மதனகோபாலசாமி கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவில் ராமர் அலங்காரத்தில் பெருமாள் வீதி உலா வந்துள்ளார். பெரம்பலூரில் அமைந்துள்ள மதனகோபால சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு ஒவ்வொரு நாளும் சாமி வீதியில் உலா வருகின்றது. அதன் படி மூன்றாம் நாள் திருவிழாவான நேற்று இரவு பெருமாள் ராமர் அலங்காரத்தில் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் உலா வந்துள்ளார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்துள்ளனர். […]
Tag: பங்குனி உத்திரத் திருவிழா
பெரம்பலூரில் மதன கோபால சுவாமிவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பெரம்பலூரில் பிரசித்திபெற்ற மதனகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி தினமும் வாகனங்களில் புறப்பாடு நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான உதய கருட சேவை நேற்று காலை நடைபெற்றது. கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு திருவீதி உலா நேற்று இரவு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி […]
சிவகங்கை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் கோலாகலமாக தொடங்கியது. பிரசித்தி பெற்ற சுப்ரமணியன் சுவாமி சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான விஸ்வநாத சுவாமி கோவிலில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 10 நாட்கள் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் கடந்த 19-ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. கோவில் விழாவை முன்னிட்டு முருகருக்கு அலங்காரமும், அபிஷேகமும் சிறப்பாக நடைபெற்றது. மேலும் வள்ளி, தெய்வானையுடன் முருகன் தினமும் இரவு […]