Categories
தேசிய செய்திகள்

நோயாளிக்கு Blood கொடுத்து…. உயிரை காப்பாற்றிய மருத்துவர்….. குவியும் பாராட்டுக்கள்…..!!!!

உத்தரகாண்டின் டேராடூன் நகரிலுள்ள டூன் மருத்துவ கல்லூரியில் ஒரு நபரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அவர் ஆழம் உள்ள ஒரு குழியில் தவறி விழுந்ததில், மார்பு, இடது கை மற்றும் தொடைபகுதியில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 3 நாட்கள் அவர் ICU-வில் வைக்கப்பட்டார். அதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். அப்போது அவருக்கு போதிய அளவு ரத்தம் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை செய்வது தள்ளிபோனது. இதன் காரணமாக அந்நபரின் மகள் ரத்தம் கொடுக்க […]

Categories
தேசிய செய்திகள்

ரத்ததட்டுகளுக்குப் பதில் பழச்சாறா?…. தனியார் மருத்துவமனை மீது பரபரப்பு குற்றச்சாட்டு….!!!!!

உத்திரபிரதேசத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்ததட்டுகளுக்குப் பதில் பழச்சாறை உடலில் செலுத்தியதாக தனியார் ஆஸ்பத்திரியின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அந்த மருத்துவமனைக் கட்டிடம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட இருக்கிறது. வருகிற 28ம் தேதிக்குள் அந்த தனியார் மருத்துவமனை இயங்கிவந்த கட்டிடத்தை, மருத்துவ நிர்வாகம் காலி செய்து விட வேண்டும் என பிரயாக்ராஜ் மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றனர். அந்த மருத்துவமனைக் கட்டிடம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆகவே அந்தக் […]

Categories
மாநில செய்திகள்

எம் ஜி எம் புற்றுநோய் சிகிச்சை மையம்… சென்னையில் தொடக்கம்…!!!!!

எம் ஜி எம் ஹெல்த் கேர் குழுமம் சார்பில் புற்றுநோய் சிகிச்சை மையம் சென்னையில் புதன்கிழமை தொடங்கப்பட்டிருக்கிறது. சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் 150 படுகைகளுடன் அந்த மருத்துவமனை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் எம் ஜி எம் ஹெல்த் கேர் இயக்குனர் டாக்டர் பிரசாந்த் ராஜகோபால் கலந்துகொண்டு பேசியபோது எம் ஜி எம் புற்றுநோய் மருத்துவமனையின் வுட் கட்டமைப்புக்காக 300 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கிறது. மேலும் 150 படுகைகளுடன் எட்டு மாடிகள் கொண்ட மேம்பட்ட வசதியுடன் […]

Categories
தேசிய செய்திகள்

என்னது? ஒரே உடலில் 156 கிட்னி கற்களா?…. பயங்கர ஷாக் ஆன மருத்துவர்கள்….!!!!

ஒரே ஒரு நோயாளியின் உடம்பில் இருந்து 156 சிறுநீரக கற்களை மருத்துவர்கள் எடுத்துள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த பசவராஜ் என்ற நோயாளிக்கு வயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதுடைய அந்த நோயாளியின் உடலை ஸ்கேன் செய்து பார்த்த போது, சிறுநீரகத்தில் நிறைய கற்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் அவரின் உடலிலிருந்து மொத்தம் 156 சிறுநீரகக் கற்களை எடுத்துள்ளனர். 3 மணி நேரம் லாப்ரோஸ்கோபி, எண்டோஸ்கோபிக்கு பின்னர் 156 சிறுநீரகக் கற்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் முதல் ஒமைக்ரான் நோயாளி…. வெளியான மகிழ்ச்சி செய்தி….!!!

இந்தியாவில் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் தானே மாவட்டத்திற்கு வந்த 33 வயதான பயணிக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இந்தியாவிலேயே இவருக்கு தான் முதல் முறையாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கு தொற்று முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் இந்தியாவில் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வார்டில் நர்சுக்கு பாலியல் தொல்லை… வாலிபரை அடித்து உதைத்த நோயாளிகள்… அரசு மருத்துவமனையில் பரபரப்பு…!!!

ஆந்திரா மாநிலத்தில், கொரோனா வார்டில் நர்ஸ்க்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் அருகே உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், கொரோனா வார்டில் பல நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளி ஒருவருக்கு நர்ஸ் ஒருவர் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அதே வார்டில் ஒரு நோயாளியின் உதவியாளராக இருந்த விஜயகுமார் என்பவர், நர்ஸ்க்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதைப்பார்த்த மற்ற […]

Categories
தேசிய செய்திகள்

வயிறு வலின்னு வந்த பெண்ணிடம்…. சில்மிசம் செய்த ஊழியர்… நள்ளிரவில் மருத்துவமனையில் நேர்ந்த கொடுமை…!!!

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்த ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் பகுதியில் வசிக்கும் 18 வயதான பெண் ஒருவருக்கு அடிக்கடி வயிறுவலி ஏற்பட்டுள்ளதால், அருகிலுள்ள மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொண்டு மாத்திரைகளை வாங்கி சென்று சென்றுள்ளார். இதையடுத்து கடந்த வாரம் வயிற்று வலி மிகவும் அதிகமான காரணத்தினால் மீண்டும் அதே மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்தபோது மருத்துவர்கள் அவரை அட்மிட் செய்தனர். பின்னர் […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவில் கொரோனா வார்டுக்குள் புகுந்து… நோயாளியிடம் அத்துமீறிய ஆம்புலன்ஸ் டிரைவர்… தர்மஅடி கொடுத்த நோயாளிகள்…!!

பெங்களூரு, கலபுரகி என்ற பகுதியில் அரசு மருத்துவமனையில் கொரோனா பாதித்த இளம் பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு, கலபுரகி பகுதியை சேர்ந்த 24 வயது இளம் பெண் கொரோனா பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் அப்பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணின் துணிகளை விலக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா வார்டில் இருந்த பெண்ணை… கூட்டு பலாத்காரம் செய்த ஊழியர்கள்… உயிரிழந்த நோயாளி…!!

பீகார் மாநிலத்தில் ஐசியு வார்டில் இருந்த கொரோனா நோயாளியை ஊழியர்கள் மூன்று பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா நோய்தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி வழிகின்றது. இது போன்ற சூழ்நிலைகளிலும் கொரோனா பாதித்த நோயாளிகளை பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஆம்புலன்சுக்கு 15,000… பிளான் போட்டு மாட்டி விட்ட இளைஞர்… பணமும் போச்சு ஆம்புலன்ஸும் போச்சு…!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா நோயாளியை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ்க்கு 15,000 கட்டணத்தை வசூலித்து உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது ஒருபுறமிருக்க நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணம் வசூலிக்கும் சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

தலைவலி என்று கூறிய பெண்ணை… வார்ட்பாய் செய்த கொடூரம்… கொரோனா வார்டில் அரங்கேறிய சம்பவம்…!!

தலைவலி என்று கூறிய பெண்ணை வார்டு பாய் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சிகிச்சை மையம் ஒன்றில் கொரோனா பாதிக்கப்பட்டவர் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். அந்த மருத்துவமனையில் பல நோயாளிகள் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் ஆண் பெண் என்று தனியாக அறை ஒதுக்கப்படாமல்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் வார்டில் இருந்த 36 வயதான ஒரு வார்டு பாய் அந்த பெண்ணை அடிக்கடி நோட்டமிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஐசியூவில் இருந்த பெண்ணை கட்டிப்போட்டு…. வார்டுபாய் செய்த காரியம்… கொடூர சம்பவம்..!!

ஐசியூவில் இருந்த பெண்ணிடம் வார்டு பாய் தவறாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு பெண் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஐசியூவில் வைக்கப்பட்டிருந்தார். அந்த மருத்துவமனையில் இரவில் நோயாளியுடன் யாரும் தங்க கூடாது என்று கூறி இருந்தனர். அதனால் அவரது கணவர் அவரை விட்டு விட்டு இரவு சென்று மறுநாள் காலை வந்துள்ளார். அந்த பெண் காலையில் வந்து தனது […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனையில் நடந்த உயிரிழப்பு ..! அமைதி காத்த நிர்வாகம்…. உறவினர்கள் ஆவேசம் …!!

புதுச்சேரியில் மருத்துவமனை மாடியிலிருந்து நோயாளி கீழே விழுந்து உயிரிழந்தது பற்றி மருத்துவமனை நிர்வாகம் பதில் அளிக்காததால் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் உள்ள கணபதிசெட்டிகுளம் தனியார் மருத்துவமனையில் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 45 வயதுடைய ருத்ர குமார் என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தார்.அவர் திடீரென மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதை அறிந்த உறவினர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். உறவினர்கள் ருத்ரகுமார் எப்படி கீழே விழுந்தார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குணமடையாமலே டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளி…!!

கோவை அரசு மருத்துவமனையில் முழுமையாக குணமடையாத நிலையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட கொரோனா நோயாளி மூச்சுத் திணறலால் அவதிப்பட எந்த ஒரு மருத்துவமனையில் அனுமதிகாமல் அலைக்கழித்த கொடூரம் அரங்கேறியுள்ளது. கோவை கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 57 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நோய் தொற்று குணமாகாத நிலையில் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், மீண்டும் அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் உயிர் தப்பிய முதியவர்…. ரூ.8.3 கோடி என ஷாக் ஆக்கிய பில் …!!

தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய வழக்கு அவருக்கு கொடுக்கப்பட்ட பில் பேர் அதிர்ச்சியை கொடுத்துள்ளது அமெரிக்கா வாஷிங்டன் நகரில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கடந்த மார்ச் 4ஆம் தேதி 70 வயது முதியவரான மைக்கேல் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டார். 62 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த அவருக்கு இடையில் மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கும் தருவாயில் இருந்தார். ஆனால் பின்னர் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தீவிர சிகிச்சையில் குணமடைந்து கடந்த மே 5ஆம் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்காக 112 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் சென்னைக்கு வரவழைப்பு… !!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 112 நடமாடும் மருத்துவமனை வாகனங்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளன. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில், நேற்று ஒரே நாளில் 1,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 27,398 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் தமிழகத்தில் 1,875 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் தினசரி பாதிப்புக்குள்ளாகும் கொரோனா நோயாளிகளை இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து வர ஆம்புலன்ஸ் வசதி போதிய […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் உயிரிழந்தவர் உடலை சவக்குழியில் வீசிச்சென்ற சம்பவம்… விளக்கம் கேட்டு ஆட்சியர் நோட்டீஸ்!

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ததில் அலட்சியம் காட்டிய விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நோட்டீஸ் அளித்துள்ளார். அலட்சியம் கட்டிய விவகாரத்தில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர், மருத்துவ கண்காணிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்தவர் புதுச்சேரிக்கு உறவினர் வீட்டுக்கு வந்தபோது கரோனாவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு கோபாலன்கடை மயானத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு முழு கவச உடை […]

Categories
தேசிய செய்திகள்

“பிளாஸ்மா சிகிச்சைகள் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளது”: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லியில் கொரோனா பாதிப்புக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சைகள் மூலம் நன்றாக பலன் கிடைத்துள்ளன என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். ஐசியூ-வில் இருந்த நபர் பிளாஸ்மா தெரபி சிகிச்சை மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார். முன்னதாக, கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 76 பேருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களுருவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை!!.. அதிர்ச்சியில் மருத்துவமனை

பெங்களுருவில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மருத்துவமனை வளாகத்தின் 5வது மாடியில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் கடந்த ஏப்ரல் 24ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 50 வயதான இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை கடுமையான சுவாச பிரச்சனையுடன் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் சிறுநீரக பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தொற்றுள்ளவரால் 30 நாட்களில் 409 பேர் பாதிக்கப்படுவதாக ஆய்வு: மத்திய சுகாதாரத்துறை

கொரோனா நோய் தொற்று பாதித்த ஒரு நோயாளி தனிமைப்படுத்துதல் அல்லது சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்றால், அந்த நோயாளி மூலம் 30 நாட்களில் 406 பேர் பாதிக்கக்கூடும் என சமீபத்தில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக சுகாதார அமைச்சின் இணை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4, 421 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories

Tech |