திருநெல்வேலியில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதில் 1258 பேர் குணமடைந்து, 28 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்திய அளவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஆறாவது இடத்தில் இருக்கும் தமிழகம், தரமான சிகிச்சை வழங்கி அதிகமானோரை குணப்படுத்தி வீடு அனுப்பி வருகிறது. அந்த வகையில் இந்திய அளவில் கொரோனா பாதித்த அதிகமானோரை […]
Tag: நெல்லை
கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் வீகிதத்தில் நெல்லை முதலிடம் வகிக்கின்ற்றது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாததால் சமூகவிலகலே சிறந்த தீர்வு என்ற வகையில் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். அதேநேரத்தில் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற தேவைகளுக்காக வெளியே வருபவர்களை தடுக்கும் வகையில் போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் 1683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள […]
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆங்காங்கே 30-40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. அதேபோல சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நெல்லையில் கொரோனா ஆபத்தை உணராமல் வயல்வெளியில் கூட்டாகச் சேர்ந்து உணவு சமைத்து சாப்பிட்ட 8 இளைஞர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழகஅரசு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, ஏப்ரல் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் துபாய் சென்று திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது […]
திருநெல்வேலி , கோவை மாவட்டமும் முடக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன் மத்திய அரசு அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 80 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கினர். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு […]
தமிழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. இன்று மட்டும் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. காலை 11 மணிக்கு ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த ஒருவர்க்கு கொரோனா இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி படுத்தியநிலையில் தற்போது மேலும் […]
வரதட்சணையாக இரண்டு நாட்கள் இலவச மருத்துவ முகாமை கேட்டு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார் பயிற்சி ஆட்சியர் நெல்லை மாவட்டத்தின் பயிற்சி ஆட்சியராக இருப்பவர் சிவகுரு பிரபாகரன். தஞ்சாவூர் மாவட்டத்தில் பிறந்த இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்து பெண் பார்க்கும் பணி தீவிரமாக நடந்து வந்த நிலையில் இவர் திருமணத்திற்கு விதித்த நிபந்தனை அனைவரையும் சிந்திக்க வைத்தது. தான் பிறந்த மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார பகுதிகளுக்கு வாரத்தில் இரண்டு நாட்களாவது இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும் […]
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே, மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் . ஆலங்குளதிற்கு சென்று கொண்டிருந்த மினி பஸ் , துத்திக்குளம் சாலை அருகே வளைவில் அதிவேகத்தில் திரும்பியபோது, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஓட்டுனர் அருள்ராஜ், நடத்துநர் பால்ராஜ் மற்றும் 23 பயணிகள் காயமடைந்தனர். ஆலங்குளம் அரசு மருத்துவமனை மற்றும் பாளையங்கோட்டை மாவட்ட மருத்துவமனைகளில், அவர்கள் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் .இதுக்குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர் .