நெல்லையிலிருக்கும் அகஸ்தியர் கோவிலில் பங்குனி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் அம்பையிலிருக்கும் காசிநாதன் கோவிலிலும்,அகத்தீஸ்வரர் கோவிலிலும் பங்குனி மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் ஆரம்பித்தது. இவ்விழாவில் தினமும் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற தோடு சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. மேலும் இதில் மூலவரும், அம்பாளும் பல விதமான வாகனங்களில் எழுந்தருளி பொதுமக்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார். இதற்கிடையே கோவில் நிர்வாகம் தற்போது கொரோனா ஆங்காங்கே பரவி வருவதால் அரசின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து விழாவில் பக்தர்களின் […]
Tag: பங்குனி திருவிழா
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள கண்ணமங்கலப்பட்டியில் சிறப்பு வாய்ந்த பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் பங்குனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் அபிஷேகங்களும், அலங்காரங்களும், பூஜைகளும் நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு தீபாராதனைகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பெண்கள் பூத்தட்டு எடுத்து அம்மனை […]
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் அரியாகுறிச்சி குறிச்சி கிராமத்தில் சிறப்பு வாய்ந்த வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம் தோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம் நேற்று முன்தினம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன்பின் வெட்டுடையார் காளி அம்மனுக்கு நேற்று முன்தினம் காலையில் சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும் செய்யப்பட்டது. […]
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மலையரசி அம்மன் கோவிலில் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிறப்பு வாய்ந்த நெடுமரம் ஸ்ரீ மலையரசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவை ஊர்க்குளத்தான்பட்டி, சில்லாம்பட்டி, நெடுமரம், உடையநாதபுரம், என்.புதூர் ஆகிய ஐந்து கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நடத்தி வருகின்றனர். இந்த வருடம் தேர்தலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்துவதற்கு அந்த கோவிலில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் […]
திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர்-சௌந்தரநாயகி அம்மன் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனத்தில் சிறப்பு வாய்ந்த புஷ்பவனேஸ்வரர்-சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அருணகிரிநாதர், அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும். மேலும் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் உள்ளது. சிவபெருமானுடைய 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் இந்த கோவிலில் நடைபெற்றது. இந்த கோவிலில் வருடம்தோறும் 11 நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறுவது […]