இயக்குனர் ஏ. எம். ஆர் ரமேஷ் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் குப்பி, காவலர் குடியிருப்பு ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது இவர் சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை வெப் தொடராக இயக்கி வருகிறார். இந்த வெப்தொடரில் நடிகை கிஷோர் வீரப்பன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காடுகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் விவேக் ஓபராய், கயல் தேவராஜ் ,விஜயா, சுரேஷ் ஓபராய் மற்றும் […]
Tag: நீதிமன்ற உத்தரவு
பயங்கரவாதத்தைத் தூண்டும் விதமாக ஆயுதங்களை பயன்படுத்தியதாகக் கூறி நேற்று ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் தலைநகரான டெஹ்ரானில் கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி என்ற பெண் ஹிஜாப் சரியாக அணியாத காரணத்தினால் காவல்துறையினர் அவரை தாக்கியுள்ளனர். இதில் அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். இதனை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் ஹிஜாப் உடையைக் கிழித்தும் எரித்தும் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினரக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தீபத் திருவிழாவுக்கு 52 இடங்களில் அன்னதானம் வழங்கலாம். இதற்கான இடத்தை தேர்வு செய்து, ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுபடி, தீபத் திருநாளில் அண்ணாமலை மீது ஏறுவதற்கு 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இவர்களுக்கு, திருவண்ணாமலை அரசு […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பகுதியில் யானை பாகனான தனேஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் துணிக்கடையில் வேலை பார்த்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு செல்போனில் சிறுமியை தொடர்பு கொண்ட வாலிபர் அவரை கடத்தி சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]
நடிகர் விஷால் லைகா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 21 கோடியை தராததால் அந்நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. இந்நிலையில் ஒரே நாளில் தனக்கு 18 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பணத்தை திருப்பி தர முடியாது என்றும் விஷால் வாதாடினார். அதற்கு நீதிபதிகள், உங்கள் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டதா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தன்னுடைய சினிமா வாழ்க்கை முடியவில்லை எனவும் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரிசெய்யவே தொடர்ந்து படங்களில் நடித்து வருவதாகவும் விஷால் […]
உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் தலைமையிலான முதல் அமர்வு, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை என்றும் நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அதிலும் உத்தரவு பிறப்பித்தால் அதனை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்று கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதற்கும் அரசு துறைகளில் செயல்பாடுகளுக்கும் அந்தந்த துறைகளில் மேற்கொள்ளும் செயலாளர்கள் பொறுப்பாவார்கள் என்று நீதிபதிகள் […]
மூதாட்டியை கொலை செய்த வழக்கில் பெண்ணுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு முத்துலட்சுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் ரேவதி என்ற பெண் இரும்புகம்பியால் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். இதனையடுத்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் தங்க சங்கிலியை கொள்ளை அடித்துவிட்டு முத்துலட்சுமியின் உடலை ரேவதி போர்வையால் சுற்றி கட்டிலுக்கு அடியில் […]