நைஜீரிய நாட்டில் பேருந்தின் டயர் வெடித்து, விபத்து ஏற்பட்டதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பவுச்சி என்னும் மாகாணத்தின், கஞ்சுவா என்னும் நகரத்தில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பேருந்தின் டயர் வெடித்ததில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, ஆறு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த […]
Tag: #நைஜீரியா
படகு விபத்தில் சிக்கி 76 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் ஆக்பாரு பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் 85 பேரை ஏற்றுக்கொண்டு ஒரு படகு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த படகு திடீரென வெள்ளத்தில் சிக்கிக் நீரில் மூழ்கியுள்ளது. இதில் அந்த படகில் பயணித்த 85 பேரில் 76 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மேலும் மீதமுள்ள ஒன்பது பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. இது குறித்த தகவல் அறிந்த மீட்பு குழுவினர் […]
நைஜீரியா நாட்டில் சிறுவர் சிறுமிகளுக்கு ஊசி மூலமாக செயற்கையாக மருந்து செலுத்தி வயிரை வீங்க செய்து பிச்சை எடுக்க வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நைஜீரியா நாட்டின் lagos என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்தியில், கிராமப் பகுதியில் இருந்து நான்கு பேர் சிறுவர்களை அழைத்து வந்தனர். பின்னர் அவர்களுக்கு மருந்து மூலமாக ஊசியை அவர்களுக்கு செலுத்தினர். இந்த ஊசியை போடுவதன் மூலமாக அவர்களுக்கு வயிறு வீங்கி […]
நைஜீரிய நாட்டில் ஊசியை செலுத்தி சிறுவர் சிறுமிகளின் வயிற்றை பெரிதாக்கி தர்மம் எடுக்க வைத்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜீரிய நாட்டின் Lagos என்ற கிராமத்திற்கு சென்ற 4 பேர் அங்கிருந்து சிறுவர்களை அழைத்து சென்றுள்ளனர். அவர்களுக்கு மருத்துவர் ஒருவரின் மூலம் ஊசியை செலுத்தியுள்ளனர். அதன் பிறகு அவர்களின் வயிறு பெரிதாகியிருக்கிறது. அதனைத்தொடர்ந்து கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறி அந்த சிறுவர்களை சாலையில் தர்மம் எடுக்க வைத்திருக்கிறார்கள். These men get minors […]
நைஜீரிய நாட்டில் கார் ஒன்றின் மீது பேருந்து மோதி தீ விபத்து ஏற்பட்டதில் 15 நபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ள ஓயோ மாகாணத்தில் இபரபா என்னும் நகரத்தில் நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து எதிரில் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த காரின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தும் காரும் தீ பற்றி எரிந்தது. தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்ததால், கார் […]
நைஜீரிய நாட்டு நபர் சிகிச்சைக்கு பயந்து குரங்கு அம்மை பாதிப்போடு கம்போடியா தப்பிய நிலையில் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். நைஜீரியாவை சேர்ந்த 27 வயது இளைஞர், தாய்லாந்தில் வசித்து கொண்டிருக்கிறார். அவர், திடீரென்று குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு, தாய்லாந்து நாட்டில், இரண்டு விடுதிகளுக்கு சென்றிருக்கிறார். இது கண்டறியப்பட்டவுடன், அந்த இளைஞர் நாட்டைவிட்டு தப்பி விட்டார். இதனைத்தொடர்ந்து, தாய்லாந்து நாடு முழுக்க அவரை தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அவரின் மொபைல் எண், கம்போடியாவில் இயங்கியது தெரிய […]
ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியா, 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் இங்கிலாந்தின் காலணி நாடாக இருந்தது. அதனை தொடர்ந்து 1960 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியில் இருந்து நைஜீரியா விடுதலை அடைந்தது. காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் இருந்து பல விலை மதிப்பற்ற பொருட்கள் ஆட்சியர்களால் கவர்ந்து செல்லப்பட்டது. அதன்படி தென்மேற்கு நைஜீரியாவில் உள்ள பெனின் என்ற நகரத்தின் மீது கடந்த 1897 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர்கள் படையெடுத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்து பல […]
நைஜீரியா தலைநகரான அபுஜாவில் குஜே எனும் சிறைச்சாலை இருக்கிறது. இந்த சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தினர். மேலும் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் மேற்கொண்டனர். இத்தாக்குதலில் சுமார் 600 கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிஓடிவிட்டனர். இவர்களில் 300 கைதிகளை காவல்துறையினர் பிடித்துள்ளனர். அத்துடன் தப்பி ஓடியவரையும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் காவல் அதிகாரி ஓருவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
நைஜீரிய நாட்டின் தேவாலயத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியபோது உயிர் தப்பியவர்களை கொல்வதற்கு வெளிப்பகுதியிலும் தீவிரவாதிகள் நின்றதாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். நைஜீரிய நாட்டின் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 50 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் துப்பாக்கி சூடு தாக்குதலை நேரில் பார்த்த ஒரு நபர் தெரிவித்ததாவது, தேவாலயத்தின் வாசலிலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். அந்த ஆலயத்திற்கு மூன்று நுழைவு […]
நைஜீரியாவின் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் வட மேற்கு பகுதியிலிருக்கும் ஓவோ என்னும் நகரில் அமைந்திருக்கும் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடந்தது. அதில், பெரும்பாலானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். மேலும் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 50 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]
நைஜீரியாவில் ஒண்டோவில் உள்ள ஒவோ பகுதியில் தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் பெண்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் படுகாயம் அடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
நைஜீரியாவில் மோட்டார் சைக்கிள்களை வாடகை வண்டிகள் ஆக பயன்படுத்தும் பைக் டாக்சி-யால் அதிக அளவில் சாலை விபத்துகள் ஏற்படுவதாகவும் இதில் ஏராளமான உயிரிழப்புகள் நிகழ்வதாகவும் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்லாமல் பைக் டாக்சி டிரைவர்கள் அதிக கட்டணம் கேட்டு தகராறு மற்றும் வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வகையில் அண்மையில் டாக்சியில் பயணம் செய்த 38 வயதான நபரிடம் அதிக பணம் கேட்டு தகராறு செய்த டிரைவர் பணம் தராத ஆத்திரத்தில் அந்த […]
குரங்கம்மை நோய்த்தொற்று வன பகுதியில் இருக்கும் இறந்த குரங்கு, வவ்வால், எலிகளை எடுத்து வந்து மக்கள் உணவாக சாப்பிட்டதில் பரவியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்பட்ட குரங்கம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகின்றது. இந்த நோய் தொற்றின் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 […]
நைஜீரியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள தென் மாகாணமான இமோவில் உள்ள ஒரு எண்ணெய் ஆலையில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், அந்த ஆலை தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இதுபற்றி போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக் அபாட்டம் கூறியுள்ளதாவது, “இந்த குண்டு வெடிப்பு […]
நைஜீரிய நாட்டில் சட்டவிரோதமாக இயங்கி வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டில் அதிகமான மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். அந்நாட்டின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் எண்ணெய் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிதான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நைஜீரிய நாட்டின் இமோ மாநிலத்தில் சட்டவிரோதமான முறையில் இயங்கிவரும் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதில் 100க்கும் அதிகமானோர் அடையாளம் தெரியாத […]
நைஜீரியாவிலுள்ள 4 கிராமங்களுக்குள் அதி பயங்கர ஆயுதங்களுடன் புகுந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த சுமார் 70 பேரை கொன்று குவித்துள்ளார்கள். நைஜீரியாவில் பிளாடீயூவின் என்ற மாநிலம் அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் தலைநகரிலுள்ள 4 கிராமங்களுக்குள் அதி பயங்கர ஆயுதங்களுடன் நள்ளிரவில் கொள்ளை கும்பல் புகுந்துள்ளது. அவ்வாறு புகுந்த கொள்ளையர்கள் கிராமங்களில் இருந்த வீடுகளுக்குள் சென்று பெண்கள், சிறுவர்கள் உட்பட அனைவரையும் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள். அதன் பின்பு அவர்களது வீடுகளுக்குள் புகுந்து பணம், பொருட்கள் […]
நைஜீரியாவில் மின் ஆற்றல் மற்றும் எண்ணெய் விநியோகத்திற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஆப்பிரிக்காவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் மிகப்பெரிய நாடாக விளங்கும் நைஜீரியாவில் பெட்ரோல் இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டில் போர் நெருக்கடியால் எரிபொருள் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மின் ஆற்றல் மற்றும் எண்ணெய் விநியோகத்திற்கு கடும் […]
புதிய வகை வைரஸால் 40 பேர் உயிரிழந்துள்ளதாக நைஜீரியா நாட்டு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நைஜீரியாவில் கொரோனா வைரஸுக்கு அடுத்ததாக புது விதமான லாஸ்சா என்ற வைரஸ் பரவி வருகிறது. அந்த வைரஸ் எலிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவுவதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் 21 முதல் 30 வயதில் உள்ளவர்களையே பெரிதளவு பாதிப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வைரஸ் நைஜீரிய நாட்டில் 36 மாநிலங்களில் பயங்கரமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து லாஸ்சா வைரஸால் 40 […]
நைஜீரிய நாட்டில் எண்ணெய் வயலில் நின்று கொண்டிருந்த கப்பல் திடீரென்று வெடித்து சிதறிய சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நைஜீரியா நாட்டில் உள்ள நைஜர் டெல்டா பகுதியில் இருக்கும் எண்ணெய் வயலில் ஷேபா ஆய்வு, சேமிப்பு , உற்பத்தி நிறுவனத்திற்குரிய மிதக்கும் எண்ணெய் உற்பத்தி மற்றும் இறக்கும் கப்பல் இருந்துள்ளது. அந்த சமயத்தில், 2 மில்லியன் பீப்பாய்கள் அளவிற்கு எண்ணெய் சேமித்து வைக்கக்கூடிய திறனுடைய டிரினிட்டி ஸ்பிரிட் என்ற கப்பல் நேற்று முன்தினம் காலையில் திடீரென்று வெடித்துச் சிதறியது. […]
நைஜீரியாவிலுள்ள நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் டயர் கழன்றதில் அது பலமுறை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. நைஜீரியாவிலுள்ள தாராபாவிலிருக்கும் நெடுஞ்சாலையில் அதிவேகமாக பேருந்து ஒன்று சென்றுள்ளது. இந்நிலையில் அந்தப் பேருந்தின் ஒரு பக்க டயர் அதி வேகத்தின் காரணமாக கழன்றுள்ளது. ஆகையினால் அந்த பேருந்து பலமுறை உருண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த கோர விபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறியதாவது, வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் அவ்வப்போது அதனை பரிசோதித்துக் கொள்ளுங்கள் […]
நைஜீரியாவில் சக ஊழியரின் காதலை ஏற்ற பெண்ணை உயர் அதிகாரிகள் ராணுவ நடத்தை விதிகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்துள்ளார்கள். நைஜீரியாவில் இக்படா என்னும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி மையத்தில் ஷகினா என்ற பெண்மணி உயரதிகாரி பொறுப்பில் இருந்துள்ளார். இவரும் அதே பயிற்சி மையத்தில் பணிபுரிந்த ஜோன்சன் என்பவரும் காதலித்துள்ளார்கள். இந்நிலையில் இருவரும் பயிற்சி மைதானத்தில் வைத்து ராணுவ உடையில் மோதிரம் மாற்றிக் கொண்டு தன்னுடைய லவ் ப்ரொபோஸலை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தியுள்ளார்கள். […]
நைஜீரியாவில் மசூதி ஒன்றில் நடந்த பயங்கர சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் உள்ள நைஜரில் பாரே என்ற மத்திய நகரில் அமைந்துள்ள மசூதி ஒன்றில் சம்பவத்தன்று தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிலையில் அந்த நைஜரில் பாரே கிராமத்திற்கு மோட்டார் பைக்குகளில் துப்பாக்கி ஏந்திய படி வந்த மர்ம நபர்கள் சிலர் நேரடியாக மசூதிக்குள் நுழைந்துள்ளனர். அதன் பிறகு கையில் இருந்த துப்பாக்கியை கொண்டு அங்கு தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்களை சரமாரியாக சுட்டுள்ளனர். இந்த பயங்கர […]
நைஜீரியாவில் கிட்டத்தட்ட 3 வாரங்களாக எண்ணெய்க் கசிவு ஏற்படுவதால் அப்பகுதியிலுள்ள விளைநிலம் உட்பட அனைத்தும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் பாயல்ஷா என்னும் பகுதி அமைந்துள்ளது. இதனையடுத்து நைஜீரியாவிலுள்ள பெட்ரோலிய கிணற்றின் குழாய் உடைந்துள்ளது. ஆகையினால் கிட்டத்தட்ட 3 வாரங்களாக அதிகளவு எண்ணெய் கசிவு வெளியேறி பாயல்சா பகுதியிலுள்ள விளைநிலம் உட்பட அனைத்து பகுதிகளும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் நைஜீரிய அரசாங்கம் பெட்ரோலிய கிணற்றின் குழாய் உடைந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்த முடியாமல் மிகவும் […]
நைஜீரியாவில் பாம்பு கடித்து பெண் விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா தலைநகர் அபுஜாவில் லான்ஸ் பெர்சி என்பவர் வசித்து வந்தார். இவர் விமானப்படை அதிகாரியாக இருந்தார். இந்நிலையில் தன் வீட்டில் உள்ள வெஸ்டர்ன் கழிப்பறையின் மீது லான்ஸ உட்கார்ந்து இருந்தபோது அவரை பாம்பு கடித்தது. இதனால் பாம்பு விஷம் லான்ஸ் உடல் முழுவதும் பரவி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து லான்ஸ் பெர்சியின் தோழி கூறியபோது “நாம் இருவரும் நேற்று […]
நைஜீரியாவில் பாரம்பரிய மிக்க ஆண்களுக்கான அழகு போட்டி நடைபெற்றதில் வெற்றியாளர்களை பெண் நடுவர்கள் தேர்வு செய்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் பழமையான மற்றும் பாரம்பரியமிக்க கேரேவொல் எனப்படும் ஆண்களுக்கான அழகு போட்டி நடைபெற்றது. இதில் பல ஆண்கள் தங்கள் முகங்களில் வர்ணங்கள் பூசியும் நடனமாடியும் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெறும் ஆண்களை பெண் நடுவர்களே தேர்வு செய்வர். இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் பெண்களை கவரும் வகையில் மணிக்கணக்கில் நடனமாட வேண்டும். மேலும் தேர்வு […]
நைஜீரியாவில் சாலையோரத்தில் நின்ற ஆட்டோக்கள் மீது டேங்கர் லாரி ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரிய நாட்டில் சாலைகள் மோசமாக இருப்பது மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் எனுகு நகரத்தில் இருக்கும் ஒரு சந்தைப் பகுதியில் நின்ற சில ஆட்டோக்களில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தண்ணீரை ஏற்றி வந்த டேங்கர் லாரி அதிவேகத்தில் வந்து சாலையோரத்தில் நின்ற ஆட்டோக்கள் மீது தாறுமாறாக […]
நைஜீரியாவில் கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ள நைஜீரியாவில் ஐ.எஸ் அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகள் மற்றும் பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோன்று கொலை, கொள்ளை உட்பட பணத்திற்காக பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் மற்றும் கால்நடை கடத்தலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. தற்போது, இந்த அமைப்புகள் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பல்வேறு […]
நைஜீரியாவில் அடுக்குமாடி கட்டிடம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் உள்ள இயோகி மாவட்டத்தில் 21 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்த அடுக்குமாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கட்டிட பணியில் வேலை பார்த்து கொண்டிருந்த பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர் […]
நைஜீரியாவில் மாடி கட்டிடம் சரிந்து விழுந்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லாகோஸ் நகரில் Fourscore Homes என்கின்ற தனியார் நிறுவனம் கட்டி வந்த 21 மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென்று சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணியில் இருந்ததாக தெரிகிறது. இந்த விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் சரிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிறையில் இருந்து தப்பியோடிய கைதிகளை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புக்கள் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள் மற்றும் கால்நடைகளை கடத்துகின்றனர். குறிப்பாக நைஜீரியா நாட்டில் உள்ள ஒயோ மாகாணத்தில் சிறைச்சாலை உள்ளது. அங்கு பயங்கரவாத செயல்கள், கொலை, கொள்ளை போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அந்த சிறைச்சாலையில் நேற்று துப்பாக்கி, வெடிகுண்டுகள் போன்ற […]
நைஜீரியாவில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவனை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர். நைஜீரியாவை பொருத்தவரை ஐ.எஸ், அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு புகலிடமாக உள்ளது. இதற்கிடையே நைஜீரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட்டின் மேற்கு ஆப்பிரிக்க மாகாணம் என்ற பெயரில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவனாக அபு முஸப் அல் பர்நாவி செயல்பட்டு வந்தார். இவனை கடந்த சில நாட்களுக்கு முன்பு நைஜீரிய பாதுகாப்பு படையினர் அதிரடி தேடுதல் வேட்டையில் […]
நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் அட்டூழியம் அதிகரித்து வருவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. போகோஹராம் பயங்கரவாதிகள் நைஜீரியாவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நைஜீரிய இராணுவம் பயங்கரவாதிகளை ஒடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பல்வேறு பயங்கரவாத குழுக்கள் இந்த அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி நைஜீரியாவில் உருவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் இந்த பயங்கரவாதிகள் கிராமங்களுக்குள் நுழைந்து கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதோடு, அப்பாவி மக்களை கொன்று குவித்தும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை […]
நைஜீரியாவில் நேற்று மர்ம கும்பல் ஒன்று நடத்திய பயங்கர துப்பாக்கிச்சூட்டில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவில் ஆள் கடத்தலும், பயங்கரவாத தாக்குதலும் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்த வகையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் நைஜீரியாவின் சகோடா மாகாணத்தில் உள்ள கொரன்யா கிராமத்தில் நேற்று பயங்கரமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். அதில் 43 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சகோடா மாகாண அரசு அந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக […]
நைஜீரியாவில் ஒரு இளம் பெண்ணை நான்கு நபர்கள் சேர்ந்து சவுக்கால் அடிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் ஒரு இளம்பெண், ஆண்கள் சிலர் மற்றும் பெண் நண்பர்களோடு சேர்ந்து ஒரு பிறந்த நாள் பார்ட்டியில் பங்கேற்றுள்ளார். அதில், அவர் மதுபானம் அருந்தும் வீடியோவை அவரின் தந்தை பார்த்திருக்கிறார். ஆனால், அந்த பெண் தான் அருந்தியது மது பானம் இல்லை என்று கூறியிருக்கிறார். எனினும், அந்த பெண்ணை அவர் படிக்கும் பள்ளிக்கு அழைத்துச் சென்று ஆசிரியர்களிடம் தன் […]
போகோஹரம் உட்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் கடும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் பயங்கரவாதிகள் சிலர் சிறுவர்கள், பெண்கள் உட்பட 180-க்கும் மேற்பட்டோரை கடத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில் மாநில அரசு கடத்திச் செல்லப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்க பேச்சுவார்த்தை நடத்தியது. இருப்பினும் கடத்திச் செல்லப்பட்ட மக்களை பயங்கரவாதிகள் விடுவிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு சிபிரி வனப்பகுதிக்குள் கடத்தப்பட்ட அப்பாவி […]
நைஜரில் கடத்தல் கும்பலால் நடத்தப்பட்ட தாக்குதலில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் நைஜீரியா குடியரசு அமைந்துள்ளது. தற்போது ஐ.எஸ் அமைப்பு மற்றும் போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்பினர் நைஜீரியாவில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிளர்ச்சியாளர்கள் படைகளும் நைஜீரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இதனைத் தொடர்ந்து பணத்திற்காக நைஜீரிய பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் உட்பட கால்நடை விலங்குகளையும் பயங்கரவாத அமைப்பினர் கடத்தி வருகின்றனர். இந்த கடத்தல் கும்பல்கள் நைஜீரியாவை […]
ஆப்பிரிக்காவில் குழந்தைகளுக்கான பள்ளிகளில் தற்போது வரை 20 முறை பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டதால் பெற்றோர்கள் அச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா நாட்டில் சமீப ஆண்டுகளாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. நாட்டில் செயல்பட்டு வரும், போகோ ஹராம் பயங்கரவாதிகள், தாக்குதல் நடத்துவதோடு, குழந்தைகளையும் கடத்திச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பயங்கரவாத அமைப்பு, குழந்தைகளின் பள்ளிக்கு சென்று, ஆயுதங்களை வைத்து மிரட்டி கடத்துகிறார்கள். எனவே, பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு பயப்படுகிறார்கள். சுமார் 10 லட்சம் குழந்தைகள், தங்கள் கல்வியை […]
நைஜீரியாவின் ஒரு சிறைசாலையின் தடுப்பு சுவரை தீவிரவாதிகள் பயங்கரமான குண்டுகளை வைத்து தகர்த்ததோடு சிறைக்குள் புகுந்து, துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். நைஜீரிய நாட்டில் இருக்கும் கோகி மாகாணத்தின், கப்பா என்ற நகரத்தில் இருக்கும் ஒரு சிறையில், விசாரணை கைதிகள் 224 பேரும், குற்றவாளிகள் 70 பேரும் இருந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு நேரத்தில், அந்த சிறையின் தடுப்பு சுவரை தீவிரவாதிகள், பயங்கரமான குண்டுகளை வைத்து தகர்த்ததோடு, சிறைக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த […]
கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவில் ஜோஸ் நார்த் என்னும் இடத்தில் எல்வா ஜங்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கையில் துப்பாக்கியுடன் திடீரென்று புகுந்துள்ளனர். மேலும் அவர்கள் கிராமத்தில் உள்ள மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அவர்கள் வீட்டிலுள்ள பொருட்கள், உடைமைகள் போன்றவற்றை அடித்து உடைத்துள்ளனர். இந்த தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஆளுநர் சைமன் லாலங் […]
பணத்திற்காக பள்ளி மாணவர்களை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பள்ளி மாணவர்களை கடத்திச் சென்று அவர்களின் பெற்றோர்களிடம் பணம் கேட்டு மிரட்டுவது அங்குள்ள பயங்கரவாதிகளின் வழக்கமாகிவிட்டது. இதனை அடுத்து அந்நாட்டின் வடமேற்கு பகுதியில் இருக்கும் பள்ளி ஒன்றில் மாணவர்களை பயங்கரவாதிகள் துப்பாக்கி முனையில் கடந்த மாதம் 5 ஆம் தேதி கடத்தி சென்றுள்ளனர். அவர்கள் மொத்தம் 126 மாணவர்களை கடத்தி பணய கைதிகளாக வைத்துள்ளனர். ஒவ்வொரு மாணவருக்கும் சுமார் 10 லட்சம் […]
நைஜீரியா நாட்டின் லாகோஸ் மாகாணத்தில் தர்மம் கேட்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில், தர்மம் கேட்பவர்களுக்கும், தெரு வியாபாரிகளுக்கும், அதிரடியாக தடை விதிக்கப்பட்டிருக்கிறது. லாகோஸ் மாகாண அரசு, இவர்களை தொந்தரவாக கருதுகிறது. எனவே மாகாணத்தில், இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு, தர்மம் கேட்பவர்களை தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இந்த குழு இயங்கத்தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பில், இளைஞர்கள் மற்றும் சமூக மேம்பாடு உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, […]
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பயணித்த பேருந்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் உள்ள இமோ மாகாணத்தில் தனியார் துறைக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளிகளை ஏற்றுக்கொண்டு கடந்த 18 ஆம் தேதி அலுவலக பேருந்து ஒன்று சென்றுள்ளது. அப்போது அந்த பேருந்தை துப்பாக்கி ஏந்திய கும்பல் ஒன்று […]
பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவின் ஜிகாவா நகரில் ரடாபி என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் வழியாக ஒரு லாரி சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அருகில் உள்ள கால்வாயில் கவிழ்ந்துள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
நைஜீரியாவைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உணவில் சுவை கூடுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக உப்புக்கு பதிலாக உர வகை பயன்படுத்தி உணவை சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர். இதில் குடும்ப உறுப்பினர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். சமையல் உணவில் கூடுதல் சுவை இருக்க வேண்டும் என்று கூறி உப்புக்கு பதிலாக உரத்தைப் பயன்படுத்தி சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் இரண்டு பெண்கள் மட்டும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் மர்ம கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை நைஜீரியாவில் உள்ள ஒகுன் பகுதியில் இருக்கும் கால்நடை வளர்ப்பு மையத்திற்கு சென்றுள்ளார். அப்பொழுது அங்கு அவரை அடையாளம் தெரியாத ஆயுதம் ஏந்திய மர்ம கும்பல் ஒன்று துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டியுள்ளனர். மேலும் அவருடன் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் இருந்துள்ளார். இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் […]
பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட மாணவி தனது கணவருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் உள்ள வடக்கு போர்னோவில் சிபோக் நகரம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் போகோஹரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் பள்ளிக்கூடம் ஒன்றில் 270 மாணவிகளை கடத்தி சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவமானது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்காக சமூக வலைதளங்களில் உலகளவில் மக்கள் பிரச்சாரம் மேற்கொண்டனர். இதற்கிடையில் நைஜீரிய அரசுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் […]
நைஜீரியா நாட்டில் பள்ளி ஒன்றில் கடத்தப்பட்ட மாணவர்களை மீட்கும் பணியில் அரசு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. நைஜீரியா நாட்டில் உள்ள கடுனா மாகாணத்தில் பேப்டிஸ்ட் அகாடமி பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடத்தல்காரர்கள் கடத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில் கடத்தல்காரர்கள் ஒரு மாணவருக்கு 5 லட்சம் வீதம் பிணைத்தொகையை கொடுக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து உடல் நலம் காரணமாக ஒரு மாணவரை கடத்தல்காரர்கள் […]
கிராமங்களுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 35 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளுவது, வீட்டுக்குள் புகுந்து திருட்டு வேலைகளில் ஈடுபடுவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடமேற்கு மாகாணத்தில் உள்ள மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை இரவு தீவிரவாதிகள் பயங்கர துப்பாக்கி ஆயுதங்களுடன் வந்தனர். இதனைத் தொடர்ந்து ஷாம்பாராவில் மாராடூன் என்ற கிராமத்தில் உள்ள அப்பாவி மக்களை சுட்டுத் தள்ளியதோடு குடிசைகளையும் தீ வைத்து எரித்தனர். […]
பள்ளிக்குள் புகுந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பள்ளி மாணவர்களை கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியா நாட்டில் கட்டுனா மாநிலத்தில் இருக்கும் பெத்தேல் பாப்ஸ்டிக் என்ற பள்ளியில் நடைபெற்ற பரீட்சையில் பங்கேற்பதற்காக மாணவர்கள் வந்திருந்தனர். இதனையடுத்து பள்ளிக்குள் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். இதனையடுத்து இதுகுறித்து அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளி முன் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மர்மநபர்களால் கடத்தப்பட்டவர்களில் ஒரு ஆசிரியை மற்றும் 26 […]
நைஜீரியாவில் தீவிரவாதிகள் மருத்துவமனைக்குள் நுழைந்து 3 குழந்தைகளையும், 5 செவிலியர்களையும் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நைஜீரியாவில் போகோ ஹரம் போன்ற பல தீவிரவாத அமைப்புகள் நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். எனவே தீவிரவாதிகள் அடிக்கடி பொதுமக்களை கடத்திச்சென்று கைதிகளாக வைத்து அரசாங்கத்தை மிரட்டி அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றி வருகிறார்கள். அதன்படி நைஜீரியாவில் இருக்கும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் நுழைந்து மாணவ, மாணவிகளை கடத்தி செல்கிறார்கள். இந்நிலையில் தற்போது நைஜீரியாவில் உள்ள ஷானியா என்ற நகரத்தில் இருக்கும் […]