ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் நோவக் ஜோகோவிச் மற்றும் ஆஷ்லி பார்ட்டி ஆகியோர் முதலிடத்தை பிடித்துள்ளனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளுள் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 17-ஆம் தேதி தொடங்குகிறது.இப்போட்டியில் பங்கேற்கும் வீரர் ,வீராங்கனைகள் 32 பேருக்கு தரவரிசை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச்-க்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜோகோவிக் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி […]
Tag: நோவக் ஜோகோவிச்
உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் . ஏ.டி.பி இறுதிச்சுற்று என அழைக்கப்படும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது .இதில் நேற்று முன்தினம் நடந்த அரையிறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவை எதிர்த்து மோதினார். இதில் 7-6 (7-4), […]
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் , ஜப்பான் வீரர் நிஷிகோரியை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் நிஷிகோரி வென்றார் […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் 1 வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார் . கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது .இதில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் , நெதர்லாந்து வீரர் டாலன் கிரீக்ஸ்பூரும் மோதினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜோகோவிச் சிறப்பாக விளையாடினார். இதில் முதல் செட்டை 6-2 […]
டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் வெற்றி பெற்றார் . 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், நம்பர் ஒன் வீரருமான செர்பியா சேர்ந்த ஜோகோவிச் பொலிவியா வீரரான ஹூகோ டெலியனுடன் மோதினார் . இதில் 6-2, 6-2 என்ற […]
பிரபல டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளார். உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வருகின்ற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து டோக்கியோவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னணி டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளான பெடரர், நடால், டொமினிக் திம், செரீனா வில்லியம்ஸ் உட்பட பலர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகியுள்ளனர். ஆனால் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும் ,உலகின் […]
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் பெரேட்டினியை வீழ்த்திய ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் . ‘கிராண்ட்ஸ்லாம்’போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதி சுற்று ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் , 7-வது இடத்தில் இருக்கும் இத்தாலி வீரர் பெரேட்டினியை எதிர்கொண்டார். இந்த போட்டி கிட்டத்தட்ட 3 மணி நேரம் 23 நிமிடங்கள் வரை நீடித்தது. இதில் 6-7,6-4,6-4 6-3 […]
விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இத்தாலிய வீரராக மேட்டியோ பெரெட்டினி சாதனை படைத்தார் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும் , ‘ நம்பர் 1’ வீரருமான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவுடன் மோதினார் . இதில் 7-6, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். இதையடுத்து […]
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெற்றி பெற்று 4 -வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் . லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் நேற்று நடைபெற்றது . இதில் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றவரும் உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச், அமெரிக்க வீரர் டெனிஸ் குட்லாவை தோற்கடித்து , 6-4, 6-3, 7-6 (9-7) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு […]
விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் நோவக் ஜோகோவிச் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் . ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று போட்டியில் உலகில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச் , இங்கிலாந்து வீரரான ஜேக் டிராப்பரை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் டிராப்பர் கைப்பற்றினார்.இதையடுத்து அதிரடி […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் , 8-ம் நிலை வீரரான கிரீஸ்நாட்டை சேர்ந்த ஸ்டெபானோஸ் சிட்சிபாஸை எதிர்கொண்டார் . இதில் தொடக்கத்திலிருந்தே ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது . முதல் 2 செட்டை சிட்சிபாஸ் […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச் 2 வது சுற்றுக்கு முன்னேறினார். பாரிஸில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் , இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில், செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் , அமெரிக்க வீரரான டெனிஸ் சாண்ட்கிரென் உடன் மோதினார். இதில் 6-2, 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று ,2 வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த 2 வது சுற்றில், பாப்லோ குவாசுடன் […]
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ,3வது சுற்றில் நோவக் ஜோகோவிச் தோல்வியை சந்தித்தார் . மொனாக்கோவில் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ,3வது சுற்று போட்டியில் செர்பியா நாட்டை சேர்ந்த நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த டேனியல் இவான்சி ஆகியோர் மோதிக்கொண்டனர். இதில் ஜோகோவிச் 4-6, 5-7 என்ற என்ற நேர் செட் கணக்கில், 33வது இடத்திலுள்ள டேனியல் இவான்சிடம் […]
மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ,2 வது சுற்றிக்கு நோவக் ஜோகோவிச் முன்னேறி உள்ளார் . மொனாக்கோவில் மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ,2வது சுற்று போட்டியில் செர்பியா நாட்டை சேர்ந்த நம்பர் 1 வீரரான நோவக் ஜோகோவிச் மற்றும் இத்தாலி நாட்டை சேர்ந்த ஜானிக் ஜின்னெரை ஆகியோர் மோதிக்கொண்டனர். இதில் ஜோகோவிச் 6-4, 6-2 என்ற என்ற நேர் செட் கணக்கில், 22வது இடத்திலுள்ள […]
செர்பியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரை ஹனிடிராப் மோசடியில் சிக்க வைப்பதற்காக சிலர் திட்டம் திட்டி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. செர்பியாவை சேர்ந்தவர் நோவாக் ஜோகோவிச். இவர் பிரபலமான டென்னிஸ் வீரர் அவர். மேலும் டென்னிஸ் போட்டிகளின் உலக தரவரிசையில் 15 தடவை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் இவர் மீது பொறாமை கொண்ட சிலர் நோவக் ஜோகோவிக் மீது ஹனிடிராப் மோசடி செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகின்றனர். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்க்காக […]