கள் பறிபோனது. இந்த நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட கல்லூரிகளுக்கும் சிலவற்றுக்கு மட்டும் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட […]
11 மருத்துவகல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு கிடையாது என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கு நுழைவுத் தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட சில கல்லூரிகளுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு அறிவித்திருந்தது. இக்கல்லூரிகளில் சேர நீட் தேர்வுக்கு பதிலாக இனி-செட் என்னும் தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது. இந்நிலையில் எய்ம்ஸ், ஜிப்மர் பிஜி […]
குறிப்பிட்ட சில கல்லூரிகளில் மட்டும் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவ படிப்பு படிப்பதற்கு நீட் தேர்வை நுழைவுத்தேர்வாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து வருடந்தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வினை எழுதி வருகிறார்கள். தற்போது கூட நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முறையில் குறிப்பிட்ட கல்லூரிகள் சிலவற்றுக்கு மட்டும் மத்திய அரசு விலக்கு […]
நீட் தேர்வு மாணவர் சேர்க்கையில் ஜிப்மர் மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்று கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். புதுவையில் ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பில் புதுவை மாநிலத்தை இருப்பிடமாக கொண்டவர்களுக்கு 64 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த வருடம் நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கும் நிலையில், தேர்வு பட்டியலில் புதுவை மாநில மாணவர்களின் இடத்தில் வேறு மாநிலத்தை சேர்ந்த 31 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதனால் புதுவை […]
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் நீட் தேர்வு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்குகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பாக இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறு கடந்த வருடம் இ-பாக்ஸ் நிறுவனம் மூலமாக மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்த வருடம் அதே நிறுவனம் நீட் தேர்வுக்கான பயிற்சி […]
நீட் தேர்வு எழுதும் மாணவிகள் தாலியை கழற்ற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்த மனுவுக்கு தேசிய தேர்வு மையம் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வெழுதும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது மற்றும் கைக்கடிகாரம் அணியக்கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக மாணவிகள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக சென்னை வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் ஐகோர்ட்டில் […]
தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுக நிலைப்பாடு. நீட் தேர்வு விவகாரத்தில் நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்ததுபோல் மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவதாக அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் குடும்ப அரசியலை அறிமுகப்படுத்தியதே திமுக தான் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்த மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் தமிழக அரசு பள்ளி மாணவர்கள் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, மருத்துவம் கனவை தொலைக்கின்றார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அரசியல் கட்சிகள் இதனை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். ஆனாலும் தமிழக அரசு… அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெறும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.கோச்சிங் சென்டர் தொடங்கி பல ஏற்பாடுகளை அரசு பள்ளி மாணவர்களுக்காக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த தற்போது தமிழக […]
நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கை குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நீட்தேர்வு சில வருடங்களுக்கு முன்பு தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு முன்பெல்லாம் பள்ளியில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றது. இந்நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ படிப்புகளில் தமிழ்வழி மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் […]
நீட் தேர்வை எதிர்க்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் முக.ஸ்டாலின், 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி சட்டமன்றத்திலே தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் நீட்டிற்கு விலக்கு தந்திட வேண்டும் என்று 2 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட […]
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி ஆரம்பிக்க இருப்பதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மருத்துவ படிப்பிற்கு தகுதித் தேர்வாக நீட் தேர்வு கருதப்படுகிறது. இத்தேர்வை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக 2017ம் ஆண்டில் இருந்து பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வருடம் வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி இலவச நீட் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா காரணமாக […]
ராஜஸ்தானில் நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர் மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் பெற்ற பழங்குடியினர் பிரிவில் மாநிலத்திலேயே முதல் மாணவராக தேர்ச்சி பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதப்பூர் மாவட்டம் கங்காபூர் நகரத்தை சேர்ந்தவர் மிர்தும். இவர் நீட் தேர்வில் 320 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மிருதுல் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தார். மறுகூட்டலில் மிருதுல் 720க்கு 650 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் எஸ்டி பிரிவுகள் பிரிவின் மாநிலத்திலேயே […]
நீட் தேர்வு முடிவுகள் வெளியானதில் குளறுபிடி இருப்பதாக தகவல் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு ( நீட் ) நடத்தப் பட்ட நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் மாலை வெளியானது. இதனை மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகார பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். தேர்வு முடிவுகள் வெளியாகும் அந்த இணையதளத்தில் நேற்றில் இருந்தே […]
நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியானநிலையில், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். இளங்கலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் கடந்த மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 14.37 லட்சம் பேரும், தமிழ்நாட்டில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோரும் எழுதிய நீட் தேர்வின் முடிவுகளை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இன்று வெளியிட்டார். இத்தேர்வில் மொத்தமுள்ள 720 மதிப்பெண்ணுக்கு 710 […]
மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு பரிந்துரையை அமல்படுத்திய பிறகே நீட் தேர்வு முடிவை அறிவிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டுள்ளது. அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நீட் தேர்வில் உள்ஒதுக்கீடு 7.5 சதவீத இட ஒதுக்கீடு சம்மந்தமாக அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் கமிட்டியின் பரிந்துரையை அமல்படுத்திய பிறகு நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் […]
தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காத மத்திய அரசை கண்டித்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய அவர், அரியலூர் அனிதா முதல் திருச்செங்கோடு மோதிலால் வரை பல மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்துக்கொண்டதை சுட்டிக்காட்டியுள்ளார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விதிவிலக்கு அளிக்கக்கோரி இரு […]
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை தொடர்கதை ஆக்கி உள்ளார்கள். நீட் தேர்வுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில் மாணவர் மரணங்களை அரசியலாக்க கூடாது என தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், இந்த நிலையில் எல்லாத்தையுமே முதலில் அரசியல் ஆக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மாணவர்கள் உயிரோடு நீங்கள் அரசியல் செய்யாதீர்கள். உங்களின் அரசியலுக்காக மாணவர்களை நீங்கள் துஷ்பிரயோகம் பண்ணுகிறீர்கள். மாணவர்கள் மரணத்தை மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் போட்டு அடுத்த மாணவர்களும் தற்கொலைக்கு ஈடுபடுகிறீர்கள். தயவுசெய்து […]
நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. […]
நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 25 மூத்த வழக்கறிஞ்ர்கள் கடிதம் எழுதியுள்ளனர். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று […]
நடிகர் சூர்யா அரசியலுக்கு வரலாம் என்று நடிகர் சௌந்தரராஜன் தெரிவித்து இருக்கின்றார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று நடந்த தமிழக சட்டமன்ற […]
நீட் தேர்வு அச்சம் காரணமாக ஒடிசாவிலும் ஒரு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு பற்றிய பயமே மாணவ, மாணவிகளை தற்கொலைக்கு தூண்டிவிடுவதாக உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவ மாணவிகள் நீட் தேர்வுக்கு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஒடிஸாவிலும் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாது என்ற பயம் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மயூர்பஞ்ச் […]
12ஆம் வகுப்பு பொது தேர்வு போல நாம் நீட் தேர்வை பார்க்க வேண்டும் என மாநில துணை தலைவரான அண்ணாமலை அறிவுரை கூறியுள்ளார். நீட் தேர்வு குறித்து பல்வேறு குழப்பங்கள் எழுந்து வரும் நிலையில் தற்போது சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிற்கு எதிராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதாவது, நீட் தேர்வை இந்தியா முழுவதும் தமிழ் மாணவர்கள் மருத்துவ படிப்பை பெறுவதற்கு கிடைக்ககூடிய வாய்ப்பாக பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் […]
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் சேலம் லைன் மேடு பகுதியில் போராட்டம் நடைபெற்றது. முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினரை காவல்துறையினர் கைதுசெய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் பஸ் நிலையம் காந்தி சிலை அருகே […]
நடிகர் ஜீ.வி. பிரகாஷ் நீட் தேர்வு மாணவர்களுக்காக உருகிப் பேசிய வீடியோ ஒன்றை பதிவிட்டார்..!! நீட் தேர்வுக்கு நிறைய மாணவர்கள் பிரிப்பேர் செய்து இருப்பீர்கள். அதே தைரியத்தோடு எழுதியும் இருப்பீர்கள். உங்க அனைவருக்கும் ஒன்னு சொல்லனும்னு தான் இந்த வீடியோ. வெற்றியோ, தோல்வியோ அதை சரிசமமா பார்க்க கத்துக்கோங்க. தோல்வி இல்லாத வாழ்க்கை இன்ட்ரஸ்ட் ஆக இருக்காது. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தோல்வி மிகவும் அவசியம்.இந்த ஒரு பரிட்சையில் தோத்தா வாழ்க்கையில் தோற்றதாக அர்த்தம் கிடையாது. வாழ்க்கை மிகவும் […]
திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டாயம் நீட்தேர்வு என்பதை போராடியாவது நீக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது தற்கொலையை தூண்டும் தேர்வாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பல்வேறு கட்சி அமைப்பினர் மற்றும் தலைவர்கள் மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் நேற்று இந்த நீட் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக 3 மாணவர்கள் தற்கொலை செய்து […]
நீட் தேர்வை கண்டு இனியும் நாம் அமைதியாக இருக்கக் கூடாது என தமிழக மக்களுக்கு சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது தற்கொலையை தூண்டும் தேர்வாக மாற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கு இந்த தேர்வை ரத்து செய்ய பலகட்சி அமைப்பினர் மற்றும் நடிகர்கள் அறிவுறுத்தியும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் நேற்று நீட்தேர்வு என்பதும் நடைபெற்று முடிந்தது. இதற்கு பல்வேறு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில் பிரபல நடிகர் சூர்யா தன்னுடைய […]
தந்தை ஸ்தானத்தில் கேட்டுக் கொள்கின்றேன் தற்கொலை தீர்வல்ல என பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாணவர்கள் தற்கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் போராட்டங்களை நடத்தினர். அரசியல் கட்சியினர் மாணவர் தற்கொலைக்கு இரங்கல் தெரிவித்தது […]
இடையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு என்பது கட்டாயம் தடை செய்யப்படும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நீட் தேர்வு என்பது மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக கருதப்பட்டு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நீட் தேர்வால் பல்வேறு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். அதில் முக்கியமாக தமிழ்நாட்டில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளது வருத்தமளிப்பதாக உள்ளது. நீட் தேர்வை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு […]
நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் 1,17,990 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டிய நீட்தேர்வு கொரோனா வைரஸ் பொதுமுடக்கம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வில் மேலும் தள்ளிவைக்க வேண்டுமென பல்வேறு மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. திட்டமிட்டபடி இன்று தேர்வு நடத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதனை தொடர்ந்து […]
நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. பல்வேறு எதிர்ப்புகளையும் போராட்டங்களையும் தொடர்ந்து நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில், மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு முகமை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அந்த நெறிமுறைகளில், மதியம் 2 மணிக்கு தேர்வு தொடங்குகிற நிலையில், 11 மணிக்கே தேர்வர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்கள், ஹால் டிக்கெட் மற்றும் […]
நீட் தேர்வு காரணமாக மதுரை மாவட்ட மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு மு க ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். நாட்டில் நீட் தேர்வு குறித்து அச்சமும் அதை வைத்து தொடரும் தற்கொலைகளும் தலைவிரித்து ஆடுகின்றன. மாணவி அனிதாவில் தொடங்கி தற்போது துர்கா வரை நீட் தேர்வு குறித்த அச்சம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது. இந்த நீட் தேர்வை ரத்து செய்ய பல தலைவர்களும் வழக்கு தொடர்ந்து இருந்த நிலையில் மத்திய அரசு நீட் தேர்வு என்பது […]
நீட் தேர்விற்கு தேசிய தேர்வு முகமை வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கு தேர்வு முகமை சில நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. இவற்றை கட்டாயம் பின் பற்றினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழையும் முன்னர், வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனையில் அதிக வெப்பநிலை உள்ள மாணவர்களுக்கு தனி அறையில் தேர்வுகள் நடைபெறும். பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்க இருப்பதால், மாணவர்கள் […]
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள எலந்தங்குடி கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவன் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மாணவரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எலந்தங்குடி கிராமத்தில் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் […]
நீட் தேர்வுக்கு எதிராக 6 மாநில அமைச்சர்கள் தொடர்ந்த சீராய்வு மனு மீது இன்று உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்துகின்றது. நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நீட் தேர்வு, ஜேஇ இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று 11 மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. இந்த வழக்கு தொடர்பான மனுக்களை ஆகஸ்ட் 17ஆம் தேதி தள்ளுபடி செய்தது […]
நீட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வராததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குடி அடுத்த பி.களபம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஷ்மா. இவர் பட்டுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் ஹரிஷ்மா நீட் தேர்வுக்கு அதிக பயிற்சிகளை எடுத்து வந்தார். இந்நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்த ஹரிஷ்மாவிற்கு ஹால்டிக்கெட் வரவில்லை. இதுகுறித்து தன்னுடன் விண்ணப்பித்திருந்த சக […]
நாட்டையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் நீட் தேர்வை குறிப்பிட்ட காலகட்டத்தில் நடத்த முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அதுமட்டுமன்றி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு தயாராக முடியாத […]
தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் ஏன் மௌனம் கொள்கிறது? என்று திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் மௌனம் காப்பது ஏன் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ” நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மௌனம் கொள்வது ஏன்? சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை உடனடியாகக் கூட்டி நீட் தேர்வை நடத்த முடியாது என அறிவிக்க வேண்டும். மருத்துவ […]
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மம்தா பேனர்ஜி மத்திய அரசிற்கு கோரிக்கை வைத்துள்ளார். மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதியும், ஜெ.இ.இ மெயின் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் 6-ம் தேதி வரையிலும், ஜெ.இ.இ அட்வான்ஸ் தேர்வு செப்டம்பர் 27-ம் தேதியும் நடைபெறும் என அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தகைய மருத்துவ தேர்வுகளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் திமுக […]
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் உள்ள கொரோனா பேரழிவு, வெள்ளப் பாதிப்பு போன்ற நெருக்கடியான சூழ்நிலைகளில், பொதுப் போக்குவரத்திற்கு தடைகள் விதிக்கப்பட்டு மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களை அணுக முடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களும், வசதி வாய்ப்புகள் குறைந்த மாணவர்களும் தேர்வு எழுதும் மையங்களுக்கு வருவது என்பது இயலாத ஒன்று என மு.க.ஸ்டாலின் மத்திய […]
எந்த காரணத்திற்காகவும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பதிலளித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் நிறைய இந்தியர்கள் வசித்து வரும் நிலையில், அங்கிருந்து சுமார் 4,000 மாணவர்கள் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். அவர்கள் இந்தியா வந்து நீட் தேர்வு எழுத முடியாத நிலை இருப்பதால், மத்திய கிழக்கு நாடுகளில் நீட் தேர்வு மையம் அமைக்க வேண்டும் , இல்லையென்றால் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வழக்கு போடப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றத்தில் […]
இந்த வருடம் நீட் தேர்வு குறித்து சரியான முடிவு எடுக்கவில்லை என்றால் அதிமுக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்வது மிகவும் கடினம் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 76வது பிறந்தநாளை ஒட்டி திருப்பூர் ராயபுரம் பகுதியில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ”நீட் தேர்வு பயம் காரணமாக கோவையில் நேற்று மாணவி […]
நீட் தேர்வு காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு இரு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திட்டமிடப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்பு நேற்று 19 வயது உள்ள மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதுமுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவ மற்றும் பல் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவ படிப்புகள் மற்றும் பல் படிப்புகளைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அகில […]
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு வருகின்ற செப்டம்பர் மாதம் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நீட் மற்றும் ஜெ.இ.இ தேர்வுகளை ரத்து செய்து, தேர்வுகளை ஒத்தி வைக்க […]
வருகின்ற செப்டம்பர் மாதத்தில் நீட் தேர்வு மற்றும் ஜெஇஇ தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜெஇஇ முதன்மைத் தேர்வுகள் செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழல் காரணமாக, செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நீட் மற்றும் ஜெ.இ.இ. தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, தேர்வுகளை […]
நீட் தேர்வை ஆன்லைன் மூலம் நடத்த முடியாது என்று தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் தேதி நடைபெற இருக்கும் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த ஏற்பாடு செய்ய முடியுமா? அல்லது வளைகுடா நாடுகளில் தேர்வு மையங்களை அமைக்க முடியுமா?என கேட்டு மத்திய […]
கொரோனா ஊரடங்கு காரணமாக நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான புதிய தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் தேதியும், JEE main தேர்வு செப்டம்பர் 1 முதல் 6ஆம் தேதி வரையும், JEE Advanced தேர்வு செப்டம்பர் 27ஆம் தேதியும் நடைபெறும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், நீட், JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் […]
நீட் மற்றும் ஜேஇஇ மெயின் தேர்வு ரத்து செய்வது குறித்து நாளைக்குள் பரிந்துரை வழங்க வேண்டும். தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு பரிந்துரைகளை வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உத்தரவிட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நிபுணர் குழுக்களிடம் பரிந்துரைகள் கேட்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். நீட் தேர்வுக்கு இணையதளம் மூலம் கட்டணமில்லாமல் பயிற்சி வழங்க E-Box நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் வேலைவாய்ப்புத்துறை என இரண்டு துறையிலும் நவீன இனையதளங்களை தொடங்கி வைத்துள்ளார். அதன்படி, தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் www.TNPRIVATEJOBS.TN.GOV.IN என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே நீட் […]