நேபாள நாட்டின் கண்டகி மாவட்டத்தில் போக்ரா நகரத்தின் ரங்கசாலா பகுதியில் நடந்த கைப்பந்து போட்டியில் பங்கேற்ற தமிழக வீரர் மர்ம மரணமடைந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் பகுதியைச் சேர்ந்த கைப்பந்து விளையாட்டு வீரர் ஆகாஷ் மரணமடைந்துள்ளார். 27 வயதான கைப்பந்து வீரர் ஆகாஷின் உடலை தமிழ்நாடு கொண்டுவர நடவடிக்கை எடுக்க பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். இதற்கிடையே மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Tag: நேபாளம்
இந்திய மற்றும் வியட்நாம் நாடுகளைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ் (78). இவர் 1970 -ஆம் ஆண்டுகளில் ஆசியாவில் 20-க்கும் மேற்பட்ட கொலைகளை செய்த கொடூரன் என அறியப்பட்டவர். மேலும் அவரை கொலைகார பாம்பு, பிகினி கொலைகாரர் மற்றும் பிரெஞ்சு தொடர் கொலைகாரர் எனவும் அழைக்கின்றனர். இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலாவாசி ஒருவருக்கு விஷம் கொடுத்துள்ளார். மேலும் இஸ்ரேல் நாட்டவரை கொலை செய்தது போன்ற குற்றத்திற்காக இந்தியாவில் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர். […]
நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பயணிகள் உயிரிழந்தனர். நேபாளத்தின் கவ்ரேபாலன்சோக் மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். “மத விழாவிற்கு வந்தவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மாலை 6.30 மணியளவில் (உள்ளூர் நேரம்) விபத்துக்குள்ளானது. 20 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். Nepal | At least 13 dead in a road accident in Kavrepalanchok district of central Nepal "The bus […]
நேபாளத்தில் கடந்த 20-ஆம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைக்கு வாக்குபதிவு நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு 165 உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாகவும், 110 பேர் விகிதாச்சார தேர்தல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் 2 வாரங்களுக்கும் மேலாக எண்ணப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை 163 தொகுதிகளின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு தொகுதிகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை தொடர்கிறது. இந்நிலையில் 85 இடங்களை கைப்பற்றி […]
நேபாளத்தில் நீண்ட நாட்களாகவே அரசியலில் ஸ்திரமற்ற சூழல் நிலவி வருகிறது. கடந்த 2006 ஆம் வருடத்தில் இருந்து பதவியேற்ற எந்த ஒரு பிரதமரும் முழு பதவிக்காலம் வரை பணியாற்றவில்லை. நேற்று முன்தினம் 275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது. மேலும் 550 உறுப்பினர்களைக் கொண்ட 7 மாகாண சட்ட சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் 60% ஓட்டுகள் பதிவானதாக நேபாளத் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. பின்னர் வாக்குகளை என்னும் பணி உடனடியாக […]
நேபாளத்தில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், மக்கள் காலை முதலே வாக்களிக்க தொடங்கியுள்ளனர். நேபாளத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்று காலை 7 மணி அளவில் வாக்குப்பதிவு ஆரம்பமானது. இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்துள்ளது. மக்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழு மாகாணங்களில், வாக்களிக்க தகுதி உடையவர்கள் சுமார் ஒரு கோடியே 79 லட்சம் பேர். உறுப்பினர்கள் 275 பேரில் 165 நபர்கள் நேரடியாக வாக்கு செலுத்துவதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மீதமிருக்கும் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் அமைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு எஸ்டேட்டில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. எஸ்டேட்டில் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இந்த கொலை வழக்கில் தொடர்பு இருக்கலாம் என்று கருதப்பட்ட கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்ததோடு, வழக்கில் சம்பந்தப்பட்ட […]
நேபாள கிரிக்கெட் அணியினுடைய கேப்டனாக இருந்த வீரர் சந்தீப் லாமிச்சானே, 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைதாகியுள்ளார். நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த சந்தீப் லாமிச்சானே, ஐபிஎல் போட்டியில் விளையாடிய முதல் நேபாள வீரராவார். இந்நிலையில், இவர் 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிக்கி உள்ளார். இது குறித்து அந்த சிறுமி தெரிவித்த புகாரில், ஒரு நபரின் மூலமாக சந்தீப்பை சந்திக்க அனுமதி கிடைத்தது. அதன் பிறகு கடந்த […]
நேபாளத்தில் பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு 13 நபர்கள் பலியானதாகவும் 10 நபர்கள் மாயமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேபாள நாட்டின் மேற்கு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அச்சாம் என்னும் மாவட்டத்தில் 13 நபர்கள் பலியாகினர். மேலும் 20 நபர்கள் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. 7 நபர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். எனவே, அவர்களை மீட்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது. தற்போது, மாயமானவர்களில் 10 நபர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள். மீதமுள்ள 10 பேரை கண்டுபிடிக்க மீட்பு படையினர், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு […]
நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு நேபாளத்தில் இன்று கன மழை பெய்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உடனடியாக தேடுதல் மற்றும் மீட்பு பணிக்காக ஹெலிகாப்டர்களை அனுப்ப உள்துறை அமைச்சர் இதன் காரணமாக காணாமல் போனவர்களில் இதுவரை 10 பேர் மீட்கப்பட்டிருக்கின்றனர். மேலும் பத்து பேரை கண்டுபிடிக்கும் முயற்சியில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு இருக்கின்றார்கள் இந்த நிலையில் […]
நேபாள தேசிய கிரிக்கெட் அணியின் கேப்டன் சந்தீப் லமிச்சானேவுக்கு நேபாள நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. கடந்த ஆண்டு நேபாள கிரிக்கெட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டவர் லெக் ஸ்பின்னர் சந்தீப் லமிச்சானே.. லமிச்சானே முன்பு நேபாள 19 வயதுக்குட்பட்ட அணிக்கு கேப்டனாக இருந்தார், முதலில் 2016 இல் ஆசியக் கோப்பையின் போது மற்றும் 2017 இல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கும் கேப்டனாக இருந்தவர் லமிச்சானே. மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கிலும் (ஐபிஎல்) […]
இந்தியாவின் 76 ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு தேசியக்கொடி வண்ணத்திலான தலைப்பாகை அணிந்து வந்திருந்த பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வணக்கம் செலுத்தி நாட்டு மக்களுக்கு உரையாற்றியுள்ளார். இந்திய சுதந்திர தினத்திற்கு நேபாள் அரசு தனது வாழ்த்துக்களை கூறியுள்ளது. மேலும் நேபாள வெளி விவகார மந்திரி டாக்டர் நாராயணன் காத்கா இந்திய வெளி விவகார மந்திரி டாக்டர் எஸ் ஜெயசங்கரை தொடர்புகொண்டு நேபாளம் […]
நேபாளத்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. நேபாளத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் மணமக்கள் இருவரும் சண்டை போட்ட வீடியோ இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிடப்பட்டது. அதில் மணமேடையில் திருமண கோலத்தில் இருக்கும் மணமக்கள் இருவரும் உணவு பரிமாறிக்கொள்ளும் சடங்கு நடக்கிறது. https://www.instagram.com/p/Cfpp8eQqlzy/ அப்போது திடீரென்று, மணமகளும், மணமகனும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி தள்ளுகின்றனர். இருவரும் உருண்டு, சண்டையிடுகிறார்கள். இணையதளங்களில் வைரலாக பரவிக் […]
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வடக்கு நேபாளத்தில் இந்தியாவின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பைட்டடி என்ற மாவட்டத்தில் நான்கு இந்திய சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு பேரையும் இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரடா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து […]
திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவில் இருந்து 147 கிலோ மீட்டர் தொலைவில் திக்தெல் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் திடீரென காலை 7:58 மணி அளவில் பயங்கர நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் உறுதி செய்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிட்டர் அளவுகோலில் 5.5 பதிவாகியுள்ளது. இந்நிலையில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் உடனடியாக […]
நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளி வாகனங்களை இந்தியா பரிசாக வழங்கியது. இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையில் வலுவான நட்புறவை வளர்த்து வருகின்றனர். இந்த நீண்டகால கூட்டாண்மையை கட்டி எழுப்புவதற்காக நேபாளத்தின் சுகாதார மற்றும் கல்வித் துறைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக நேபாளத்திற்கு 75 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 17 பள்ளி பேருந்துகளை இந்தியா நேற்று பரிசாக வழங்கியது. இந்நிலையில் நேபாளத்தின் கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மந்திரி […]
நேபாளத்தின் காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில் பானி பூரி விற்பனைக்கு தடை விதித்து அந்நாட்டு அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. காலரா அதிகரித்து வருவதாலும் பானிபுரி பயன்படுத்தப்படும் பானியில் காலரா பாக்டீரியா இருப்பதால் தடை விதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது காலராவால் பாதிக்கப்பட்டவர்கள், டென்குவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலரா அறிகுறி ஏதாவது தென்பட்டால் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோடை மற்றும் மழைக்காலங்களில் பரவும் வயிற்றுப்போக்கு,காலரா போன்ற நோய்கள் குறித்து ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடன் […]
நேபாளத்தில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது, காத்மாண்டுவிலிருந்து சுமார் 161 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, தேசிய புவியியல் ஆய்வு மையமானது, நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.3 என்ற அளவில் ரிக்டர் அளவுகோலில் பதிவாகியிருப்பதாக கூறியுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.
நேபாளத்தின் ராணுவம் நேற்று எவரெஸ்ட் மலைச்சிகரம் உட்பட சுமார் நான்கு மலைகளிலிருந்து 34 டன் கழிவுகள் நீக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது. நேபாள நாட்டின் ராணுவம் ஒரு குழுவினருடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 5-ம் தேதியிலிருந்து மலைச் சிகரங்களில் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறது. அதில், ராணுவத்தைச் சேர்ந்த 30 பேர், 48 மலையேற்ற வழிகாட்டிகள், மருத்துவர்கள் 4 பேர் உட்பட 82 நபர்கள் அதில் இருந்தனர். இம்மாதம் ஐந்தாம் தேதி, உலக சுற்றுசூழல் தினத்தன்று தூய்மை பணி […]
நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த இந்திய தம்பதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் விபத்துக்குள்ளான தாரா ஏர் என்னும் விமானத்தில் இந்தியாவைச் சேர்ந்த நான்கு பேர் பயணித்திருக்கிறார்கள். தற்போது, அவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவை சேர்ந்த அசோக் குமார் திரிபாதி-வைபவி பண்டேகர் என்ற தம்பதி விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி, விவாகரத்துக்குப் பின் வருடந்தோறும் 10 நாட்கள் தம்பதியர் இருவரும் குழந்தைகளோடு ஒன்றாக இருக்க வேண்டும். எனவே, […]
நேபாளத்தில் விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து 14 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் இருக்கும் போகாரா என்னும் நகரத்திலிருந்து 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் என்னும் விமானமானது, சிறிது நேரத்தில் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்தது. அந்த விமானத்தில் இந்தியாவை சேர்ந்த 4 நபர்களும், ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இரண்டு நபர்களும் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நேபாள ராணுவத்தினர் விமானத்தை தீவிரமாக தேடி வந்தனர். அதனை தொடர்ந்து விமானம் சனோஸ்வெர் என்னும் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, […]
நேபாளத்தில் தாரா ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான ட்வின் ஓட்டர் 9-N-AET விமானம் பொக்காராவிலிருந்து நேற்று காலை 9.55 மணிக்கு புறப்பட்டது. அதன் பிறகு சில நிமிடங்களில் தொடர்பை இறந்ததாக விமான நிலைய செய்தி தொடர்பாளர் அறிவித்தார். இதையடுத்து நேபாள ராணுவத்திற்கு உள்ளூர்வாசிகள் அளித்த தகவலின் படி அந்த விமானம் லாம்சே ஆற்றின் முகப்பில் விலை சரிவின் கீழ் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. நேபாளத்தில் மாயமான விமானம் முஸ்டங் மாகாணம் தசங்-2என்ற பகுதியில் சுக்குநூறாக நொறுங்கிய விபத்துக்குள்ளான புகைப்படத்தை […]
நேபாளத்தில் இருந்து 9.55 மணிக்கு பொக்காராவில் இருந்து ஜோம்சோமுக்கு புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது. அந்த விமானத்தில் நான்கு இந்தியர்கள், மூன்று ஜப்பானியர்கள் உள்ளிட்ட 22 பேர் பயணம் மேற்கொண்டனர். காணாமல் போன விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், மாயமான விமானம் நேபாளத்தின் மஸ்டாங் அருகே கோவாங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இன்னும் விமானத்தின் முழுமையான நிலை குறித்து கண்டறியப்படவில்லை என்று திரிபுவன் சர்வதேச விமான நிலைய தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த 4 பேர் உட்பட 19 பயணிகளுடன் சென்ற நேபாள விமானம் மாயமான நிலையில், அது விழுந்த இடத்தை கண்டறிந்துள்ளனர். நேபாளத்தில் 22 நபர்களுடன் சென்ற தாரா ஏர் என்னும் விமான நிறுவனத்தினுடைய இரண்டு எஞ்சின்கள் கொண்ட 9 NAET என்னும் விமானமானது, பொக்ரா எனும் பகுதியிலிருந்து ஜோம்சோம் என்ற நகருக்கு புறப்பட்டு சென்றிருக்கிறது. அதனைத்தொடர்ந்து இன்று காலையில் அந்த விமானமானது மாயமானதாக தெரிவிக்கப்பட்டது. எனவே, விமானத்தை கண்டறியும் பணி தீவிரமாக நடந்தது. இந்நிலையில் தற்போது […]
நேபாளத்தில் 19 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் இன்று காலை 9.55 மணிக்கு பொக்காராவிலிருந்து ஜோம்சோமுக்கு சென்ற விமானம் மாயமாகியுள்ளது. தாரா ஏர் நிறுவனத்தின் விமானம் சரியாக இன்று காலை 9.55 மணிக்கு சென்ற போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.. இந்த இரட்டை எஞ்சின் கொண்ட விமானத்தை பொருத்தவரை பறந்து கொண்டிருந்தபோது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாயமான விமானத்தில் 4 இந்தியர்கள், 3 […]
நேபாளத்தில் பத்தாவது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி ஒரு பெண் சாதனை படைத்திருக்கிறார். நேபாளத்தில் வசிக்கும் மலையேற்றத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஷேர்பா என்ற இன பெண் பத்தாவது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருக்கிறார். இதன் மூலம் அவரின் சாதனையை அவரே முறியடித்திருக்கிறார். 48 வயதாகும் லக்பா ஷேர்பா, என்ற அந்த பெண் மற்றும் பிற மலையேற்ற வீரர்கள் பருவநிலை சாதகமாக இருப்பதை பயன்படுத்திக்கொண்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று எவரெஸ்ட் சிகரத்தில் பயணத்தை நிறைவு செய்தனர் […]
நேபாளத்தில் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் வெளிநாட்டுவாழ் நேபாளிகள் வங்கிகளில் டாலர்கணக்கு தொடங்க வருமாறு அந்நாட்டு அரசானது அழைப்பு விடுத்துள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளம் இறக்குமதியை சார்ந்த நாடு ஆகும். கொரோனா அலை பரவிய சமயத்தில் சுற்றுலா வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பெட்ரோலிய பொருட்கள் முதல் அத்தியாவசியப் பொருட்கள் வரை இறக்குமதி தொடர்ந்தது. இதன் காரணமாக நாட்டில் அந்நிய செலாவணி கையிருப்பானது கடுமையாக குறைந்து காணப்பட்டது. சென்ற 2021ஆம் வருடம் ஜூலை மாதத்தில் […]
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் இறக்குமதி உயர்வால் கடந்த ஆண்டு ஜூலை முதல் அந்நிய செலவாணி கையிருப்பு குறைய தொடங்கியுள்ளது. அதேபோல் ஏற்றுமதி மற்றும் சுற்றுலா துறைகள் மூலம் ஈட்டப்படும் வருவாயும் குறைய ஆரம்பித்துள்ளது. இந்த நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு கடந்த வருடம் ஜூலை மாதத்தில் ரூ.87 ஆயிரத்து 537 கோடியாக இருந்த நிலையில் இந்த வருடம் பிப்ரவரியில் ரூ.72 ஆயிரத்து 537 கோடியாக 17% குறைந்துள்ளது. அந்நிய செலவாணி கையிருப்பு போக போக […]
நேபாளத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் இருக்கும் சன்குவாஷபா என்னும் மாவட்டத்தின் மதி பகுதியிலிருந்து ஒரு பேருந்து இன்று காலையில் டமாக் பகுதி நோக்கி புறப்பட்டது. அப்போது சத் கும்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து திடீரென்று விபத்துக்குள்ளாகி, 2 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 5 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பேருந்து அதிக […]
இந்தியர்களை குறிவைத்து ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்த இரண்டு சீனர்கள் மற்றும் 115 நேபாளிகளை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். நேபாளத்தின் தலைநகரான காத்மண்ட் மற்றும் பக்தபூரில் இந்தியர்களை குறிவைத்து சில கும்பல் ஆன்லைன் கடன் செயலி மூலம் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாக காவல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய அதிகாரிகள் இது தொடர்பாக 2 சீனர்கள் மற்றும் 115 நேபாளிகளை கைது செய்துள்ளார்கள். அவர்களிடம் […]
நேபாளத்தின் வெளியுறவுத் துறை அமைச்சகமானது, போர் பதற்றம் அதிகரித்திருப்பதால் உக்ரைன் நாட்டிலிருந்து தங்கள் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவித்திருக்கிறது. ரஷ்யாவின் பாராளுமன்றத்தில் உக்ரைன் நாட்டின் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளிக்கும் படைகளை பயன்படுத்துவதற்கு விளாடிமிர் புடினுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் இரு நகர்களை ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு படைகளை அனுப்புவதற்கு விளாடிமிர் புடினுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது அந்நாட்டின் எல்லை பகுதிக்கு அருகில் போர் படைகளை […]
நேபாளத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தக்கூடிய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசி கட்டுப்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, நேபாளத்தில் சுமார் 300 கிலோமீட்டர் தொலைவிற்கு மின்தடம் அமைப்பதற்காகவும் சாலைகளை மேம்படுத்துவதற்காகவும் சுமார் 3,700 கோடி நிதி வழங்கியிருக்கிறது. இதனால் 80 சதவீத மக்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த திட்டங்களை மேற்கொள்ளும் வாரியத்தில் நேபாள அரசுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என்று எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. கண்ணீர் புகை […]
நேபாளத்தில் யுரேனியம் போன்ற பொருளை இந்தியர்கள் இரண்டு பேர் உட்பட எட்டு நபர்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்ததால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்ட யுரேனியம் போன்ற பொருளை சிலர் சட்டவிரோதமாக விற்க முயற்சிப்பதாக காவல்துறையினருக்கு ரகசியமாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, காத்மாண்டுவில் இருக்கும் பௌதா என்ற புறநகர்ப்பகுதியின் ஒரு நட்சத்திர ஓட்டலில் நின்ற வாகனத்திலிருந்து, யுரேனியம் போன்ற பொருட்களை காவல்துறையினர் மீட்டனர். மேலும், நவராஜ், பூபேந்திரா ஆகிய இரண்டு […]
நேபாளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் நேபாள நாட்டில் டாங் மாவட்டத்தில் துளசிபூர் எனும் நகரில் காலணி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையில் திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 4 ஆண்கள் மற்றும் 1 பெண் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதில் சுஜிதா கட்டூன் (வயது 13) ஹசன் […]
நேபாள நாட்டு மருத்துவ மாணவர்களை சீனா தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி அளிக்காததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் மருத்துவத்திற்கு படிக்கும் நேபாள நாட்டைச் சேர்ந்த சுமார் 225 மாணவர்களுக்கு பட்டப்படிப்பை முடிக்க பெய்ஜிங் அனுமதி மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக தி ஹிமாலயன் டைம்ஸ் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, மாணவர்களில் பெரும்பாலானோர் சீனாவின் வெரோ செல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனாலும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் சான்றிதழை வைத்து […]
சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. இருப்பினும் கொரோனா தொற்று பாதிப்பு ஒரு சில இடங்களில் வேகமாக பரவி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் சமீப காலங்களாக கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பிரதமர் என அனைவரும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரான கே.பி. சர்மா […]
நேபாளத்தில் தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான அட்டை மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியான நிலையில் மக்கள், தடுப்பூசி செலுத்த வரிசையில் காத்திருக்கிறார்கள். நேபாளத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. எனவே, அங்கு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மக்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது அரசு, தடுப்பூசி எடுத்துக் கொண்டதற்கான அட்டை கட்டாயமாக இருக்கவேண்டும் என்று அறிவித்தது. எனவே, மக்கள் நீண்ட […]
நேபாளத்தில் இம்மாதம் முழுவதும் பள்ளிகளை அடைக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளில் தற்போது ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. எனவே, பல்வேறு நாடுகளும் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் நேபாளத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. எனவே, அங்கு ஹோட்டல்கள், திரையரங்குகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஸ்டேடியங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விதி, வரும் 17ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்று கொரோனா பேரிடர் மேலாண்மை […]
நேபாளத்தில் இரண்டு நபர்களுக்கு ஓமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில், கடந்த மாதம் 24ஆம் தேதியன்று கண்டறியப்பட்ட ஓமிக்ரான் தொற்று தற்போது, 30 க்கும் அதிகமான நாடுகளில் பரவத் தொடங்கியிருக்கிறது. எனவே, போக்குவரத்தில் பல்வேறு நாடுகளும், கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நேபாள அரசு ஹாங்காங், ஜிம்பாப்வே, லெசோதா, நமீபியா, தென்னாப்பிரிக்கா, மொசாம்பிக், மலாவி மற்றும் எஸ்வதினி போன்ற 9 நாடுகளுக்கு பயணத்தடை அறிவித்தது. எனினும், அந்நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மட்டும் அவசர தேவைகளுக்காக […]
கடந்த ஒன்றரை வருடமாக நாடு முழுவதும் கொரோனா தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் படிப்படியாக குறைந்தது. இதனால் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் மட்டும் இதனுடைய தாக்கம் இருந்தது. தற்போது பல நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் பரவாமல் இருக்க அனைத்து மாநிலங்களிலும் கண்காணிப்புகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் […]
நேபாளம், ஒமிக்ரான் தொற்று காரணமாக தென்னாப்பிரிக்கா போன்ற 9 நாடுகளுக்கு பயணத்தடை அறிவித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24ஆம் தேதியன்று ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனையடுத்து, உலக நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மீது பயணத்தடையை அறிவித்து வருகிறது. இந்நிலையில், நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சகமானது, தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, மலாபி, ஈஸ்வதினி, லெசோதா, ஜிம்பாப்வே மற்றும் ஹாங்காங் போன்ற ஒன்பது நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தடை அறிவித்திருக்கிறது. ஆனால், […]
நேபாளத்தில் பனிச்சரிவு ஏற்பட்டு பள்ளி மாணவர்கள் உட்பட 11 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். நேபாளத்தில் உள்ள முஸ்தாங் என்ற பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் பனிப்பாறைகள் 30 நிமிடங்களுக்கு உருண்டிருக்கிறது. இதனால் அங்கு வசித்த மக்கள் பதறியடித்துக்கொண்டு மலையடிவாரத்தை நோக்கி ஓடியுள்ளனர். மேலும், அங்குள்ள பள்ளி ஒன்றில், தப்பிச் செல்ல முடியாமல் சில மாணவர்கள் காயமடைந்தனர். இது மட்டுமல்லாமல், மலைப்பகுதியில் இருக்கும் வனவிலங்குகளுக்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது. பனிப்பாறைகள் சரிவது அடிக்கடி நிகழ்வதால் மக்கள் பத்திரமான […]
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலக வேண்டும் என்ற எதிர்ப்பு வலுத்து வருகிறது. நேபாளத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கஜேந்திர பகதூர் ஹமால். இவர் அந்நாட்டின் தொழில்துறை அமைச்சராக பதவியேற்று மூன்றே நாட்களில் அதனை ராஜினாமாவும் செய்தார். ஏனெனில் இவர் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பகதூரின் உறவினரும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான சொலேந்திரா ஷம்செர் ராணா தான் காரணம் என்று கூறப்பட்டது. இதனால் அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் தற்பொழுது பகதூர் அவர்களுக்கு இடமளிக்க […]
நேபாளத்தில் பெய்த பருவ மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி சுமார் 101 அப்பாவி பொதுமக்கள் பரிதாபமாக இறந்துள்ளார்கள் என்று அந்நாட்டின் உள் விவகாரம் தொடர்பான அரசுத் துறை தகவல் வெளியிட்டுள்ளது. நேபாளத்தில் பருவ மழையின் காரணமாக மிகவும் கடுமையான நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட இயற்கை பேரிடரின் காரணமாக அப்பாவி பொதுமக்கள் சுமார் 101 பேர் பரிதாபமாக இறந்துள்ளார்கள். அதோடு மட்டுமின்றி நேபாளத்தில் மிகவும் கடுமையாக பெய்த பருவ மழையினால் பல […]
நேபாளத்தில் 22 பேர் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள முது மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் நேபாள் கஞ்ச் பகுதியிலிருந்து கம்கதி நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்து சயநாத்ராரா பகுதியை கடக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக பினா ஜயாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேருந்தில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பேருந்தில் பயணித்த 22 பேர் விபத்து […]
தொழில்துறை அமைச்சர் தனது ராஜினாமா கடிதத்தை நேபாள பிரதமரிடம் கொடுத்துள்ளார். நேபாளத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கஜேந்திர பகதூர் ஹமால். இவர் அந்நாட்டின் தொழில்துறை அமைச்சராக மூன்று நாட்களுக்கு முன்னர் தான் பதவியேற்றுள்ளார். குறிப்பாக இவர் நேபாளம் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான ராணாவின் உறவினர் ஆவார். மேலும் பகதூர் நீதிபதியின் உறவினர் என்பதால் அவர் தொழில்துறை அமைச்சராக பதவியேற்றதற்கு சொந்த கட்சியில் இருந்தே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நீதிபதியின் வலியுறுத்தல் பெயரில் தான் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் […]
நேபாளத்தில் பயணிகள் விமானம் ஒன்று புறப்படும் போது ஒடுதளத்தில் இருந்து விலகி புல்தரையில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேபாள நாட்டின் தலைநகரான காத்மண்டு விமான நிலையத்தில் பரபரப்பான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இன்று காலை ஸ்ரீஏர்லைன்ஸ் என்ற பயணிகள் விமானம் காத்மண்டில் இருந்து நேபாள் நாட்டில் உள்ள கஞ்ச் நகருக்கு புறப்படுவதாக இருந்தது. இந்த நிலையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் புறப்படுவதற்கான ஓடுதளத்திற்கு வந்துள்ளது. அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக விமானம் ஓடுதளத்தில் இருந்து விலகி சென்றுள்ளது. […]
நேபாளத்தில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நீண்ட நாட்கள் இடைவெளிக்கு பிறகு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேபாளத்தில் நடப்பாண்டில் தொடங்கப்பட்ட தடுப்பூசி போடும் பணியில் 70 வயதிற்கு மேற்ப்பட்ட முதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதையடுத்து அரசியல் குழப்பம் மற்றும் 2 முறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக நேபாளத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும் பணியானது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக போதிய அளவில் முதியவர்களுக்கு தடுப்பூசி கிடைக்கவில்லை. எனவே முதல் டோஸ் கொரோனா […]
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. மற்ற நாடுகளும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர ஊரடங்கு அமல்படுத்தி உள்ளன. அதனால் வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கும் வகையில் சில நாடுகளின் விமான சேவை முடக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து குறிப்பிட்ட அளவிலான விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று கடுமையாக பரவிய காரணமாக நேபாளத்தில் சர்வதேச விமான போக்குவரத்து சேவைகளும், உள்ளூர் விமான போக்குவரத்து […]
பயணகட்டுப்பாடுகளை தளர்த்த இருப்பதாக நேபாள அரசு அறிவித்துள்ளது . நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அந்நாட்டில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது .அத்துடன் உள்நாட்டு பயணிகளுக்கான விமான போக்குவரத்திற்கும் தடை விதித்தது. இந்நிலையில் கொரோனா பரவல் குறைய தொடங்கி உள்ளதால் சர்வதேச விமான போக்குவரத்திற்கு இன்று முதல் அனுமதி அளித்துள்ளது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்று நேபாள நாட்டு […]