தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகநாளை (16-08-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம்: பட்டுக்கோட்டையின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பு பணியால் பட்டுக்கோட்டை நகா்-2, மகாராஜசமுத்திரம், பெருமாள்கோவில், லெட்சத்தோப்பு, பண்ணவயல் ரோடு மற்றும் வஉசி நகா் உள்ளிட்ட அறந்தாங்கி ரோடு மின்பாதைகளில் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது […]
Tag: நெல்லை மாவட்டம்
அருவியில் தண்ணீர் வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களில் குற்றாலம், பாபநாசம் அகஸ்தியர் அருவி மற்றும் மணிமுத்தாறு அருவி புகழ்பெற்ற அருவியாக இருக்கிறது. இந்நிலையில் தற்போது தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையானது தொடங்கியுள்ளதால் பல்வேறு அணைகளுக்கும், அருவிகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தற்போது பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் மணிமுத்தாறு அருவியில் குளிப்பதற்காக வருடம் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். கடந்த சில நாட்களாக […]
நீதிமன்ற வளாகத்தில் மத போதகரை வாலிபர் அரிவாளால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்குள்ள மகிளா நீதிமன்றத்தில் நடந்த ஒரு விசாரணைக்காக தாழையூத்து பகுதியைச் சேர்ந்த மத போதகரமான ஜோஸ்வா இமானுவேல் என்பவர் வந்திருந்தார். இவர் நீதிமன்றத்தில் அமர்ந்திருக்கும் போது திடீரென ஒரு வாலிபர் மதபோதகரை அரிவாளால் வெட்டுவதற்கு முயற்சி செய்தார். இதைப் பார்த்த வேணுகோபால் என்ற காவலர் […]
நமது நாட்டில் ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை தொடர்பாக பல சம்பவங்கள் அரங்கேறி வருகின்றது. மாணவ, மாணவிகள் தொடர்ந்து இதனால் பெரும் டார்ச்சர் அனுபவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பள்ளி ஆசிரியர்கள் மாணவிகளிடம் தவறான எண்ணத்தோடு பழகுவது, ஆபாச வார்த்தைகள் பேசுவ.து தேவையில்லாத இடங்களில் தொட்டு பேசுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நெல்லையில் 10ஆம் வகுப்பு மாணவனுக்கு விடுதி காப்பாளர் மற்றும் 12ஆம் வகுப்பு சக மாணவன் ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்த […]
சாலைகளில் போக்குவரத்து இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சியினர் அகற்றியுள்ளனர். நெல்லையில் மாநகராட்சி பகுதிகளில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பேனர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் நெல்லை டவுன் வடக்கு ராஜ வீதி, கீழ ராஜவீதி சாலையில் அனுமதியின்றி செயல்பட்ட கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மேலும் சாலைகளில் வைக்கப்பட்ட பேனர்களையும் மாநகராட்சி பணியாளர்கள் அகற்றியுள்ளனர். இந்த பணிகள் மாநகர நகர்நல அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் கொலை சம்பவங்கள் குறைந்து வருவதாக டி.ஜி.பி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். நெல்லையில் உள்ள சுத்தமல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் உள்பட 3 பேர் இருசக்கர வாகனத்தில் மதுபோதையில் சென்றனர். இவர்களை மடக்கிய போலீசார் மது அருந்திவிட்டு இருசக்கரம் ஓட்டியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு மார்க்ரெட் தெரசா பணியில் இருந்தபோது […]
மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே ரேஷன் கடை அமைத்துத் தர கோரிக்கை விடுத்து ஆட்சியர் அலுவலகம் முன் திடீரெனெ சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள பாலமடை கிராமத்தில் அம்மன் கோவில் தெரு மற்றும் இந்திரா நகர் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடையானது , சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளதால் மாதம்தோறும் அதிக தொலைவு அலைந்து, ரேஷன் பொருள்களை வாங்கி வர […]
நெல்லை மாவட்டத்தில் அனுமதியின்றி வேன் மூலம் மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளார். நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்துள்ள கூத்தாண்டவர்குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பழவூர் காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் 3 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் செட்டிகுளத்தை சேர்ந்த சதீஷ்(25), ஊரல்வாய்மொழியைச் சேர்ந்த இசக்கியப்பன்(36), கீழ்குளத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(32) என்பது தெரிய வந்துள்ளது. […]
நெல்லையில் மீன் வைக்கும் பெட்டியை திருடி சென்ற 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள செட்டிகுளம் பகுதியில் ரமேஷ்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரி முட்டம் பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் தொழிலுக்காக மீன்களை ஏற்றுவதற்கு மீன் பெட்டிகளை அவரது வீட்டின் அருகில் ஒரு இடத்தில் அடுக்கி வைத்துள்ளார். இதனையடுத்து அந்த பெட்டிகள் அடிக்கடி திருடு போவது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இது குறித்து ரமேஷ் […]
நெல்லை மாவட்டத்தில் வயிற்றுவலியால் துடித்த விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கீழசெவல்பட்டியில் ராமையா(60) என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான ராமையா சில தினங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த விவசாயி அவருக்கு சொந்தமான தோட்டத்தில் வைத்து விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து ராமையா வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியுள்ளனர். இதனைத்தொடர்ந்து தோட்டத்தில் […]
நெல்லை மாவட்டத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை 2ஆம் அலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ள நிலையில் தமிழகம் முழுவதிலும் வியாபாரிகள் கடைகளை திறக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் வியாபாரிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ளனர். இதனையடுத்து நெல்லை மாவட்டம் பணகுடி வியாபாரிகள் சங்கம் சார்பில் நலிவடைந்த வியாபாரிகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பணகுடி வியாபாரிகள் சங்க கட்டிடத்தில் வைத்து சங்கத் தலைவர் […]
நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கேஸ் சிலிண்டர் ஊழியர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு எல்.பி.ஜி சிலிண்டர் தொழிற்சங்கத்தை சேர்ந்த மாவட்ட தலைவர் பாலு, செயலாளர் ராஜகோபால், பொருளாளர் சக்திவேல் ஆகியோரின் தலைமையில் கேஸ் சிலிண்டர் வினியோகிக்கும் தொழிலாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் கொரோனா காலத்திலும் கேஸ் வினியோகம் செய்து வருவதால் […]
ஊரடங்கால் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே சாராயம் தயாரித்த நெல்லையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 10-ஆம் நாள் முதல் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நெல்லை சி. என் கிராமப் பகுதியைச் சேர்ந்த உடையார், சூர்யா ஆகிய இருவர் வீட்டிலேயே ஊறல் செய்து சாராயம் தயாரித்துள்ளன. அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு வித்தியாசமான வாசனை வரவே சோதனையில் ஈடுபட்டனர். போலீசாரின் வருகையை அறிந்த […]
நெல்லையில் பறக்கும் படையினர் காரில் வந்தவரிடம் 70 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனால் தேர்தல் குழு பணம் பட்டுவாடா போன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெறாமலிருக்க அனைத்து பகுதிகளிலும் பறக்கும் படையினரை நியமித்தது. இதனால் அவர்கள் ஆங்காங்கே தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திருநெல்வேலி மாவட்டம் கே.டி.சி நகரில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக […]
நெல்லை மாவட்டத்தில் காவல்துறையினர் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா தொற்று பல உயிர்களை பறித்த நிலையில் அரசாங்கம் அயராது பாடுபட்டு பல முயற்சிகளை மேற்கொண்டு தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் மீண்டும் உருவெடுத்த கொரோனா பாரபட்சமின்றி அனைத்து மனித உயிர்களை பழிவாங்க ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் குமரி மாவட்டம் பத்துக்காணியை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உவரியில் உள்ள காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு […]
திசையன்விளை சுயம்புலிங்க சுவாமி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் சுவாமியை பூஜித்து பிராத்தனை செய்வார்கள் . இந்நிலையில் சிவபெருமானுக்கு உகந்த நாளான மகா சிவராத்திரியை முன்னிட்டு இக்கோவிலில்,” தென் தமிழ்நாடு சேவாபாரதி ” சார்பாக சிவலிங்கத்திற்கு 1008 சிவபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெண்கள் சிவ சுலோகங்கள் கூறியபடி சுவாமியை தரிசனம் செய்தார்கள் . இதனைத் […]
நெல்லை மாவட்டத்தில் சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் சீவலப்பேரி சுடலைமாடசுவாமி கோவில் அமைந்துள்ளது . இந்தக் கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் கோவில் கமிட்டி குழு சார்பில் முன்மண்டபம் மற்றும் சுற்றுப் பிரகார மண்டபம் ஆகியவை கட்டப்பட்டது. இந்த கோவிலின் புதிய மண்டபங்களை திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் மணிவண்ணன் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா நடைபெற்றது. மேலும் மூலவர் […]
அறுவடை இயந்திரம் கொண்டு வருவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் பழைய பேட்டையில் சிவசுப்பு என்பவர் வாழ்ந்து வருகிறார் . இவரது சொந்த வயல் கொம்பந்தபந்தனூரில் உள்ளது. அதில் விவசாயம் செய்து குடும்பத்தை நடத்திவருகிறார். அதேபோன்று முத்துக்குமார் என்பவருடைய வயல் சிவ சுப்புவின் வயலுக்கு அருகே உள்ளது . இதனிடையே இது நெல் சாகுபடி காலம் என்பதால் சிவசுப்பு தனது வயலில் நெல் பயிரிட்டு அறுவடை செய்ய எந்திரம் […]
டெல்லியில் சிக்கன் சாப்பிட்ட 4 வயது சிறுமி வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம், தச்சநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கரன் என்பவரின் 4 வயது மகள் வைஷ்னவி. இவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர்கள் சிக்கனை வாங்கி கொடுத்துள்ளனர். சிக்கனை சாப்பிட்ட ஐந்து நிமிடத்தில் அந்த குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து தச்சநல்லூர் போலீசார் […]
நெல்லை மாவட்டத்தில் முன்பகை காரணமாக நண்பரை அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை செய்த மூவரை காவல்துறையினர் கைதுசெய்தனர் . நெல்லை பாளையங்கோட்டை சேர்ந்தவர் மகாராஜன். இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மகாராஜனுக்கு அவரது நண்பர் மணிகண்டன், அருள் உள்ளிட்ட மூன்று பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த முன்பகை காரணமாக நெல்லை சந்திப்பு பகுதியில் வைத்து மகாராஜனை அருள், மணிகண்டன் உள்ளிட்ட மூவர் […]
பெட்டிக்குள் பெட்டி வைத்து பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் குற்றம்சாட்டினார். 3 நாள் சுற்றுப்பயணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாவது நாளான இன்று காலை நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை தீர்ப்பதற்காக மனுக்களை பெற்று வருவதாகவும் அதனை வாங்கி ஒரு பெட்டியில் போடுவதாகவும். குறிப்பிட்ட அந்த மனுக்கள் பெட்டிக்குள் இன்னொரு […]
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடியை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த விவரங்களை வழங்வதற்காக நம்முடைய செய்தியாளர் நாகராஜன் இணைப்பில் இருக்கிறார். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே 100 அடி ஆழம் விவசாய கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்கும் பணிகளில் வனதுறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தி கரடியை மீட்க்கும் நடவடிக்கைகளில் தற்போது ஈடுபட்டு வரும் தமது செய்தியாளர் தெரிவிக்க கேட்டோம்.
நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்று பகுதியில் அமைந்துள்ள குறுக்குத்துறை முருகன் கோவிலை கடுமையான வெள்ளம் சூழ்ந்துள்ள போதிலும் 300 ஆண்டுகளாகத் தாங்கி நின்று வரலாற்று சிறப்புமிக்க பொக்கிஷமாக திகழ்கிறது. நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற குறுக்குதுறை முருகன் திருக்கோவில் கடந்த 17 ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. கடந்த 300 ஆண்டுகளாக தாமிரபரணி ஆற்று வெள்ளத்தை தாக்குப்பிடித்து கம்பீரமாய் காட்சியளிக்கிறது. படகுபோல் கட்டப்பட்டுள்ள கோவிலின் அமைப்பே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. வெள்ளம் […]
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாட திட்டத்தில் இருந்து அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ ஆங்கில இலக்கியம் பாடத்திட்டத்தில் எழுத்தாளர் அருந்ததி ராயின் வாக்கிங் வித் காம்ரேட்ஸ் புத்தகம் இடம்பெற்றிருந்தது. இதற்கு அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்த நிலையில் இந்தப் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் […]
நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அபகரித்த திமுக பிரமுகரை திருடன் என தமிழக அரசு அறிவிக்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான கேடிசி நகர் அருகே 126 ஏக்கர் நிலத்தை சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை திமுக பிரமுகர் ஒருவர் அபகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலத்தை அபகரித்த திமுக பிரமுகரை திருடன் என்று தமிழக […]
நெல்லையில் பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த சில தினங்களுக்கு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இருந்த போதிலும் நெல்லையில் வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில் நெல்லையில் மாநகர பகுதிகளில் கருமேகம் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. நெல்லை சந்திப்பு கொக்கிரகுளம், வண்ணார்பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி […]
நெல்லையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஆயுதங்கள் கொண்டு ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்கில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இரவு 10 மணியுடன் விற்பனையை முடித்துவிட்டு பங்க் அலுவலக அறையில் ஊழியர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் நடுஇரவில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் பங்கில் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பி கேட்டனர். ஊழியர்கள் மறுக்கவே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட […]
நெல்லை மாவட்டம் விக்ரமசிங்க புரத்தில் மூதாதியர் கல்லறையை சேதப்படுத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இளைஞர் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தீக்குளிக்க முயன்ற கணேசன் நெல்லி மாவட்டம் விக்ரமசிங்கபுரம் கோட்டை விலைப்பட்டியை சேர்ந்தவர். இவரது தந்தை சுப்பிரமணி நாடார் பெயரில் அதே பகுதியில் இருந்து 4.05 ஏக்கர் நிலத்தில் இரண்டு ஏக்கர் நிலத்தை கடந்த 1984-ஆம் ஆண்டு காலத்தியா பிள்ளை என்பவருக்கு விற்பனை செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு […]
நெல்லை மாவட்டம் மனோர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு.முருகன் என்பவர் படுகாயம் அடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்க சென்றபோது உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக திரு.முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேற்கு தொடர்ச்சி மலை நிலப்பரப்பு பகுதிகளில் பெய்த மழையால் 175 நாட்களுக்கு பின் பாபநாசம் அணை 100 அடியை தாண்டியுள்ளது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரதானமான பாபநாசம் அணை, சேர்வலாறு அணை, மணிமுத்தாறு அணை உள்ளிட்ட அணைகள் உள்ளன. தென்மேற்கு பருவமழை காலத்தில் அணைகளுக்கு நீர் வரத்து அதிகம் இருக்கும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை ஜூன் இரண்டாம் வாரத்தில் தொடங்கிய நிலையில் போதிய மழை இல்லாமல் இருந்தது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சிகிச்சைக்கு வர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருக்கும் குமரன் தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அதே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் இரண்டு பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனவால் பாதிக்கப்பட்ட அவர்கள் அரசின் வழிமுறைகளை மீறி வெளியே சுற்றித் திரிந்ததால் 6 பேரையும் சுகாதாரத்துறையினர் சிகிச்சைக்காக அழைத்துச் […]
நெல்லை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 132 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வரை நெல்லையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1629 ஆக இருந்த நிலையில் தற்போது 1761 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 37 பேர் மாநகர பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 804 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று முழு ஊரடங்கால் நெல்லை மாவட்டத்தில் சாலைகள் முழுவதும் வெறிச்சோடி […]