சாக்சி மாலிக் செப்டம்பர் 3 ம் தேதி 1992 ஆம் வருடம் பிறந்துள்ளார். இவர் இந்திய மற்போர் வீராங்கனை ஆவர். இவர் கிளாஸ் கோவில் நடைபெற்ற 2014 பொதுநலவாய விளையாட்டுகளில் பெண்கள் கட்டற்ற வகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். 2014இல் தாஷ்கந்தில் நடைபெற்ற உலக மற்போர் போட்டிகளில் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் 72 நாடுகள் பங்கேற்றுள்ள 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டி […]
Tag: பஜ்ரங் புனியா
இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகிறது. நேற்றுவரை இந்தியா 6 தங்கம், 7வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆண்கள் 65 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார். இதன் வாயிலாக இந்தியாவின் தங்கப்பதக்கம் 7 ஆக […]
காயம் காரணமாக உலக சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா விலகி உள்ளார் . டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இவருக்கு கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இந்நிலையில் வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நார்வேயில் நடைபெற உள்ள உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க மாட்டேன் […]
ஜப்பான் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் 65 கிலோ ஆடவர் மல்யுத்தப் போட்டியில் படைத்த சுற்றுகளில் வெற்றி பெற்று இந்தியாவின் பஜ்ரங் புனியா அரையிறுதியில் நுழைந்தார். ஆனால் அதில் தோல்வியுற்ற நிலையில், வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்ற வெண்கல பதக்கம் வென்றுள்ளார். கஜகஸ்தானின் டாலட் நியாஜ்பெகோவுக்கு எதிராக ஆடிய அவர் 8-0 என்ற கணக்கில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் இந்தியாவுக்கான […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் ஈட்டி எறிதல், மல்யுத்தம் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது . ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பேட்மிட்டண் ,குத்துச்சண்டை ,துப்பாக்கி சுடுதல் ,வில்வித்தை போன்ற பல்வேறு போட்டிகளில் இந்திய அணி வீரர் ,வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதுவரை இந்திய அணி 2 வெள்ளிப் பதக்கங்களும், 3 வெண்கலப் பதக்கங்களுடன் மொத்தமாக 5 பதக்கங்களை பெற்றுள்ளது. […]
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றார். மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து மல்யுத்தம் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங்புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 65 கிலோ எடைப்பிரிவில் 2-1 என்ற புள்ளி கணக்கில் […]
32வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில், ஒலிம்பிக் மல்யுத்தம் 65 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். மல்யுத்தப் போட்டியில் ஆடவர் 65 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கிர்கிஸ்தான் வீரர் எர்னாஸரை வீழ்த்தி இந்தியாவின் பஜ்ரங் புனியா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் கால் இறுதி சுற்று நடைபெற உள்ளது.