பாலிவுட் நடிகர் ஆமிர்கானின் தாயார் ஜீனத் ஹுசைனுக்கு உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மும்பையில் உள்ள பஞ்சாகனி இல்லத்தில் நடிகர் அமீர்கான் தனது குடும்பத்தினருடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடினார். தீபாவளி பண்டிகையின் போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Tag: நெஞ்சு வலி
கிரிக்கெட் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே இலங்கை அணி வீரர் குசல் மெண்டிசுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. டாக்காவில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் ஆட்டத்தின் போது பீல்டிங் செய்து கொண்டிருந்த அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக திமுக அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்தாக தகவல் வெளியாகியுள்ளது. துபாய் செல்ல நேற்று சென்னை விமான நிலையம் வந்த அவர் விமானத்தில் ஏறி அமர்ந்தார். அப்போது விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவருக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் வீரர் அபித் அலிக்கு போட்டியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வலதுகை பேட்ஸ்மேனான அபித் அலி அந்த அணிக்காக 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். அதோடு டெஸ்ட் போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட 1180 ரன்கள் குவித்துள்ளார் . இந்நிலையில் 34 வயதான அபித் அலி குயாய்ட்-இ-ஆசாம் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானில் மத்திய பஞ்சாப் அணிக்காக விளையாடி உள்ளார். இந்நிலையில் நேற்று நடந்த போட்டியின்போது […]
நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவருக்கு இதயத்தில் கூர்மையான சிமெண்ட் துண்டு இருந்த சம்பவம் மருத்துவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடான ஒன்றில் 56 வயது நபர் ஒருவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த எக்ஸ்ரேயில் கூர்மையான சிமெண்டு துண்டு ஒன்று அந்த நபருடைய இதயத்தில் சிக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் நுரையீரலுக்கும் இதயத்திற்கும் இடையே சிமெண்ட் துண்டு கூர்மையாக […]
முத்தையா முரளிதரன் நெஞ்சு வலியின் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர் அணியின் முன்னாள் வீரரும், சுழற்பந்து வீச்சு ஜாம்பவானும் ஆன முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியது. தற்போது ஐபிஎலில் ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக முரளிதரன் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுமட்டுமின்றி ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணி, ஹைதராபாத்அணிகள் சார்பில் விளையாடியுள்ளார். […]
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பூவேஉனக்காக சீரியலில் நடித்துவரும் நடிகைக்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. நடிகை ஆமணி, 47 வயதான இவர் விஜயகாந்த் நடித்த ஆனஸ்ட்ராஜ் படத்தில் விஜயகாந்திற்கு மனைவியாக நடித்து இருப்பார். இவர் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பழக்கமானவர். கமலஹாசன், நாகார்ஜுனா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். ஏராளமான தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கேரக்டர் வேடங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த சில நாட்களாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் கதாநாயகியின் அம்மாவாக […]
அரசு பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்த ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இருப்பினும் அந்த ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை சாலையின் ஓரமாக எடுத்து சென்று நிறுத்தினார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது அந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெஞ்சு வலி என்று சென்ற சிறுவனின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது அமெரிக்காவில் 17 வயது சிறுவன் ஒருவன் மூன்று தினங்களாக மிகுந்த நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். வலியை பொறுக்க முடியாத சூழல் உருவானதால் அச்சிறுவன் மருத்துவமனைக்கு சென்று தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அங்கு அவனுக்கு எலக்ட்ரோ கார்டியோகிராம் மற்றும் ஸ்கேன் எடுத்தனர். ஸ்கேன் ரிப்போர்ட்டில் மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் சிறுவனின் இதயத்தில் 3.5 சென்டிமீட்டர் நீளம் […]