நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அகண்ட ராவ் சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,62,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதனால் நெற் பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான் மற்றும் இலை சுருட்டு போன்றவற்றின் தாக்குதல் காணப்படுகிறது. இலை சுருட்டு புழுக்கள் என்பது இலைகளை நீளவாக்கில் மடக்கிக் கொண்டு அவற்றில் உள்ள […]
Tag: நெற்பயிர்
ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி, குணமங்கலம், ரெட்டிபாளையம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிர்களை சாகுபடி செய்து இருக்கின்றனர். இந்த நிலையில் பகலில் 6 மணி நேரமும் இரவில் 6 மணி நேரமும் வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் கடந்த சில வாரங்களாக இரவில் இரண்டரை மணி நேரமும் பகலில் இரண்டரை மணி நேரமும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் எந்த நேரத்தில் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முறையாக […]
கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வெள்ள சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டனர். கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புவனகிரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுற்றேரி மற்றும் சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பூவாலை கிராமங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை நேரில் சென்று பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர். முன்னதாக புவனகிரி பேருந்து நிலையம் அருகே கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மழையால் […]
கனமழையின் காரணமாக நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ச்சியாக 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் குறிஞ்சி வயக்காடு பகுதியில் இரவு வேளையில் கனமழை வெளுத்து வாங்கியது. இதேபோன்று சித்தூர், பூனாச்சி, நத்தமேடு, அய்யந்தோட்டம், சீலம்பட்டி, கூச்சிக்கல்லூர், ராமாச்சிபாளையம், சுப்பராயன்கொட்டாய், செல்லிக்கவுண்டனூர் போன்ற பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி காணப்பட்டது. மேலும் சுமார் 20-க்கும் மேற்பட்ட […]
நெற்பயிரை கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கம் கொடுத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் பூச்சியியல் துறை உதவி பேராசிரியர் ராதாகிருஷ்ணன் நெற்பயிரை கருப்பு நாவாய் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். எனவே நாவாய் பூச்சியின் குஞ்சுகள் மற்றும் வளர்ந்த பூச்சிகள் கூட்டமாக நெற்பயிரின் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தண்டுப் பகுதியில் சாற்றை உறிஞ்சும் தன்மை […]
காற்றுடன் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தது விவசாயிகளிடையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில் மன்னார்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழையுடன் காற்று வீசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. இதனையடுத்து மழையால் வயல்களில் தேங்கிய நீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே தற்போது பெய்து வரும் மழையால் அறுவடை பணிகள் மற்றும் மகசூலையும் பெரிதும் […]
தண்ணீரில் மூழ்கி நெற்பயிர்கள் அழுகியதால் இழப்பீடு வழங்க வேண்டி விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள செங்கோட்டை பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் அங்கு 80 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ள நெற்பயிர்களானது தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்துள்ளது . ஆனால் அப்பகுதியில் கடந்த 3 நாட்களாக சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்து உள்ளது . இதனால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள குண்டாறு, குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றால […]
நவரை பட்டத்தில் 2,000 ஏக்கருக்கு நெற்பயிர் நாற்று நடும் பணி தற்போது நடைபெற்று வருவதால் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் நவரை பட்ட நெற்பயிர் 5,000 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்கின்றனர். இந்த ஆண்டு சம்பா பருவத்தில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த போது மழை பெய்ததால் நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால் […]
திருச்சி மாவட்டம் பெருகமணியில் தொடர்ந்து பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நாசமானதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பெருகமணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்திருந்தனர். தற்போது அவைகள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாகவே மேலடுக்கு வளிமண்டலத்தின் சுழற்சி காரணமாக திருச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் அப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் […]
மயிலாடுதுறை அருகே கனமழை காரணமாக அறுவடைக்கு தயாரான குறுவை நெற்கதிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்மடைத்தன இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு மயிலாடுதுறை குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. நிலத்தடி நீரை பயன்படுத்தி மே மாதம் முன்னதாகவே குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் கீழே சாய்ந்து சேதமடைந்தன. […]