நெய்வேலியில் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெய்வேலி 17ஆவது வட்டம் பண்ருட்டி சாலையில் முருகதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஸ்ரீதரன் என்ற ஸ்ரீதர் (26). எம் பி ஏ பட்டதாரியான இவர் நெய்வேலியில் சொந்தமாக தொழில் செய்து வருகின்றார். இதே போல 13வது வட்டம் ஸ்டீல் லேன் தெருவில் ஜோசப் பீட்டர் ஆண்டனி என்பவர் வசித்து வருகிறார். இவர் என்எல்சி இந்திய நிறுவனத்தில் […]
Tag: நெய்வேலி
நெய்வேலி அடுத்த தெற்கு வெள்ளூர் கிராமத்தில் சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதியதால் பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். என்எல்சி சொசைட்டி தொழிலாளி வேல்முருகன் என்பவர் தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று உள்ளார். அப்போது சாலையை கடக்க முயன்ற நிலையில் வேகமாக வந்த மினி லாரி அவர்களின் வாகனம் மீது மோதி கவிழ்ந்தது. அந்தக் கோர விபத்தில் பலத்த காயமடைந்த மாணவி, சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனம். இந்த நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தி என்ற நபர் சுரங்கத்திற்கு உள்ளே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் இன்று ஓய்வு பெற இருந்த நிலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவர் உடலை கைப்பற்றிய போலீசார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெய்வேலி அனல் மின் நிலையத்தின் மத்திய பாதுகாப்பு படை வீரர் தனது மனைவியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை காவலராக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எக்கேலா கணபதி (33) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவருக்கு சந்தோஜி (24) என்ற மனைவி இருந்தார்.. இவர்களுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடந்து முடிந்தது. பின்னர் இந்த தம்பதியர் […]
நெய்வேலி என்எல்சி-யில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடத்திவந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். ஊரடங்கு காரணமாக மின் தேவை குறைந்ததால் என்எல்சி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது. பொது முடக்கத்தில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், என்எல்சி-யில் மின்னுற்பத்தி அதிகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி […]
நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்போது பாதிப்படைந்துள்ளது. நெய்வேலி என்.எல்.சி வித்யா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக நிலக்கரியானது முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு செல்லும். இந்த விரிவாக பணியில், பெல்ட் செல்லும் பாதையில் […]
நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெய்வேலி லிங்கனைட் காப்பரேஷன் லிமிடேட் என்று அழைக்கப்படும் என்எல்சி அனல் மின் நிலையம் தென்னிந்தியாவில் உள்ள பெரிய அனல் மின் நிலையம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் வருடத்திற்கு 30 மில்லியன் டன் லிக்னைட் எடுக்கப்படுகிறது. அதேபோல் 51 காற்றாலை மூலம் 1.50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சோலார் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி […]