Categories
மாநில செய்திகள்

#Breaking: இந்த பகுதிகளில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை….!!!!

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால், இப்பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறை குறித்து தற்போது வரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக….. விரைவில் பேட்டரி கார் சேவை….. வெளியான அறிவிப்பு…..!!!!

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பேட்டரி கார் சேவை விரைவில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சர்வதேச புகழ்பெற்ற சுற்றுலாத்தளமாக நீலகிரி மாவட்டம் திகழ்கிறது. இங்கு கோடை சீசனை முன்னிட்டு ஆண்டுதோறும் 20 லட்சம்‌ பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அரசு தாவரவியல் பூங்கா, இத்தாலியன் கார்டன், கண்ணாடி மாளிகை மற்றும் பசுமை புல்வெளி போன்ற பகுதிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பார்கள். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் சிக்கிய குட்டி யானை…. பத்திரமாக மீட்ட வனத்துறையினர்…. தாயுடன் சேர்க்கும் பணி தீவிரம்….!!!!

தண்ணீரில் தத்தளித்த யானையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிக அளவில் காணப்படுவதால் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகிறது. இங்குள்ள மசினகுடியில் செந்நாய்கள், கரடிகள், புலிகள் மற்றும் காட்டு யானைகள் போன்றவைகள் அதிக அளவில் வாழ்ந்து வருகிறது. இந்த விலங்குகள் பசுந்தீவனம் மற்றும் தண்ணீருக்காக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொட்டபெட்டா மலைச்சிகரம்” 350 அடி பள்ளத்தில் திடீரென குதித்த மூதாட்டி…. அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்….!!!!

மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் பிரபலமான சுற்றுலா தளமான தொட்டபெட்டா மலைச்சிகரம் அமைந்துள்ளது. இந்த மலைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த மலைக்கு நேற்று கோவை மாவட்டத்தை சேர்ந்த லீலாவதி என்ற மூதாட்டி வந்துள்ளார். இவர் திடீரென 350 அடி பள்ளத்தில் குதித்து விட்டார். இவரை சுற்றுலாப் பயணிகள் பலர் தடுத்துள்ளனர். இருப்பினும் லீலாவதி கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே குதித்து உயிரை மாய்த்துக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில்….. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கொட்டிதீர்த்த மழை….. 13 செ.மீ. பதிவு….!!!!

தமிழகத்தின் மேல் நிலமும் வளிமண்டல சுழற்சி காரணமாக நேற்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை வரை பெய்தது. அதேபோல் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 13 சென்டிமீட்டர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தென்மேற்கு பருவமழை” நீலகிரியில் புதிதாக உருவாகியுள்ள நீர்வீழ்ச்சிகள்…. மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்…!!

தொடர்ந்து மழை பெய்து வருவதால் புதிதாக பல இடங்களில் நீர்வீழ்ச்சிகள் உருவாகியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதால், பல்வேறு இடங்களில் கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன் பிறகு ஆங்காங்கே சில இடங்களில் மண் சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக பனிமூட்டம் நிலவுவதால், பகலிலும் வாகன ஓட்டிகள் முகப்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா எருமாடு அருகே ஒனிமூலா பகுதி அமைந்துள்ளது. இங்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தேவாலா காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்தனர். அந்த விசாரணையின் போது ஒனிமூலா பகுதியைச் சேர்ந்த அஜித் என்பது தெரியவந்தது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடர் மழையினால் ஏற்பட்ட மண்ணரிப்பு…. உடையும் நிலையில் பாலம்…. அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!!

தொடர் மழையின் காரணமாக பாலம் உடைந்து விழும் நிலையில் இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மண்ணரிப்பு ஏற்பட்டு 5 இடங்களில் உள்ள பால்ம் உடைந்து விழுந்தது. இதேப்போன்று கூடலூரில் உள்ள ஆணை செத்த கொல்லி பகுதியில் அமைந்துள்ள பாலத்திலும் […]

Categories
மாநில செய்திகள் வானிலை

FLASH NEWS : தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு `ஆரஞ்ச் அலர்ட்’….. வானிலை எச்சரிக்கை….!!!!

தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், அங்கு 12 முதல் 20 செ.மீ அளவு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், அம்மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

மலை ரயிலில் முதன் முறையாக….இந்த பணியில் அசத்தும் பெண்…. கிடைத்த சூப்பர் வாய்ப்பு….!!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் இடையே உள்ள பகுதியில் மலை ரயில் ஒன்று இயங்கி வருகிறது. இவ்வாறு இந்த ரயிலானது, நூற்றாண்டு காலமாக பல் சக்கரத்தின் உதவியுடன், அந்த பகுதியில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாழ்நாளில் ஒரு நாளிலாவது, இந்த ரயிலில் பயணிக்க வேண்டும் என பெரும்பாலானவர்களின் மிகப்பெரிய ஆவலாக உள்ளது. இதையடுத்து இந்த மலை ரயிலானது, 208 வளைவுகளில் வளைந்து செல்லும். மேலும் 16 […]

Categories
நீலகிரி பல்சுவை மாவட்ட செய்திகள்

“மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்னா சுகம்” வடிவேல் காமெடியை தத்ரூபமாக காட்டிய கரடி….!!!!

நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த வனவிலங்குகள் உணவைத் தேடி ஆள் நடமாட்டம் உள்ள ஊர் பகுதிக்குள் புகுந்து வருவது வழக்கம். அதேபோல சாலையில் யானைகள் மற்றும் கரடிகளும் வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது ஊட்டி அடுத்த பந்திப்பூர் என்னுமிடத்தில் கரடி ஒன்று சாலையோரமாக படுத்துக்கொண்டு வானத்தை நோக்கி எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை பார்ப்பதற்கு வின்னர் படத்தில் வரும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா சென்ற பயணிகள்…. வழியில் நேர்ந்த விபரீதம்…. ஊட்டியில் கோர விபத்து….!!

ஊட்டிக்கு சுற்றுலா சென்ற வேன் சாலை தடுப்பு சுவர் மீது மோதியதில் டிரைவர் உள்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். சென்னை பூந்தமல்லியை சேர்ந்த 13 பேர் ஒரு வேனில் சுற்றுலாவிற்கு ஊட்டிக்கு சென்றனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை ரசித்துவிட்டு கூடலூர் வழியாக முதுமலைக்கு வேணியில் சென்று கொண்டிருந்தனர். இந்த வேனை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே வந்த பொது வேன் திடீரென கட்டுபாட்டை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டபோது…. தூக்கிவீசப்பட்ட ஆய்வாளர்…. குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

மின்சாரம் பாய்ந்து மின்பாதை ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள நாடுகாணி பொன்னூர் பகுதியில் வசித்து வந்த ஆனந்தராஜ் என்பவர் உப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டதால் அவர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஆனந்தராஜ் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மின் ஊழியர்கள் உடனடியாக அவரை மீட்டு பந்தலூர் […]

Categories
மாநில செய்திகள்

காலி பாட்டில்களை திரும்ப கொடுங்க….. ரூ.10 வாங்கிட்டு போங்க….. தமிழக அரசு போட்ட சூப்பர் திட்டம்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் மது பாட்டில்களின் விலையை 10 ரூபாய் உயர்த்தி, பாட்டில்களை திரும்ப ஒப்படைத்தால் 10 ரூபாய் திரும்பி வழங்கப்படும் என்ற திட்டம் மே 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. வனப்பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்படும் மதுபாட்டில்களை வாங்கி குடித்துவிட்டு பலரும் கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசுவதால் வனவிலங்குகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். அதைத் தடுக்க தவறினால் மலைவாசஸ்தலம் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அடச்சீ…கள்ளகாதல் விவகாரம்…. பெற்ற குழந்தைக்கு மது கொடுத்து கொலை செய்த கொடூர தாய்…!!!

நீலகிரி மாவட்டம் உதகை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கீதா (வயது 38). இவருக்கு 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து பெற்ற நிலையில், மூன்றாவதாக கோவையை சேர்ந்த கார்த்திக் என்பவரையும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நித்தீஷ் (வயது3) மற்றும் நித்தின் (வயது 1) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கார்த்திக்-கீதா இடையே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து கார்த்திக் தனது மூன்று வயது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஐயா… ஐயா வெளிய வர முடில…! உடனே புடிச்சு கொண்டு போங்க…. பயத்தில் உறைந்துள்ள ஊட்டிவாசிகள் …!!

ஊட்டி அருகிலுள்ள பகுதிகளில் புலி நடமாட்டம் இருப்பதால் புலியை கூண்டு வைத்து பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்குட்பட்ட கட நாடு, அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக புலி மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. அப்பகுதியில் உள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்கின்றனர்.  அந்த கிராமங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் புலி நடமாடுவதோடு காட்டெருமை, கடமான் ஆகிய வன விலங்குகளை வேட்டையாடி இழுத்துச் செல்கின்றது.  அதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பொதுமக்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போலீஸ் அதிரடி சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கஞ்சா செடிகள் அழிப்பு…!!

கஞ்சா செடிகளை வளர்த்து விற்பனைசெய்த விவசாயி உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி-கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது கல்லட்டிலிருந்து ஊட்டியை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 வாலிபர்களை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் சோதனை செய்தபோது அதில் கஞ்சா இலைகள் இருப்பது தெரியவந்துள்ளது. […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா தளங்களுக்கு அனுமதி… படையெடுத்து வரும் பயணிகள்… மலர் கொடுத்து வரவேற்ப்பு…!!

ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததையடுத்து ஊட்டியில் தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் திறக்கப்பட்டுள்ளன.  கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து கொரோன வைரஸ் தொற்றின் தாக்கம்  படிப்படியாக குறைந்துள்ள நிலையில் இன்று உதகை அரசு தாவரவியல் பூங்கா மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டன. உதகை அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கைகளில்  கிருமி […]

Categories
Uncategorized நீலகிரி மாவட்ட செய்திகள்

புலிக்கு விஷம் கொடுத்து கொன்ற 2 பேர் கைது – மேலும் இருவருக்கு வலைவீச்சு …!!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலிக்கு இறைச்சியில் விஷம் வைத்து கொன்ற நிகழ்வில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். உதகை அருகே முதுமலை புலிகள் சரணாலயம் பகுதிக்குட்பட்ட மசனகுடி வனப்பகுதியில், கடந்த டிசம்பர் மாதம் 20ஆம் நாள் புலி ஒன்று இறந்து கிடந்தது. அதை கண்ட வனத்துறையினர் உடலை கைப்பற்றி ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் புலிக்கு விஷம் கொடுத்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து மசனகுடி பகுதியை சேர்ந்த அகமது கபீர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒன்னும் இல்ல…! சாதாரண வலி தான்…! மருத்துவரின் அலட்சியம்… நீலகிரியில் குழந்தை பலி ….!!

உதகை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம் குன்னூரில் இளி துறை கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்நாதன். இவர் 108 ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 16ம் தேதி அவரது மனைவி நாகமணிக்கு பிரசவத்திற்காக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனிடையே பணியில் இருந்த செவிலியர் மற்றும் மருத்துவர்களிடம் தனது மனைவியை பரிசோதிக்குமாறு அருள்நாதன் கேட்டுள்ளார். இதனையடுத்து நாகமணியை பரிசோதித்துவிட்டு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அனைத்து சுற்றுலா தலங்களும் விரைவில் திறக்கப்படும் …!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் விரைவில் திறக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடேங்கு காரணமாக நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன. ஊரடங்கு தளர்வு காரணமாக தற்போது படிப்படியாக சுற்றுலாத்தலங்கள் திறக்கப்பட்டு முதற்கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா ரோஜா பூங்கா உட்பட தோட்டக்கலை துறை கட்டுப்பாட்டில் உள்ள 6 சுற்றுலா தளங்கள் மட்டுமே திறக்கப்பட்டது. ஆனால் தொட்டபெட்டா முதுமலை படகு இல்லம் போன்றவைகள் திறக்கப்படாமல் உள்ளன. இந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பயிர்களை சேதப்படுத்தும் யானைகள் – விவசாயிகள் வேதனை

கூடலூர் அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர் மற்றும் கிழங்குகளை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டிட  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கைமாகொல்லி பகுதியில்  விவசாயிகள் நெல்பயிர் மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகியவை விவசாயம் செய்து வருகின்றனர். அடுத்த மாதம் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 4 நாட்களாக அப்பகுதிக்கு வரும் இரண்டு காட்டு யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸை முன்னிட்டு தயாரிக்‍கப்பட்ட பாரம்பரிய கேக்‍ கலவை …!!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் மதுபானம் உலர் பழங்கள் வாசனை திரவியங்கள் கொண்டு 65 கிலோ கேக் கலவை தயாரிக்கும் பாரம்பரிய நிகழ்ச்சி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு முக்கிய அம்சமாகக் கருதப்படும் கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி உதகையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெற்றது. பிலீச், பிளம் திராட்சை, கிராம்பு, லவங்கம், பட்டை , ஏலக்காய் மற்றும் மதுபானங்களை கொண்டு 65 கிலோ கேக் கலவையை ஹோட்டல் ஊழியர்கள் தயாரித்தனர். இந்த நிகழ்ச்சியில் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்துசென்ற தொழிலாளியை மிதித்துக்கொன்ற யானை …!!

நீலகிரி மாவட்டம் ஓவேலி அருகே சாலையில் நடந்து சென்ற தொழிலாளி யானை மிதித்து பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று நாட்களில் இரண்டு பேர் யானை தாக்கி உயிரிழந்ததால் கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட குய்ச் கிராமத்தில் வசிப்பவர் பாலுசாமி கூடலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் அவர் நேற்று இரவு தனது கிராமத்திற்கு நடந்து சென்றபோது காட்டுயானை தாக்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்துசென்ற பெண், யானை தாக்கி உயிரிழப்பு …!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் சாலையில் நடந்து சென்ற பெண் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்தில் காட்டு யானையின் நடமாட்டத்தால் வீட்டை விட்டு வெளியேவர முடியாமல் தவிப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கூடலூர் அருகே உள்ள கொக்கால்  பகுதியில் வசிக்கும் கமலா அம்மாள் என்பவர் அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்ல சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது புதரில் மறைந்திருந்த ஒற்றை யானை அவரைத் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தேயிலை தொழிற்சாலைகள் மூடல் – 65,000 தேயிலை விவசாயிகள் பாதிப்பு

நீலகிரி மாவட்டத்தில் 119 தனியார் தேயிலை தொழிற்சாலைகள் கடந்த 10 நாட்களாக மூடப்பட்டுள்ளதால் 65 ஆயிரம் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு கோடி கிலோ பசுந்தேயிலை பறிக்கப்படாமல் வீணானதால் 10 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் விளங்குகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு குறு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டுகளுக்குப்பின் பசும் தேயிலைக்கு கடந்த இரண்டு மாதங்களாக கிலோவுக்கு 25 முதல் 30 ரூபாய் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி கூட்டம் ….!!

நீலகிரி மாவட்டம் உதகையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட இளைஞரணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தில் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் சிதம்பரம்  கலந்து கொண்டார். இளைஞரணி நிர்வாகிகள் உட்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாரதிய ஜனதா கட்சியின் சிறப்புகளை பற்றி விளக்கினார். இந்த கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுக்குள் களை கட்டிய விநாயகர் சதுர்த்தி விழா – மணியடித்து, மண்டியிட்டு, பூஜை செய்த யானைகள்…!!!

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக் காட்டில் நடந்த விநாயக சதுர்த்தி விழாவின் யானைகள் மணியடித்து மண்டியிட்டு பூஜை செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. உதகை  தெப்பக்காடு யானைகள்  முகாமில் 25 கும்கி யானைகள் இரண்டு குட்டி யானைகள் உள்ளது விநாயகர் சதுர்த்தி விழா நாளான இன்று அனைத்து யானைகளையும் மாயாற்றில் குளிக்க வைத்து அலங்கரித்த பாகங்கள் முகாமுக்கு அழைத்து வந்து வரிசையில் அணிவகுத்து நிறுத்தினர். கிருஷ்ணா, மசினி என்ற இரு கும்கி யானைகள் விநாயகர் கோவிலில் மணி அடித்தும் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் சுற்றித் திரியும் வனவிலங்குகள் – வாகன ஓட்டிகள் அச்சம்

நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பக வன பகுதியில் சாலைகளில் யானை, மான் போன்ற வனவிலங்குகள் உலா வருவதால் அவ்வழியே வாகனத்துடன் செல்வோர் அச்சத்துடனே செல்கின்றனர். முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, காட்டெருமை, மான், கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளை காண ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த வருடம் கொரோனா தொற்று காரணமாக சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்ட நிலையில் முதுமலை புலிகள் காப்பகமும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரியில் கடந்த 10 […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள் வானிலை

6 மாவட்டங்களில் மழை பெய்யும் – வானிலை மையம்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி கனமழை பெய்யும் என்றும். வேலூர், திருவள்ளூர், சென்னை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

74-வது சுதந்திர தினம்-தும்பிக்கையை தூக்கி மரியாதை செலுத்திய யானைகள்

முதுமலை சரணாலயத்தில் யானைகள் உடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் முதுமலையில் 27 வளர்ப்பு யானைகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். அணிவகுத்து நின்று யானைகள் மீது பாகன்கள் தேசியக் கொடியை பிடித்தவாறு அமர்ந்திருந்தனர். முதுமலை புலிகள் காப்பக உதவி கலை இயக்குனர் செண்பக பிரிய கொடி ஏற்றும் போது யானைகள் தும்பிக்கையை தூக்கி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து யானைக்கு கரும்பு, கேழ்வரகு, […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

கூடலூர் R.இராமசாமி, S.ஷையத் அனுப்பான் ஆகியோர் அமமுக பொறுப்பிலிருந்து விடுவிப்பு …..!!

நீலகிரி மாவட்ட கழக பொருளாளர், கூடலூர் ஒன்றிய கழக செயலாளர், கூடலூர் நகர கழக செயலாளர் உள்ளிட்டோர் அவரவர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுவதாக அமமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் நீலகிரி மாவட்ட கழக பொருளாளர் பொறுப்பில் இருக்கும் திரு. B.தினேஷ், கூடலூர் ஒன்றிய கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. R.இராமசாமி, கூடலூர் நகர கழக செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. S.ஷையத் அனுப்பான் ஆகியோர் அவரவர் வகித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நீலகிரி வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை ….!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளில் பொருட்கள் அனைத்தும் சேதம் ஆகிவிட்டதால் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடலூர் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பாதிக்கப்பட்ட 2,000-ற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று முதல் மழை குறைந்ததை அடுத்து முகாம்களில் இருந்தவர்கள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்கள்-போக்குவரத்து பாதிப்பு ……!!

நீலகிரி மாவட்டம் கூடலூரில் பெய்து வரும் கனமழையால் 8 பாலங்கள் சேதம் அடைந்திருப்பதாக கிராமங்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலங்களையும் சேதமுற்ற சாலைகளையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் திருமதி. இன்னசன்ட் திவ்யா வெள்ள சேதங்கள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருவதாகவும் விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தொடரும் கனமழை : அடித்துச் செல்லப்பட்ட புளியம்பாறை தரைப்பாலம் ….!!

நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் புளியும்பாறை அருகே உள்ள தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. தேவாலா, பந்தலூர், பகுதிகளில் இன்றும் கனமழை தொடருவதால் புலியும்பாறை பகுதியில் உள்ள தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது. கோழிக்கொல்லி கிராமத்திற்கான போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கிராமத்தில் உள்ள 300-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி உள்ளனர். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சேதமடைந்த உயர் மின் கோபுரங்கள் சீரமைப்பு ….!!

நீலகிரி மாவட்டத்தில் கனமழையினால் சேதமடைந்து உயர்மின் கோபுரங்களை மின்சாரத்துறை ஊழியர்கள் சீரமைத்து வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குந்தா, எமரால்ட், அவலாஞ்சி, நடுவட்டம், தேவாலா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 260ற்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரங்கள் மின் கம்பங்கள் மற்றும் உயர் மின் கோபுரங்கள் மீது விழுந்துயுள்ளதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து சேதமடைந்து உயர்மின் கோபுரங்களை மின்சாரத் துறை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பாறைகள் விழுந்து சாலையில் பிளவு – போக்குவரத்து நிறுத்தம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பாறைகள் விழுந்து சாலையில் பிளவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டதுடன் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குன்னூர் டால்பின் நோஸ் மற்றும் பழங்குடியினர் கிராமங்களுக்கு செல்லும் சாலையில் பாறைகள் விழுந்து சாலை இரண்டாக பிளந்ததால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் ஆய்வு […]

Categories

Tech |