நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜாக்குல அகண்ட ராவ் சம்பா நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1,62,500 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதனால் நெற் பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான் மற்றும் இலை சுருட்டு போன்றவற்றின் தாக்குதல் காணப்படுகிறது. இலை சுருட்டு புழுக்கள் என்பது இலைகளை நீளவாக்கில் மடக்கிக் கொண்டு அவற்றில் உள்ள […]
Tag: நோய்
ஜனவரி 1 முதல் பிரான்ஸ் நாட்டு மருந்தகங்களில் 18 வயது முதல் 25 வயது வரை உள்ள ஆண்களுக்கு இலவசமாக ஆணுறைகள் வழங்கப்படுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்துள்ளார். இது கருத்தடையில் ஒரு சிறிய புரட்சி என தெரிவித்துள்ளார். ஏனென்றால் இளம்பெண்கள் எதிர்பாராமல் கர்ப்பமாவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரெஞ்சு துறை அதிகாரிகள் கூறியதாவது, கடந்த சில வருடங்களாக பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரித்து வருகிறது. அதனால் தேவையற்ற கர்ப்பங்களை தவிர்ப்பதற்காகவும் […]
அம்மை நோய்க்கு 1 வயது குழந்தை பலியாகியுள்ளது. மராட்டிய மாநிலத்தில் உள்ள நல் பஜார் பகுதியில் வசித்து வந்த ஒரு தம்பதியினரின் 1 வயது குழந்தைக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் அந்த குழந்தைக்கு கடுமையான நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சுவாச கோளாறுகளை உண்டாக்கியது. இதனையடுத்து கடந்த சனிக்கிழமை வென்டிலேட்டரில் 2 நாட்களாக வைக்கப்பட்டிருந்த குழந்தை நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து மருத்துவர் மங்களா கோமரே கூறியதாவது. […]
உலக நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்துள்ளது. உலகில் உள்ள பல நாடுகளில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சர்வதேச பொது சுகாதார அவசர அச்சுறுத்துதலாக குரங்கு அம்மை நோய் பரவல் இருந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. மேலும் இது குறித்து அவசர குழுவின் 3-வது கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 11 உறுப்பினர்கள், 6 ஆலோசகர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து உலக சுகாதார […]
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை வைரஸ் உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இது உலகம் முழுவதும் முதல் அலை , இரண்டாம் அலை மற்றும் மூன்றாம் அலை என பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதன் […]
பிரபல நாட்டில் பெய்த கனமழையால் மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவி வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 4 மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது பாகிஸ்தான் மெல்ல மீண்டும் வரும் நிலையில் பல மாகாணங்களில் மலேரியா நோய் பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் மேக வெடிப்பு ஏற்பட்டு பல்வேறு மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அதில் குறிப்பாக ஆகஸ்டில் கொட்டிய கனமழையால் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி […]
மருத்துவர்களின் கணிப்பை பொய்யாக்கி ஒரு வாலிபர் தனது 18-வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அமெரிக்காவில் உள்ள மிசவுரி பகுதியில் டிரெஸ் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிறக்கும்போதே இரண்டு முகங்களுடன் பிறந்துள்ளார். இதனை மருத்துவர்கள் கிரானியோபேஷியல் டூப்ளிகேஷன் என்று கூறுகின்றனர். இவர் தற்போது தனது 18-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இந்த நோயால் இதுவரை உலகம் முழுவதும் 36 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவருக்கு ஒரு நாளைக்கு 400 முறை வலிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவர்களின் தொடர் […]
புதிதாக ஒரு வைரஸ் பரவுவதாக உலக சுகாதாரத் அமைப்பு தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ ஜிப்ரியேசிஸ் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவது மிகவும் […]
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்தவர்தான் நடிகை கனிகா. இவர் மிஸ் சென்னை எனும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றதால் திரையுலகில் நுழைய ஒரு காரணமாக இருந்தது. கடந்த 2002ஆம் வருடம் 5 ஸ்டார் திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர் பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கு குரல் கொடுத்தது இவர்தான். திரையுலகில் தற்போது அவருக்கு வாய்ப்பு குறைய சீரியலில் களமிறங்கியுள்ளார். அதன்படி இப்போது சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் எதிர் […]
பிரபல நாட்டில் முதல் முறையாக குரங்கு அம்மை நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். உலகம் முழுவதும் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. இந்த வைரஸ் நோயை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் நேற்று சீனாவிற்கு ஏராளமான பயணிகள் விமானம் மூலம் வந்துள்ளனர். இப்போது அவர்களை கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அதில் ஒருவருக்கு தோல் அரிப்பு போன்ற பாதிப்பு இருந்துள்ளது. இதனையடுத்து அந்த நபரை […]
தமிழ் நாட்டில் புதிய வகை காய்ச்சல் பரவுவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை சார்பில் அறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தற்போது சளி, காய்ச்சல், கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சனைகளுடன் தினம்தோறும் ஏராளமானோர் மருத்துவமனைகளுக்கு செல்கின்றனர். இதனை அவர்கள் கொரோனாவின் அறிகுறிகளாக மட்டுமே கருதக்கூடாது. இப்போது இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சல் இருந்தால் இருமல், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், உடல் சோர்வு, உடல் […]
மனநல பிரச்சினை என்பது ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய நோயாக உள்ளது. இதன் காரணமாக பலர் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். அதிலும் சமீபத்தில் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இளைஞர்கள் என்று மனதளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகுபவர்கள் சற்றும் யோசிக்காமல் தற்கொலை என்று முடிவை எடுத்து விடுகின்றனர். ஆனால் தற்கொலை ஒரு பிரச்சனைக்கு எப்போதும் தீர்வாக முடியாது. அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும். அப்படி போராடி பல நபர்கள் தங்கள் வாழ்க்கையில் வென்றுள்ளனர். பல […]
கடந்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து தற்போது வரை குரங்கம்மை நோய் தொற்று 98 நாடுகளில் பரவி 45,000 மேல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 197 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இதில் ஈரான் இந்தோனேசியாவில் முதல் குரங்கம்மை பாதிப்பு சமீபத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கடந்த வாரம் குரங்கமை பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியிருப்பதை அறிக்கைகள் மூலம் நிபுணர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர். மேலும் இங்கிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் பேசும்போது குரங்கம்மை பாதிப்பு […]
தம்பிக்கு ஏற்பட்ட நோய் சிகிச்சைக்கு சமூக வலைதளம் மூலமாக 47 கோடி நிதி திரட்டிய சிறுமி அதே நோய்க்கு பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த மாட்டூல் பகுதியை சேர்ந்த ரபிக் மாரியம்மை தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களின் மகள் அப்ரா (15). இவருக்கு சிறுவயதில் எஸ்எம்ஏ எனப்படும் ஸ்பைனல் தசை சிதைவு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நோய் சிகிச்சைக்கு பல கோடி ரூபாய் செலவாகும் என்பதனால் அந்த […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சி வந்த கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு குரங்குமை பாதிப்பு உறுதியாகியுள்ளது. கேரளாவில் குரங்கு காய்ச்சலால் சந்திக்கப்படும் நபர் ஒருவர் கண்காணிப்பில் உள்ளதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்திருந்தார். இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அமீரகத்தில் இருந்து கேரளா வந்தவர். அவர் பலருடன் தொடர்பில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. குரங்குக்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகள் காய்ச்சல் மற்றும் பெரியம்மை போன்ற சொறி. சமீபத்தில் வெளிநாட்டில் […]
ஸ்லீப் ஆப்னியா பிரச்னை குறித்து சில தகவல்களை பார்க்கலாம். அதாவது ஸ்லீப் ஆப்னியா தூங்கும் போது ஏற்படும் சுவாசப் பிரச்சனையாகும். இதை சுருக்கமாக சொன்னால் தூங்கும் போது வரும் குறட்டையாகும். இந்த குறட்டையானது ஆழ்ந்து தூங்குவதால் தான் ஏற்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது தவறு. ஏனெனில் தூங்கும் போது ஏற்படும் சுவாச கோளாறுகள் தான் குறட்டையாக வெளிப்படுகிறது. இதற்கு மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறாவிட்டால் மூச்சு திணறல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. இந்த […]
கேரளாவின் அதிரப்பள்ளி வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக ஆந்த்ராக்ஸ் நோய் தாக்குதலால் பல காட்டு பணிகள் உயிரிழந்து வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டு பன்றிகளுக்கு ஆந்த்ராக்ஸ் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக இறந்துள்ளதால் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சுகாதாரத்துறை கால்நடை, பராமரிப்பு துறை, வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு அதில் ஆந்த்ராக்ஸ் […]
ரசாயன கசிவு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள அரியலூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சரக்கு குடோன் ஒன்று அமைந்துள்ளது. இந்த குடோனில் இருந்து நேற்று ஒரு விதமான ரசாயன கசிவு ஏற்பட்டது. இந்த ரசாயன கசிவு அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி மண்டல குழு […]
யோகாசனம் ஒரு அற்புதமான கலை. தினமும் யோகா செய்பவர்களுக்கு நோய் வருவது தடுக்கப்படுவதுடன் மனவலிமையும் அதிகரிக்கும். யோகாவில் ஒரு அம்சம் முத்திரைகள். கை விரல்களால் செய்வது முத்திரைகள். நம் உடலில் மறைந்திருக்கும் சக்தியை வெளிக் கொண்டு வருவதே முத்திரைகள். நரம்புகளுடன் சம்பந்தப்பட்ட உடல் உறுப்புகளை இந்த முத்திரைகள் மூலம் கட்டுப்படுத்தலாம். பிரபஞ்சம் பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்டது. நம் உடலும் பஞ்ச பூதங்கள் அடங்கியதுதான். நம் கை விரல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பூதத்தை குறிப்பதாக உள்ளது. கட்டை விரல் […]
திருப்பூர் மாவட்டம் கருவம்பாளையம் பகுதியில் பிரேம் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் அங்குள்ள தனியார் பின்னலாடை நிறுவனம் ஒன்றில் செயலாளராக பணிபுரிகிறார். இவரது சொந்த ஊர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே தொட்டணம்பட்டி கிராமமாகும். இவர் தனது உறவுக்கார பெண்ணான ஜெயசித்ராவை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக திருப்பூர் கருவம்பாளையம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு கௌசல்யாதேவி என்ற மகளும், பொன்குமரன் என்று மகனும் இருக்கின்றனர். இதில் […]
1. இலைப் புள்ளி நோய் அறிகுறிகள் வாழை இலைகளில் முதலில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றும். பின்னர், இலை பழுப்பு நிறக்கோடுகளாக மாறி நடுவில் சாம்பல் நிறமாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கருகி முழுவதும் காய்ந்துவிடும். காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலேயே பழுத்து வீணாகிவிடுகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக, பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விட வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லிகளான கார்பன்டாசிம் ஒரு கிராம் அல்லது மாங்கோ செப் 2 […]
இலைப் புள்ளி நோய் அறிகுறிகள்: வாழை இலைகளில் முதலாவதாக மஞ்சள்நிறப் புள்ளிகளானது உருவாகி, இலை பழுப்புநிறக் கோடுகளாக மாற்றமடைந்து நடுபகுதி சாம்பல் நிறமாக இருக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து கருகி முழுவதும் காய்ந்து விடுவதோடு, காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலேயே பழுத்து வீணாகிவிடும். தடுக்கும் முறைகள்: இதுபோன்று பாதிக்கப்பட்ட இலைகளை வெட்டி எரித்து விட வேண்டும். 1 லிட்டர் தண்ணீரில் பூசணக் கொல்லிகளான கார்பன்டாசிம் ஒரு கிராம் (அல்லது) மாங்கோ செப் 2 கிராம் […]
கரூர் மாவட்டம், ராயனூர் என்ற பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 11 வயதில் சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் மகனுக்கு பிறந்தது முதலே எலும்பு சிதைவு என்ற வினோதமான நோய் உள்ளது. எலும்புச் சிதைவு காரணத்தினால் இவருக்கு சுமார் 57 முறை கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பல லட்சங்கள் வரை செலவு செய்து சிகிச்சை […]
அமெரிக்காவில், கேண்டிடா என்ற ஆரிஸ் வகை பூஞ்சை நோய் பரவி வருவதால் அந்நாட்டு மக்கள் அச்சத்தில் உள்ளனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதன் காரணமாகஅமெரிக்காவில் பலி மற்றும் பாதிப்பு அதிகரித்தது. தற்போது அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் வாஷிங்டன் டி.சி., பகுதியில், கேண்டிடா என்ற […]
பிளேக் நோயின் எழுச்சி தற்போது காங்கோவில் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர் 14ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஐரோப்பாவில் பரவியது பிளேக் நோய்.அதேசமயம் வட ஆப்பிரிக்காவையும் ஆசியாவையும் இந்த நோய் பெரிதும் தாக்கியது. தற்போது ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் வேகமாக பரவி வருகிறது வடகிழக்கு காங்கோவில் உள்ள ஈட்டுரி மாகாணத்தின் பிரிங்கியில் நவம்பர் 15 முதல் டிசம்பர் 13 வரை இந்தக் கொள்ளை நோய் அதிகமாக அடையாளம் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த நோய் 3 […]
நம் தாத்தா, பாட்டி காலத்தில் சாப்பிட்டதை விட அதிக காய்கறிகள், பழங்களை நாம் சாப்பிடுகிறோம். இருப்பினும் நம் உடல் அவர்களைக் காட்டிலும் பல மடங்கு வலிமையற்றே உள்ளது. இதற்கு உணவில் சேர்க்கப்படும் நச்சு மட்டும் காரணம் இல்லை. நாம் சாப்பிடும் விதமும் ஒரு காரணமே. முந்தைய நாள் சமைத்த உணவு அமுதாகினும் அவற்றை மறு நாள் சாப்பிடக்கூடாது என்கிறார்கள். உணவுப் பொருட்களை குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து பின்னர் சாப்பிடும் போது உணவில் நச்சுத் தன்மை ஏற்படுகிறது. […]
ஒரு பெண்ணின் உடலில் ஏற்படும் பல மாற்றங்கள் மனதையும் உடலையும் பாதிக்கிறது. அதுபோன்ற பெண்களை பாதிக்கும் முக்கிய நோய்கள் யாவை? இந்த நோய்களுக்கான காரணங்கள் யாவை? சிறுநீரில் பழுப்பு: மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்காதவர்களுக்கு சிறுநீரில் சீழ் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அடிவயிற்றில் வலி மற்றும் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் வலி ஆகியவை அறிகுறிகளாக உள்ளன. இதற்கு தீர்வு 1. கொதிக்க வைத்த தண்ணீருடன் பார்லியை சேர்த்து குடிப்பது சிறுநீரில் சீழ் நீக்கும். […]
யார் ஒருவன் இந்த 5 விஷயங்களை நினைத்துப்பார்க்கிறானோ அவன் தன்னுடைய ஆணவம் உடல் ஆசை முதலியவற்றை அடக்கலாம், அல்லது சிறிதளவு குறைக்கலாம். 1. எனக்கு ஒருநாள் முதுமை வரும் , அதை நான் தவிர்க்க இயலாது. 2. எனக்கு ஒரு நாள் நோய் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது. 3. எனக்கு ஒரு நாள் மரணம் வரும் , அதை நான் தவிர்க்க முடியாது. 4. எதையெல்லாம் எனக்கு பிரியமானதாக நினைக்கிறேனோ அவை […]
சிலிண்டர் டெலிவரி பணியாளர்களை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்யும் பணியாளர்களுக்கு ரூ.25 லட்சம் காப்பீடு செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டர் டெலிவரி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி […]