அமெரிக்காவில் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் முதுகலை பட்டதாரி மாணவர் ஒருவர் தன்னுடைய காதலிக்கு மோதிரம் அணிவித்து காதலை தெரிவித்த விதம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மத்திய மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றவர் டேவிட். இவர் பட்டமளிப்பு விழாவின் போது யாரும் எதிர்பாராத விதமாக மேடையில் முழங்காலிட்டு தன்னுடைய காதலிக்கு மோதிரத்தை அணிவித்து தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். டேவிட்டின் இந்த செயலுக்கு அவரது பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் கைத்தட்டி உற்சாகமுடன் மகிழ்ந்தனர்.
Tag: பட்டமளிப்பு விழா
ராணி மேரி கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசியுள்ளார். சென்னையில் அமைந்துள்ள ராணி மேரி கல்லூரியின் 104-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி பேசிய போது, முதல்வர் ஸ்டாலின் இந்தியாவில் உள்ள அமைச்சர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கின்றார். இந்த கல்லூரி 33 மாணவிகளுடன் தொடங்கப்பட்டது. ஆனால் இன்று இந்த கல்லூரியில் 5,000 மாணவர்கள் படித்து வருகின்றார்கள். இதுதான் […]
சென்னையில் உள்ள பழமை வாய்ந்த ராணி மேரி கல்லூரியின் 104-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்தியாவில் முதன் முதலாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ராணி மேரி கல்லூரியும் ஒன்று. இந்த கல்லூரியில் நுழைந்தபோது என் வாழ்நாளில் நடந்த பழைய விஷயங்கள் அனைத்தும் என் மனதுக்கு வந்தது. அதை என்னால் மறக்கவே முடியாது. அதாவது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்கள் ராணி மேரி கல்லூரியை […]
பிரதமர் மோடி திண்டுக்கல் மக்களுக்கு தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி காந்திகிராம பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க ஹெலிகாப்டர் மூலம் திண்டுக்கல்லுக்கு வருகை தந்தார். அங்கு பிரதமர் மோடியை, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் டாக்டர். எல்.முருகன் ஆகியோர் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராம பல்கலைக்கழகம் செல்லும் வழியில் காரில் சென்றபோது மக்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். […]
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி பெங்களூருவில் தொடங்கி வைத்திருப்பதாக முதல் மந்திரி பாசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்து பேசும்போது, பிரதமர் மோடி வருகிற 11-ம் தேதி பெங்களூர் வருகிறார். அன்றைய தினம் காலை 10 மணிக்கு பெங்களூர் விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்தடைகிறார். சர்வதேச விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கிற […]
தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் காந்தி கிராமிய பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடந்த 1956-ம் ஆண்டு ஒரு சிறிய கிராமப்புற கல்லூரியாக தொடங்கப்பட்ட நிலையில், கடந்த 1976-ம் ஆண்டு நிகழ்நிலைப் பல்கலைக்கழகமாக உருவெடுத்தது. இந்த பல்கலைக்கழகத்தை முனைவர் சி. ராமச்சந்திரன் மற்றும் முனைவர் டி.எசு. சௌந்தரம் ஆகியோர் இணைந்து உருவாக்கினார். இந்த பல்கலைக்கழகமானது மகாத்மா காந்தியின் வேலை மற்றும் அறிவு தனித்தனியானவை அல்ல என்பதை கொள்கையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தை கடந்த 1976-ம் ஆண்டு […]
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருமங்கலக்குடி பகுதியில் அஸ்லாம் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 9-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கல்வி மட்டும் தான் சமுதாயத்தில் ஏற்றத்தை தரக்கூடியது. பட்டம் பெற்ற மாணவர்கள் சமுதாயத்தில் அனைவரிடமும் நெருங்கி பழகி தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதுதான் நீங்கள் சாதிப்பதற்கான முதல் படியாக அமையும். இன்றைய காலகட்டத்தில் இருக்கும் […]
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 42வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்றுள்ளார். மேலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். மோடி வருகையை முன்னிட்டு அண்ணா பல்கலைக்கழக பகுதிகளில் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் வணக்கம் எனது தமிழில் கூறி உரையை தொடங்கியுள்ளார் மோடி. பட்டம் பெறும் மாணவ […]
பிலிப்பைன்ஸ் நாட்டின் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்த போது திடீரென்று ஒரு நபர் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தியதில் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில் இருக்கும் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது, திடீரென்று அங்கிருந்த ஒரு நபர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினார். இதில் மூன்று பேர் பரிதாபமாக பலியானார்கள். இந்த பயங்கர தாக்குதலில் மேலும் இருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் இதற்கு […]
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டம் படிப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: “மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நாங்கள் புறக்கணிக்கிறோம். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களிடம் அரசியலைப் புகுத்துவதற்கு கவர்னர் முயற்சி செய்கிறார். பட்டமளிப்பு விழா தொடர்பாக அரசிடம் எதுவும் ஆலோசனை செய்யப்படவில்லை. மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா தொடர்பாக என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. அரசை ஆலோசனை செய்யாமல் காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா அறிவிப்பு […]
நியூ ஆர்லியன்ஸ் நகரில் நடைபெற்ற மோரிஸ் ஜெப் உயர்நிலைப்பள்ளி பட்டமளிப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் சேவியர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பட்டமளிப்பு மையத்திற்கு வெளியே துப்பாக்கி சூடு நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 164 ஆவது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ரவி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இந்த விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முதல்வர் முக ஸ்டாலின் பேசும்போது “இந்தியாவில் மட்டுமல்ல உலகின் வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கியதுதான் சென்னை பல்கலைக்கழகம். எனது தலைமையிலான ஆட்சி காலம் உயர்கல்வியின் பொற்காலமாக மாற வேண்டும். […]
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் ஆகியோர் சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் படித்த 300 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் வழங்கினர். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மருத்துவக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் வரவேற்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, கடந்த 2012-ஆம் ஆண்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது. இதுவரை 300 பேர் ஐந்து ஆண்டுகள் படித்து முடித்து பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து சென்றுள்ளனர். […]
பெண்கள் அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மாநில முதல்வர் எடியூரப்பா, பல்கலைக்கழக துணைவேந்தர் சச்சிதானந்தா, உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்துள்ளனர். இந்த விழாவில் மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் மற்றும் […]