பிரபல தமிழ் நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐதராபாத்தில் உள்ள போலீஸ் அகடாமியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tag: படபிடிப்பு
பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி படப்பிடிப்பின் போது கால் உடைந்ததை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், “ரோல், கேமரா, ஆக்சன்… ‘காலை உடைங்க’ என அவர்கள் சொல்ல, நான் அதை உண்மையாகவே செய்துவிட்டேன். இன்னும் 6 வாரங்கள் என்னால் வேலை செய்ய முடியாது. விரைவில் வலிமையாகவும், சிறப்பாகவும் மீண்டு வருவேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்
வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. சிம்பு நடிப்பில் ஏ ஆர் ரகுமான் இசையில் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் நீண்டுகொண்டு உள்ளது என விமர்சனங்கள் எழுந்த நிலையில் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் வசிக்கும் இளைஞனின் வாழ்க்கையை சித்தரிக்கும் காட்சிகள் […]
கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அதர்வா இவர் மீது தற்போது பல குற்றச்சாட்டுகள். முன்வைக்கப்படுகின்றன. அதாவதுஅதர்வா படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதனால் படத்தை தயாரிக்கும் பல தயாரிப்புகளுக்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவதாக கூறி வருகின்றனர். அதர்வா அதிகளவு மது குடிப்பதாகவும் இதனால்தான் இவருக்கு தொடர்ந்து பல பிரச்சினைகள் வருகிறது எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இவரது நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே திரைப்படமும் ரசிகர்களிடம் பெரிய அளவிற்கு வரவேற்பு பெறவில்லை. அதர்வாவை […]
முன்னணி நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நடிக்கும் “எனிமி” படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வரும் ஆர்யா மற்றும் விஷால் அவன்-இவன் படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது இவர்கள் இருவரும் எனிமி படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தினை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் […]
நடிகர் ரஜினி அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்த இரண்டு படத்தின் கதைக்கு சம்மதம் அளித்துள்ளார். நடிகர் ரஜினி காந்தின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் நிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து உடல் நலக்குறைவால் ரஜினி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பிறகு அவர் நலமுடன் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பைத் தொடரலாம் என்று ரஜினி தெரிவித்துள்ளார். அதன்படி வரும் 8ஆம் தேதி அண்ணாத்த படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் […]
உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தனது சொந்த ஊருக்கு திரும்ப ஆசையாக இருக்கிறது என நடிகர் பிரித்திவிராஜ் தெரிவித்துள்ளார். மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக பிரித்திவிராஜ் இருக்கிறார். அவர் தற்போது ஆடுஜீவிதம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். இத்திரைப்படம் ஒரு நாவலின் அடிப்படையில் எடுக்கப்படும் படமாகும். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படப்பிடிப்பு அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்கு […]