தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்தது. அதனால் மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல இடங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. அதனால் ஏரி மற்றும் குளங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. தமிழகத்தில் ஜூலை 12 வரை மழை தொடரும் என வானிலை […]
Tag: நெல் மூட்டை
நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: மதுரை மாவட்டம் தொப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திறந்தவெளியில் தார்பாய் போட்டு மூடப்பட்டு, மூடப்படாமல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் நனைந்து சேதமடைந்தது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் வானிலை ஆய்வு […]
பெரம்பலூரில் கொள்முதல் செய்யப்படாமல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமடைந்துள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் வட்டத்தில் ஒகளூர், அகரம்சீகூர், துங்கபுரம், மண்டபம், காடூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் நெல் கொள்முதல் செய்வதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் திறக்கப்பட்டன. இதையடுத்து அங்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த கொள்முதல் நிலையங்களில் கடந்த 20 நாட்களாக முறையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. அதற்கு பல்வேறு […]