உதகை – நீலகிரி சாலையில் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து நிறுத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெ. இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் அதிக மழைப் பொழிவு காற்று, வீசுவதால் வாகனங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உதகையில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மழை கொட்டி வருகிறது. முன்னேற்பாடாக மாவட்ட […]
Tag: நீலகிரி
நீலகிரி மாவட்டம் அருகே தேவால பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கூடலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் புறங்களில் நாள்தோறும் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்து வருகின்றனர். குடியிருப்புகள் அருகே வன விலங்குகள் விளை நிலங்களில் சேதப்படுத்துவது மட்டுமின்றி, மனிதர்களையும் தாக்கம் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிகாலை கூடலூர் அருகே உள்ள தேவால பகுதிகளில் ஒற்றை காட்டு யானை ஒன்று, […]
நீலகிரி மாவட்டத்தில் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டு கிலோ 350 ரூபாய் வரை விற்பனை ஆவதால் விவசாயிகள் உற்சாகமடைந்துள்ளனர். மலை மாவட்டமான நீலகிரியில் தேயிலைக்கு அடுத்ததாக மலை காய்கறிகள் அதிக அளவில் பயிராகின்றன. கடந்த 5 மாத காலமாக கொரோனா பிரச்சனை காரணமாக, இங்கிருந்து கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவது பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தனர். இந்த நிலையில் தற்போது இங்கு விளையும் வெள்ளைப்பூண்டு முதல் ரகம் கிலோ […]
உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறைதண்டனை என நீலகிரி ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.. குறிப்பாக அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.. ஆனால் சிலர் அதனை முறையாக பின்பற்றாமல் நமக்கென்ன என்று அசால்ட்டாக சுற்றி திரிகின்றனர்.. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் […]
அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலையில் தமிழில் பேசக் கூடாது என்று கூறியதால் அனைத்து தொழிலாளர்களும் கொட்டும் மழையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே இருக்கும் அருவங்காடு தொழிற்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கொரோனா தொற்று காலத்தில், தங்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகளை ஆலை நிர்வாகத்திடம் முன் வைத்துள்ளனர். இதுகுறித்த பேச்சுவார்த்தைக்கு அங்கீகரிக்கப்பட்ட 3 தொழிற்சங்கங்களை ஆலை நிர்வாகம் அழைத்துள்ளது. அப்போது, ஆலையின் பொதுமேலாளர், […]
தமிழகத்தில் இருக்கும் 10 மாவட்டங்கள் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீலகிரி, தேனி, கோவை, ஈரோடு உட்பட 10 மாவட்டங்களில் மிதமான மழை காண வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு கூறியிருப்பதாவது, “அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் காற்றின் திசைவேகம் மாறுபாட்டினால் தமிழகம், புதுவை கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தேனி, […]
கொரோனா ஊரடங்கால் நாடே முடங்கியிருக்க வாழ்வாதாரத்தை காப்பாற்றிக்கொள்ள பட்டதாரி இளைஞர்கள் பலரும் சுமை தூக்கும் வேலை செய்யத் தொடங்கிவிட்டனர்.. நீலகிரி மாவட்டம் என்றாலே தேயிலைதான்.. தேயிலைக்கு அடுத்தபடியாக பார்த்தோம் என்றால் மலைக்காய்கறிகளான கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு மற்றும் வெள்ளை பூண்டு போன்றவற்றை அதிகளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.. இதில் குறிப்பாக நீலகிரியின் தங்கம் என்று அன்போடு அழைக்கப்படும் கேரட்டை பெரும்பாலும் அதிக பரப்பளவில் விவசாயிகள் பயரிட்டுள்ளனர்.. இங்கு உற்பத்தி செய்யப்படும் கேரட் தான் தமிழகத்தில் சென்னை, திருச்சி, […]
பொது வெளியில் எச்சில் துப்பினால் ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரானா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்காக மத்திய அரசும், சுகாதாரத் துறையும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கான காரணமாக பொதுமக்கள் மத்தியில் சுய கட்டுப்பாடு இல்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை […]
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பெரும்பாலான இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோவை, நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு ஈரோடு, திருச்சி, மதுரை, தூத்துக்குடி […]
லண்டனில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த அனுபிரியா தேர்வாகியுள்ளார். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகேயுள்ள தேனாடு கிராமத்தை சேர்ந்தவர் இந்திரன். ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார்.. லட்சுமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை ஆவார். இவர்களுக்கு அனு பிரியா என்ற மகள் இருக்கிறார்.. 22 வயதுடைய அனு பிரியா கோவையிலுள்ள தனியார் என்ஜினீயரிங் காலேஜில் எலெக்ட்ரிக்கல் & எலெக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் இங்கிலாந்து […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் நல்ல மழையும், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் […]
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி-யும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று முதல் 15ம் தேதி […]
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் தேவலாவில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. கூடலூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 4 செ.மீ மழை பெய்துள்ளதாக […]
கரிமொராஹட்டி குடியிருப்புப் பகுதிக்குள் கரடி ஒன்று புகுந்துள்ளதால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் அதை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார குடியிருப்புப் பகுதிகளுக்கு கரடி, யானை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடிவருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.. அதன்படி, நேற்று குன்னூர் நகராட்சிக்குள்பட்ட கரிமொராஹட்டி கிராமத்திலுள்ள டெய்லி தோட்டத்தில் கரடி ஒன்று புகுந்தது. அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் கரடியை கல்லால் அடித்து விரட்டுவதற்கு முயன்றனர். அதனால் […]
தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீலகிரி, கோவை, தேனி […]
தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மே 31ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை அரபிக் கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம். அடுத்த 48 […]
நீலகிரி மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து கூடலூர் பொன்வயல் பகுதியில் உள்ள 28 வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 14 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 13 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் […]
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல மதுரை, திருச்சி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், கரூர், ஆகிய மாவட்டங்களில் 40 […]
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 14 பேரில் 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ஒருவர் மட்டுமே நீலகிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பானது அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது. ஒரு புறம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் விகிதமும் உயர்ந்து வருவது கவனிக்க […]
அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, சேலம், ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை […]
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மதுபானம் வாங்க வந்த கேரளத்தினரை போலீசார் தடுத்து திருப்பி அனுப்புகின்றனர். கொரோனா தொற்று தமிழகத்தில் 40 நாட்களுக்கு பிறகு இன்று மது கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்ததோடு, திமுக கூட்டணி காட்சிகள் போராட்டமும் நடத்தினர். இன்று காலை 10 மணி முதல் மதுக்கடைகள் தொடங்கி வியாபாரம் ஜோராக நடைபெற்று வருகின்றது. மது பிரியர்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களின் ஆதார் கார்டு காட்டி மது வாங்கிச் செல்கின்றார்கள். […]
நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது. இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது. அனைத்து […]
நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்திய அளவில் கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் 4வது இடத்தில் இருந்து வருகிறது. இங்கு 3023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல கொரோனா சிகிச்சையை சிறப்பாக வழங்கி வரும் தமிழகம் 1,379 பேரை குணப்படுத்தி அதிகமானோரை மீட்டதாக இந்திய அளவில் 2ஆவது மாநிலமாக விளங்குகின்றது. மாவட்ட […]
நீலகிரியில் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமாகி வீடு திரும்பியதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட […]
கொரோனா பாதித்த 7 மாவட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு ஆரஞ்சு பகுதிக்கு மாறியுள்ளது. இன்றைக்கு 121 நபர்களுக்கு தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2058 ஆக உயர்ந்திருக்கிறது. 1937ஆக நேற்று வரை இருந்த எண்ணிக்கை, இன்று ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு 2058 ஆக உயர்ந்திருக்கிறது. இதில் 103 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். செங்கல்பட்டில் 12 நபர்களுக்கும், நாமக்கல்லில் 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்து […]
நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேரும் குணமடைந்து வீடு திரும்பினர் என மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக 1,471 நபா்கள் பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில் அவா்கள் அனைவரும் 28 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்பை முடித்துள்ளனா். எனவே தற்போது வரை புதிய தொற்று யாருக்கும் இல்லை என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார். மேலும் மாவட்டத்தில் கொரோனா தொற்று […]
கேன்சர் மருந்து கிடைக்காமல் நீலகிரியில் அவதிப்பட்ட நோயாளிக்கு கேரள தீயணைப்பு துறையினர் மருந்து வாங்கி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த உதவிகரமாக இருந்தாலும் மறு பக்கம் அத்தியாவசிய மருத்துவ உதவிகள் கிடைப்பது தடைபட்டு நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கேரள தீயணைப்புத்துறை, “அவ்வாறு அவதிப்படும் நோயாளிகள் 101 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு சரியான தகவலை தெரிவித்தால் உதவி […]