பூண்டி ஏரியில் நீர் திறப்பு 5,000 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியில் இருந்து கொற்றலை ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீரின் அளவானது 4,040 கன அடியிலிருந்து 5000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 4,100 கனஅடியாக அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tag: நீர் திறப்பு
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழையை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. ஒரு சில பகுதிகளில் அணைகள் நிரப்புவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ள நீர் புகுந்து விளை நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு முதல்வர் ஸ்டாலின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தொடர் மழை காரணமாக அணைகள் நிரம்பி வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று […]
பொள்ளாச்சி அருகில் உள்ள ஆழியாறு அணை பி.ஏ.பி. திட்டத்தின் முக்கிய அணைகளின் ஒன்றாக இருக்கிறது. இந்த ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு 6400 ஏக்கர் மற்றும் புதிய ஆயக்கட்டு 44 ஆயிரம் ஏக்கர் நீர்பாசன வசதி பெறுகின்றன.ஆழியாறு அணை தென்மேற்கு பருவ காலங்களில் நிரம்பி விடுகின்றன. இதைப்போன்று இந்த ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் ஆழியாறு அணையில் 120 உயரத்தில் 119 அடிக்கு […]
ஈரோடு மாவட்டம் குண்டேரிப்பள்ளம் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இடதுகரை மற்றும் வலதுகரை வாய்க்கால் மூலம் பாசனத்திற்கு 83 ஆயிரத்து 944 மில்லியன் கன அடிக்கு மிகாமல் திறக்கப்படுவதால் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் 2,498 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் 68 அடியாக எட்டிய நிலையில் குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருவதால் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வைகை ஆறு, சுருளியாற்றில் அதிக நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆறுகளில் ஓடும் தண்ணீர் கடைசியாக வைகை அணையில் சேருகின்றது. இதனால் அணையில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து 71 அடி […]
மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து மாவட்டத்தில் உள்ள நீர் நிலையங்களிலும் தூர்வாரும் பணி தொடங்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ள அண்ணா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 75 ஆக்சிடெண்ட் செறிவூட்டும் இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என் நேரு கலந்துகொண்டார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது: “தமிழகத்தில் விவசாய பணிகளுக்கு ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. அந்த […]
சென்னையில் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புலால் மற்றும் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டன. அப்போது தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் கனமழை பெய்து […]
ஆழியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக வருகின்ற ஆறாம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், ஆழியாறு பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆனைமலை ஆழியாறு பழைய ஆயக்கட்டு விவசாயிகள் நல சங்கம் கோரிக்கை விடுத்தனர். விவசாய மக்களின் கோரிக்கையை ஏற்று, ஆழியாறு அணையில் இருந்து […]
திருமூர்த்தி அணையில் வருகின்ற 28 ஆம் தேதி முதல் தண்ணீர் திறப்பதற்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசன பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை விவசாயிகள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் […]
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து நாளை முதல் அக்டோபர் மாதம் 28ம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பவானிசாகர் அணையில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி வட்டத்தில் உள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலவர் அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர்மகசூல் பெற வேண்டும் என முதல்வர் […]
கிருஷ்ணகிரி பாரூர் பெரிய ஏரியில் இருந்து ஜூலை 2ம் தேதி முதல் நவம்பர் 13ம் தேதி வரை நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாரூர் பெரிய ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதானக் கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நீர் திறப்பால் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறியுள்ளார்.
டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்து 7,230 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து 8 கண் மதகு வழியாக முதற்கட்டமாக 1,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கல்லணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வரக்கூடிய தண்ணீர் அளவை பொறுத்து தண்ணீர் திறக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் இன்றைய நிலவரப்படி கொள்ளிடத்தில் […]
கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கன்னியாகுமரில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட கடந்த மாதம் 26ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குமரியில் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நாளொன்றுக்கு 850 கன அடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டது. நீர் திறப்பால் குமரி மாவட்டத்தில் […]
கன்னியாகுமரில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். குமரியில் கோதையாறு பாசனத்திற்கு ஜூன் 8ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 28ம் தேதி வரை நாளொன்றுக்கு 850 கன அடி நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீர் திறப்பால் குமரி மாவட்டத்தில் கோதையாறு, பட்டணங்கால் பாசன பகுதிகளின் 79,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் […]