மராட்டிய மாநிலத்தில் சந்திராபூர் மாவட்டத்தில் நேற்று மாலை 5.10 மணி அளவில் பாலார்ஷா ரயில்வே சந்திப்பில் 2 பிளாட்ஃபாம்களை இணைக்க கூடிய நடை மேம்பாலம் ஒன்று திடீரென இடிந்து தண்டவாளத்தின் மீது விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் நடை மேம்பாலத்தில் நடந்து சென்ற 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த நபர்களுக்கு தலா ஒரு லட்சம் மற்றும் லேசான அளவில் காயம் ஏற்பட்ட நபர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு தொகை வழங்கப்படும் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. […]
Tag: படுகாயம்.
மகாராஷ்டிராவை சேர்ந்த நடிகை கல்யாணி குராலே ஜாதவ் நேற்று மாலை வெளியே சென்று வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அவர் சாங்லி – கோலாப்பூர் நெடுஞ்சாலையில் ஹலோண்டி சந்திப்பு அருகே வந்தபோது அவரது பைக் மீது கான்கிரீட் கலவை டிராக்டர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த கல்யாணி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் டிராக்டர் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போட்டி போட்டுக் கொண்டு இரண்டு தனியார் பேருந்துகள் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டதில் ஆறு பேர் படுகாயமடைந்தார்கள். கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து சென்ற 22-ம் தேதி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செக்கண்ணன் என்பவர் ஓட்டினார். இந்த பேருந்துக்கு பின்னால் கரூரில் இருந்து திண்டுக்கலுக்கு மற்றொரு தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்தை சண்முகம் என்பவர் ஓட்டினார். இரண்டு பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு சென்றபோது முன்னாள் சென்ற பேருந்து டிரைவர் திடீரென பிரேக் […]
கன்னியாகுமரியில் சுற்றுலாவேன்-பள்ளிவேன் மோதிக்கொண்டதில் ஐந்து பேர் படுகாயம் அடைந்தார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் பல்வேறு இடங்களைச் சுற்றி பார்ப்பதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து 18 பேர் சுற்றுலா வந்தார்கள். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக சுசீந்திரம் கோவிலுக்கு புறப்பட்டார்கள். இதையடுத்து கன்னியாகுமரி நாகர்கோவில் இடையேயான தேசிய நெடுஞ்சாலைகளில் சுவாமிநாதபுரம் பகுதியில் சுற்றுலா வேன் சென்ற பொழுது கன்னியாகுமாரியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி வேன் மாணவர்களை வீடுகளில் இறக்கிவிட்டு வந்து கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாரா விதமாக சுற்றுலா […]
தண்டவாளத்தில் டிக் டாக் செய்த கல்லூரி மாணவர் ரயில் மோதி படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், அனுமாகொண்டா மாவட்டம் காஞ்சி பேட்டை சேர்ந்த அக்ஷய் என்பவர் அங்குள்ள கல்லூரியில் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காஞ்சி பேட்டை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தனது நண்பர்களுடன் ரூல்ஸ் எனப்படும் புதிய ஆப்பில் டிக் டாக் செய்து கொண்டு இருந்தனர். அப்போது காஜி பேட்டையிலிருந்து பாலாஜா சென்ற பயணிகள் […]
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலுசிஸ்தான் குவெட்டா கூட்டு சாலை பகுதியில் நேற்று இரவு கையடி குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது. பாகிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக்கொடி மற்றும் அலங்கார பொருட்களை சாலையோர கடைகளில் விற்பனை செய்து கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர் ஒருவர் கடை மீது கையடி குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். மேலும் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 14 […]
வாஷிங்டனில் மின்னல் தாக்கியதில் நான்கு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தலைநகர் வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் சதுக்கம் அருகே நேற்று மாலை திடீரென மின்னல் தாக்கியுள்ளது. இந்த விபத்தில் எதிர்பாராத விதமாக சிக்கி இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார்கள். இந்த விபத்து இரவு 7 மணி அளவில் நடைபெற்றுள்ளது. சதுக்கத்தில் அமைந்துள்ள ஜாக்சன் […]
ஓட்டலில் ஏ.சி வெடித்து கடை ஊழியர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகில் மகேந்திரா சிட்டி பக்தசிங் நகரில் மகேஸ்வரி என்பவருடைய வீடு உள்ளது. இவருடைய வீட்டில் சிறியதாக ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றார். இந்த ஹோட்டலில் வடமாநிலத்தை சேர்ந்த 26 வயதுடைய ராம்குமார் என்பவர் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் ஓட்டல் இருக்கின்ற மொட்டை மாடியில் ராம்குமார் […]
நெல்லை அருகே கோவில் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தை சேர்ந்தவர் மார்க்ரெட் தெரசா (வயது 29). இவர் சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் நெல்லையை அடுத்த பழவூரில் உச்சினி மாகாளியம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் மார்க்ரெட் தெரசா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவு 1 மணியளவில் பழவூர் பால் […]
இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில் அண்ணன், தம்பி இருவரும் படுகாயமடைந்தனர். திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூர் பகுதியில் வசித்து வருபவர் அக்பர் அலி. இவருடைய தம்பி முகம்மது மூசா. இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தோகமலை அருகிலுள்ள குருணி குளத்துட்டியில் இருக்கும் அக்பர் அலியின் மனைவியை பார்த்துவிட்டு திரும்பி சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் மொட்டை காமநாயக்கனூர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் நிலைதடுமாறி […]
சென்னையை சேர்ந்த ரஞ்சன் தனது குடும்பத்தினருடன் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சென்னைக்கு திரும்பி வரும் வழியில் எதிர்பாராதவிதமாக மேல்வெட்டுவாணம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அதில் பயணித்த 4 பெண்களில் 2 பெண்களும் காரை ஓட்டிச் சென்ற ரஞ்சனும் படுகாயமடைந்தனர். பின்னர் அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்கள் […]
ஹோட்டலில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள டோனேட்ஸ்க் பிராந்தியத்தின் ஹரானிட்னே நகரில் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் நேற்று காலை அதிகமான வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வாடிக்கையாளர்களில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர் எதிர் தரப்பினரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இந்நிலையில் அங்கிருந்தவர்கள் அனைவரும் அங்குமிங்குமாக […]
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் 3 வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி கிராமத்தில் பால்ச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது நண்பர்களான கருப்பன் மற்றும் பிரபு ஆகியோருடன் சேர்ந்து சக்குடி விலக்கு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த கார் பால்சாமியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பால்சாமி, பிரபு, கருப்பன் ஆகிய 3 […]
இயக்குனர் சேரன், ஆனந்தம் விளையாடும் வீடு என்ற படத்தின் படப்பிடிப்பில் கால் தவறி விழுந்து காயமடைந்துள்ளார். இயக்குனர் சேரன், கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம் ஆனந்தம் விளையாடும் வீடு. நந்தா பெரியசாமி இந்த படத்தை இயக்குகிறார். சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நடிகர்கள் இதில் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த படத்தில் வீடு ஒன்று பிரதானமாக இடம்பெறுகின்றது. அந்த வீட்டில் படப்பிடிப்பு நடந்தபோது […]
சென்னையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து கன்டெய்னர் லாரியை ராஜா என்பவர் கார் உதிரிபாகங்களை ஏற்றிக்கொண்டு வண்டலூர்-மீச்சூர் போக்குவரத்து சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்தார். அப்போது கன்டெய்னர் லாரி மலையம்பாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள மின் கம்பம் ஒன்றின் மீது வேகமாக மோதியது. இதனால் அந்த மின் கம்பம் உடைந்து கீழே விழுந்ததோடு, […]
ஹைதராபாத் மாநிலம் சூர்யாபெட் பகுதியில் 47வது ஜூனியர் தேசிய கபடி போட்டி தொடங்குவதற்கு முன்பு பார்வையாளர்கள் கேலரி இடிந்து விழுந்ததில் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம், சூர்யாபெட் மாவட்டத்தில் கபடி போட்டி கேலரி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அதில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்தனர். அது திடீரென்று சரிந்து விழுந்ததில் 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆறு பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது . மேலும் கேலரி இடிந்து விழுந்ததற்கு தரம் […]
இன்று நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை மாடு குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அங்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்,ஜல்லிக்கட்டு மாடுகளை அழைத்து வரும் தள்ளுவாடி பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி ஒருவரை மாடு குத்தியதில் படுகாயமடைந்த அவர் உடனடியாக […]
சேலத்தில் பொலிரோ கார் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மோதி நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பவானியில் இருந்து இன்று பிற்பகல் 2 மணி அளவில் பொலிரோ கார் ஒன்று சேலம் நோக்கி வந்தது இந்த காரை வெங்கடேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சேலம் அன்னதானப்பட்டி அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் வந்துகொண்டிருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது இந்த […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பேருந்து ஒன்று வனப்பகுதிகளில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சேத்தாண்கள்ளி பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கேரட்டி கிராமத்தில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் பேருந்து அஞ்செட்டி வடபகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
விருதுநகர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசுதிரி தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார். சூலக்கரை சத்தியசாய் நகரை சேர்ந்த சித்ரா தேவி என்பவர் வீட்டில் பட்டாசு திரி தயாரித்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சித்ராதேவி பலத்த காயம் அடைந்தார். சத்தம்கேட்டுவந்த அண்டை வீட்டார் சித்ரா தேவியை மருத்துவமனையில் அனுமதித்தனர். 80 சதவீதம் அளவிற்கு தீக்காயம் இருப்பதால் மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து […]
ஸ்பெயின் தலைநகரில் உள்ள உயிரியல் பூங்காவில் தன்னை 29 ஆண்டுகளாக வளர்த்து வந்த பெண்ணை கொரில்லா ஒன்று கடித்து குதறியது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிடில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் மலாபோ என்ற கொரிலாவை,அது பிறந்ததில் இருந்தே 29 ஆண்டுகளாக 40 வயதுடைய பெண் ஒருவர் வளர்த்து வருகிறார். அவர் வழக்கம்போல் இன்று அதற்கு உணவு கொடுப்பதற்காக சென்றுள்ளார்.அப்போது மூன்று கதவுகளையும் உடைத்துக் கொண்டு வெளியே வந்த அந்த கொரிலா, அந்தப் பெண்ணை சரமாரியாக கடித்துள்ளது. 20 […]
மணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் திரு முருகனை தாக்கியதாக புகார். நெல்லை மாவட்டம் மானூர் அருகே காவல் உதவி ஆய்வாளர் மாடசாமி தாக்கியதில் சுப்பையா புரத்தைச் சேர்ந்த திரு முருகன் என்பவர் படுகாயமடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். தனது தோட்டத்தின் அருகே ஒரு கும்பல் மணல் திருடியது குறித்து புகார் அளிக்கச் சென்ற போது உதவி ஆய்வாளர் தன்னை தாக்கியதாக திரு முருகன் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டை மருத்துவமனையில் முருகன் […]