சென்னையில் உள்ள முதலிவாக்கம் மற்றும் கௌபாக்கம் பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்தார். அப்போது தண்ணீரில் இறங்கிச் சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். இந்த சம்பவத்தை அமைச்சர் த.மோ. அன்பரசன் விமர்சித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது, கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தின் போது ஆட்சி முடிவடையும் நேரத்தில் மட்டும்தான் டெண்டர் விடப்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது எந்த ஒரு […]
Tag: நேரில் ஆய்வு
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை மின்சாரம் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரக்கூடிய வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அதிகாரி கௌதம், […]
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில், நாட்டின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி தொடர்ந்து விமானப்படை விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில், ராணுவ தளபதியான மனோஜ் முகுந்து நரவனே நேற்று குன்னூருக்கு வந்துள்ளார். அதன் பின்னர், அவர் வெலிங்டன் ராணுவ மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். மேலும் ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது, மீட்புப் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் ஆகியோருக்கும் பாராட்டுச் […]
காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் பகுதியில் பிடிசி குடியிருப்பில் மழை பாதித்த இடங்களை முதல்வர் முக ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை நீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பலரின் வீடுகளில் மழைநீர் புகுந்து நிலைமை மோசமடைந்துள்ளது. இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் […]
சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கன மழையால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு நடத்தி அவர்களுக்கு அத்தியாவசிய பொருள்களை வழங்கி வருகின்றனர். இதையடுத்து பல இடங்களில் மழை நீர் வடிந்து வருகிறது. மேலும் நோய்களை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த நிலையில் […]
தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் நேற்று அதிகனமழை பெய்தது. அதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள தனசேகரன், பாலா நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அதனால் அங்குள்ள 2500-க்கும் அதிகமான குடும்பத்தினர் அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவதிப்பட்டனர். இதையடுத்து பிரையன்ட் நகரில் உள்ள 10 தெருக்களிலும், போல்டன் புரத்தில் உள்ள 4 தெருக்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. […]
மழை வெள்ளத்தால் சென்னை மாநகரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டதாகவும், மாண்புமிகு அம்மா எண்ணப்படியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்து வருவதாகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மா தெரிவித்தார். சென்னை பூந்தமல்லியில் உள்ள கன்டோன்மென்ட் கோரிமேடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி, உரையாற்றிய புரட்சித் தாய் சின்னம்மா வெள்ளத்தில் நீந்திதான் தாம் வந்துள்ளதாக தெரிவித்தார். மாண்புமிகு அம்மா எண்ணப்படியே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தம்மால் […]
உபரி நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளம் சூழ்ந்த மணலி மற்றும் புறநகர் பகுதிகளை நேரில் சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு செய்தார். பருவமழை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பூண்டி ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் திறந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து இன்று காலை சுமார் 30 ஆயிரம் கன […]
சேலத்தில் உள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் பாதுகாப்பு மற்றும் நீர் வரத்து குறித்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் அணையின் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது, மேட்டூர் அணை உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டம் தேர்தல் நேரத்தில் அவசரமாக தொடங்கப்பட்டு அரைகுறையாக விட்டதால் ஒரு சில பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் […]
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் 6-வது நாளாக ஆய்வு பணியை மேற்கொண்டார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 6-வது நாளாக முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் முதலமைச்சர் வழங்கினார். 50 பேருக்கு வீட்டுமனை பட்டாக்களையும் முதலமைச்சர் வழங்கினார். பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரியை நேரில் பார்வையிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். மண்ணிவாக்கம், முடிச்சூரில் வெள்ள நிவாரண பணிகளை பார்வையிட்ட […]
சென்னையில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், பொதுமக்கள் அழைப்பை எடுத்து பதில் அளித்து பேசி புகார் குறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும், மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக சென்னை தியாகராய நகர் பகுதியில் மழைநீர் சற்று […]
தேனி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தேனி மாவட்டம் போடி அடுத்துள்ள சிறைக்காடு பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 45 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்துள்ளனர். இந்நிலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]
ஐதராபாத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை பிரதமர் மோடி நேரில் ஆய்வு செய்தார். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் மூன்று நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி இன்று நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். தடுப்பு மருந்தின் முன்னேற்றம் குறித்து அவர் ஆய்வு செய்துள்ளார். அதன்படி இன்று காலையில் குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகே உள்ள ஜைடஸ் காடிலா தனியார் நிறுவன ஆலைக்கு நேரில் சென்று தடுப்பூசி உற்பத்தி பணிகளை பார்வையிட்டார். இந்த நிறுவனம் தயாரிக்கும் ‘ஜைகோவ்-டி’ தடுப்பூசி […]
புயல் பாதிப்புகள் பற்றி தரமணி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் துணை முதல்வர் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி […]
கடலூரில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் நிவர் புயல் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. அதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த கூரை வீடுகள் அனைத்தும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் சாலையில் […]
மிதவை மோதி விபத்து ஏற்பட்ட பாம்பன் ரயில் தூக்கு பாலத்தின் பாதுகாப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் மீது 250 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ரயில்வே பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்காக இரும்பு மிதவைகளில் கிராப் கலவை இயந்திரங்கள் பாறை துளைப்பான் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி பாலத்தின் மீது மிதவை ஒன்று மோதியது. ஒன்பது நாட்களுக்குப் பின்னர் […]
கேரளாவின் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதிகளை அம்மாநிலத்தின் முதல்-மந்திரி பிரனாய் விஜயன் மற்றும் கவர்னர் ஆரிப் முகமது நாளை நேரில் ஆய்வு செய்கின்றனர். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பெய்த மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் வசித்து வந்த 82-க்கும் மேலான தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். அதன் பின்னர் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய […]