நீர்த்தேக்க தொட்டியின் மீது எறிய தொழிலாளி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மாபுரம் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப்பார்த்து வருகிறார். இந்த ஊராட்சிக்கு உட்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து 2 நாட்களாக தண்ணீர் கலங்கலாக வந்துள்ளது. இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பரமசிவம் புகார் அளித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பரமசிவம் […]
Tag: நீர்த்தேக்க தொட்டி
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நீர்த்தேக்க தொட்டியில் குடிநீரை சுத்தப்படுத்துவதற்கான புதிய திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் காஞ்சிரங்கால் ஊராட்சியில் தற்போது மக்களுக்கு வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் சுத்தம் (குளோரினேசன்) செய்யும் பணி நவீன முறையில் நடைபெற்றது. இந்த புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டார். அதன்பின் அவர் கூறியதாவது, தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் குளோரினேசன் செய்வதற்கு ஊரக […]
மயிலாடுதுறையில் சேதமடைந்த நிலையில் காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றி புதிதாக கட்டித்தரப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அசிக்காடு ஊராட்சி பூந்தோட்டம் பிள்ளையார் கோவில் தெருவில் நீர்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இது கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிறது. தற்போது தண்ணீர் குழாய்கள் உடைந்து, நீர் தேக்கத் தொட்டி மிகுந்த சேதம் அடைந்துள்ளது. அதிலுள்ள இரும்பு ஏணியும் பழுதடைந்து காணப்படுகிறது. கம்பிகள் தெரியும் வண்ணம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கான்கிரீட் பெயர்ந்து […]