சிறப்பாக நடைபெற்ற கோவில் குடமுழுக்கு விழாவில் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே சின்னம்பேடு பகுதியில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மயூரநாதர், அருணாச்சலேஸ்வரர், அருணகிரிநாதர், கால பைரவர், நவக்கிரகங்கள், ஆதிமூலர், நாகர், சண்டிகேஸ்வரர், சூரியனார், அபித குஜலாம்பாள், ராஜகணபதி ஆகியோருக்கு தனி சன்னிதிகள் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 9 வருடங்களுக்கு பிறகு குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த […]
Tag: பக்தர்கள் தரிசனம்
பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் பக்தர்கள் வினோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பில்லிலாலி தொட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் முத்துமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் செடல் உற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆன செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு […]
சிறப்பாக நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏராளனமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி அருகே பையர்நத்தம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு குருமன்ஸ் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்கள் ஆண்டுதோறும் வீரபத்திரன் சுவாமிக்கு ஆடிப்பெருக்கு விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். இந்த விழா ஆடி மாதம் தொடங்கி ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த விழாவை முன்னிட்டு நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு […]
சிறப்பாக நடைபெற்ற தெப்ப திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பொன்னேரி பகுதியில் பிரசித்தி பெற்ற சர்வேஸ்வரி சமேத சர்வேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் ஆடிப்பெருக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவில் மூர்த்தியூர், பெரிய பொன்னேரி, சிறிய பொன்னேரி, சின்ன மண்டலவாடி மற்றும் பெரிய மண்டலவாடி பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவுக்கு ஊர் கவுண்டர்கள் தலைமை தாங்கினார். இந்நிலையில் […]
பிரசித்தி பெற்ற கோவிலில் ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற மகாலிங்க சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஜூலை 28-ஆம் தேதி ஆடி அமாவாசைக்கான சிறப்பு பூஜை வெகு விமர்சையாக நடைபெறும். இதை முன்னிட்டு நேற்று முதல் பக்தர்கள் 4 நாட்களுக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 1800 காவலர்களும், மதுரை மாவட்டத்தை சேர்ந்த 800 காவலர்களும் […]
பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாத இறுதி வரை நடைபெறும். இந்நிலையில் கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவில் கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் தலைமையேற்று நடத்தியது. இந்த கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது. அதன்பிறகு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. […]
பிரசித்தி பெற்ற கோவிலின் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர்த் திருவிழா தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மனை மலர்களால் அலங்காரம் செய்து தேரில் வைத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]
மாசி மகத்தை முன்னிட்டு மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றுள்ளது. கோவில் நகரமான கும்பகோணத்தில் மாசிமகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், வியாழ சோமேஸ்வரர், கௌதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், சாக்கோட்டை அமிர்தகடேஸ்வரர், கொட்டையூர் கோடீஸ்வரர் சாமி போன்ற 12 சிவன் கோவில்களில் இருந்தும் சுவாமி மற்றும் அம்பாள் ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பட்டு மகாமக குளத்தை வந்தடைந்தனர். அதன்பின் மகாமக […]
மாசி மகத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. கோவில் நகரமான கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் போன்ற ஆறு சிவன் கோவில்களில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் 12 மணியளவில் இந்த ஆறு சிவன் கோவில்களிலும் உள்ள சுவாமி மற்றும் அம்பாளுக்கு மாசி மகம் குளக்கரையில் வைத்து […]
தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் பூசாரி பக்தர்கள் மீது நடந்து சென்று அவர்களுக்கு அருள் வாக்கு கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் அருகில் ஆவத்துவாடியில் புகழ் வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இதுபோக செல்லியம்மன், மாரியம்மன், காளியம்மன் சன்னிதானங்களும் இக்கோவிலில் அமைந்துள்ளது. இந்நிலையில் மாசி மாதத்தை முன்னிட்டு இந்த கோவிலில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் சிறப்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அம்மனுக்கு […]
திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ள தியாகராஜ சாமி வடிவுடை அம்மன் கோவிலில் மகா உற்சவ விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் சிறப்பாக கல்யாண சுந்தரருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இந்நிலையில் திருக்கல்யாண வைபவத்தில் சுவாமிக்கு சிறப்பான வஸ்திரங்கள் அணிவித்தும் பல்வேறு ஹோமங்கள் வளர்த்தும் பூஜை நடைபெற்றுள்ளது. மேலும் சாமிக்கு பூணூல் கட்டுதல், காப்பு கட்டுதல் போன்ற வைபவங்கள் நடைபெற்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேலுமணி அம்மாள் […]
வனதுர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் பகுதிக்கு அருகில் வன துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு வழிபாட்டு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் அம்மனுக்கு சிறப்பான பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதன்பிறகு நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஏராளமான […]
உத்திரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் நேற்றைய தினம் “தேவ தீபாவளி” என்ற பெயரில் கொண்டாடப்பட்டு வருகிறது. கார்த்திகை பௌர்ணமியை தமிழகத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. நேற்று திருவண்ணாமலை, திருப்பரங்குன்றம் போன்ற மலைகளில் மகா தீபம் ஏற்றப்பட்டது. மேலும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளில் தீபங்களை ஏற்றி வழிபாடு செய்தனர். அதன்படி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நேற்று கங்கை நதிக்கரையில் மகா ஆரத்தி எடுக்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கங்கைநதி மகா […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இந்த கோயில் கட்டுமான பணிகளை ‘ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது. கோயிலை சுற்றியுள்ள இடங்களும் தற்போது வாங்கப்பட்டு, ₹2000 கோடியில் மிகவும் பிரமாண்டமான முறையில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அயோத்தியில் ரூ.2000 கோடியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கருவறையில் வரும் 2023 ஆம் ஆண்டு ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள் நிறுவப்பட்டு […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மன் கோவிலில் பக்தர்கள் வழிபட கதவில் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மெய்க்கண்ணுடையாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் கொரோனா தொற்று காரணமாக கோவில் மூடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்றி பூஜைகள் மட்டும் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கோவிலில் பக்தர்கள் வழிபடுவதற்காக கோவிலின் முன்பக்க கதவின் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலின் பாதுகாப்பு கருதி துவாரத்தில் இரும்பு கம்பிகள் கொண்டு ஜன்னல் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் […]
நெல்லையில் அமைந்திருக்கும் பெருமாள் கோவிலில் பங்குனி மாத திருவிழாவிற்காக கொடியேற்றம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் களக்காட்டில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நடத்தப்படும் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக கொடியினை பல்லக்கில் வைத்துக் கொண்டு மேளதாளங்கள் முழங்க உற்சாகத்துடன் ரத வீதிகளில் உலா வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அலங்காரங்களும், ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். […]
சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் நவம்பர் 16ஆம் தேதி முதல் தினமும் ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது. கேரளாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் 16ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது. வழக்கமாக நடைதிறக்கும் காலங்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருவது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு நாளொன்றுக்கு ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டல பூஜை […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு இலவச தரிசனத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டு நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. ஆன்லைன் மூலம் 300 ரூபாய் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் நாளை முதல் நாள் தோறும் இலவச தரிசன டோக்கன் பெற 3000 தரிசனத்துக்கு அனுமதி […]
இன்று முதல் கோவில்கள் திறப்பு அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் கோவிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நேற்றுடன் 3 ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று தொடங்கியுள்ளது நான்காம் கட்ட ஊரடங்கு. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, பூங்காக்கள், ஷூட்டிங் அனுமதி, போன்றவை தொடங்கப்பட்டுள்ளன. இன்று முதல் பேருந்து சேவைகள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி […]
திருப்பதி ஏழுமலையான் கோயில் நிலங்களை விற்பனை செய்ய கூடாது என இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பாரெட்டி தலைமையில் இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் உள்ளுர் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மற்றவர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடைபெற்றது. ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து உறுப்பினர்களும் நேரடியாக கலந்து கொள்ள முடியாத நிலையில் தேவஸ்தான வரலாற்றில் முதல் முறையாக காணொலி காட்சி மூலம் அறங்காவலர் குழு கூட்டம் […]