கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிளகுமூடு காடுவெட்டி பகுதியில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015- ஆம் ஆண்டு செல்லப்பன் திங்கள் சந்தை பகுதியில் இருக்கும் டிவி விற்பனை செய்யும் கடையில் 24,500 கொடுத்து எல்.இ.டி டிவியை வாங்கியுள்ளார். அப்போது கடை உரிமையாளர் 3 ஆண்டுகள் வாரண்டி இருப்பதாக கைப்பட எழுதி கொடுத்துள்ளார். இதனையடுத்து டிவியை பயன்படுத்திய 2 ஆண்டுகளுக்குள் ஒலி மட்டுமே கேட்டு, ஒளி தெரியாமல் போனது. இதனால் செல்லப்பன் சம்பந்தப்பட்ட கடைக்கு டிவியை கொண்டு […]
Tag: நீதிமன்றம் உத்தரவு
சூரி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவிட்டுள்ளது. பிரபல நடிகரான சூரியிடம் நிலம் வாங்கி தருவதாக பணம் மோசடி செய்யப்பட்டது குறித்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி இந்த விசாரணை நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி ரமேஷ் கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கு தொடர்பாக சூரி ஏற்கனவே மூன்று முறை ஆஜராகி விளக்கமளித்த நிலையில் அண்மையில் […]
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை அடுத்து, கடந்த ஜூலை 17 ஆம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூராடியதுடன், தீ வைத்து எரித்தனர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும் அரசு அமைத்த குழு ஆய்வு செய்துள்ளது. எனவே மீண்டும் பள்ளி திறக்க அனுமதி அளிக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று பள்ளி நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் […]
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் ஒதுக்கீடு செய்ததில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கையும் அவருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கையும் ரத்து செய்யக்கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.என். பிரகாஷ் மற்றும் டீக்காரமன் அமர்வில் இன்று இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு மற்றும் சித்தார்த் தவே, தேர்தல் வேட்பு மனுவில் தெரிவித்த […]
தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற மதிப்பை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக மற்றும் புதுச்சேரி உற்பத்தியாளர் சங்கம் வழக்குகள், நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா அமரவில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாக்கு மட்டையில் செய்த பொருட்கள் மண் குடுவை போன்ற என்னென்ன பொருட்கள், எங்கெங்கு கிடைக்க வேண்டும் என்பது குறித்து பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், […]
குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தின் போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலில் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 21 வயது அவரது 3 வயது பெண் குழந்தை உள்ளிட்ட 14 பேர் அன்றைய காலத்தில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து கைதான 11 பேருக்கும் கடந்த 2008 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற உத்தரவிட்டது. சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரையும் […]
வட சென்னை பகுதியில் கடந்த 11 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து துறைமுகம் கிழக்கு பகுதி கிளை செயலாளர் ராஜசேகர் அளித்த புகாரில் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி மண்ணடி சேர்ந்த ஆறுமுகம், ரமேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், […]
ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சீன அமைச்சருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சீனா நாட்டில் ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் பு ஜெங்குவாக்கு-க்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பு ஜெங்குவா பெய்ஜிங் மாநகராட்சியின் பொது பாதுகாப்பு அதிகாரியாகவும், பொது பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். சில நாட்கள் முன்பு வரை சட்ட அமைச்சராக அவர் பணியாற்றி வந்தார். சீனாவின் முக்கிய புள்ளியாக வளம் வந்த இவர் […]
பிரபல தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது. பிரபலமான சினிமா தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இவர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் 2 படங்களை தயாரிப்பதற்காக கடன் வாங்கியுள்ளார். இவர் 97 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த படங்களை வங்கிக்கு தகவல் தெரிவிக்காமல் விற்பனை செய்துள்ளார். அதோடு 2 படங்களும் சரியாக ஓடவில்லை. இதனால் ரவிச்சந்திரன் வங்கிக்கு கடனை திரும்ப செலுத்த முடியவில்லை. இதன் காரணமாக வங்கி நிர்வாகம் ரவிச்சந்திரனின் சொத்தை ஏலத்தில் விடுவதற்கு […]
விருது பெற்ற மாணவருக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் சிவ சூர்யா என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கல்வி, தொழில்நுட்பம், விளையாட்டு போன்ற துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் உள்ள இட ஒதுக்கீட்டின்படி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி மனு தாக்கல் செய்துள்ள […]
கடலூர் மாவட்டம் வடலூர் காவல் நிலையத்தில் சென்ற 2016ம் வருடம் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரவணன் பணிபுரிந்து வந்தார். அப்போது நடைபெற்ற ஒரு விபத்து வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த அவருக்கு, அவ்வழக்கு குறித்த சாட்சியம் அளிக்க கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் வாயிலாக பலமுறை அழைப்பாணை (சம்மன்) அனுப்பப்பட்டது. அத்துடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வாயிலாகவும் அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டது. எனினும் சரவணன் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. […]
டுவிட்டர் நிர்வாகம் தொடர்பான வழக்கு வருகிற அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் என நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்தார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டர் நிர்வாகத்தை வாங்குவதற்கு எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டார். இந்நிலையில் எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்திடம் போலியாக உள்ள கணக்குகள் மற்றும் பயன்படுத்தப்படாத கணக்குகள் உள்ளிட்ட சில விவரங்களை […]
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிரான வழக்குகளில் நாளை பிற்பகல் 2.15 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு பிறப்பிக்கிறார். இபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு அன்று நடந்த மோதலை அடுத்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைமை அலுவலகத்தின் முன் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் […]
மலையாள சினிமா நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது நடிகை ஒருவர் கொச்சி காவல் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தார். அதாவது, நடிகர் விஜய்பாபு தன்னை வீட்டுக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி இருந்தார். அந்த புகாரின்படி காவல்துறையினர் நடிகர் விஜய்பாபு மீது வழக்குபதிவு செய்தனர். இதையறிந்த நடிகர் விஜய் பாபு, வெளிநாடு தப்பி சென்றார். ஆகவே அவரை பிடிப்பதற்காக கேரளா காவல்துறையினர் இன்டர்போல் போலீசாரின் உதவியை […]
திரையரங்குகளில் சட்டவிதிகளை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடபடுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: “அதிகாலை ஒரு மணி முதல் காலை 9 மணி வரை எந்த காட்சியையும் திரையிடக் கூடாது என்ற விதியை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகின்றன. அதிக கட்டணம் வசூலித்து பொதுமக்கள் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இப்படி செய்வதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக வழக்கு” தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள திரையரங்குகள் ஒழுங்குமுறை […]
9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தங்கசாமி என்ற நியூட்டன் என்பவர் வசித்து வருகிறார். கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2020ஆம் ஆண்டில் அதே பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் […]
விபத்தில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்தை ஜப்தி செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள கெங்குவார்பட்டியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற எல்லை பாதுகாப்பு படை அதிகாரியான இவர் கடந்த 2013ஆம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் கெங்குவார்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பெரியகுளத்தில் இருந் திண்டுக்கல்லுக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக முருகன் மீது மோதியுள்ளது. இதில் முருகனுக்கு கால் முறிந்துள்ளது. இதுகுறித்து முருகன் பெரியகுளம் […]
ராம்குமார் சிறை மரணம் தொடர்பான வழக்கை மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்துவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற மின் பொறியாளர் 2016 ஆம் ஆண்டு அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சுவாதி படுகொலை தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம் குமார் என்கிற இளைஞரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த ராம்குமார் அடுத்த சில வாரங்களில் மின்சார வயரை […]
திருச்சி நவல்பட்டு சிறப்பு உதவியாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனை 24 மணி நேரம் போலீஸ் காவலில் வைப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சிறப்பு ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் கைதான மணிகண்டனை 24 மணி நேரம் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு காவல் துறையினருக்கு திருமயம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஆடு திருடர்களை பிடிக்க சென்ற, சிறப்பு உதவியாளர் பூமிநாதனை கொலை செய்த வழக்கில் மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த […]
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்தில் இழப்பீடு வழங்காத அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள தென்கரை பகுதியில் காளிச்சரண் என்பவர் வசித்து வந்துள்ளார். தனியார் விடுதி மேலாளரான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அரசு பேருந்து ஒன்று இருசக்கர வாகனம் மோதி விபத்து அடைந்துள்ளது. இந்த விபத்தில் காளிசரணுக்கு கால் முறிவு ஏற்பட்டு […]
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் அணில் தேஷ்முக். இவர் மும்பையில் போலீஸ் கமிஷனர் பரம்வீர் சிங் உணவகங்களில் இருந்து மாதந்தோரும் 100 கோடி ரூபாய் வசூல் செய்து தரவேண்டும் என்று அணில் தேஷ்முக் தன்னை வற்புறுத்தியதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் அணில் தேஷ்முக் விசாரணைக்கு ஒத்துழைப்பதற்காக தன்னுடைய பதவியை ராஜினாமா […]
போக்குவரத்து கழகத்தினர் இழப்பீடு தொகையை வழங்காததால் அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தென்கரையில் முத்துராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு முத்துராஜன் தேனியில் இருந்து இருசக்கர வாகனத்தில் பெரியகுளம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது சரத்துபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த அரசு பேருந்து முத்துராஜின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முத்துராஜன் படுகாயம் அடைந்த்துள்ளர். இதனையடுத்து இந்த […]
3 வருடங்களாக நடந்த கொலை வழக்கில் தந்தை மகனுக்கு தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் புல்லங்குடி பகுதியில் சண்முகம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செங்கல்சூளை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால் இரண்டாவதாக செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த கனகா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளனர். இதனையடுத்து கனகா செங்கல் சூளைக்கு வருபவர்களிடம் நெருங்கி பழகுவதாக சந்தேகமடைந்த சண்முகம் மற்றும் அவரது மகன் பிரவீன் குமார் ஆகிய […]
கோவில் சொத்துக்களுக்கு 3 ஆண்டுக்கு ஒருமுறை குத்தகை தொகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் அமைந்துள்ள கொங்கு வேளாளர் மேல்நிலைப்பள்ளி, அருள்மிகு செல்லாண்டியம்மன் கோவிலுக்கு சொந்தமான 4.02 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்து செயல்படுகிறது. இந்நிலையில் இந்த நிலத்திற்கு குத்தகை தொகை பற்றி கோவில் செயல் அலுவலர் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி அன்று அந்தப் பள்ளிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த […]
தகுந்த காரணமின்றி 5 மரங்களை வெட்டியதற்காக 100 மரகன்றுகளை நட வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் ஸ்ரீரெங்கபுரம் ஊராட்சியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே 2 வாகை மரங்கள், அரசமரம், நாவல் மரம், வேப்ப மரம் என ஐந்து மரங்கள் இருந்துள்ளது. இதனை தடுந்த காரணமின்றி மின்வாரிய ஊழியர்கள் வெட்டியதாக அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் கடந்த 15ஆம் தேதி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட நிரந்தர […]
மியான்மர் அரசை கைப்பற்றிய இராணுவம் நாட்டின் தலைவரை இறக்குமதியில் முறைகேடு செய்ததாக சிறை பிடித்துள்ளது. மியான்மர் அரசு மற்றும் ராணுவத்திற்கு இடையில் பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆட்சியை அதிரடியாக கைப்பற்றிய ராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி மற்றும் ஜனாதிபதி வின் மைன்ட் போன்ற பல முக்கிய அரசியல் தலைவர்களையும் மூத்த அரசு அதிகாரிகளையும் அதிரடியாக கைது செய்ததோடு சிறையில் அடைத்துள்ளது. மேலும் நாட்டில் […]
அமெரிக்காவில் டிக்டாக் செயலியின் தடை விதிப்பிற்கு பெடரல் நீதிமன்றம் மீண்டும் செயல்படுத்த உத்தரவிட்டுள்ள்ளது. சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவியதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். இதையடுத்து அமெரிக்க மற்றும் சீனாவிற்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து சீனாவின் தயாரிப்புகள் அனைத்திற்கும் அமெரிக்க அரசு தடை விதித்தது. எனவே சீனாவை சேர்ந்த டிக் டாக் மற்றும் தகவல் பகிர்வு செயலிகள் ஆகியவற்றுக்கு தடை விதிக்க அமெரிக்க வர்த்தக அமைச்சகம் முடிவு […]
சனிப்பெயர்ச்சி விழாவில் தரிசனம் செய்ய கொரோனா சான்றிதழ் வேண்டாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் சனிபெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருந்தால் மட்டுமே சனீஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இந்நிலையில் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது . சனிப்பெயர்ச்சி […]
பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்கும் அதனை நிறுத்தி வைப்பதற்கும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முழு அதிகாரம் இருப்பதாக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள இரு தனியார் கல்லூரிகளில் போதுமான அளவிற்கு ஆசிரியர்கள் இல்லாத காரணத்தால், அந்த இரண்டு கல்லூரிகளின் பல்கலைக்கழக இணைப்பை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்புடைய கல்லூரிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுபற்றி கல்லூரிகள் சார்பாக அளிக்கப்பட்டுள்ள மனுவில், “பல்கலைக்கழக இணைப்பு மீது நடவடிக்கை எடுப்பதற்கு அகில […]