தமிழகத்தையே உலுக்கிய கோகுல்ராஜ் ஆணவ கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாய்ந்தது. சிசிடிவியில் கோகுல்ராஜூடன் இருப்பது சுவாதி தான் என்று சரியாக தெரிந்தது. ஆனாலும் அவர் அது நான் இல்லை என கூறினார். இதனால், தவறான தகவலை அளித்தல், உண்மையை மறைத்தல் உள்ளிட்டவை அடிப்படையில் அவர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
Tag: நீதிமன்றம் தீர்ப்பு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட 26 தமிழர்களுக்கு 1998 ஆம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்திருந்தது. அதன் பிறகு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் நன்னடத்தை மற்றும் பரோல் கால செயல்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்ற தனக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 142 இன் படி கடந்த மே மாத பேரறிவாளனுக்கு விடுதலை வழங்கியது. அதனை […]
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியின் அக்காளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் தனது முதல் மகளான 9 வயது சிறுமியை தங்கையின் வீட்டில் விட்டு சென்றுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வாலிபரின் மனைவி வெளியூர் சென்ற நேரத்தில் சித்தப்பாவான அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]
உதவி அதிகாரி பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரி மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மதுரை டாக்டர்கள் சுகந்தி, முஜிதா பாய் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது, சென்ற 2017 ஆம் வருடம் சித்த மருத்துவ துறையில் தற்காலிக அடிப்படையில் மருத்துவத் தேர்வு வாரியம் வெளியிட்ட உதவி மருத்துவ அறிக்கையில் தேர்வானவர்களின் இறுதி பட்டியலில் எங்கள் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் உரிய மதிப்பெண் பெற்றும் ஆதிதிராவிடர்களின் இட ஒதுக்கீட்டின்படி தேர்வு செய்யப்படவில்லை. […]
கேரள மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சிவிக்சந்திரன் (74) மாற்றுத்திறனாளி ஆவார். இதற்கிடையில் சிவிக்சந்திரன் தன்னை கோழிக்கோடு மாவட்டம் கொயிலனி கடற்கரையில் வைத்து சென்ற 2020 பிப்ரவரியில் பாலியல் தொல்லை கொடுத்ததாக இளம்பெண் எழுத்தாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதனையடுத்து இவ்வழக்கில் தனக்கு முன் ஜாமின் கோரி சிவிக்சந்திரன் கோழிக்கோடு மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவுடன் புகார் அளித்த பெண் தன் மடி மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் சிவிக்சந்திரன் இணைத்து கொடுத்துள்ளார். அதன்பின் […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சேர்ந்தவர் ஆஷிஷ் சகோர். கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பு ரீதியாக பழகி வந்த இவர்கள், நாளடைவில் தனிமையில் சந்தித்த போதெல்லாம் உடலுறவில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்த அந்த பெண் பிறகு, திருமணம் செய்துகொள்வதாக ஆஷிஷ் கூறியதால் சம்மதித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண், தான் 6 வாரங்கள் […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்ககோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை எனவும், உட்கட்சி தேர்தலுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை எனவும் கூறி, […]
பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அளித்து மதம் மாற்றுவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அறிவிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை பரிசீலித்த நீதிபதிகள் பெருமளவில் கட்டாய மதமாற்றம் நடப்பதாக மனுவில் கூறப்பட்டிருப்பதற்கான தரவுகள் எங்கே என்று கேட்டதுடன், பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் வழக்குத் தொடர்ந்துள்ளனரா என்றும் கேள்வி எழுப்பினர். மேலும், சமூக […]
சென்னை கிண்டியில் 15 வயது சிறுமி ஒருவர் தனது தந்தைக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டை கூறினார். இதுதொடர்பாக சைல்டு லயன் குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் கிண்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியை ஏழு வயதில் இருந்து பதினைந்து வயது வரை அவரது தந்தை பாலியல் வன்கொடுமை செய்யததாகவும், கடந்த 2019ஆம் ஆண்டு சிறுமி கர்ப்பம் அடைந்தபோது இந்த தகவலை தனது தாயிடம் தெரிவித்தபோது, கருவை கலைத்த அவர் சம்பவத்தை வெளியில் […]
தொழிலாளியை காத்தியால் தாக்கிய விவாசயிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள கருப்புசாமி கோவில் தெருவில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது உறவினரான நாகராஜனும் அதே ஊரில் வசிக்கும் விவசாயியான கண்ணன் என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு கண்ணனுக்கும், நாகராஜ்க்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த கணவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகராஜனை […]
கொலை வழக்கில் தலைமறைவான குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்துள்ள குப்பான்வலசை கிராமத்தில் முத்துசாமி என்ற அகமது என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முத்துசாமி தனது உறவினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சாத்தான்குளம் பகுதியில் சென்றபோது நின்று கொண்டிருந்த 5 பேர் கொண்ட கும்பல் முத்துசாமியை வழிமறித்து அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதனைபார்த்த அவரது உறவினர் உடனடியாக கேணிக்கரை […]
மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் முத்துக்கண்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவருக்கு அங்காளஈஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துக்கண்ணன் அடிக்கடி வீட்டிற்கு குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் ஈஸ்வரி கோபித்துகொண்டு குழைந்தையை அழைத்துக்கொண்டு அதே ஊரில் உள்ள தனது தம்பி சங்கிலி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கடந்த 2018ஆம் ஆண்டு முத்துக்கண்ணன் சங்கிலியின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து கொலை […]
மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அடுத்துள்ள தோளூர் தெற்குபட்டி கிராமத்தில் தர்மர் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும் 5 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தர்மர் தனது மனைவி மீது சந்தேகப்பட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து அபிராமம் காவல்துறையினர் தர்மரை கைது செய்து […]
சிறுமியை திருமணம் செய்துகொண்டு பாலியல் பலாத்காரம் செய்த ஆட்டோ டிரைவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அடுத்துள்ள சூரியகவுண்டம்பாளையம் பகுதியில் தங்கராசு என்பவர் வசித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவரான இவர் கடந்த 2016ஆம் ஆண்டு திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த 17 சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக திருச்செங்கோடு டவுன் […]
அறங்காவலர்களை நியமித்த பிறகு நகைகளை உருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை சூளை பகுதியில் உள்ள அங்காளம்மன் கோவில் சீனிவாச பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நகைகளை பிரிப்பதற்கு தடை ஆணை பிறப்பிக்கப்படவில்லை. அதேபோன்று நகைகளை உருக்குவதற்கும் எந்தத் தடை ஆணையும் இல்லை. அறங்காவலர் நியமனத்திற்கு பின்னர் நகைகளை உருக்க வேண்டும் என்று தான் […]
நிலத்தகராறில் கூலித்தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்துள்ள தாமரைப்பாக்கம் கிராமத்தில் ஆலடியான் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரும், இவருடைய மூத்த மகன் ஏழுமலையும் பெங்களூரில் தங்கி கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இந்நிலையில் தாமரைப்பாக்கத்தில் வசித்து வரும் ராமமூர்த்தி என்பவர் ஆலடியானுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் ஆலடியனுக்கும், ராமமூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி […]
திருவாரூர் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் ஓட்டல் ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் காக்காகோட்டூர் சாலையில் ஜெயபால்(51), அவரது மனைவி இந்திரா மற்றும் இவர்களது மகள் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஜெயபால் கங்களாஞ்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு ஜெயபால் அவரது மனைவியிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்திராவை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். அதில் இந்திரா […]
ஸ்விட்சர்லாந்தில் தூங்கிக்கொண்டிருந்த தன் முன்னாள் காதலியை ஜெர்மன் நாட்டை சேர்ந்த நபர் கொன்ற வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 35 வயதுடைய நபர், தன் முன்னாள் காதலியை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அப்போது இவர் மது போதையில் இருந்ததால், அப்பெண்ணின் தலையில் கொடூரமாக தாக்கியிருக்கிறார். அதன்பின்பு அவரின் கழுத்தை நெரித்திருக்கிறார். இதில் அந்த பெண் மயக்கமடைந்து விழுந்துவிட்டார். அதன்பின்பு கத்தியால் அவரின் மார்பில் 6 தடவை […]
கல்லறையை சுத்தம் செய்யும் பணியாளருக்கு புதையல் கிடைத்தும் அவருக்கு அதில் பங்கு கொடுக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஜெர்மனியிலுள்ள Dinklage என்ற பகுதியில் இருக்கும் கல்லறையில் உள்ள வேர்கள் மற்றும் புதர்களை பணியாளர் ஒருவர் நீக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் தங்க நாணயங்கள் மற்றும் பணங்கள் இருந்துள்ளது. இதனைக்கண்ட அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அடுத்த நாளும் தங்க நாணயங்கள் இருக்கும் கன்டெய்னர்கள் வேறு சில ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் கிடைத்த மொத்த […]