சேலம் மாவட்டத்தில் உள்ள தம்பநாயக்கன்பட்டி பகுதியில் சௌந்தர்ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 லட்ச ரூபாய்க்கு ஒரு காரை வாங்கியுள்ளார். இந்நிலையில் ஒரு ஆண்டு கழித்து சம்பந்தப்பட்ட கம்பெனியில் சௌந்தர்ராஜன் காரை சர்வீஸ் செய்ய விட்டிருந்த போது ஊழியர் காரை சோதனை ஓட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளார். அப்போது விபத்தில் சிக்கி கார் சேதமானதால் சௌந்தர்ராஜன் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் சேவை குறைபாட்டால் சேதமடைந்த காரை […]
Tag: நீதிபதி உத்தரவு
மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வன்னியூர் தெற்றிக்குழி பகுதியில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிதா என்ற மனைவி உள்ளார். மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கிறிஸ்டோபரை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு தனது மனைவி குடிப்பதற்கு பணம் இல்லை என கூறியதால் கிறிஸ்டோபர் வினிதா மீது மண்ணெண்ணையை […]
வங்கி பணத்தை கையாடல் செய்த அரசு ஊழியர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள செட்டியப்பநோரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அமைந்துள்ளது. கடந்த 2007- ஆம் ஆண்டு செயலாளராக ரகுநாதனும், கூடுதல் செயலாளராக ராமலிங்கம் என்பவரும் வேலை பார்த்து வந்தனர். இருவரும் சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் நகை கடன் வழங்கியதாக 2 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் கையாடல் செய்துள்ளனர். இதுகுறித்து கூட்டுறவு துணை பதிவாளர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜா(34) என்ற மகன் உள்ளார். லாரி ஓட்டுனரான ராஜாவுக்கு திருமணமாகி மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு உறவினர் வீட்டில் நடைபெற்ற கிடா விருந்தில் கலந்து கொள்வதற்காக ராஜா தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றுள்ளார். அப்போது உறவினரின் மகளான 11- […]
வீடு கட்டி கொடுக்க தாமதமானதால் பாதிக்கப்பட்டவருக்கு 1 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்குமாறு ஒப்பந்ததாரருக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அம்மனம்பாக்கம் கொள்ளைமேடு பகுதியில் ரவி கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு பழங்குடியின வகுப்பை சேர்ந்த ரவி கிருஷ்ணன் பாரத பிரதமர் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு கேட்டு விண்ணப்பித்துள்ளார். இதனை அடுத்து ரவி கிருஷ்ணனுக்கு 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் வீடு கட்டுவதற்காக நிதி வழங்கப்பட்டது. இதனை […]
சிறுமியை தாக்கிய பெண்ணுக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள முல்லைவாடி ரங்கன் நகர் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அருணா(14) என்ற மகள் உள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமி அப்பகுதியில் இருக்கும் மரத்தில் கயிற்றால் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்யா என்பவர் உனது மகளை அடக்கி வைக்க […]
கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்திகளை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு கூட்டு பாலியல் பலாத்காரம் நடைபெற்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பேசும் பொருளாக மாறியது. இது தொடர்பான செய்திகள் பத்திரிக்கையில் வெளியான நிலையில், சில பத்திரிகை நிறுவனங்களில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் புகைப்படம், அடையாளங்கள் மற்றும் சாட்சியங்கள் போன்றவற்றை வெளியிட்டதாக பல்வேறு குற்றங்கள் […]
பாம்புகளை கடத்தி சென்ற நபருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு கலிபோர்னியாவில் ஜோஸ் மானுவல் பெரெஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவிற்கு பாம்புகள், முதலை பள்ளிகள் போன்ற 60-க்கும் மேற்பட்ட உயிரினங்களை கடத்த முயற்சி செய்துள்ளார். இவற்றின் மொத்த மதிப்பு 75 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் ஆகும். இவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் 1700 விலங்குகளை சட்ட விரோதமாக அமெரிக்காவிற்கு கடத்தியது தெரியவந்தது. […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்த வழக்கு குறித்து அந்த பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த 5 நபர்களின் ஜாமின் மனு முன்பே தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, […]
மது பாட்டில்களை திரும்ப பெறுவதில் உள்ள சிக்கல் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் மலைப்பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் மதுவை கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டு மது பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவு 10 மாவட்டங்களுக்கு மட்டும் பிறப்பிக்கப்பட்ட நிலையில், மாநிலம் முழுவதும் செயல்படுத்துவது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுபான […]
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்றக் கழகத்தின் தலைவரான வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில் விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு, பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுவதாக குறிப்பிட்டு இருந்தார். அதன் பிறகு பிற வழிபாட்டு தளங்களுக்கு அருகில் அனுமதி இன்றி விநாயகர் சிலைகள் வைக்கப்படுகிறது. விநாயகர் சிலைகள் அமைக்கப்படுவது மற்றும் நீர் நிலைகளில் கரைப்பது தொடர்பாக எந்த ஒரு […]
அதிமுக கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த 11-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்களை கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கியதோடு. அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் நீக்கி உத்தரவிட்டார். இதனையடுத்து ஓபிஎஸ் வகித்த பொருளாளர் பதவியை திண்டுக்கல் சீனிவாசனுக்கு வழங்கியதோடு, சட்டமன்ற துணை தலைவர் பதவியை ஆர்பி உதயகுமாருக்கு வழங்கினார் இபிஎஸ். இதன் காரணமாக திண்டுக்கலை சேர்ந்த சூரியமூர்த்தி […]
சிறுமியை கடத்தி சென்ற வாலிபருக்கு 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொட்டிவீராணம் பகுதியில் விமல்ராஜ்(23) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு விமல்ராஜ் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப்பதிவு செய்த […]
நடிகை மற்றும் மாடல் அழகியுமான மீரா மிதுன் தாழ்த்தப்பட்டோர் பற்றி சமூகவலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சென்ற வருடம் ஆகஸ்டு மாதம் மீராமிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் அவர்கள் மீது சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர் குற்றப் பத்திரிகை தாக்கல் […]
காவல்துறை அதிகாரி பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். பிரிட்டன் நாட்டில் உள்ள டிவைன் காவல்நிலையத்தில் ரீட்ஸ் என்பவர் பணியாற்றி வந்தார். இந்த காவல்நிலையத்தில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக ஒரு இளைஞர் காவலாராக பணியில் சேர்ந்துள்ளார். அந்த வாலிபரை ரீட்ஸ் தன்னை விட வயதில் சிறியவர் என்பதாலும், தன்னை விட அனுபவம் குறைந்தவர் என்பதாலும் அடிக்கடி கேலி செய்துள்ளார். அப்போது ரீட்ஸ் வாலிபரின் பேண்ட்டுக்கு உள்ளே கையை வைத்து அவரின் அந்தரங்க உறுப்பு சிறியதாக […]
லஞ்சம் வாங்கிய நபருக்கு 3 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழநத்தம் கிராமத்திலிருக்கும் வீட்டுவசதி பிரிவு காலனியில் 5 1/2 சென்ட் நிலத்தை வாங்கியுள்ளார். அதில் வீடு கட்டுவதற்கு இடத்தை அளந்து தருமாறு செல்வம் வீட்டுவசதி பிரிவு அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது நிலத்தை அளப்பதற்கு வீட்டுவசதி வாரிய சர்வேயர் சின்னையா குமார் 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு நீதிமன்றம் 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி வசித்துவருகிறார். கடந்த ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் காளிமுத்து என்பவர் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து முதியவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் […]
இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்த வழக்கை தள்ளி வைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். தமிழ் சினிமா உலகில் தனக்கென நீங்கா இடத்தை பிடித்துள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. 1978-1980 ஆம் வருடங்களில் வெளியான 20 தமிழ் படங்கள், 5 தெலுங்கு,3 கன்னடம், 2 மலையாளம் ஆக மொத்தம் 30 படங்களில் இசை பணிகளை பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்புரிமை பெற்றதால் இந்த திரைப்படங்களின் இசையை இளையராஜா பயன்படுத்துவதற்கு தடை கோரி இந்தியன் ரெக்கார்டு உற்பத்தி நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் […]
தண்ணீர் பாட்டில் நிறுவனத்திற்கு நீதிமன்றம் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள டவுன் பகுதியில் சிவமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அப்பகுதியில் இருக்கும் கடையில் பிளாஸ்டிக் பாட்டில் தண்ணீரை வாங்கியுள்ளார். அந்த தண்ணீரை குடித்த பிறகு சிவமணிக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சிவமணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தன்னிடம் இருந்த பிளாஸ்டிக் பாட்டிலில் மீதம் இருந்த தண்ணீரை பார்த்த போது அதில் கண்ணுக்கு புலப்படும் […]
கடந்த மாதம் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 11 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 7 ஆம் தேதி 11 மீனவர்கள் 3 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 1 மாதமாக சிறையில் இருந்து அவதிப்பட்ட 11 மீனவர்களையும் அதிகாரிகள் ஊர்காவல்த்துரை நீதிமன்றத்தில் ஆஜர் […]
விபத்தில் மூதாட்டிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள வள்ளியப்பன்பட்டியில் ராமாயி என்பவர் வசித்து வருகிறார். மூட்டை வியாபாரம் செய்து வரும் இவர் கடந்த 2016ம் ஆண்டு பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் வைத்து பேருந்தில் இருந்து இறங்கும்போது கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதுகுறித்து பரமத்திவேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் வழக்கை […]
4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஹாஜா முகமது என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹாஜா முகமது அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி கொடுப்பதாக வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]
ஓ.பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலும், ப.ரவீந்திரநாத் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியிலும் போட்டியிட்டனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தபோது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், ஆண்டு வருமானம், விவசாய நிலங்கள், கல்வித்தகுதி, கடன் உள்ளிட்டவை குறித்த விவரங்களை தவறாக தெரிவித்துள்ளனர் என்று திமுக நிர்வாகி மிலானி என்பவர் மனு ஒன்றை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் […]
நடிகை சமந்தாவும், கணவர் நாக சைதன்யாவும் விவாகரத்து பெற போவதாக அண்மையில் அறிவித்தனர். இது குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் உலா வந்தன. குறிப்பாக சமந்தாவை குறிவைத்து பல குற்றச்சாட்டுகள் பரவத் தொடங்கின. இந்த நிலையில் தன்னைப் பற்றி அவதூறு தகவல்களை பரப்பியதாக கூறி சில யூடியூப் சேனல்களை குறிவைத்து நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சமந்தா குறித்த அவதூறு தகவல்களை நீக்க வேண்டும் […]