புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. திருக்குறளை வாசித்து பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைத்தார் சபாநாயகர் செல்வம். அதனைத்தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி இன்று 2022- 23க்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், புதுச்சேரியில் நடமாடும் கால்நடை மையம், காரைக்கால் மாவட்டத்தில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும். […]
Tag: பட்ஜெட் கூட்டத்தொடர்
தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை ரீதியான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் தற்போது துறைவாரியான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. எனவே இவற்றின் வரிசையில் நேற்று சுகாதாரத் துறை மானிய கோரிக்கையில் அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். 1. அதன்படி புதிய ஒருங்கிணைந்த ஆய்வகங்கள் 12 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும். 2.மேலும் பரமக்குடி, கோவில்பட்டி, மணப்பாறை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, மன்னார்குடி கும்பகோணம், சிவகாசி […]
மதுரை மக்களுக்கு அமைச்சர் சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 18-ம் தேதி அன்று தொடங்கியுள்ளது. அப்போது 2022-2023- ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்றைய தினமே தாக்கல் செய்தார். இதையடுத்து மறுநாள் வேளாண்துறை துறைக்கு தனி பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து மார்ச் 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் […]
நகை கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நகை கடன் தள்ளுபடி குறித்து தமிழக முதல்வர் சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவித்திருந்தார். அதன்படி கூட்டுறவு வங்கிகள் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் நகை கடனுக்கு விண்ணப்பித்தவர்களில் பெரும்பாலானோர் முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளதாக தெரியவந்தது. இதில்போலி நகைகளைக் கொண்டு கடன் பெறுவது, ஒரே நபர் ஒன்றுக்கு மேற்பட்ட […]
மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளுக்கும் மார்ச் 17 முதல் 20 வரை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. நேற்று காலை 11 மணிக்கு மாநிலங்களவை மற்றும் மக்களவை ஆகிய இரு அவைகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று உள்ளன. மாநிலங்களவை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மாநிலங்களவை உறுப்பினர்களான நபின் சந்திரா பராகொஹைன், ராகுல் பஜாஜ், பேராசிரியர் டிபி சட்டோபாத்யாயா மற்றும் யட்லாபடி வெங்கட் ராவ் ஆகியோரது […]
நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாளில் ஜீரோ ஹவர் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி 2020- 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் முதல் நாளில் குடியரசுத்தலைவர் உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பட்ஜெட் தாக்கலின் இரண்டாம் நாளில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்ஜெட் தாக்கலின் முதல் இரண்டு நாட்களில் ஜீரோ ஹவர் […]
தமிழகத்தில், சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரானது கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. அதில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீது ஆகஸ்ட் 23-ஆம் தேதி விவாதம் நடந்தது. அந்த விவாதங்களுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் அனைவரும் பதில் அளித்து, புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். இதையடுத்து கடந்த வியாழக்கிழமை காவல்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்தது. அதன் பிறகு மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் மீண்டும் இன்று சட்டசபை கூடியது. அதில் […]
புதுச்சேரியில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையுடன் இன்று தொடங்குகின்றது. வரலாற்றிலேயே முதன்முறையாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழில் உரையாற்ற உள்ளார். இதனைத் தொடர்ந்து நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி இன்று மாலை பட்ஜெட் தாக்கல் செய்கிறார். என் ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டமாக இது அமைவதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் 10 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்க்கான திட்ட […]
5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னதாகவே முடிக்குமாறு ,அமைச்சர்கள் வலியுறுத்தினர். புதுடெல்லியில் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது ,கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி தொடங்கி ,பிப்ரவரி மாதம் 1ஆம் தேதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு பாராளுமன்ற கூட்டத்தொடரில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. இந்தக் கூட்டத் தொடரானது ஏப்ரல் மாதம் 8 தேதி வரை, இரண்டு அமர்வுகளாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் […]