பாகிஸ்தானில் 16 சதவிகிதம் மக்கள் உணவு பாதுகாப்பு நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக உணவு மற்றும் வேளாண் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் முதல் பெய்துவரும் கனமழையின் காரணமாக பல்வேறு நகரங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் நிவாரண முகாம்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இது தவிர தோல் நோய், மலேரியா பல்வேறு வியாதி தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்ட […]
Tag: நெருக்கடி
ப்ளோரிடாவை தாக்கிய சக்தி வாய்ந்த புயலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை தாக்கிய மிக சக்தி வாய்ந்த புயல்களில் ஒன்றான இயான் புயல் தாக்கியதில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40க்கு மேல் அதிகரித்துள்ளது. அமெரிக்க வரலாற்றின் மிக மோசமான புயல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அந்த நாட்டின் ஃப்ளோரிடா மாகாணத்தை தாக்கியுள்ளது இந்த நிலையில் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் கேயோ கோஸ்டா எனும் கடற்கரை பகுதி அருகே இயான் சூறாவளிப்புயல் […]
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர், எரிவாயு நிறுவனங்கள் நெருக்கடியான நிலையை சாதகமாக்கி லாபம் பெறுவது ஒழுக்கக்கேடு என்று கூறியிருக்கிறார். உக்ரைனில் போர் தொடுத்த ரஷ்ய நாட்டின் மீது உலக நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்திருக்கின்றது. இதற்கு பதிலடியாக, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், எரிவாயு விநியோகத்தை ரஷ்யா குறைத்துக் கொண்டது. இதனால் ஐரோப்பிய ஒன்றியம், எரிவாயு தேவைக்கு அந்நாட்டை சார்ந்திருப்பதை தவிர்க்க தீர்மானித்திருக்கிறது. இவ்வாறான காரணங்களால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பல நாடுகள் […]
இலங்கை அதிபர் கோட்டபாய ராஜபக்சே ராஜினாமா செய்ய நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால் அவர் அது குறித்து ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் நடத்தும் போராட்டங்கள் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஊரடங்கு நடைமுறையில் இருந்தும், மக்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை. எனவே அதிக நெருக்கடி காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே தன் பதவியை ராஜினாமா செய்தார். எனவே, அவரின் ஆதரவாளர்கள், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில் அதிபர் கோத்தபாய ராஜபக்சே, ராஜினாமா […]
கடந்த சில மாதங்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது. அதனால் அத்தியவசிய பொருட்கள் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கு பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளது என்று தொழிலாளர் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் விவசாயிகளுக்கு பணவீக்கம் 6.9 சதவீதம் உயர்ந்தது. கிராமப்புற தொழிலாளர்களுக்கு பணவீக்கம் 6.33 சதவீதமாக உயர்ந்தது. உணவுப் பொருட்கள் மற்றும் ஆலைகளில் விலை […]
பிரிட்டிஷ் நாட்டின் நிதி அமைச்சர் ரிஷி சுனக்கின் மனைவியும் நாராயண மூர்த்தியின் மகளுமான அக்ஷதா இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு விழுக்காடு பங்குகளை வைத்துள்ளார். இதன் மதிப்பு சுமார் 7000 கோடி ஆகும். அவர் பிரிட்டிஷ் குடியுரிமையை பெறாததால் வெளிநாட்டில் இருந்து பெறப்படும் வருமானத்திற்கு பிரிட்டிஷ் விதிப்படி அவர் வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்நிலையில் அவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெறாமல் பிரிட்டனில் வசிப்பது மற்றும் வெளிநாட்டு வருமானத்திற்கு வரி செலுத்தாதது உள்ளிட்டவை நிதியமைச்சர் ரிஷிக்கு நெருக்கடியை […]
நிதி சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தூதரகங்களை தற்காலிகமாக மூடப்படுவதாக இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவுக்கு பின் அந்த நாட்டில் பொருளாதாரம் பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இந்தநிலையில் இலங்கையில் நிதிச்சிக்கன நடவடிக்கையாக 3 நாடுகளில் உள்ள தங்கள் நாட்டு தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதாக இலங்கை வெளியுறவுத்துறை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில் நார்வேயின் ஓஸ்லோ, ஆஸ்திரேலியாவின் சிட்னி மற்றும் ஈராக்கின் பாக்தாத் போன்ற நகரங்களில் […]
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா நான்கு ஆண்டுகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைக் காலத்தில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் சிறையில் சொகுசு வசதிகளை பெறுவதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு 2 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்த வழக்கு பெங்களூர் மாநகர 24 ஆவது அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி லக்ஷ்மி நாராயண பட், கிருஷ்ணகுமார், அனிதா, […]
தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவிற்கு உட்பட்ட வடவீரநாயக்கன்பட்டி, தாமரைக்குளம் மற்றும் கெங்குவார்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் உள்ள 182.50 ஏக்கர் அரசு நிலங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டணி அமைத்து, தனியாருக்கு பட்டா போட்ட விவகாரம் சார் ஆட்சியர் ரிஷப் நடத்திய விசாரணையில் அம்பலமானது. மேலும் 80 ஏக்கர் பரப்பளவு நிலத்தில் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் பணிபுரிந்த நில அளவையர்கள், வட்டாட்சியர்கள் என 7 பேர் மீது மாவட்ட ஆட்சியர் முரளீதரன் நடவடிக்கை எடுத்தார் […]
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆதரவாக ஆஜராகியுள்ள வக்கீல்கள் இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட வழக்கு என வாதாடியுள்ளனர். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி வரை மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்படாமலிருப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த 17ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர […]
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததால் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. அதன் மூலம் இந்திய அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் 68.3% புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து 4- வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி 70.2% புள்ளியுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து அணி 70.0% புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 69.0% புள்ளிகளுடன் 3வது […]
நாடு முழுவதும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை அமலில் உள்ள ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு விமானங்கள் இயக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஊரடங்கு காரணமாக விமானங்கள் இயக்கப்படாததால் விமானப் போக்குவரத்துத் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. ஊதியமின்றி விடுமுறை, 30% வரை ஊதியக் குறைப்பு என விமான நிறுவனங்கள் நிலைமையை சமாளித்து வருகின்றது. இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதிக்குப் பிறகு பயணிப்பதற்கான முன் பதிவுகளை மேற்கொள்ள ஏர் இந்தியா தவிர பிற விமான […]