Categories
மாநில செய்திகள்

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர்….. இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா…..!!!!

செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர் போட்டியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்த போட்டியில் முதல் முறையாக இந்தியர் ஒருவர், இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளார். இறுதி ஆட்டத்தில் சீன வீரரும் உலக தரவரிசை பட்டியலில்,  இரண்டாம் இடத்தில் இருப்பவரும், அரையிறுதியில் கார்ல்சனை வீழ்த்தியவருமான டிங் லைன் (Ding Liren)யை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

‘பார்முலா 1’ கார் பந்தையம்…. இத்தனை மணி நேரத்துல…. நெதர்லாந்தைச் சேர்ந்த வீரர் வெற்றி….!!!

சவுதி அரேபியன் கிராண்ட்பிரி போட்டி நெதர்லாந்து வீரர் முதலிடத்தை பிடித்துள்ளார். ‘பார்முலா1’ கார் பந்தையம் இந்த ஆண்டு 22 சுற்றுகளாக நடைபெறுகிறது. இதில் சவுதி அரேபியன் கிராண்ட் பிரி பேட்டி ஜெட்டா ஓடுதளத்தில் நேற்று முன்தினம் இரவு இரண்டாவது சுற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 10 அணிகளைச் சேர்ந்த 20 கார் வீரர்கள் 3௦8.45 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தனர். இந்த போட்டியில் வருட சாம்பியனான நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) […]

Categories

Tech |